தேசிய தினம்

தேசிய தினம் – இந்த சொல்லைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? பெருமிதம், மகிழ்ச்சி, நாட்டுப்பற்று என்று பல்வேறு உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும். தேசிய தினம் என்ற சொல் உங்கள் மனத்தில் எழுப்பும் உணர்வுகளை, நினைவுகளை,  ஒரு கட்டுரையாக எழுதுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 5 செப்டம்பர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*
ஜூலை மாத வெற்றியாளர்கள்
Vicnesh Anand Greenridge Secondary School Essay
Isabel Preethi Fajar Secondary School Essay
Srinithi Punggol Secondary School Essay

6 கருத்துரை

 1. இந்து ரமேஷ்
  சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி

  தேசிய தினம் – இந்த சொல்லைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? பெருமிதம், மகிழ்ச்சி, நாட்டுப்பற்று என்று பல்வேறு உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும். தேசிய தினம் என்ற சொல் உங்கள் மனத்தில் எழுப்பும் உணர்வுகளை, நினைவுகளை, ஒரு கட்டுரையாக எழுதுங்கள்…

  ‘நான்கு மலர்களில் ஒருமாலை
  நாயகி கொண்டாள் அருட்சோலை
  நான்கு மலர்களில்…

  தேன்மணக்கும் மொழி தமிழ்சீனம்
  தேர்ந்த மலாய் ஆங்கிலம் இவள்வானம்
  நான்கு மலர்களில்…’

  என்ற மறைந்த கவிஞரின் வரிகள் எனக்கு இவ்வருட தேசிய தினத்தையே நினைவூட்டுகிறது. தேசிய தினம் என்று கூறினாலே அனைவர் மனதிலும் நாட்டுப் பற்றும் பெருமையும் பொங்கி வரும்.அதே போல், எனது மனதிலும் உணர்வுகள் பொங்கி எழும். ஐம்பத்து மூன்று வயதுகளில் சிங்கை கண்டுள்ள வளர்ச்சிக்குக் காரணமாகிருந்த காலமாகியும், நமது மனங்களில் வாழ்கின்ற மாபெரும் தலைவரான லீ குவான் யூ அவர்கள் சிங்கையை வளர்க்க எம்மாதிரியான சவால்களைச் சந்தித்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

  ‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
  சேரா தியல்வது நாடு’

  என்ற திருக்குறளுக்கு ஏற்றாற்போல் இன்றைய சிங்கப்பூர் உள்ளது. எதிர்நோக்கிய சவால்களைச் சாதனைகளாக மாற்றி, தோல்விகளை வெற்றிப்படிகளாக உருவாக்கி, இன்று எல்லா நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவிறகு வளர்ந்துள்ளது சிங்கப்பூர். ஆரம்மக்காலத்தில், மீன் பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர் நிலப் பற்றாக்குறை, குடிநீர், பாதுகாப்பு, மனித வளம், கல்வி, போக்குவரத்து, பல்லின சமுதாயம் போன்ற பல சவால்களை எதிர்நோக்கியது. அவற்றை லீ குவான் யூ போன்ற மாபெரும் தலைவர்களின் உதவியுடன் எவ்வாறு சாதனைகளாக மாற்றியது என்பதைப் பின்வரும் பத்திகளில் பார்ப்போம்.

