உதவும் கரங்கள்

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் கவிதை என்ன? எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 31 மார்ச் 2015, திங்கள்கிழமை. வாழ்த்துகள்!

11 கருத்துரை

 1. என்னால்  முடியாது என்று நினைத்தேன்
  ஆனால் அவன் முடியும்  என்று நினைத்தான்
  நீட்டினான் அவனுடைய கரத்தை
  எனக்கு கிடைத்த வரத்தை 
  நினைத்து மகிழ்ந்தேன்
  ஒன்றாக அடைந்தோம் மலையின் சிகரம்
  அதற்கு காரணம் அவன் நீட்டிய உதவும் கரம்.

  பாலாஜி ஹர்ஷினி பாலா

  பாயா லேபார் பெண்கள் உயர்நிலை பள்ளி

 2. இருட்டு வெளிரும் முன்னே ஏறி மேலே வா;
  நம்மை எதிர் கொண்ட உலகத்திற்கு
  கடமை ஆற்ற கை கொடு;
  காலம் நமக்காக வாழ்வது பெரிதல்ல
  பலர் வாழ்ந்திட நாம் வேண்டுமடா;
  ஏறி மேலே வா!
  இளமை மாறுமுன்னே
  இன்னுமொரு உலகம் செய்வோம்;
  எழுச்சியுடன் செல்வோம்
  எதிர்காலம் நம் கையிலே;
  ஏறி மேலே வா!
  குமரவேல் விக்னேஷ்
  ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப் பள்ளி

 3. காலை மலர்கிற நீல வாணம் நிமிர்கின்ற நேரம்;
  திணகடமை மாற பகலவன் பலருக்கொளியூட்டத்
  தானே தாயள்ளத்துடன் வருகின்ற நேரம்;
  நான் மட்டும் மேட்டில்
  நண்பா, நீ இன்னும் ஏனங்கு?
  இவ்வழியில் மட்டுமல்ல
  வாழ்க்கைப் பாதையிலும் ஏறிவா;
  நம்பிக்கையுடன் கைபிடி
  நட்புறவு நாளை வெல்லும்!

  குமரவேல் விக்னேஷ்

  ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப் பள்ளி

 4. காலை வேளையில் கதிரவனின் உதயம்
  நட்புக் கரம் நீட்டி இணையத்துடிக்கும் இதயம்
  தோள் கொடு தோழா என்ற அறைகூவலுக்கு
  ஆசை நண்பனின் அன்புக் கரம் நீட்டல்
  நான் உச்சியில் என இருமாப்பு கொள்ளாமல்
  பிறரும் உயர்ந்திட உதவும் உயரிய எண்ணம்
  என்செய்வேன் என தவிக்கும் உள்ளத்திற்கு
  நான் இருக்கின்றேன் என்ற நம்பிக்கை கரம் நீட்டல்
  தன்நம்பிக்கையை இழக்காமல் எண்ணச் சிறகுகளை விரித்திடு
  உனக்கு தேவையான உதவி கைக்கு எட்டும் தூரத்தில்
  நட்பை வலுவாகப் பற்றிக்கொள்,தடைகளை உடைத்தெரி
  நல்ல நட்பே நலமான வாழ்விற்கு ஆதாரம் என்பதை ஒத்துக்கொள்
  உதவிக்கிட்டும் என வெறுமனே இருந்திடாமல் நீயும் முயன்றிடு
  முயற்சி திருவினையாக்கும், உன்னை வாழ்வில் நல்லிடம் சேர்க்கும்
  வாழ்க நட்பு,வளர்க தமிழ்,நிலைக்க்ட்டும் உதவிடும் எண்ணம்.
  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 5. கதிரவனின் கதிர்கள்-அந்தக்
  கதிரொளியில் கரங்கள்
  கரையெருவான் நண்பன்-என்
  கண்களும் நடுக்கம்
  உயர்வது எண்ணம்-என்
  உள்ளத்தின் திண்ணம்
  உதவும் கரங்கள்-அது
  வழங்கும் வரங்கள்
  உச்சியிலே காட்சி-எங்கள்
  உள்ளத்திலே மகிழ்ச்சி
  -நித்யஸ்ரீ, ஏ.சி.ஜே.சி தொடக்க கல்லூரி

