நமது தேசத் தந்தை

நமது தேசத்தந்தை  திரு. லீ குவான் இயூ அவர்களுக்குப் பல மணி நேரம் வரிசையில் நின்று, அன்போடு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதை நாம் அறிவோம். நம் மனதில் நீங்கா இடம்பெற்ற அந்த இறுதி அஞ்சலியில் கலந்துகொண்ட அனுபவங்களையோ அல்லது திரு. லீ குவான் இயூ அவர்களுடைய பழைய காணொளிகளைப்  (Video) பார்த்தபோது உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களையோ, அப்போது நம் தேசத்தைப் பற்றி உங்கள் மனதில் உதித்த உயர்ந்த எண்ணங்களையோ  கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப்பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை நீங்கள் பகிர்ந்துகொள்ள இறுதிநாள் – 3 மே  2015. வாழ்த்துகள்!

15 கருத்துரை

 1. திரு லீ குவான் இயூ நமது முதல் பிரதமர். இவர் நம் நாட்டை சிறப்பாகக் கவனித்துக்கொண்டார். நம் நாடு சிங்கப்பூர். சிங்கப்பூர் திரு லீ குவான் இயூவை பெருமையாக நினைக்க வேண்டும். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.மூத்தவர் திரு லீ சியான் லூங் ஆவார். இவரும் அவரது அப்பாவைப்போல் ஆற்றல் உடையவர். நாம் இவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை எல்லாம் கற்றக்கொள்ள வேண்டும்.
  சோணியா
  சைன்ட் ஹில்டாஸ் உயர்நிலை பள்ளி

 2. நம் நாட்டு தேசிய தந்தையான திரு லீ குவான் யூ 23 மார்ச் 2015 அன்று மறைந்துவிட்டார்.சிங்கப்பூரர்கள் திரள் திரளாக சென்று அவருக்கு இறுதி மறியாதை செலுத்தினர்.
  50 வருடங்களுக்கு முன்பு அவர் சிங்கப்பூருக்காக அழுதார்…..50 வருடங்களுக்கு பிறகு சிங்கப்பூர் அவருக்காக அழுதது.
  வசந்தம் செய்தியாளர்கள் பொது மக்களிடம் பேட்டி எடுத்தப்போது,அனைவரும் அவரின் அருமை பெருமைகளை கூறி கண்ணீர் விட்டனர். அவர் இறந்த நாள் முதல் அவர் இறுதி நாள் வரை எல்லா சிங்கப்பூர் பள்ளிகளிலும் அறை கம்பத்தில் தேசிய கொடியும் பள்ளிக்கொடியும் பறந்தன.மேலும் அவரின் இறுதி ஊர்வலத்தில் சிங்கப்பூர் மக்களோடு வானமும் அழுதது.
  இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும், அவர் எப்போழுதும் நம் மனங்களில் நிறைந்து இருப்பார்.
  நன்றி….
  ஆயிஷா
  சென்ட் ஹில்டாஸ் உயர்நிலை பள்ளி

 3. நமது தேசத் தந்தை நம் நாட்டை ஒரு மீன்பிடிக் கிராமத்திலிருந்து ஒரு முதல்தர நாடாக உருவாக்கினார்.
  அவர் ஒரு ஆணித்தரமானவர். சிங்கப்பூரின் சுதந்திரத்தின் போது, நம் நாட்டை ஒரு உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்வதாக கூறினார். அதன்படியே மக்களிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்.
  அவர் இங்கிலாந்தில் வழக்கறிஞர் படிப்பை முடித்தவர். இதனால், பலர் அவரை புத்திசாலி என கூறுவர். அவர் நம் நாட்டில் இரட்டை மொழி செயல் திட்டத்தை ஆரம்பித்தார். இவ்வாறு சிங்கப்பூர் மக்கள் அனைவரும் தங்களது தாய் மொழியை வளர்ப்பதில் பங்களிப்பர்.
  திரு லீவுக்கு நிறைய நற்குணங்கள் உள்ளன. அவர் விடாமுயற்சியுடன் தங்களது செயல்களை கவனமாகச் செய்து முடிப்பார். இவரைப்போலவே நாமும் இருக்கவேண்டும்.
  கிர்த்திகா
  செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலை பள்ளி

