இயற்கை அழகே அழகு!


இயற்கையைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். வானம், நிலா, மேகம், கடல், மலை, மழை, மரங்கள், பூக்கள் என்று இயற்கையின் அத்தனை அழகையும் கவிதையாக எழுதலாம். இவற்றில் எதைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் கவிதை எழுதலாம். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதிநாள் – 31 மே2015. வாழ்த்துகள்!

6 கருத்துரை

 1. Jananni
  இயற்கை அழகோ ஒரு தனி அழகு
  அதன் நிறமும் ஒரு தனி அழகு
  நீ பாதையில் நடந்து போகும்போது சூரியனைப் பார்த்திருப்பாய்
  அனால் நான், அதன் நிறத்தை பார்த்துள்ளேன்
  அது, அழகோ அழகு
  ஜனனி
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 2. காலத்தில் வசந்தம்
  பசுமையின் அழகு
  காலையில் புல்வெளி
  பனித்துளி அழகு
  மாலையில் முழுமதி
  மயக்கிடும் அழகு
  மழை மேக எதிர்ஒளி 
  வானவில் அழகு
  வெண்பனி இமையம்
  வெயிலினில் அழகு
  வெண்குழல் நயகரா
  சிந்திடும் நீர் துளி அழகு
  பச்சிளம் குழந்தையின் 
  புன்னகை அழகு
  கடல்வெளி பரப்பின்
  அலைகள் அழகு
  தன்னி தமுழுக்கு 
  கவிதையே அழகு
  நிவேதா பிரியதர்ஷ்னி
  யுவான் சின் உயர்நிலை பள்ளி

  • சடைத்து நிற்கும் மரத்தில் இன்னிப்பாய் பார்த்தேன்
   இலைகளின் அசைவில் நகைப்பொலி
   உதிர்ந்து விழும் இலையின் தியாகம்
   துளிர்க்கும் இலையின் தோற்கடி
   மற்றைய இலையோடு உரசும் காதல்
   அதை ரசித்துக் கொண்டே இருக்கலாம்
   Banupriya
   Unity Secondary School

 3. S. Siva Ranjana 
  பனி உறைந்த மலை அழகு
  சிலந்தி பின்னிய வலை அழகு
  துள்ளியோடும் புள்ளிமான் அழகு
  நட்சத்திரங்கள் சிதறிய வான் அழகு
  சிறகடித்துப் பறக்கும் கிளி அழகு
  என் அன்பு அன்னையின் விழி அழகு
  சூரியனின் கதிர் வீச்சு அழகு
  தவழும் மழலையின் பேச்சு அழகு
  பசுமை நிறைந்த மரம் அழகு
  வண்ணத்துப் பூச்சியின் நிறம் அழகு
  தாவித் திரியும் முயல் அழகு
  பயிர் விளைந்த வயல் அழகு
  பந்தலில் படர்ந்த கொடி அழகு
  மலர் பூத்த செடி அழகு
  கூவும் குயில் அழகு
  ஆடும் மயில் அழகு
  எண்ணி வியக்க வைக்கும் கடல் அழகு
  என்னை மயக்க வைக்கும் இயற்கையின் அழகு
  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 4. கடல்
  சூரியனின் வெளிச்சம் பட்டு மின்னும் கடல்
  அலைகள் வந்து நமக்கு கொடுக்கும் மடல்
  கடல் தண்ணீர் கறிக்கும்
  ஆனால் கடல் நம் மனதை பறிக்கும்
  கடலில் இருக்கும் பிராணி
  அதை நாம் வைக்கலாம் பிரியாணி
  கடலின் அழகில் நாம் தெரிவோம்
  அது தான் கடலின் அழகு.
  ஹர்ஷினி பாலா
  பாயா லேபார் மேதொதிஷ்த் பெண்கள் பள்ளி

 5. இயற்கை
  வற்றாத ஜீவனதிகளிள் தோல்களான மணல்கள் அள்ளி
  அதன் தோல் உரித்தாலும்…..
  சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து காவலாய் காக்கும்
  மரங்களை வெட்டினாலும்…..
  விண்ணையும் மண்ணையும் பிரிக்கும் ஓசோனை
  ஓட்டை போட்டாலும்…..
  காயத்துக்கு மருந்தான இந்த மண்ணையும்
  நாங்கள் மாசாக்கினாலும்…..
  என்றும் அன்புடன் எங்களை அரவணைக்கும்
  நீ! எங்கள்….. தெய்வம்தான்…..
  By: C.Nishikanth (2C)
  Teck Whye Secondary School

Your email address will not be published.


*