SG50 பொன்விழாக் கொண்டாட்டங்கள்!


சிங்கப்பூர் திருவிழாக் கோலம் பூண்டு SG50 பொன்விழா ஆண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறது. நமது நாட்டில், திரும்பிய பக்கம் எல்லாம் கொண்டாட்டங்கள். அப்படி நீங்கள் கலந்து கொண்ட அல்லது பார்த்த பொன்விழாக் கொண்டாட்டத்தைப்  பற்றிய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள்பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 5 செப்டம்பர்  2015. வாழ்த்துகள்!

8 கருத்துரை

 1. “வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா” என்ற பாடலை கண்டிப்பாக கேட்டு ரசித்திருப்பீர்கள். ஆனால் அந்த வரிகள் போலவே வாழ்ந்துக் காட்டுகிறது நமது சிங்கப்பூர். எவ்வளவோ பாதைகளைக் கடந்து இவ்வாண்டு சிங்கப்பூர் ஐம்பதாவது ஆண்டை அடைந்துள்ளது. இது எல்லா சிங்கப்பூரர்களுக்கும் ஒரு பெருமையான விஷயம். இவ்வாண்டு பொன்விழாவை நான் என் குடும்பத்தோடு செலவழித்தேன். தேசிய நாள் அன்று நானும் என் பாட்டியும் தாத்தாவும் அருகில் இருக்கும் சமூக மண்றத்திற்குச் சென்றோம். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. உணவுகளும் வழங்கப்பட்டன.. நிகழ்ச்சிகள் முடிந்தப் பின் என் பாட்டியையும் தாத்தாவையும் அழைத்துக்கொண்டு அவர்கள் 1960களில் வசித்துக்கொண்டிருந்த ஈஸ்த் கோஸ்த் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அங்கு என் பெற்றோர், தங்கைகள் மற்றும் என் சித்தப்பா குடும்பத்தினர்கள் காத்துக்கொண்டிருந்தனர். என் தாத்தா பாட்டி அங்கு வந்ததும் நான் செய்த கேக்கை உண்டு தேசிய தினத்தைக் கொண்டாடினோம். இவ்வாண்டு ஒரு பொன்விழாவாக எங்களுக்கு அமைந்தது.
  Tharani Selvakumar
  Chua Chu Kang Secondary School

 2. உலக வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும் உலக நாடுகளில் சிறந்த நாடாக விளங்கும் நமது சிங்கப்பூர் இந்த ஆண்டு தனது பொன்விழா ஆண்டை மிக பிரம்மாண்டமாக கொண்டாடியது. ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த பொன்விழா கொண்டாடத்தில் கலந்துகொள்வதற்கான அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. நான் சிங்கா என்ற கருனை சிங்கத்தை போன்று வேடமிட்டு நடனம் ஆடினேன். அதற்காக நிறைய பயிற்சியில் ஈடுபடவேண்டியிருந்தது. அது நான் நினைத்த்தை விட கடினமாக இருந்தது. ஆனால், முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பது போல எனது முயற்சியாலும் குடும்பத்தின் ஆதரவாலும் அன்று மேடை ஏறினேன். சிங்கப்பூரர்களின் ஒற்றுமையைக் கண்டு வியந்தேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்தபவர்களுக்கு நான் என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். இந்த சிறப்பான ஆண்டில் என்னால் முடிந்தவரை பங்களித்தேன் என்பதில் பெருமை அடைகிறேன். சிங்கப்பூர் மெம்மேலும் வளர நாளைய தலைவர்களான என்னைப் போன்ற இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்பதில் ஐயமில்லை.
  Elangovan Gayathri
  Paya Lebar Methodist Girls’ Secondary School