 4. 50 வருடங்களுக்கு முன் அவர் சிங்கப்பூருக்காக அழுதார் 50 வருடங்களுக்கு பிறகு சிங்கப்பூர் அவருக்கு அழுகிறது
  யாருக்காக?
  நமது தேசத்தந்தை திரு. லீ குவான் இயூவுக்காக
  அவர் தன்னுடைய வாழ்க்கையையே  சிங்கப்பூருக்காக அர்பணித்தார்.
  அவர் செய்தது சிங்கப்பூரை.
  அவர் இறந்தபோது பல மணி நேரம் வரிசையில் நின்று, அன்போடு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
  அவர் செய்ததை மறவ மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த பல மணி 
  நேரம் நின்றன.
  அவர் நம்மை விட்டு சென்றபோது வானம் கூட அவருக்காக அழுதது.
  அவருக்கு நன்றி
  ஹர்ஷினி பாலா
  பாயா லேபார் மெதோதிஷ்த் பெண்கள் உயர்நிலை பள்ளி

 5. நமது தேசத்தந்தை திரு.லீ குவான் இயூ வின் இறுதிச்சடங்கை நானும் என் குடும்பத்தாரும் 29 மார்ச் அன்று தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம்.
  அப்போது என் தந்தை எங்களிடம், ”திரு லீ குவான் இயூ இல்லையென்றால், நாம் இப்போது சிங்கப்பூரில் இருந்திருக்க மாட்டோம்.” என்று கூறினார். நானும் எனது தம்பியும் எங்களின் தந்தையிடம் ”ஏன்?” என்று கேட்டோம். அதற்கு அவர், ”லீ குவான் இயூ மிகவும் திட்டமிட்டு, திறமையாக செயல்பட்டு சிங்கப்பூரை முதல் தரமான நாடாக உயர்த்தியால்தான் நாமும் நம்மை போன்ற பிற நாட்டவர்களும் வேலைக்காக சிங்கப்பூரை நாடி வந்துள்ளோம்,” என்று கூறினார். மேலும் திரு லீ குவான் இயூவின் வாழ்க்கை வரலாற்றை விவரித்தார்.
  “உலகத்திலேயே முதல் தரமான தலைவர்களில் முதலிடம் வகிப்பவர், லீ குவான் இயூ” என்று அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சனால் பாராட்டப்பட்ட அம்மாவீரன், ஒரு பண்டகசாலையின் காப்பாளருக்கு தலைமகனாக 16.09.1923-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். ஓர் அர்ப்பணிப்புள்ள தாய் கிடைத்ததால், கல்வியில் முதலிடத்தில் நிற்கமுடிந்தது லீ-யால். மாணவப் பருவத்தில் அசாத்தியமான ஆற்றல் உள்ளவராகத் திகழ்ந்தமையால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வரை சென்று, சட்டப்படிப்பு படிக்க முடிந்தது அவரால்.
  விடுதலை பெற்ற சிங்கப்பூரின் பிரதமராகப் பொறுப்பேற்ற லீ குவான் இயூ, அனைத்து நாட்டுத் தொழில் முனைவோரையும் அழைத்துத் தம் நாட்டில் தொழிலையும் வாணிகத்தையும் தொடங்கச் சொல்லி, சிங்கப்பூரை உலகச்சந்தை ஆக்கினார். அதனால், உலகத் துறைமுகங்களில் ஒப்பற்ற துறைமுகமாக சிங்கப்பூர் துறைமுகம் ஆகிற்று. ஐந்து நிமிடத்திற்கு ஒரு விமானம் புறப்படக் கூடிய சாங்கி விமான நிலையத்தை, உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கினார். வலுவான ராணுவத்தை உருவாக்க, சிங்கப்பூர் இளைஞர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சியில் பணியாற்றினால்தான், அரசுப் பணியில் சேரலாம் எனச் சட்டம் இயற்றினார்.
  தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ரீ சைக்கிளிங் வாட்டர் (பயன்படுத்திய நீரையே சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தல்) முறைமையை லீ கொண்டு வந்தார். உலகத்திலேயே ஊழல் ஒழிந்த நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருப்பது சிங்கப்பூர். அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் லீ. அரசு ஊழியர்களுக்குப் போதிய வருவாய் இல்லாமை தான், லஞ்சத்திற்குக் காரணம் என அறிந்தார். எனவே, பெருநிறுவனங்களுக்கு நிகராக ஊதியம் வழங்கினார். அவர் பதவியேற்ற 1965-இல் சிங்கப்பூரில் தனி நபருடைய ஆண்டு வருமானம் 400 யு.எஸ். டாலர். 2005-இல் தனி நபருடைய ஆண்டு வருமானம் 30,000 டாலர். அமெரிக்காவோடு பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கின்ற நாடு சிங்கப்பூர்.
  இப்படியொரு தலைவனை மானுடம் என்று காணும் இனி? காலம் சில நேரங்களில் சில சிற்பிகளைச்செதுக்கும். தேசம் சில நேரங்களில் சில சிற்பிகளைச் செதுக்கும். ஆனால், லீ குவான் யூ ஒரு தேசத்தையே செதுக்கிய சிற்பி ஆவார்!