  நிலப் பற்றாக்குறை. இது சிங்கப்பூர் கண்ட பெரும் சவால். வெளியூரிலிருந்து மக்கள் சிங்கப்பூருக்கு வர வர அவர்களுக்கும் குடியிருக்க வீடுகள் தேவைப்பட்டது. மேலும், சிங்கப்பூரில் வீடில்லாமல் தெருக்களில் படுத்திருந்த மக்களின் எண்ணிக்கை அதிகம். பிப்ரவி ஆயிரத்து தொல்லாயிருத்து அறுபதில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் உயரமான அடக்குமாடி கட்டடங்களையும் குறைந்த பணத்தில் வீடுகளை வாங்கும் வசதியையும் வசதியற்றோருக்குச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. மக்கள் செயல் கட்சியின் அப்போதைய தலைவரான லீ குவான் யூ அவர்களுடைய ஆலோசனையுடன் லிம் கிம் சான் தலைவில் தரை வீடுகளுக்கும் கம்போங்களுக்கும் பதிலாக அடக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. இதனால் , நிறைய மக்கள் குறைந்த நிலத்தில் வாழ முடிந்தது. ஆயினும், சிங்கப்பூர் மிக சிறிய நாடாக இருந்ததால் போதமான நிலம் இல்லை. இதற்குத் தீர்வு கண்ட லீ குவான் யூ அவர்கள் நில மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டார். இதனால், நிலம் மீட்கப்பட்ட இடங்களிலும் பல்வேறு வசதிகளையும் கட்டடங்களையும் கட்ட முடிந்தது. இவ்வாறு சிங்கப்பூர் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டது.

  அடுத்த சவால், குடிநீர் பஞ்சம். என்ன தான் இன்றைய சிங்கப்பூரில் குழாயைத் திறந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் வெளியாகிறது என்றாலும், உண்மையில் சிங்கப்பூரில் இயற்கை நீர் வளங்கள் இல்லை. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு லீ குவான் யூ அவர்கள் மரீனா நீர் தேக்கம் போன்ற பல்வேறு நீர் தேக்கங்களைக் கட்ட திட்டம் தீட்டினார். மலேசியாவிலிருந்து தண்ணீர் சிங்கப்பூருக்கு வந்தும், எதிர்காலத்தில் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிக்க வாய்ப்புள்ளதால் நீர் தேக்கங்களைக் கட்ட உத்தரவிட்டார். இது குடிநீர் பிரச்சினைக்கு ஒரு வகையில் தீர்வாக அமைந்தாலும், பிரச்சினைக்கான முழுமையான தீர்வு இது மட்டும் அல்ல. இரண்டாயிரத்து மூன்றில், பழைய தண்ணீரைக் குடிநீராக மாற்றுவதற்கு ‘NeWater’ என்றழைக்கப்படும் முயற்சி ‘PUB’ ஆல் தொடங்கப்பட்டு, இன்று பல்வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. மலேசியாவிலிருந்து தண்ணீர் வருவது நிறுத்தப்படுமானால், இது இப்பிரச்சினைக்கான மற்றொரு தீர்வாக இருக்கலாம். ஈராயிரத்து ஐந்தாம் ஆண்டில், சிங்கப்பூரின் முதல் ‘சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் குழாய்’ அதாவது ‘Desalination plant’ திறந்து வைக்கப்பட்டது. இதுவும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண சிறந்த வழியே. நமது தலைவர் லீ குவான் யூ அவர்கள் எவ்வாறு தற்போதைய நிலமையை மட்டும் யோசிக்காமல் எதிர்காலத்தைப் பற்றியும் யோசிக்கிறதோ அவ்வாறே நாமும் இருக்க வேண்டும்.

  ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
  வைத்தூறு போலக் கெடும்’

  என்று வள்ளுவரே கூறும்போது கேட்காமல் இருக்க முடியுமா என்ன?