 3. அன்று ஆகஸ்ட் 6-ஆம் தேதி. அதிகாலையிலேயே நாங்கள் அனைவரும் பள்ளி திடலில் எங்களுடைய சீருடை அணியின் சீருடையயில் கூட ஆரம்பித்துவிட்டோம். அன்றுதான் தேசிய தினத்தைக் கொண்டாட எங்கள் பள்ளி முடிவுசெய்திருந்தது. அதற்காக சீருடை அணியினரின் ஒரு அணிவகுப்பிற்காகவும் அது ஏற்பாடு செய்திருந்தது. நானும் அந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தேன். கடந்த சில வாரங்களாக இந்த அணிவகுப்பிற்காக எங்கள் அனைவருக்கும் கடுமையாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. எனவே, நிச்சயமாக அணிவகுப்புச் சிறப்பாக அமையும் என்பதில் எங்களுக்கு ஐயமே இல்லை.
  சிறப்பு விருந்தினரும், மற்ற மாணவர்களும் திடலில் கூடிய பிறகு, சரியாக 7.40 மணிக்கு அணிவகுப்புத் துவங்கியது. நாங்கள் அனைவரும் மிகுந்த நாட்டுப்பற்றுடன் அனைவரின் முன்னேயும் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றோம். கடைசியாக, தேசிய கீதத்துடனும் நாட்டு உறுதிமொழியுடனும் அணிவகுப்பு ஒரு முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினரும் பள்ளி முதல்வரும் தங்களுடைய தேசிய தின உரைகளை ஆற்றினர். இருவருமே, சிங்கையின் சிறப்புகளைப் பற்றியும் சிங்கப்பூரில் தொடர்ந்து வரும் இன-மத ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றியும் பேசினார்கள்.
  அவர்களுடைய உரைகளுக்குப் பின்னர், தேசிய தினப் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நாங்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டு, தேசிய தினப் பாடல்களை சந்தோஷமாகப் பாடி மகிழ்ந்தோம். நாங்கள் அனைவரும் தோள் மேல் கைப்போட்டுக்கொண்டு பாடல்களின் இசைக்கு தகுந்தவாரு அசைந்தது, அங்கு திரண்டிருந்தவர்களுக்கு ஆனந்தத்தைத் தந்தது. இன-மொழி வேற்றுமை பாராமல் இவ்வாறு ஒற்றுமையாக வாழும் மக்களை மற்ற நாடுகளில் காண்பது கடினம். ஆனால், சிங்கையில் அது சாத்தியமாயிருப்பதைக் கண்டு சிங்கப்பூரர்கள் கண்டிப்பாக பெருமைக் கொள்ள வேண்டும்.
  இறுதியாக, அணிவகுப்பில் பங்குகொண்டவர்களுக்குச் சிற்றுண்டி அளிக்கப்பட்டது. அதன் பிறகு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம். இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
  குமாரவேல் விக்னேஷ்
  ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப் பள்ளி