  இதைக் கேட்ட என் கண்கள் குளமாயின. நான் நன்றாக படித்து எனது
  பெற்றொருக்கும், என்னை வளர்க்கும் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கும் துணையாக இருக்க வேண்டுமென உறுதி கொண்டேன்.
  தேஜல்
  சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 6. S.Siva Ranjana 
  ஏறத்தாழ ஐநூறு வருடங்களுக்கு முன்பு ஒரு மீன்பிடிக் கிராமமாக இருந்த 
  சிங்கை,இப்போது செழிப்பாகவும் நல்ல வளர்ச்சியையும் கண்டிருக்கிறது 
  என்றால் அதற்கு திரு லீ குவான் யூ அவர்களே காரணம் ஆவார்.சிங்கப்பூரில் இருக்கும் சிறப்பான படிப்பு முறை,அமைதியான சூழல்,விதவிதமான 
  இனங்களுக்கு இடையே இருக்கும் ஆணித்தரமான ஒற்றுமை,சமூதாய 
  பாதுகாப்பு,நல்ல வீடு இதற்கு எல்லாம் பின்னால் ம்றைந்திருக்கும் 
  இரகசியம் திரு லீ குவான் யூவே அவர்களே.
  இவர் ஒரு மகத்தான சாதனை செய்திருக்கிறார்.அது என்னவென்று 
  உங்களுக்கு தெரியுமாஅவர் யாருடைய துணையும் இல்லாமல் முழு 
  சிங்கப்பூரையும் சுத்தம் செய்தார். சிங்கபூர் ‘பசுமை நகரம்’ என்று இப்போது அழைக்கப் படுவதற்கான காரணமே அவர் தான்! அவர் தன்னுடைய பேச்சு ஆற்றலின் மூலமாக எல்லோருடைய மனதிலும் ஒரு நீங்காத இடத்தை 
  பிடித்தார்.தன்னுடைய பேச்சுத் திரனால் மற்றவர்களுக்கு நம்பிக்கை 
  தெம்பூட்டினார்.அவரால் தான் தமிழ் மொழி ஒரு ஆட்சி மொழியாக 
  திகழ்கிறது.
  இந்தியாவைத் தவிர்த்து வேறு எந்த நாட்டுக்கும் புறவரிக் குறிப்பு 
  இல்லாமல் நுழையும் அனுமதியை பெற்று தந்தவர் இவர்.ஒரு மீன்பிடிக் 
  கிராமத்தை வானுயர்ந்த கட்டடங்களை கொண்ட நகரமாக மாற்ற நினைத்த
  இவருடைய எண்ணத்தை உண்மையாகவே போற்ற வேண்டும்.மேலும்,
   இவர் சிங்கப்பூரின் விடுதலைக்காக மிகவும் பாடுப்பட்டார். 
  இவர் சிங்கப்பூருக்காக் செய்த பெரிய தியாகத்தை பெருமளவில் 
  பாராட்டினால் அது மிகையாகாது.அதுமட்டும்மின்றி , இவரை நாம் தெய்வம் போல் மதிக்க என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்!இவர் நம் நாட்டுக்காக 
  செய்த சேவைகளை மறக்காமல் அடுத்த தலைமுறைக்கு அவருடைய 
  கொள்கைகளை ஒன்று விடாமல் எடுத்துச் சொல்வதும் நம் கடமை ஆகும்!
  சிங்கப்பூர் மட்டுமின்றி, ஏனைய நாடுகளிலும் அவர் புகழ் பரவி இருப்பதை 
  நம் கண்கூடாகக் காணலாம்.
  சீ. சிவ ரஞ்சனா- உயர்நிலை 1
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 7. அன்று செய்தியைக் கேட்டப் போது, என் முகத்தில் ஈயாடவில்லை. இந்த உலகமே இடிந்து விழுந்ததுப் போல் இருந்தது. அன்று திரு. லீ குவான் இயூ காலையில் மூன்று மணிக்கு இறந்துவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தப்போது, மறுநாள் காலை இரவு மணி 9 வரைக்கும் திரு. லீக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று அறிந்தேன்.
  அடுத்த நாள், நான் என் குடும்பத்தினர்களுடன் திரு. லீக்கு அஞ்சலி செலுத்த பாராளுமான்றத்திற்குச் சென்றேன். அங்கே சென்றதும், வரிசை ஒரு பாம்புப் போல் மிக நீளமாக இருந்தது. நாங்கள் அந்த வரிசையில் நின்றோம். ஆறு மணி நேரமாக வெயிலில் நின்று கொண்டிருந்தாலும், அது எங்களுக்கு வேதனையாக படவில்லை. நம் சிங்கையின் தந்தை இன்று நம்முடன் இல்லை என்று நினைத்து கண்ணீரும் கம்பலையுமாக இருந்தோம். மீண்டும் இவர் போல ஒர் நல்ல மனம் படைத்த மனிதரை நாம் பார்க்கமுடியாது. இவரை பார்த்து அவருக்கு இறுதி மரியாதைச் செலுத்தினோம்.
  அங்கே திரு.லீக்கு மரியாதை செலுத்த ஆறு மணி நேரமாக காத்திருந்தோம். நாங்கள் ஆறு வினாடிகளுக்குத் தான் உள்ளே இருந்தோம். எனினும், அவருக்கு நன்றி கூறியதை நினைத்து மனத்திருப்தி அடைந்தோம். நம் நாட்டை உயர்த்த இவர் அல்லும் பகலும் தூக்கம் இல்லாமல் உழைத்துள்ளார். அவரை எப்போதும் மறக்கக் கூடாது.
  வரிஜா (Varija)
  சுவா சு காங் உயர்நிலைப் பள்ளி