  சிங்கப்பூரின் பாதுகாப்பு. ஆரம்பக்காலத்தில், இது ஒரு பெரும் சவாலாக இருந்தது. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழில் எல்லா பதினெட்டு வயது ஆண்களும் தேசிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், சிங்கப்பூரின் பாதுகாப்பு அதிகரித்தது. லீ குவான் யூ அவர்களின் இந்த அருமையான ஆலோசனையால் சிங்கப்பூரில் எல்லா ஆண்களும் போருக்கு ஆயத்தமாவது எப்படி என்று கற்பதால் நமது நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டால் எப்படி நாட்டைக் காப்பது என்று அறிந்து கொள்வார்கள். சிறிய நாடாக இருப்பதால், சிங்கப்பூர் மனித வளத்தையே நம்பியுள்ளது. ஆகையால், இது நமது பாதுகாப்பிற்கு நல்ல உத்தி என்று நான் நினைக்கிறேன். மேலும், நமது அரசாங்கம் லீ குவான் யூ அவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து நவீன ஆயுதங்களை ஆயுத படைக்குக் கொடுத்து, நமது பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறு, சிங்கப்பூர் மகத்துவம் மிக்க தலைவர்களின் உதவியுடன், ‘முயன்றால் முடியாதது இல்லை’ என்ற பொன்மொழிக்கேற்ப முயற்சி செய்து ‘பாதுகாப்பு’ எனும் சவாலைச் சாதனையாக மாற்றியுள்ளது.

  அடுத்த சவால், கல்வி. ஆரம்பக்காலத்தில், சிங்கையில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மலாய், இந்திய, சீன மற்றும் வெவ்வேறு மொழி சார்ந்தவைஆக இருந்தன. தாய்மொழி பள்ளிக்கூடங்களில் பயின்றதால் மற்ற இன மக்களுடன் உரையாடுவது கடினமாக இருந்தது. இதனால், பல்லின சமுதாயமாகிருந்த சிங்கப்பூரில் எல்லோரும் பேசக் கூடிய மொழியாக ஆங்கிலம் அறிமுகமானது. இதை அறிமுகம் செய்து வைத்து வேறு யாரும் இல்லை, லீ குவான் யூ அவர்கள் தான். தாய்மொழி பள்ளிக்கூடங்களை அழித்து, எல்லா மாணவர்களும் படிக்கக்கூடிய ஆங்கில பள்ளிக்கூடங்களைக் கட்டிக்கொடுத்து மட்டுமின்றி தாய்மொழியைப் படிப்பதை அவசியம் என்ற விதிமுறையையும் கொண்டு வந்தார். இதன் மூலம் பல்லின சமுதாயமாகிருந்த சிங்கப்பூரில் எல்லா மாணவர்களும் ஒன்றாகப் படித்து, உரையாடிக் கொள்ளலாம். இவ்வாறு சிங்கப்பூர் கல்வி எனும் சவாலையும் கடந்தது.

  இவ்வாறு சிங்கை எதிர்நோக்கிய அனைத்து சவால்களையும் லீ குவான் யூ என்ற மாமனிதருடைய வழிக்காட்டுதலுடன் சாதனைகளாக மாற்றி ஐம்பத்து மூன்று ஆண்டுகளில் உலகமே வியக்குமளவிற்கு வளர்ந்துள்ளதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். லீ குவான் யூ போன்ற மாமனிதரை நமது தலைவராக கொண்டதற்கு நாம் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர் காலம் சென்றிருந்தாலும் என்றும் சிங்கப்பூரின் தந்தையாக அனைத்து சிங்கப்பூரர்களின் மனங்களிலும் வாழ்வார் என்பது உறுதி!

  ‘நடுநிலைக் கொள்கையதால்
  ஞாயம் பேணுபவள்- திங்கள்
  தொடும்மனை வளர்ச்சிகளில்
  தொடர்ந்திடும் ஞானமிவள்
  நான்கு மலர்களில்…

  நடையினில் உயர்நெறி
  நாடும் நலமுடையாள் – பொருட்
  கடைகள் துறைமுகக்
  கலங்கள் மிகவுடையாள்
  நான்கு மலர்களில்…’

  என்று மறைந்த கவிஞர் பரணனின் வரிகளுடன் இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

 2. Nishita
  Chua chu kang secondary school

  தேசிய தினம் என்றாலே மகிழ்ச்சி,ஆனந்தம், விடுதலை என்று கூறிகொண்டே போகலாம்.