 4. SG50 பொன்விழாக் கொண்டாட்டங்கள்!
  “யாதும் ஊரே யாவரும் கேளிர்! யாவரும் கேளிர்!” என்ற கணியன் பூங்குன்றனார் கூறியதாக, டாக்டர் திரு.அப்துல் கலாம் ஐக்கிய நாடுகள் அவையில் பேசிய காணொளியை நான் சமீபத்தில் கண்டேன்.
  இந்த வரிகள் சிங்கப்பூரில் வாழும் மக்களுக்கு இனிதே பொருந்தும். ஏனென்றால், வேலைக்காக பல நாடுகளில் இருந்தும் மக்கள் சிங்கப்பூருக்கு வந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறார்கள்.
  வந்தோரை வாழவைக்கும் சிங்கப்பூர், ஒரு மீன்பிடித் துறைமுகமாக இருந்து, இப்பொழுது உலகின் முதல் தர நாடாக உயர்ந்திருக்கிறது.
  ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூர் விழாக்கோலம் பூண்டு தனது 50வது ஆண்டை பொன்விழாவாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடியது.
  கடந்த 49 ஆண்டுகளாக தேசியதின அணிவகுப்பில் வந்த கலந்து கொண்டு , சிங்கப்பூரின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொண்ட திரு. லீ குவான் யூ , முதன்முறையாக இந்த வருடப் பொன்விழாக் கொண்டாத்தின் போது இல்லை. ஆனால் அவருக்காக ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. ஒரு பூங்கொத்து அவரது இருக்கையை அலங்கரித்தது. இதைப் பார்த்த எனது கண்கள் குளமாயின. மற்ற எல்லா நிகழ்ச்சியை விட, இது என் மனத்தை மிகவும் நெருடியது.
  பிறப்பு என்பது ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு என்பது ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும். இந்த வரிகள் திரு. லீ குவான் யூவால் பெருமையடைகின்றன.
  அந்த மாவீரரிடமிருந்து, நமது மாணவ சமுதாயம் சரியான செயல்திட்டம் மற்றும் அந்த திட்டத்தை செயல்படுத்தும்போது வேண்டிய அயராத உழைப்பு, தன்னம்பிக்கை ஆகிய வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும்.
  “காலம் பொன் போன்றது! கடமை கண் போன்றது!” என்று அவர் வாழ்ந்ததால் தான், இந்த குறுகிய காலத்தில் சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவின் இதயமாகத் திகழ்கிறது.
  இன்றைய மாணவர்கள்! நாளைய தலைவர்கள்! நாம் சரியான பாதையில் வெற்றி நடை போட்டு, இதை விட சிறந்த சிங்கப்பூரை நமது எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்வோமாக!
  இது தான் வளமான, பாதுகாப்பான, தூய்மையான, அழகான சிங்கப்பூரை செதுக்கிய தன்னலமற்ற சிற்பிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!!!
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 5. சிங்கபபூர் ஐப்பனிடமிருந்து விடுதலை பெற்றப்பின், அது மலேசியாவுடன் ஒன்று சேர்ந்தது. பிறகு, மலேசியாவிடமிருந்து பிரிந்து
  ஒரு தனி குடியரசு நாடாகியது. இது நடந்து ஐம்பது வருடங்கள் ஆகி விட்டன. இது ஒரு பெரிய வெற்றி அல்வா?
  அந்த மாபெரும் நிகழ்வை முன்னட்டு எந்த பக்கம் திரும்பினாலும் கொண்டாட்டம் தான்!
  சிங்கப்பூர் மக்கள் இந்நாடடின் மீது வைத்திருக்கும் பாசமும் அன்பும் அளவிற்கு மிஞ்சியது.என் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த
  கொண்டாட்டம் ஒன்றிருக்கு நான் சென்றபோது,பிரமித்து போனேன்
  சீன, மலாய், இந்திய, ஆங்கில உணவு வகைகள் இரவு உணவிற்காக பரிமாரபட்டன. அத்துடன்,
  ஒவ்வொரு குடும்பத்திற்கும் கீழே உட்கார பாயும், , ஒரு பையில் நினைவு பொருட்களையும் கொடுத்திருந்தார்கள்.
  மேடையில் பிள்ளைகளுக்கு பல சுவரசியமான பொட்டிகள் நடந்தன.பின்னர் இளைஞர்கள் சிலர்,
  தேசிய தின பாடல்களை பாடி அனைவரையும் இசை மழையில் மூழ்கடித்தார்கள்.
  இறுதியாக கண்ணை பறிக்கும வானவேடிக்கைகளோடு நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
  அன்றைய நிகழ்ச்சிக்கு பின்னர் எனக்கு சிங்கப்பூரின் மேல் இருந்த பற்று அதிகமானது என்றே சொல்ல வேண்டும்.
  “நாடு நமக்கு என்ன செய்ததுஎன்று கேட்காதே! நீ நாடுக்கு என்ன செய்தாய் என்று கேள்!” என்று ஜான் எஃப் கெனடி (John F Kennedy)
  ஒரு முறை கூறினார்.சிங்கப்பூர் நம்மை ஐம்பது வருடங்களாக கட்டி காத்து வந்து விட்டது. இனிமேல் நாம்
  எப்படி இந்நாடிற்கு நம் நன்றியை காட்டலாம் என்று சிந்திப்போம்..
  வாழ்க சிங்கை ! வளர்க அதன் பெருமை !
  Harshitha
  St Hilda’s Secondary

