2017ம் ஆண்டில் பரிசு பெற்ற கவிதைகள்

இளமைத்தமிழ்.காம் போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்ற 2017ம் ஆண்டின் கவிதைகள் இவை.

24 கருத்துரை

 1. அன்னை என்ற சொல்லே அன்பு எனும்
  மகாசக்தியின் பிறப்பிடமாம்
  அகிலமே இவளின்றி அணுவும்
  அசையா சொப்பனமாம்
  கருவறையில் உறங்கும் தன் மழலை
  முகம் பார்க்க அரும் தவம்
  புரியும் இவள் இரு விழியும்
  பிள்ளையின் பிஞ்சுப் பொன்விரல் தீண்ட
  உள்ளம் கூத்தாட காத்திருக்கும் இவள் இதயம்!

  Lavinn(4D)
  Teck Whye Secondary School

 2. கறுப்பு வெள்ளை …
  கறுப்பினத்துக் குழந்தையை
  வெள்ளைக்காரி ஒருத்தி
  கட்டி அணைத்து
  அக்கறுமையான தோளில்
  வெள்ளைப் பூசினாள்.
  பிஞ்சு விரல்களைப் பற்றி
  ஒன்றா உள்ளங்களுக்கிடையே
  பாலம் அமைத்தாள்.
  கறு விழியைச் சூழ்ந்த வெண்படலத்தில்
  தன்னைக் கண்டாள்.
  ஊர் தூற்றிய மலடி அன்று தாயானாள் …

  ராஜேந்திரன் ராஜேஷ்
  விக்டோரியா தொடக்கக்கல்லூரி

 3. அம்மா,
  நீ என் முன்னே இருந்தால்
  எனக்கு மகிழ்ச்சி வருகிறது
  நீ என் முன்னே இல்லாவிட்டால்
  எனக்கு துன்பம் வருகிறது
  நீ என் முன்னே இருந்தால்
  வேம்பும் எனக்கு இனிக்கிறது
  நீ என் முன் இல்லாவிட்டால்
  தேனும் எனக்கு கசக்கிறது
  உன்னை பார்க்கும் போது
  வாழ பிடிக்கிறது எனக்கு
  உன்னை பார்க்காத போது
  வாழவே பிடிக்கவில்லை எனக்கு
  அம்மா உன் அன்பு தான் இதுக்கு காரணம்!
  அதற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை!
  கருவறையின் இருட்டில் இருந்த என்னை
  வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவள் என் தாய்!
  நான் பிறக்கும் போது என்னோடு
  மறுஜென்மம் எடுத்து பிறந்தவள் என் தாய்!
  நான் கேட்காமலே கடவுள் தந்த வரம் என் தாய்!
  நான் கேட்டால் உயிரைக் கூட தருவாள் என் தாய்!
  என் தாயின் மறுஉருவம் நான்!
  என் மூலம் அவள் சிரிப்பாள்
  என் வழியாக அவள் அழுவாள்
  என்னோடு சேர்ந்து சாதிப்பாள், அப்படி
  என்னுள் கலந்தவள் என் தாய்!
  அவள் சாதிக்கப் பிறந்தவள்!

  நிவேதிதா
  ஜூராங் உயர்நிலைப் பள்ளி

 4. தாய் மொழியான தமிழ் மொழி
  உயிர் நாவில் உருவான
  உலகமொழி
  நம் செம்மொழியான
  தமிழ் மொழியே
  மென்மையும் தொன்மையும்
  கலந்த தாய் மொழியே
  நீ தானே தனித்து தவழும்
  மழலை தேன் மொழியே
  இலக்கண செம்மையில் வரம்பே
  இல்லா வாய் மொழியே
  இலக்கண பொருளின்
  அணிச்சிறப்பாய் அளவெடுத்த
  செய்யுள் மொழியே
  நம் தாய் மொழியான தமிழ் மொழி