  நான்கின மக்கள் எந்தவித பூசலும் இன்றி ஒன்றுகூடி வாழும் நாடு சிங்கை என்றால் அது மிகையாகாது.

  ஒரு சகோதரர் இல்லாமல் வாழ்ந்திட இயலும் ஆனால் ஒரு நண்பன் இல்லாம் வாழ்ந்திடவே முடியாது.

  அந்த வகையில் சிங்கப்பூரில் நமக்கு வேரு இனத்தை சேர்ந்த மனிதர்கள் நண்பர்கள் ஆகுகிறார்கள்.இதைவிட வேறு என்ன வேண்டும்!

  “நாடு நாடு…இது சிங்கை நாடு…பாரு பாரு இதன் புகழைப் பாரு”,என்று சிங்கப்பூரைப் பற்றி பாடி கொண்டே போகலாம்.

  நான் சிங்கையின் குடிமக்கள் என்று கூறுவதில் பெருமிதம் கோள்கிறேன்.

  ‘தேசிய தினம்’என்ற பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

  ஆசிய நாடுகளிலேயே ஆக மகிழ்ச்சியான நாடு, சிங்கப்பூர்.

  “இன்றைய இளைஞர்கள் நாலைய தலைவர்கள்”,என்பதுபோல நாம்,இளைஞர்கள்தான் சிங்கையின் முதுகெலும்பு.

  சிங்கப்பூர் குடிமை தற்காப்பு குழுவினர் தங்கள் உயிரை பணயம் வைத்து நாமையும் சிங்கையையும் காப்பாற்றி வருகின்றனர்.

  இவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.

  “சிங்கை நாடு எந்தன் வீடு”, என்று கூறி எனது கட்டுரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி.

 3. Nishita
  Chua chu kang secondary school

  தேசிய தினம் என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம், விடுதலை என்று கூறிகொண்டே போகலாம்.

  நான்கின மக்கள் எந்தவித பூசலும் இன்றி ஒன்றுகூடி வாழும் நாடு சிங்கை என்றால் அது மிகையாகாது.

  ஒரு சகோதரர் இல்லாமல் வாழ்ந்திட இயலும் ஆனால் ஒரு நண்பன் இல்லாம் வாழ்ந்திடவே முடியாது.

  அந்த வகையில் சிங்கப்பூரில் நமக்கு வேரு இனத்தை சேர்ந்த மனிதர்கள் நண்பர்கள் ஆகுகிறார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்!

  ” நாடு நாடு. . . இது சிங்கை நாடு.பாரு பாரு. . .
  இதன் புகழைப் பாரு “, என்று சிங்கப்பூரைப் பற்றி பாடி கொண்டே போகலாம்.

  நான் சிங்கையின் குடிமக்கள் என்று கூறுவதில் பெருமிதம் கோள்கிறேன்.

  ‘ தேசிய தினம் ‘ என்ற பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

  ஆசிய நாடுகளிலேயே ஆக மகிழ்ச்சியான நாடு, சிங்கப்பூர்.

  ” இன்றைய இளைஞர்கள் நாலைய தலைவர்கள் “, என்பதுபோல நாம்,இளைஞர்கள்தான் சிங்கையின் முதுகெலும்பு.

  சிங்கப்பூர் குடிமை தற்காப்பு குழுவினர் தங்கள் உயிரை பணயம் வைத்து நாமையும் சிங்கையையும் காப்பாற்றி வருகின்றனர்.

  இவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

  “சிங்கை நாடு எந்தன் வீடு”,என்று கூறி நான் எனது கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.நன்றி.