 8. நமது தேசத்தின் தந்தை, திரு லீ குவான் யூ, 23 ஏப்ரல் 2015யில், காலையில் 3.18 காலமாணார். அவரின் வயது 91. எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. என் முகம் ஈயாடவில்லை. அவர் ஒரு அற்புதமான மனிதர். அவரின் உரைகள் என் இதயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன. அவர் சிங்கப்பூருக்கு நிறைய வழிகளில் பங்களித்தார்.
  சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததற்குக் காரணம், திரு லீ குவான் யூ தான். சிங்கப்பூருக்கு எதுவும் இல்லை; வளங்கள், சுத்த தண்ணீர், நிறைய வீடுஅமைப்புகள், சுத்தமான சாலைகள், நல்ல கல்வி மற்றும் போக்குவரத்து நல்ல நிலையில் இல்லை. பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது.
  ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் ஆறும் சுத்தமானது, நீரும் தூய்மையாக இருந்தது. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றார்கள் மற்றும் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருந்தது. காரணம்? திரு லீ குவான் யூ தீட்டிய திட்டங்கள். அவரும் நிறைய பிரச்சாரங்கள் செய்தார். மேலும், மொழி வேறுபாடு இல்லை. அதனால் இப்பொழுது, சிங்கப்பூரில் நிறைய மதத்தினர் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.
  அவர் எது செய்தாலும், நம் நாட்டிற்கு நன்மை கிடைக்கும்படி செய்வார். அவர் அல்லும் பகலும் சிங்கப்பூர் எப்படி மேம்படவேண்டும் என்று யோசித்தார். இன்றைய 21ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரை உலகில் ஆக சிறந்த நாடாக திகழ்கிறது. சிங்கப்பூர் நவீனமயமாக்கினார், திரு லீ குவான் யூ. சிங்கப்பூர் ஒரு மாநகரமாக மாற்றினார், திரு லீ குவான் யூ. திரு லீ இவற்றை செய்யவில்லை என்றால், நாம் இங்கே இருக்க முடியாது; நானும் இக்கட்டுரையை எழுதிருக்க மாட்டேன். ஆகையால், இளைஞர்கள் அவருடைய பண்புகளைப் பின்பற்ற வேண்டும். ‘இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள்.’ .
  திரு லீ ஆங்கலத்தில், ‘எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் இந்த நாட்டைக் கட்டி,என் வாழ்கையை கழித்தேன். ஆனால் கடைசியில், நான் என்ன கிடைத்தது? ஒரு வெற்றிகரமான சிங்கப்பூர். நான் எதை இழந்தேன்? என் வாழ்க்கையை.’.
  அவரை நான் மறக்க மாட்டேன்.
  வர்ஷா (Varsha)
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 9. சீரோடும் சிறப்போடும், சிங்க நடைபோடும் சிங்கை அடிபோட்ட ஆண்டுகள் ஐம்பது. தான் சென்ற பாதைகளைத் தன் ஆர்வம் இல்லாமல் தன்னார்வத்தோடு சீரான போக்கினிலே சிறப்பாய் சிங்கையை சீர்படுத்திய சிங்கையின் செம்மல் திரு ” லீ குவான் இயூ ” வாழ்ந்தாய் வாழ்கைக்கொரு அர்தமாய் வழங்கினாய் தனித்துவம் வாய்ந்த சிங்கையை நீ ஆளாக்கினாய்.