  Nandhakumar Ragavi
  Commonwealth Secondary School

 5. என் இனிய தமிழ்மொழி
  தேனினும் இனியமொழி
  தெவிட்டாத செந்தமிழ்மொழி
  சிந்தையெல்லாம் நிறைந்தமொழி
  என் இனிய தமிழ்மொழி.
  என் இனிய கம்பனையும்
  என் இனிய பாரதியையும்
  உலகிற்கு அடையாளம் காட்டியமொழி
  என் இனிய தமிழ்மொழி.
  ஏப்ரல் மாதம் முழுவதும்
  கொண்டாடப்படும்
  என் இனிய தமிழ்மொழி
  அதுவே என் தாய்மொழி.
  தொன்மையான மொழி
  என்றும் இளமையானமொழி
  எப்பொழுதும் அழியாதமொழி
  என் இனிய தமிழ்மொழி.
  சிங்காரச் சிங்கையிலே
  ஏப்ரல் முழுவதும் எங்கும் தமிழ்
  எதிலும் தமிழ், அதுவே
  என் இனிய தமிழ்மொழி.

  MONICA DANIEL
  FAJAR SECONDARY SCHOOL

 6. நீயே ஒரு கவிதைதானே
  தமிழே
  நீ
  வள்ளுவன் எழுதிய மொழி
  பாரதி பாடிய மொழி
  ஔவை பேசிய மொழி
  கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும்
  காணப்படும் மொழி
  தமிழே
  இராஜ இராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன்
  போன்ற மன்னர்களின் தாய்மொழி நீ
  கல்கி மற்றும் இளங்கோவடிகள்
  போன்ற எழுத்தாளர்களின் தாய்மொழி நீ
  தமிழே
  உன்னைவிட பழைய மொழியில்லை
  உன்னைப்போல இளைய மொழியில்லை
  தமிழுக்கு மூன்று எழுத்து
  இம்மூவெழுத்தே என் உயிர்மூச்சு
  இந்த உலகத்தில்
  தமிழைப்போல அழகியது இல்லை
  தமிழ் இலக்கியத்தைப்போல ஆழமானது எதுவும் இல்லை
  இனிய தமிழைப் பார்த்து தேன்கூட பொறாமைப்படும்
  ஞான தமிழின் அறிவு இந்த அகிலத்தைவிட பெரிது
  தமிழுக்கு அமுதென்று பேர்
  இல்லை, இல்லை தமிழ் அமுதைவிட சிறந்தது
  தமிழே
  உனக்கா கவிதை தேவை?
  நீயே ஒரு கவிதைதானே!

  சுப்பிரமணியன் கார்த்திகேயன்
  பெண்டமியர் உயர்நிலைப் பள்ளி

 7. உலகத்தின் அதிசயங்களில் மழை ஒன்று!
  அளவாய் வரும்போது அமுதத்துளி!
  அளவின்றி வரும்போது விஷத்துளி!
  அறவே வருதாதபோது
  அனைவரின் கண்களிருந்தும் வழியும் கண்ணீர்துளி!
  இதுவே மண்ணின் உயிர்த்துளி!
  சித்தத்தில் உறுதிக்கொண்டு சேமிப்போம் மழைத்துளி!

  சேவா மாணிக்கம்
  கான் எங் செங் உயர்நிலைப்பள்ளி

 8. மழை மட்டுமா அழகு?
  கண்களிலிருந்து கசிந்திடும் கண்ணீரும் அழகு
  மழை மட்டுமா அழகு?
  மனதை குனப்படுத்தும் மௌனமும் அழகு
  மழை மட்டுமா அழகு?
  பிஞ்சு குழந்தியின் சிறிப்பும் அழகு
  மழை மட்டுமா அழகு?
  உலகையே பார்க்கும் நம் கண்களும் அழகு
  மழை மட்டுமா அழகு?
  மனதை மயக்கும் காதலும் அழகு
  மழை மட்டுமா அழகு?
  நீயும் அழகு…

  ராதிகா பாஸ்கரன்/ Rathika BAskaran
  யுனிட்டி உயர்நிலைப்பள்ளி/ Unity Secondary School

 9. சாரல் மழையில் நினைந்த காற்று
  தென்றலாய் சில்லிடுகிரது!
  மழை நீர் கொட்டும் சத்தம்
  புதியதொரு இசையமைகிரது!
  மளர்களெல்லாம் நீரில் நினைந்து
  தலையாட்டிப் புன்கைகிரது!
  எல்லோரின் மனதும்
  மழையில் நினையவே
  மன்றாடி கெஞ்சுகிரது!
  பல மேல் துரம் கடந்துவரும்
  இந்த நீர் துலிகள்
  தேவனின் தீர்தமோ?

