மேளம், தாளம், கொண்டாட்டம்!

மகிழ்ச்சி, கொண்டாட்டம், பெண்மையின் பூரிப்பு, இளமையின் அழகு, பாரம்பரிய இசை, உறவுகள் என்று பல கூறுகளைக் கொண்ட இப்படம் உங்கள் மனதில் எழுப்பும் உணர்வுகளை ஒரு கவிதையாக எழுதுங்கள் ..

உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 28 ஜூன் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

ஏப்ரல் மாதக் கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள்:

6 கருத்துரை

 1. மேளம், தாளம், கொண்டாட்டம்
  வானில் இருந்து வந்து இறங்கிய வண்ண முகில் கூட்டங்களின் ஆர்ப்பரிப்போ!!!
  இல்லை
  இடி முழக்கங்களின் முத்தாய்ப்போ!!!
  இல்லை
  மின்னல் என்னும் பெண்ணின் நடன அரங்கேற்றமோ!!!
  இத்தனையும் ஒன்றாய் இணைந்து இசையாய்
  முழங்க என்னையன்றி யார் உளார்
  என்ற இறுமாப்பாய் முரசொலிக்கும்
  கந்தர்வ பெண்ணோ இவள்!!!!
  பிரமன் படைப்பில் பெண்ணின் அவதாரம் எத்தனை எத்தையோ
  என்னைக் கவர்ந்த அவதாரம் மேள தாள கொண்டாட்டத்திற்கே
  கொண்டாட்டம் சேர்க்கும் இவளே!!!இக்காட்சிக் காணும்போது
  மனம் கொண்டாட்டத்தில் கொள்ளைப் போகாமலா இருக்கும்.

  Dakshaini
  Yuhua Secondary School

 2. புதுமை பெண்…

  பெண்ணே..!
  காட்டாற்று வெள்ளம்
  கறைபுரண்டு ஓடினாலும்
  வளைந்துகொடுக்கும்
  நானல் ஓர்நாளும் ஒடிந்துபோவதில்லை.
  பெண்ணே..!
  ஆண்களிடம் பணிந்துகிடந்ததுப்போதும்
  துணிந்துநில்
  பெண்ணே..!
  வாழ்வினில் சந்திக்க நினைக்கும்போது
  துன்பங்கள் உன் முயற்ச்சிக்கு
  முட்டுக்கட்டையாக வரலாம்.
  ஆனாலும் அதை உன் வெற்றிக்கு
  படிக்கற்கலாய் மாற்றிவிடு
  பெண்ணே..!
  என்னால் முடியாது என்று எண்ணிவிடாதே!
  பென்னால் முடியாதது இல்லை என்று
  முடித்கதுக் காட்டிவிடு
  புதுமை பெண்ணே…

  Nandhakumar Ragavi
  Commonwealth Secondary School

 3. சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
  முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
  வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
  என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

  மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை
  தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
  மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை
  சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
  கார்குழலில் உலகை கட்டி விட ஆசை

  அழகிய தருணங்கள் கிடைக்க ஆசை
  இனபத் தருணங்கள் கிடைக்க ஆசை

  புதிதாக புறப்பட்ட விடியலில்
  புன்னகை பூக்கள் மலரட்டும்
  மகிழ்ச்சி எங்கும் பரவட்டும்!

  YASHIKHA RADHAKRISHNAN
  Riverside secondary school

 4. கல்வியில் மேன்மை பட்டம்
  மனிதர்கள் தீட்டுவது திட்டம்
  பாரதி கண்ட புதுமை பெண்கள்
  மற்றவர்களிடம் சாதித்து காட்ட நாட்டம்
  நேர் படுத்துவது சட்டம்
  ஆட்டத்தில் கட்டம்
  திரள்வது கூட்டம்
  குளிர் போக்க மூட்டம்
  சரிநிகராவது வட்டம்
  உயர்வது ஊட்டம்
  ஒழுக்கமின்மை மட்டம்
  பாரம்பரிய இசையை
  கேட்டால் ஒரே ஆட்டம்
  உறவுகள் ஒன்றாக இருக்க இஷ்டம்
  ஒடுங்குவது ஓட்டம்
  வேகப்படுவது காட்டம்
  வேறுபடுத்துவது வாட்டம்
  கூடுவது கோட்டம்
  மனம் பறிப்பது தோட்டம்
  சுறுசுறுப்பாய் வண்டாட்டம்
  இருந்துவிட்டால்
  மாறிவிடும் திண்டாட்டம்
  பின்
  எல்லாமே மேளம், தாளம், கொண்டாட்டம்!

  JEYARAJ JUSTIN
  COMMONWEALTH SECONDARY SCHOOL

 5. மேளத்தில் கைகள் இடும் தாளம்-இசை கலைஞனுக்கு கொண்டாட்டம்
  மேடையில் கால்கள் இடும் தாளம்-நடன கலைஞனுக்கு கொண்டாட்டம்
  மேடையில் சிலேடை சொல்லின் தாளம்-மேடை பேச்சாளனுக்கு கொண்டாட்டம்
  மேள தாளத்தோடு கல்யாணம் -இதுவே மணமக்களுக்கு கொண்டாட்டம்
  பரிட்சை முடிவு வெற்றி செய்தி-பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம்
  வேலை தேடும் பட்டதாரிக்கு-வேலை கிடைத்தால் மேள தாள கொண்டாட்டம்

  Vishnu
  Punggol Secondary School

 6. பெண்ணே! புறப்படு விருட்சமாய் ஒரு புதிய சரித்திரம் படைக்க
  அடங்கி ஒடுங்கி அடுப்படியில் அடைந்து கிடந்தது போதும்

  பொங்கி எழு!
  பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
  பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று
  பெண்ணே நீ பொங்கி எழு!

  நீ வெறும் அழகு பதுமையல்ல!
  ஆட்சி நடத்தும் வல்லமை பெற்றவள்
  உன் சக்தி முழுவதும் திரட்டி
  பெண்ணே நீ பொங்கி எழு!

  மேள தாளத்தோடு உன்னை அரியணையில் ஏற்றி
  கொண்டாட உன் பின்னே இந்த உலகே உள்ளது
  பெண்ணே நீ பொங்கி எழு!

  M S NITHYASRI
  RIVERSIDE SECONDARY SCHOOL

Your email address will not be published.


*