காணொளி

குறும்படம், எனக்குப் பிடித்தது, ஆவணப்படம்

March 14, 2018 Ilamaitamizh 6

பின் வரும் காணொளிகளை நீங்கள் போட்டிக்கு அனுப்பலாம் 1. நீங்கள் எடுத்த குறும்படம் 2. ‘எனக்குப் பிடித்தது’. இந்தத் தலைப்பில் பேசச் சொன்னால், பேசுவதற்கான கருப்பொருள்களும் தகவல்களும் உங்கள் வசம் நிறைய இருக்கும். எனக்குப் பிடித்த பாடல், புத்தகம், நண்பர், தலைவர், ஆலயம், சுற்றுலாத்தளம், வீடு என நீங்கள் […]

புகைப்படம்

விழாக்கள், போட்டிகள், நிகழ்ச்சிகள்

March 14, 2018 Ilamaitamizh 15

ஒரு மாதத்தில் நாம் நிறைய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். வீட்டில் நடக்கும் விழாக்கள், பள்ளியில் நடக்கும் விழாக்கள், போட்டிகள், சமூக மன்றங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை புதிய கோணத்தில் அழகிய புகைப்படமாக எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். படங்கள், தீபாவளி, பொங்கல், சமூக மன்ற நிகழ்ச்சி […]

கவிதை

பெண்

March 14, 2018 Ilamaitamizh 19

மார்ச் 8 – பெண்கள் தினம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தினம். இந்த ஓவியம், ஒரு பெண் எத்தனை வேலைகளை செய்து, அலுவலகத்தையும் வீட்டையும் நிர்வாகம் செய்கிறார் என்பதைக் குறிக்கிறது. இப்படத்தைப் பார்த்ததும் உங்களுக்குள் எழும் எண்ணங்களை அழகிய கவிதையாக எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் […]

கதை

தொலைக்காட்சிப் போட்டியில் ஜெயித்த கதை

March 14, 2018 Ilamaitamizh 12

நீங்கள் ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று விடுகிறீர்கள். நிகழ்ச்சி நெறியாளார், பரிசாக உங்களுக்கு இந்த 4 வாய்ப்புகளைத் தருகிறார். 1. நீங்கள் விரும்பும் 5 நாடுகளை 5 வாரங்கள் சுற்றிப் பார்க்கலாம் 2. நீங்கள் விரும்பும் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி, மடிக்கணினி, எந்த போன்ற மின்னணு […]

கட்டுரை

ஏன் பிடிக்கிறது?

March 14, 2018 Ilamaitamizh 13

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஓய்வு நேரத்தில் பார்ப்பது நம் வழக்கம். நமது வசந்தம் தொலைக்காட்சி மட்டுமில்லாமல், தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள், உங்களுக்குப் பிடித்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றியும் அதன் நிறை, குறைகளைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்கள். கட்டுரை 10 […]

புகைப்படம்

ஜன்னலுக்கு வெளியே

February 3, 2018 Ilamaitamizh 40

புகைப்படம் எடுக்க நாம், இடங்களைத் தேடி அலைவது ஒருவகை. நம் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே கொட்டிக் கிடக்கும் அழகை வீட்டிலிருந்தபடியே புகைப்படமெடுப்பது இன்னொரு முறை. உங்கள் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே கொட்டிக்கிடக்கும் அழகிய காட்சியை  (பகல், இரவு என எந்த நேரமாலும் சரி) புகைப்படமாக எடுத்து, எங்களுக்கு அனுப்புங்கள். […]

காணொளி

எனக்குப் பிடித்த ……… !

February 3, 2018 Ilamaitamizh 3

‘எனக்குப் பிடித்தது’. இந்தத் தலைப்பில் பேசச் சொன்னால், பேசுவதற்கான கருப்பொருள்களும் தகவல்களும் உங்கள் வசம் நிறைய இருக்கும். எனக்குப் பிடித்த பாடல், புத்தகம், நண்பர், தலைவர், ஆலயம், சுற்றுலாத்தளம், வீடு என நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதைச் சொல்லி, ஒரு காணொளியை (Video) உங்கள் கைத்தொலைபேசியில் […]

கவிதை

இசை, நடன விருந்து

February 3, 2018 Ilamaitamizh 14

இசையும் நடனமும் நம் மனதிற்குப் பிடித்த ஒன்று. நாதஸ்வரம், மிருதங்கம், பறை போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் இசையாகட்டும், நவீன நடனம் அல்லது நவீன இசையாகட்டும், அவை நம் மனத்தை ஊடுருவி, நம்மை மயக்கிவிடும். இப்படத்தைப் பார்த்ததும், இசையைப் பற்றி, நடனத்தைப் பற்றி, உங்களுக்குள் சிறகடிக்கும் கற்பனையை, […]

கட்டுரை

சாதனங்கள் – சாதகங்கள், பாதகங்கள்!

February 3, 2018 Ilamaitamizh 13

நாம் அன்றாட வாழ்க்கையில் கைத் தொலைபேசி, மடிக்கணினி, புகைப்படக் கருவி என பல சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனம் எது? ஏன்? அதன் நன்மை, தீமைகளாக நீங்கள் அறிந்தது என்ன? என்பதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி எங்களோடு பகிருங்கள். கட்டுரை 10 முதல் 20 […]

கதை

வழியில் கிடந்த பணம்

February 3, 2018 Ilamaitamizh 21

பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்கிறீர்கள். வழியில் ஒரு 50 வெள்ளி கிடக்கிறது. எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தால், சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும்,  ஓர் இந்திய ஊழியரும் சென்று கொண்டிருக்கிறார்கள். அது யாருடைய பணமாக இருக்கும் என்று உங்களுக்குள் குழப்பம். அடுத்து நீங்கள் செய்தது என்ன, இறுதியில் […]