  இதை சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமேயானால் மீன் பிடிக் கிராம்மாய், சின்னஞ்சிறு சிவப்புப் புள்ளியாய் இருந்த சிங்கப்பூரை உலகத்துச் சிற்பிகளை அழைத்து அவர்தம் ஆற்றலைக் குழைத்துப் பளிங்குச் சாலையும் பரந்த கூடங்களும் பல் வண்ணப் பூஞ்சோலைகளுமாய் உலகின் கண்களுக்கு விருந்தளித்த பெருமை நமது தேசத்தின் ஒப்பற்ற சிற்பி திரு லீ குவான் யூ அவர்களை சாரும்.
  இவரின் தலைமையின் கீழ் இனம், மொழி கடந்து சிங்கப்பூரர்கள் எனும் ஒருமித்த கருத்தோடு, உண்மை உழைப்பை ஈன்று, கூட்டு முயற்ச்சியில் பாடுபட்டதால்தான் கம்போங் வீடுகளில் வாழ்ந்த நாம் இன்று கண்டோமினியங்களிலும், அடுக்கு மனை வீடுகளிலும் சொகுசாக வாழ்கிறோம். மக்கள் நலம் பேணும் சட்டங்களை, கட்டொழுங்கு, சுகாதாரம் , பாதுக்காப்பு , தேச நலன், சுத்தமான மற்றும் வெளிப்படையான நிர்வாகம், புது நீர், எல்லாத் துறைகளிலும் கணினி மயம், சத்தமில்லாப் போக்குவரத்து, குட்டித் தீவானாலும் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள், நிலத்தடி நிலமேல் போக்குவரத்து, சொக்க வைக்கும் சற்றுலா மையங்கள், சமய ஒற்றுமை பேணும் நல்லிணக்கம், புரிந்துணர்வு, பன்னாட்டு நிறுவனங்களின் மற்றும் கல்விச் சாலைகளின் பரந்த கிளைகள். பல துறைகளிலும் விரிந்து கொழிக்கும் வைரச் சுரங்கமாக மாற்றி எத்தகைய சோதனையையும் சாதனையாக்கும் மணிகளை வித்திட்ட சாதக நாயகனே உனக்கு எங்களின் நன்றி கலந்த பாராட்டுகள்.
  வேதா விக்னேஷ்வரி
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 10. அவர் நம் நாட்தை ஒர் மூன்றாம் உலக நாடுக்கு ஓர் முதல் உலக நாடாக மாற்றினார். அவர் பலரும் குடி இருக்க HDB வீடுகள் கட்டி கொடுத்தார். திரு லீ ஒர் ஆணித்தரமான மனிதர். அவர் தன் பேச்சுகளில் மிகவும் உறுதியாக இருப்பார்.
  அவர் மிகவும் புத்தசலி. அவர் லண்டனில் படித்தார். திரு லி மிகவும் ஆணித்தரமாக பேசுவார். மேலும், அவர், சீங்கப்பூரை வளர்ச்சி செய்ய முயற்சி செய்தார். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றார். உலக நடுகளை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். சீங்கப்பூரின் மக்கள் அவரைத் தலைவராக பெற்றதர்க்கு மிகவும் பெருமை பட்டனர். திரு லீ போல் ஒர் பிரபலமான மனிதரை எங்கேயும் கண்டுபிடிக்க கடினமானது.
  Sadhna Saku
  St.Hilda’s Secondary School