 6. சீ. சிவ ரஞ்சனா
                 ”சிங்கபூர் ஒரு பச்சைநாடு
                  சிறக்கும் பலஇன செடிகள்”
  என்னும் வாக்குக்கு இயையச் சிங்கபூர் பல இனக் கலாச்சாரம்
  கொண்ட நாடு.இங்கு மக்கள் வேறு இனங்க்ளை சேர்ந்தவர்களாக
  இருந்தாலும், அவர்கள் ஒற்றுமையாக சேர்ந்து அரும்பாடுப்பட்டதே
  மீன் பிடிக் கிராமமாக இருந்த சிங்கப்பூர் மிகப் பெரிய வளர்ச்சியை 
  கண்டிருபபதற்கு காரணம் ஆகும். திரு லீ குவான் யூ சிங்கப்பூருக்கு 1965 இல்
  சுதந்திரம் தேடி கொடுத்தார்.கொடுத்தார்.அந்த சுதந்திரம் இவ்வளவு காலத்திற்கு நீண்டு இருக்க சிங்கப்பூரர்களின் கடின உழைப்பு.அவர்கள் சிந்திய வியர்வை, மனத்தைரியம் போன்றவையே காரணம் ஆகும்.ஈந்த நீண்ட கால 
  சுதந்திரத்தை தேசிய தினத்தன்று நடக்கும்.
  தேசிய நாளை கொண்டாட நானும் என் குடும்பத்தினர்களும் 
  இஸ்தானாவில் குடும்பச் சாப்பாட்டு விழாவிற்கு (பிக்னிக்) வரவேற்க்கப் 
  பட்டோம்.நாங்கள் அங்கு சென்றால் குடும்பமாக சேர்ந்து நேரத்தை 
  உல்லாசமாக செலவழிக்கலாம் என்ரு நினைத்தோம். மேலும்,இயற்கை 
  வளத்தில் உண்டால் மனதிற்கு மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும் என்று நினைத்தோம்.அதனால் நாங்கள் இஸ்தானாவிற்கு செல்ல முடிவு 
  செய்தோம்.
  இஸ்தானாவில் நிறைய குடும்ப நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
  முதலாவதாக, நாங்கள் குடும்பமாக இணைந்து உருண்டைக் கண்ணாடியில்
  (glass globe) செடிகளை வளர்த்தல்(terrarium making)செய்தோம். முதற்படியாக, அந்தக் கண்ணாடி உருண்டையினுள் 
  கற்களை வைத்தோம்.கற்கள் வடிமானத்திற்கு (drainage) சரியான பதியம் 
  ஆகும்.பினனர், மாஸ் (moss) எனும் தாவரத்தை தண்ணீருள் முக்கி 
  அதிலிருக்கும் மிச்சத் தண்ணீரைபிழிந்து கற்களின் மேல் வைக்க வேண்டும்.அதற்கு பிறகு, அந்த தாவரத்தை தட்டி (pat) அது மொத்த கற்களையும் 
  மூடியவாறுகவனித்துக் கொள்ள வேண்டும். அட்த்ததாக மணலை அதற்கு மேல் கொட்டினோம்.இறுதியாக தண்ணீர் ஊற்றினோம்.இந்த நடவடிக்கை 
  இயற்கையை காப்பாற்றுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப் பட்டது.
  இரண்டாவது நடவடிக்கை என்க்கு மிகவும் பிடித்ததாகும், அங்கு 
  முகங்களை வரைபவர் (roving caricaturist) இருந்தார்.அவர் என் குடும்பத்தினர்களை சேர்ந்து நிற்க வைத்து எங்களை அருமையாக வரைந்தார். அந்த 
  ஓவியத்தை பார்த்த நானே பரவசமடைந்தேன்.அந்த ஓவியத்தை என் 
  நாட்குறிப்பில் வைத்து பாதுகாத்து கொண்டு வருகிறேன்.
  இறுதியாக, நாங்கள் பெரிய பலூனில் சிங்கப்பூரைபற்றி நீ என்ன 
  நினைக்கிறாய் என்பதை ஒட்டி எழுதும் நடவடிக்கையில் பங்கெடுத்தோம்.என் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கருத்துகள் 
  தோன்றின. அவற்றை எல்லாம் பிணைத்து பலூனில் எழுதினோம்.அந்த நடவடிக்கை மற்றவர்கள் எந்த எந்த விதத்தில் யோசிக்கிறார்கள் என்பதில் 
  விரிவாக்கம் கிடைக்க உதவியது.
  அன்று ஒரு மறக்க முடியாத நாள்.அன்று நடந்த  நடவடிக்கைகள் 
  அனைத்தும் என் மனதில் செதுக்கி விட்டன.
  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி 