 6. உதவும் கரங்கள்
  உதவுவதே நம் பண்பாடு
  உதவும் கரமே நம் செயல்பாடு
  முதலில் உன் நிம்மதியை தேட
  பிறர் நிம்மதியை நாடு
  என்பதை நீயும் எண்ணிக்கொள்
  ஏற்றம் வருமே ஒத்துக்கொள்
  உதவுவதே நம் பண்பாடு
  உதவும் கரமே நம் செயல்பாடு
  உதவி செய்ய முற்பட்டால்
  உலகம் உன்னைக் கொண்டாடும்.
  மற்றவர் வாழ்வைப் பறிக்காதே
  மறந்தும் நீ அதை செய்யாதே
  உதவுவதே நம் பண்பாடு
  உதவும் கரமே நம் செயல்பாடு
  பிரியங்கா
  உயர்நிலை ஒன்று விரைவுநிலை
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 7. உதவும் கரங்கள்
  ஒருநாள் ஓரிரவு என் முன்னால்
  ஒளியாய் உருவம் ஒன்று வந்தது
  கண்ணைக் கசக்கிப் பார்த்தேன் அது
  கனிவாய் என்னிடம் ஒன்று சொன்னது
  கொடுத்து மகிழக் கற்றுக் கொண்டால்
  கோடிப் புண்ணியம் என்றது. மேலும்,
  நமக்கு இரண்டு கைகள் உண்டு
  அவை எதற்கு என்று கேட்டது
  மௌனம் கொண்டு நான் இருக்க
  மெல்ல அதுவே இப்படிச் சொன்னது
  இல்லாதவருக்கு எடுத்துக் கொடுத்து ஏற்றிவிட
  இரண்டு உதவும் கரங்கள் என்றது.
  ‌ஷெரன்
  உயர்நிலை ஒன்று வழக்கநிலை
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 8. காலத்தை வென்றவர் நீ ! மற்றவர்களின் நன்மைக்கு வாழ்ந்தை நீ !
  காவியம் படைத்தவர் நீ ! முன் உதாரமாக இருந்தை நீ !
  தேசத்தின் தந்தையும் நீ ! நன்றி திரு லி !
  சிந்தனை சிற்பியும் நீ ! !
  இறவாப் புகழுடையோன் நீ !
  கனவை நனவாக்கினாய் நீ !
  உதவும் மனம் கொண்டவன் நீ !

 9. கடவுள் உனக்கு இரண்டு கைகள் கொடுத்திறுஇக்கறார். ஒரு கை உனக்கு உதவி செய்வதற்கு. இரண்டாவது கை மற்றவருக்கு உதவி செய்வது. உதவி கரங்கள் என்றைக்குமே நம்மை சுற்றிதான் இருக்கும். அவற்றை நாம் எப்படி, எவ்வாறு ஏற்றுகொள்வது என்பது நம் கையில் உள்ளது. நாம் நாடும் ஒவ்வோறு கையும் நம்மை விதவிதமாக உதவும்.அந்த கைகள் அனைத்தும் நம்மை விதவிதமான பாடம் கற்று கெடுக்கும். பாடத்தில் என்ன கற்று கொள்கிறோம் என்பது நம் வாழ்வில் தெரியும்.

 10. தன க்கென வாழாமல்
  பிறருக்கென வாழுதல் உதவிம் கரங்களாம்!
  காக்கை வாழ்வை கண்டு நாம்
  கூடி வாழ கற்கலாம்!
  நாய்கள் வாழ்வை கண்டு நாம்
  நன்றியோடு வாழழாம்!
  கர்ணன் வாழ்வை கண்டு நாம்
  கொடுத்து வாழ பழகலாம்!
  இல்லாருக்கு கொடுத்தலே வாழ்வு ஆகுமாம்!

Your email address will not be published.


*