 11. கவிதை
  சிங்கப்பூரின் துயரத்தை விரட்ட போராடியவர் இவர்
  பணிவன்பு இயக்கத்தை உருவாக்கியவர் இவர்
  எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் இவர்
  சிவப்பு பெட்டியோடு இருப்பார் இவர்
  சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்க்காக முக்கிய காகிதங்களை அந்த பெட்டியில் வைத்திருப்பார் இவர்
  சிங்கப்பாரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தவர் இவர்
  சிங்கப்பூரை இந்த நிலமைக்கு கொண்டுவந்தவர் இவர்
  இறுதிவரை சிங்கப்பூரின் வளர்ச்சியை உயர்தியவர் இவர்
  இவர் வேறுயாருமில்லை, இவர்தான்
  நமது தந்நை திரு லீ குவான் இயூ அவர்கள்
  கரோலின்
  உயர்நிலை இரண்டு
  Christ Church Secondary School

 12. மாவுலகம் போற்றும் மாமேதை
  லீ குவான் யூ- அவர்
  மறைந்தாரே; மீளாத் துயரத்தில்
  நாங்கள்
  உலக வரைப்படத்தில்
  ஒருபுள்ளியாய் சிங்கை – இன்று
  உலகமே வியக்குமாறு
  உருவாக்கிய தந்தை
  அரசியல் அரங்கத்தில்
  நிகரில்லா ஒருவர் – தன
  நிழலில் பயணிக்க
  வழிதந்த தலைவர்
  விண்மூட்டும் புகழ்கண்ட
  எங்களது தந்தை – நீர்
  எமைவிடுத்து சென்றனையே
  கலங்கியது சிந்தை
  நீர் நிலத்தின் மேல்
  இல்லாமல் போனாலும் எங்கள்
  மூச்சுக்காற்றாகி உயிராகி வாழ்வீரே ஐயா!
  Yuggesh Kumar
  Christ Church Sec Sch

 13. உழைப்பின் அடையாளம் நமது தலைவர்
  உலகில் இல்லை அவர் போல் ஒருவர்
  பிரிந்த சிங்கையை உயர்த்தியவர் அவர்
  பெண்களுக்கு சம உரிமையளித்தவர் அவர்
  சிங்கப்பூரை பற்றியே யோசித்தவர் அவர்
  போரையும் கடந்துவந்தவர் அவர்
  எங்கள் தலைவருக்கு மட்டுமே
  வானமும் அஞ்சலி செலுத்திடுமே!