 4. தேசிய தினம்

  தேசிய தினம் என்ற உடனே என் நினைவில் முதலில் வருவது தேசிய தினக் கொண்டட்டம் தான். அப்போது வெடிக்கப்படும் வண்ணம் நிறைந்த வானவேடிக்கைகள் எல்லோர் மனதையும் கவர்ந்தவையாகும். நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நீ அதற்கு என்ன செய்தாய் என்று கேள் என்பார்கள். நான் சிங்கப்பூரர் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன். நான் தொடக்கப் பள்ளி ஐந்தில் படிக்கும் போது தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் நான் தேசிய தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
  இந்த வருடம் என் பள்ளி மாணவர்கள் தேசியதின விழாவில் கலந்துகொண்டார்கள். அதைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததோடு மட்டுமின்றி பெருமையாகவும் இருந்தது. தேசிய தினத்தன்று நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து தேசிய தின நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தோம். அப்போது என் தோழியும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என் பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறாள் என்பதை என் பெற்றோருடன் பகிர்ந்து கொண்டேன். பல
  இன மக்களைக் கொண்ட நம் நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து கொண்டாடும் ஒரே நிகழ்ச்சி என்றால் அது தேசிய தினம்தான் என்று நான் நினைக்கிறேன்.

 5. ‘தேசிய தினம்’, என்ற இருச் சொற்கள் பார்க்கும்போது, இல்லை கேட்க்கும்போது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி, பெருமை, நன்றியுணர்வு, நாட்டுப்பற்று ஆகிய நான்கு உணர்வுகள் தோன்றும்.

  முதலில், நம் நாட்டில் இருக்கின்ற மக்கள். இந்த அருமையான நாட்டின் குடிம்க்கள் பல இனக்காரர்கள். மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் போன்ற இன மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். நாம் பல நாடுகளுக்குச் செல்லும்போது,வெவ்வேறு இன மக்கள் ஒருவருக்கொருவர் இடையே பிரிவு, கோபம், சண்டையிடுவது போன்றவை இருக்கும். ஆனால், நாம் குடிமக்களாகிய இந்த சிங்கை நகரத்தில் அப்படி இல்லை! அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து பரிவு, அன்பு, போன்ற பண்புகளை பின்பற்றி வாழுகிறோம். இது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. ஆனால், நாம் இருக்கும் இந்த நாடு கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டது என்பதை மறக்காமல் வாழ்வது முக்கியம்.

  மேலும், இந்த சொற்கள், சிங்கப்பூரின் தற்போது நிலைக்கு பங்காளிகளை நிறுத்துகிறது. யேசு கிரிஸ்துவினால் நமக்குக் கிடைத்த அருமையான தலைவர்களை நினைத்துகிறது. அவர்கள் கஷ்டங்களிலும் உறுதியாக நன்றதால் நம்மல் இன்றும் ஒரு வசதியான வாழ்க்கை வாழ முடிகிறது. ஆனால், நாம் ஒருவரும் இதில் பங்காளிகள்.

  நாம் தொடர்ந்து நம் பொறுப்பை ஏற்று கொண்டு செயல்படுவோம், இனிமையான வாழ்க்கை வாழுவோம்!

  இவை, ‘தேசிய தினம்’, என்ற சொற்கள் என்னை நினைப்படுத்துகிறது…

  Gloria Vadukkoot Chacko
  St. Hilda’s Secondary School

 6. 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, சிங்கப்பூர் உலக வரைபடத்தில் ஒரு தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து இறுதியாக சுதந்திரம் பெற்றதால் பலர் மகிழ்ச்சியடைந்தனர். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் மக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. நீங்கள் இளையோ அல்லது வயோவோ இருந்தால், ஆகஸ்ட் சிங்கப்பூரில் வருகையில், அனைவருக்கும் மகிழ்ச்சி.