  Selvakumar Yazhini
  Unity Secondary school

 10. கருணையும் அன்பும்

  போகும் பாதை தூரமில்லை
  வாழும் வாழ்க்கை பாரமில்லை
  குனிந்து தோள் கொடு
  இறைவன் உந்தன் காலடியில்
  இருள் விலகும் அகொளியில்
  அன்னம் பகிர்ந்திடு
  வலிதாங்கும் சுமைதாங்கி
  மண்ணில பாரமில்லை
  ஒவ்வொரு அலையின்பின்
  இன்னொரு அலையுண்டு
  வழங்கும் கை ஆசியிலும்
  இருகை ஓசையிலும்
  புவி எங்கும்
  புன்னகை பூக்கட்டுமே!

  யாஷிகா ராதாகிருஷ்ணன்
  Riverside Secondary School

 11. கள்ளம் கபடம் அறியா
  கருணை உள்ளம் பொருந்திய
  பிறவி நீயே
  மண்னை நனைத்த
  விண்னின் கோபமோ
  மானிடத்தின் கண்னை மறைத்தது
  நன்றியுள்ள ஜீவனாம்
  வழியின்றி திரியும்
  வாயில்லா ஜீவனாம்
  மழையில் நனைந்து
  குளிரின் நடுங்கி
  சொல்லொணா துயரை
  சொல்லாது உணரந்த உன்
  கருணை உரைத்திட
  கண்டிலேன் உரிய வார்த்தை

  பாலமுருகன் விஸ்வா
  காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி

 12. ஞாயிறின் ஒளியினின்று ஞமலியைக் காக்கும் கருணை
  மனதின் அச்சத்தையெல்லாம் நொடியினில் போக்கும் கருணை
  இருண்ட வாழ்வுதனிலே நம்பிக்கை எனும் ஒளிவீசும் கருணை
  தரணியின் உயிர்கள் மீது இறையவன் பொழியும் கருணை
  அழுகின்ற குழந்தை மீது பாய்வது தாயின் கருணை
  கருணையும் அன்பும் தானே உலகினைக் காக்கும் அரண்கள்
  காட்டு விலங்கினைக்கூட அடிபணிய வைக்கம் ஆயுதம் அன்பு
  பல இன மக்களையும் இணைக்கும் பாலமாய் இருப்பது அன்பு
  அன்பிருக்கும் இடத்தில் எல்லாம் அமைதியே பூத்துக்குலுங்கும்
  தூய்மையான அன்புதானே துயர்தீர்க்கும் வழியாய் விளங்கும்
  உன்னதச்செல்வங்களான கருணையையும் அன்பினையும்
  போற்றியே சிறந்து வாழ்வோம்!

  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 13. *கடல் அலை*

  காலில் சலங்கையை கட்டிகொண்டு
  ஓய்வு இல்லாமல் எங்கு நடந்து கொண்டிருக்கிறாய்
  எதை தேடி பயணித்து கொண்டு இருக்கிறாய்
  உன்னிடும் இருந்துதான்
  இசை கலைஞன் இசை கற்றானா
  உன்னை பார்த்த பின்புதான்
  கவிஞனுக்கு கவிதை வந்ததா
  விலையேற பெற்ற பொக்கிஷங்களை
  கரை சேர்த்து
  உன் வருகையை பதிவு செய்து விட்டு செல்கிறாய்
  என்னை தேடி கரை வந்து
  என் பாதத்தை தழுவி விட்டு செல்கிறாய்
  உன் குளிர் காற்றால் வெப்பம் தனிகிறேன்
  உன் தீண்டலால் குளிர்ந்து போகிறேன்
  யாரிடம் கோபம் கொண்டாய் இப்படி
  மோதி அடித்து கொண்டு வருகிறாய்
  கரை தேடி வந்து தீண்டிய நீ
  இப்போது கரை தேடி வந்து
  இழுத்துக்கொண்டு செல்கிறாய்
  பிணம் தின்னும் பழக்கத்தை எங்கே கற்றாய்
  உன் எல்லையை மீறுவதற்கு
  யார் அனுமதி கொடுத்தது
  எல்லை மீறும் பழக்கத்தை விட்டுவிட்டு
  உன் எல்லைக்குள்ளே உன் நடையை போடு