 14. நான் போற்றும் ஒரு தலைவர் திரு லீ குவான் யு. அவர் இல்லால், சிங்கப்பூர் இந்த நிலைக்கு வந்திருக்காது. அவருடைய தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் தான் சிங்கப்பூரை இப்போது இருக்கும் நிலைக்கு கொன்வந்துள்ளார்.
  திரு லீ ஒரு கடின உழைப்பாழி.மேலும் அவர் ஒரு சாமர்த்தயமான மனிதர். அவர் சிங்கப்பூரின் மீது எல்லையில்லா அன்பு காட்டினர். அவர் எடுத்துக் கொண்ட முடிவுகள் சிங்கப்பூரை பெரிதும் பாதித்தது. அவர் கவனமாக மடிவு செய்து, சாதுரியமாக வேலை செய்தார். மலேசியாவுடன் ஒன்றிணைந்திருப்பது வேலை செய்யாத போது, அவர் சிங்கப்பூரை மலேசியாவிலிருந்து எடுத்துக் கொண்டார். பின் சிங்கப்பூரை மூன்றாம் உலக நாட்டிலிருந்து மதல் உலக நாட்டுக்கு கொண்டு வந்தார்.
  நம் நாட்டை பாதுகாக்க அவர் ஒரு வலுவான இராணுவ அமைப்பை அமைத்தார். மேலும் நல்ல பொருளாதாரம், வேலைகள், கல்வி, வீட்டுவசதிகள் மற்றும் அழகான சுற்றுசூழலை அமைத்தார்.
  பிப்ரவரி 15, 2013 அன்று, திரு லீ நீண்டகால இதயத் திரிபீமியா நோயினால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது அவர் மூளைக்கு இரத்த ஓட்டத்தைசிறிது நிறுத்தியது. பிப்ரவரி 5, 2015 அன்று, திரு லீ சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேரகப்பட்டார். 17 முதல் 22 மார்ச் வரை அவர் ஒரு தொற்று நோயால் அவதிப்பட்டார். மேலும் அவர் நிலை மிக மோசமாக இருக்கிறது என்று கூரப்பட்டது.
  திரு லீ, March 23 2010 காலமானார். இந்த செய்தியை கேட்ட எல்லாரும் மிகவும் வருத்தம் அடைந்தனர். திரு லீ சிங்கப்ப்பூருக்கு செய்த பேர் உதவியை நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.

 15. நமது தேசத் தந்தை
  நம் நாட்டின் முன்னோர், பிஏபியின் தலைவர் , நாட்டிற்க்கை தலைவர். இவர் தான் திரு லீ குவான் யூ ஆவார். இவர் நாம் நாட்டின் சுதந்திரத்திற்க்கு போராடினார். அவர் பிஏபி என்ற ஒர் குழுவை அமைத்து நாட்டிற்க்கு மிகவும் நல்லதை தான் செய்துக்கொடுத்தார். மேலும், இவர் சிங்கப்பூரின் முதல் பிதமராக இருந்து, மூன்றாம் உலகம் நாடாக இருந்த சிங்கப்பூரை ஒன்றாம உலகம் நாடாக கொண்டுவந்தார். 1959 வரைக்கும் லன்டனில் இவர் சட்டம் படிப்பில் தேர்ச்சிப்பெற்று சிங்கப்பூருக்கு வந்தார்.
  ஜப்பான் குடியேறுதலில், இவர் ஜப்பான் இரணுவத்திலிருந்து நிறைய சித்தரவத்தை அனுபவித்தார்.இருந்தாலும் அவர் தன் நாட்டின் மீது கைவிடவில்லை. போர் பிறகு, இங்கிலாந்தில் படித்தக்கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வலுவற்ற பாதுகாப்பை பற்றி யோசித்து , சிங்கப்பூர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என நினைத்து, தன் நாட்டிற்க்கு திரும்பி வந்தார்.
  16 செப்டம்பர் 1963-இல் , சீனர்களுக்கும் மலாய்களுக்கும் இன கலவரங்கள் இருந்த்ததால், திரு லீ மலெயாவிலிருந்து தனியாக ஒரு நாடாக வளர்ந்தாம். ஆகையில், இவர் தம் மழு வாழ்க்கையெய் அரசாங்கத் துறையில் வேலைச் செய்தார். 23 மார்ச் 2013-இல் , அவர் காலமடைந்தார். அவரின் கடைசி இறுதி சடங்கிற்கு பல உலக தலைவர்கள் வந்து தம் வருத்தத்தை தெரிவித்தார்கள். முழு சிங்கப்பூர் கண்ணீரில் வடிந்த்து.
  ஆகையில் இவர் இல்லாவிட்டால் சிங்கப்பூர் இன்றைக்குப்போல் இருக்காது. அவரின் வீரமும் தியாகங்களும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாகும்.
  G.Eswariya
  Clementi Town Secondary School

Your email address will not be published.


*