  இது வேடிக்கையாகவும் மகிழ்ச்சியுடனும், மக்களுடைய மயக்கங்களை கௌரவிக்கும் ஒரு காலமாகும். சிங்கப்பூரின் தேசிய வண்ணங்கள் சிவப்பு நிறமாகவும் வெள்ளை நிறமாகவும் இருக்கும், இந்த மாதங்களில் இந்த கட்டிடங்கள் அனைத்தும் இந்த நிறங்களுடன் பிரகாசிக்கும் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். முழு நாட்டிற்கும் வாழ்த்துக்கள் மற்றும் தனிநபர்கள் தேசிய தினத்தை கொண்டாடுவதற்கு திட்டமிடுகிறார்கள். கேக்குகள் மற்றும் சுவையான பொருட்கள் அனைத்தும் வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகின்றன.

  மற்ற அனைத்து சுதந்திர தினங்களிலும், சிங்கப்பூர் தேசிய தினம் அரசாங்கமும் அமைச்சர்களும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. நாள் சிங்கப்பூர் பிரதம மந்திரி ஒரு விதிவிலக்கான பேச்சு தொடங்கியது. இது உள்ளூர் சேனல்களில் நேரடி ஒளிபரப்பப்பட்டது. நாட்டின் பிரதான வெற்றியை பிரதம மந்திரி உரையாற்றினார். நாட்டிற்கு ஒரு நல்ல இடத்தை அமைப்பதற்கான அவர்களின் முடிவற்ற முயற்சிகளுக்கு பொது மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். எதிர்கால திட்டங்கள், அரசாங்கத்தின் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் இலக்குகளை தெளிவுபடுத்துவதையும் விவாதிக்கின்றன. காலை உரையாற்றிய பின்னர் மக்கள் தேசிய தின அணிவகுப்பை அனுபவிக்கிறார்கள். இது 2008 ஆம் ஆண்டு முதல் மரினா விரிகுடாவில் நடக்கிறது.

  இந்த அணிவரிசை விமானிகள் மற்றும் பிற கலைஞர்களின் திறமையைக் காட்டுகிறது. ஸ்கைத்வீவிங், பாட்டு மற்றும் பிற வேடிக்கை நடவடிக்கைகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரும் அனுபவிக்க மற்றும் ஒரு பகுதியாக இருக்க முடியும். தேசிய இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகள் உட்பட சமுதாயத்தின் ஆயுதமேந்திய உறுப்பினர்களுக்கும் இந்த அணிவகுப்பு மரியாதை செலுத்துகிறது.

  பிரபல அரசியல் பிரதிநிதிகள் அணிவகுப்பின் பகுதியாக உள்ளனர். சீருடை அணிவகுப்பில் அணிவகுப்பு நடத்துவதற்கு மாணவர்கள் தங்கள் மாணவர்களை அனுப்பத் தேர்வு செய்கிறார்கள். இரவு முடிவதற்கு, வானவேடிக்கை ஒரு கண்கவர் நிகழ்ச்சி. வெவ்வேறு இடங்களில் சேகரிக்கும் வெவ்வேறு அணிகளால் இது செய்யப்படுகிறது. நிறங்கள் பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருந்து இருண்ட கீரைகள் மற்றும் தூய சிவப்புக்கள் வரை இருக்கும்.

  சிங்கப்பூர் தேசிய தினம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடுமுறை. சிங்கப்பூர் மக்கள் பல்வேறு பின்னணியிலிருந்தும், கலாச்சாரங்களிடமிருந்தும் வந்திருக்கிறார்கள், ஆனால் இந்த நாள் அவர்களை ஒன்றாகக் கொண்டுவருகிறது.

  மக்கள் இடையே ஒற்றுமை அதிகரித்து அவர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று ஒன்றாக வந்து. தேசிய தினம் என்பது இதுதான். அவர்கள் எந்தவொரு கஷ்டத்தை எதிர்கொண்டாலும், அவர்கள் ஒன்றுபட்டால் அவர்கள் அனைத்தையும் கைப்பற்றலாம். முறையான தலைமை உங்களை வெற்றிகரமாக உதவுவதோடு, செழிப்புடன் வளர்க்கவும் முடியும்.

  Sriram
  Swiss Cottage Secondary School

Your email address will not be published.


*