  ந.ராகவி
  காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி

 14. முக்கடலின் கரையில்
  நின்று
  வியந்துகொண்டிருந்தபோது
  உள்ளங்கையில்
  அள்ளி
  ப்பூவென ஊதினேன்
  சிறு துளிகளாக சிதறியது கடல்
  கடலின் கரையில்
  பிரம்மாண்டமாக
  எழும்பி நின்றது ஒரு மலை
  கடல் சிரித்தது
  ஒரு புயல் போதும்
  மலையை மறைக்கவென சிரித்தது கடல்
  மலை மலையென
  கடல் கடல் கடலென
  மலை உச்சியைத் தொட
  கடல் எழும்பி அலை எழும்பி
  கடல் கீழிருந்து பார்த்தது
  மலை அமைதியாக இருந்தது
  கடல் ஆர்ப்பரிக்கிறது

  YASHIKHA RADHAKRISHNAN
  Riverside Secondary School

 15. கடலே கடலே கடலே!!!
  உலகில் மூன்று பங்கு கடலே!!
  வாழ்க்கை சுழற்சியில்
  உன் பங்கு உன்னதம்!!
  அமைதியான கடல்!
  ஆர்ப்பரிக்கும் கடல்!
  மனித மனமும் அப்படியே!
  மனிதரில் வண்(கு)ணங்கள்!!
  கடலும் அப்படித்தானோ!!!
  அதிகாலை நேரத்தில் அற்புத வண்ணம்! செங்கதிரோனை கண்டால் செவ்வண்ணம்!
  நீல வானம் நோக்கம் ஒருவண்ணம்!
  கார்முகிலை கண்டால் கருமை வண்ணம்!
  முழுநிலவை கண்டால் முழுமை வண்ணம்!
  கடலின் அழகைக் காண
  ஆர்ப்பரிக்கும் உள்ளத்தில் அமைதி!
  கடல் அன்னையே
  உன் உன்னதம் உணர்ந்தேன்!
  உன்னை தலை வணங்குகிறேன்!

  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டு உயர்நிலைப்பள்ளி

 16. இலைகள் இருந்தால்தான் அது ஒரு கிளை
  கிளைகள் இருந்தால்தான் அது ஒரு மரம்
  இலைகள் ஒளிச்சேர்க்கை செய்யாவிட்டால்
  அந்த கிளை இறந்துவிடும்
  கிளை இறத்துவிட்டால்
  அந்த மரமே இறந்துவிடும்
  அதேபோல்
  மரம் என்பது ஒர் உலகம்போல்
  கிளை என்பது ஒரு நாடுபோல்
  இலை என்பது ஒரு மனிதன்போல்
  ஒரு மனிதன் தன் வேலையை
  ஒழுங்காக செய்யாவிட்டால்
  அது அந்நாட்டைப் பாதிக்கும்
  அது இந்த உலகத்தையே பாதிக்கும்
  மரம் கிளை இலை
  நம் வாழ்க்கைக்கே
  எடுத்துக்காட்டு

  Harik
  Yuhua Secondary School

 17. மரம் மனிதனின் சுவாசம்
  மரம் பறவைகளின் சரணாலயம்
  மரம் வழிப்போக்கரின் கூடாரம்
  மரம் பழங்கள் தரும்
  பலன்கள் தரும்
  நிழல் மழை தரும்
  மனிதன் காடுவரை செல்ல
  கூடவே வரும்
  மரமே நீ வெயிலுக்கு நிழல்
  எறும்புக்கு பாதை
  பறவைக்கு நிழற்குடை
  சிலந்திக்கு வலை
  மண்ணுக்கு உரம்
  கொடிக்கு பந்தல்
  கால்நடைக்கு உணவு
  நோயுக்கு மருந்து
  ஆயுதங்களுக்கு கைப்பிடி
  வீட்டிற்கு காவலன்
  வானுக்கு மழை
  குடிசைக்கு கூரை
  தாகத்திற்கு நீர்
  உயிர்களுக்கெல்லாம் உயிர்
  பஞ்சபூதங்களின் பணியாளன்
  வண்ணப்பறவைகளின் வசந்தகால ஊஞ்சல்
  கற்கால மனிதனின் மாட மாளிகை
  தற்கால மனிதனின் தன்னலமற்ற சேவகன்
  பாருக்கே பசுமை ஆடை போற்றிய பேகன்
  இயற்க்கையின் உயிர்நாடி