 7. SG50
  நம் நாடு சிங்கை நாடு. நமக்கு சுதந்திரம் பெற நிறைய வருடங்களாக போராடி கஷ்ட்டப்பட்டிருக்கிறோம். நம் நாடு ஜப்பானியர்களின் வன்முறையைத் தாண்டி வந்திருக்கிறோம், நம் நாட்டில் வந்த கலவரங்கள், வறுமை மற்றும் ஏழ்மையும் தாண்டி வந்துள்ளார்கள்.எல்லாமே சுதந்திரமுக்காகவேதான். உலகபோற் முடிந்ததும் சிங்கப்பூறர்களுக்கு பிரிட்டிஷ்யிடம் சுதந்திரம்பெறவேண்டும் என்று நினைத்தார்கள்.அதனால் நாம் போராடி முயற்சிசைதோம். அது அடைந்ததும் நாம் ஒவ்வொரு வருடங்களில் சுதந்திரநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிரோம். 50 வருடங்கள் பிறகு நாம் SG50யைக் கொண்டாடிக்கொண்டிருக்கிரொம். சிங்கப்புர் முன்னேரிக்கொண்டே வரும்!.

 8. சிங்கப்பூரின் பொன்விழாவை ஒட்டி மாணவர்களுக்காக நடத்தபட்ட தமிழ்மொழிப் போட்டிகள் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் உமறுபுலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைப்பெற்றது. அதை காணும் வாய்ப்பு எனக்கு கிட்டிய்து. சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் மாணவர்கள் முன்னோடி தலைமுறையினரைப் பற்றி பேசினார்கள். அதுமட்டுமில்லாமல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்களை பாடி அசத்தினார். அது பார்வையளர்களை மிகவும் கவர்ந்தது.
                  
   “ஆடுவோமே, பள்ளு பாடுவோமே” என்ற பாரதியாரின் கூற்றுப்படி மாணவர்கள் தேசிய தினத்தை ஆடிப்பாடி மகிழ்ந்து வரவேற்றனர்.
                  
   “நாடு உன்க்கு என்ன செய்தது என்று எண்ணாதே நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று எண்ணிப்பார்”  என கூரியுள்ளார். ஆபிரகாம் லிங்கன்.  மாணவர்களின் பங்கு ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் மிக முக்கியமானது.
                    இன்று நாம் அனுபவித்து வரும் பல்வேறு வசதிகளும், வாய்ப்புகளும் நம்முடைய முந்தைய தலைமுறையினரது அயராத உழைப்பினால் கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நம் முன்னோடி தலைமுறையினர் நம் நாட்டிற்கு ஆற்றிய நற்பணிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
  அதுமட்டுமில்லாமல் என் வீட்டினருகே உள்ள சமூக மன்றத்தில் சிங்கப்பூர் பொன் விழாவையொட்டி சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி, கதை சொல்லும் போட்டியும் நடைப்பெற்றது. அதில் யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்னும் கணியன் பூங்குன்றனாரின் கூற்றுக்கு ஏற்ப பல சமூகத்தினரும் இன மத மொழி பேதமின்றி கல்ந்துக்கொண்டு நிகழ்ச்சியை மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் வழிநடத்தியது என்னை மிகவும் கவர்ந்தது.
  துடிப்புமிக்க சிங்கப்பூரில் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு ஒற்றுமையுடன் செயலாற்றி, இந்த நாட்டை சிறந்த நாடாக்கி நம் அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம்.
  அரவிந்தன்
  Unity Secondary School

Your email address will not be published.


*