  YASHIKHA RADHAKRISHNAN
  RIVERSIDE SECONDARY SCHOOL

 18. ஒரு மரம், கிளைகள், மலர்கள்
  மரமே நீ வெயிலுக்கு நிழல்
  பறவைக்கு வீடு, கால்நடைக்கு உணவு
  சிறுவர்களுக்கு தோழன்
  நோய்க்கு மருந்து, வீட்டுக்கு காவலன்
  வானுக்கு மழை, உயிர்களுக்கெல்லாம் உயிர்
  இப்படி உணவு, உறைவிடம் தந்து
  நம்மை வாழ வைக்கும் மரத்தை
  அழித்து, நாம் வாழ நினைப்பது முறையா?
  நாம் அழிப்பது மரத்தை அல்ல,
  நம்மில் பாதியை…
  வெட்ட வெட்ட முளைத்தாலும்
  அதன் பயனை அறியாமல்
  வீழ்த்தவே பார்க்கிறோம்,
  பின்விளைவுகள் அறிந்தும்.
  உப்பு நீரை, உண்ணும் நீராக்க
  ஓயாது உழைக்கும் விஞ்ஞானிகள் மரங்கள்
  மரங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்,
  பொறுமை என்றால் என்னவென்று!
  பூக்களை முத்தமிடம் குத்தகைகாரன் தென்றல்!
  தான் தான் அழகு என்று கர்வம் கொண்டு
  மலர்ந்திருக்கும் மலர்கள்
  சில மணி நேரம் வாழும் பூக்கள்!
  கவிதை போல சிரித்துக் கொண்டே பூக்கின்றது
  வசந்த காலத்திற்கு வண்ணம் பூசும்
  வாசமிகு தேவதைகள் பூக்கள்!
  பூக்களுக்கும் மென்மையான இதயம் உண்டு
  தென்றலின் தீண்டல்
  தன்னை அழித்தவனையும் சுமக்கும்
  நாற்காலியாகவும் வாழ்கிறது மரம்
  பூக்காத பூக்களுக்காக மன்னிப்புக்
  கேட்பதில்லை மரங்கள்!
  உயிரை உற்பத்தி செய்யும் தொழில்சாலை மரம்
  எத்தனை யுகம் கடந்தாலும்
  அழியா வரம் பெற்ற
  இறைவனின் அற்புத படைப்பு மரம்
  மனிதர்களே! இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
  மரத்தை காப்போம்! மழையை பெறுவோம்!

  சுபத்ரா
  Jurong West Secondary School

 19. மகிழ்ச்சி என்றால் என்ன?
  தோற்றமா?உணர்ச்சியா?
  நினைக்கும்போதெல்லாம் வரக்கூடிய ஒன்று அது அல்ல.
  மகிழ்ச்சி நமக்கு வரும்போது கூடவே வரும் சிரிப்பு.
  என் மகிழ்ச்சி எல்லாம் காற்பந்து விளையாடும்போது வரும்.
  உங்களுக்கு அது வரலாம்.
  ஆனால் எப்போது வரும்?
  அதுதான் கேள்வி.மகிழ்ச்சிக் கொண்டு மகிழந்திருங்கள்.

  M.NEELAKANDAN
  YUHUA SECONDARY SCHOOL

 20. மகிழ்ச்சி

  செடியில் பூக்கும் மலரை விட
  நொடியில் பூக்கும் உங்கள் புன்னகை அழகு!
  உலக அதிசயம் காண கர்வமில்லை
  உங்கள் மகிழ்ச்சியை கண்டபின்.
  இறைவன் படைப்பில் இயல்பு கெடாமல்
  இன்றும் இருப்பது இந்த சிரிப்பு!
  நீங்கள் கொஞ்சம் சிரித்தாலும் தேனாய் இனிக்குது
  மனதில் ஆனந்தம் பொங்குது,
  உங்கள் சிரிப்பு முகத்தை பார்த்து.
  கடவுள் தந்த வரம் மகிழ்ச்சி
  உண்மையான கவிதை என்பது,
  அழகான வரிகளை சொல்வது அல்ல,
  குழந்தைகளின் சிரிப்பை சொல்வது.
  இறைவன் தந்த முதல் முகவரி சிரிப்பு தான்.
  வாழ்நாட்கள் அதிகம் வேண்டாம்,
  வாழும்நாட்கள் மகிழ்ச்சியாய் இருந்தாலே போதும்.
  வெளிப்படையாக இருப்பவர்களை விட
  உங்களைப் போல் வெளிப்படையாக சிரிப்பவர்களுகே
  உலகில் மதிப்பு அதிகம்.
  ஆழம் தெரியாமல் விழுந்தேன்
  உங்கள் கன்னக்குழி சிரிப்பில்.
  அதிகாலை பொழுதில் சூரியனின் வெளிச்சம் கண்டேன்
  வானத்தில் பறவைகள் பறப்பதை கண்டேன்
  உங்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியை கண்டேன்
  நீங்கள் அன்பாக பேசி வெல்வதை விட
  சிரிப்பால் வெல்வதே அதிகம்
  சிரித்து சிரித்து சிறைப்படுத்தும் கலையை
  உங்களுக்கு கற்றுத்தந்தது யாரோ??
  நீங்கள் குழந்தைகளின் புன்னகைக்கு காரணமானால்
  உங்கள் பாவங்கள் சிறிதேனும் குறைக்கப்படும்!
  மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக வையுங்கள்!
  சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்
  மனம் விட்டு சிரிப்போம்! கவலையை மறப்போம்!

  சுபத்ரா
  JURONG WEST SECONDARY SCHOOL

 21. ஆனந்தத்தில் திளைத்தேன்
  வயிறு குலுங்க நகைத்தேன்
  மூத்து சரப் பற்களை காட்டினேன்
  ச்ழ்ச்ஸாசயில் சிறகடித்து பறந்தேன்ச்சஸமயத்தில்,
  முகம்ச்ச்ச்ச் பொலிவடைந்தது
  அகத்தின் அழகு தெரிந்தது
  கவலைகள் மறைந்தது
  கோபங்கள் ஒழிந்தது
  அச்சமே பயமடைந்தது
  வாழ்வின் அர்த்தமே
  அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது

  சங்கர்ரமணி கீர்த்தனா
  ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி

 22. எனக்கும் வேண்டும் கடன்
  ஈடில்லா அன்பின் உடன்
  இடை தொடை கடைபோல்
  நேரசை நிறைய சையாக
  வெண்பா கலிப்பாகத்
  தேமா புளிமாவாகத்
  தெவிட்டாத தீந்தமிழே
  விதையாக வா
  காடு முளைக்க
  காகம் விதைக்கும் விதையாகக்
  கவிதையாக வா
  அன்பென்ற விழுதுகள்
  ஆழப் பதியட்டும்
  அன்பு

  Viswanatha Babu Banupriya
  Unity Secondary School

 23. மலரின் குளியல்
  —————-
  அக் காலை பூத்த பூக்களின் மத்தியில்
  அழகான பூ ஒன்று பூத்தது
  அதை சீண்ட வந்த தேனியின் மீது
  தன்மேல் விழுந்த பனித்துளிகளைத் தெளித்தது
  பூ மேல் விழுந்த பனித்துளி
  தன்மேல் விழுமா என்று
  வாடியிருந்த இலைகள் ஏங்கின
  சூரியன் பார்த்த காட்சியை
  தன்னால் பார்க்க முடியவில்லையே என
  நட்சத்திரங்கள் தவித்தன
  இக் காட்சியை
  மெளனமாக ரசித்த மேகம் ஒன்று
  சட்டென மழையைப் பொழிந்தது.

  G Vishnu
  Gan Eng Seng School

 24. நான் பிறந்தபோது இந்த உலகம்
  – என் கையில்
  நான் தவழ்ந்தபோது இந்த மேகம்
  -என் அருகில்
  நான் நடந்தபோது இந்த நதிகள்
  -என் அடியில்
  ஓ! அப்படிதான் தோன்றுமோ!
  மழலையின் மனதில்…

  செந்தில்குமார் ஹரீஸ்வரன்
  உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

Your email address will not be published.


*