நட்பின் கதை!

நட்புபள்ளிப் பருவத்தில் தோழர்களோடும் தோழியரோடும்தான் நம் நேரத்தில் பெரும் பகுதியைச் செலவளிக்கிறோம். அந்த நட்பில் சின்னச் சின்ன சண்டைகள், சமாதானங்கள், கேலிகள், உதவிகள், எதிர்பாரா சம்பவங்கள் எனப் பல கதைகள் உண்டு. அப்படிப்பட்ட சம்பவங்களைக் கதையாக எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளலாம். (நண்பர்களின் உண்மைப் பெயரைப் பயன்படுத்தும் அவசியமில்லை; புனைப் பெயர்களையும் பயன்படுத்தலாம்)
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 30  செப்டம்பர் 2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

6 கருத்துரை

 1. ஒருவரோடு நமக்கு உள்ள நெருக்கத்தன்மையை நிர்ணயிப்பது அவர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள எண்ண அலைகளின் ஒத்துப் போதலே எனப் பலர் கூறுவர். இதை பொய் என்று என் நட்ப்பின் கதையிலிருந்து அறிந்தேன்.
  எங்கள் எண்ண அலைகள் எவ்வளவு ஒத்துப்போகவில்லையோ, அவ்வளவு நெருக்கமானோம் நாங்கள். எங்கள் நட்பு வட்டாரத்தில் யாரையும் அவர்களின் உண்மையான பெயரைக்கொண்டு நாங்கள் அழைக்கமாட்டோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் இருக்கும். ஆனால் அப்பட்டப்பெயருக்கான காரணம் சம்பந்தப்பட்டவருக்குத் தெரியாது. அவ்வாறு ஒரு தோழியை “நொய்நொய்” என்று அழைதோம். அவளும் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து அவள் எங்களிடமிருந்து விலக ஆரம்பித்தாள். காரணமறியாது நாங்களும் குழம்பினோம். பலவாறு முயன்றபோதும் அவள் காரணத்தை கூற மறுத்து விட்டாள். ஒரு தினம் உண்மையை எவ்வாறாவது வெளிக்கொணர வேண்டும் என்ற முனைபோடு அவளை சுற்றி வளைத்தோம். பல மிரட்டல்களுக்குப் பிறகு ஒரு வழியாகக் காரணத்தைக் கூறினாள். “என்னை தினமும் நாய் என்று கூறுவதோடில்லாமல் அதை சகமாணவரிகளிடமும் எதற்க்காக கூறுகிறீர்கள்?” என்றாள். நாங்கள் கையை தலையின் அடித்தவாறு “நொய்நொய் என்றால் நாய் அல்ல. உன் பேச்சுத்திறன், அதாவது வாய் மூடாமல் புன்னகை பூத்தவாறே பேசும் உன் பேச்சுப் புலமையைப் பார்த்து நாங்கள் சூட்டிய அன்புப் பெயர் “ என்று கூற அவள் நாசி விரிய சிரித்துக்கொண்டே எங்களின் மீது வந்து விழுந்தாள். இதுவே நாங்கள் எங்கள் விளையாட்டுத்தனம் மற்றும் நட்ப்பின் அடையாளம்.

 2. நட்பின் மேன்மை
  அன்று ஆகஸ்டு 16.அன்று ரவியின் பிறந்தநாள்.ஆனால்,ரவியோ அன்று  பிறந்தநாள் என்பதை மறந்துவிட்டான்.அவன் காலைக் கடன்களை முடித்துவிட்டு உணவை உண்பதற்கு வரவேற்பு அறைக்கு வந்தான்.
  அப்போபோது,”பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!” என்று அவனின் பெற்றோர் வாழ்த்தினார்கள்.அவன் பல நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த மிதிவண்டி அவனுக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்தது.அவன் மறுநாள் தன் நண்பன் பாலாவுடன் பூங்காவுக்கு மிதிவண்டி ஓட்டச் சென்றான்.
  சிறிது நேரத்திற்கு பிறகு,பாலா ஒரு போட்டி வைக்கலாமா என்று கேட்டான்.ரவியும் சம்மதித்தான்.போட்டி ஆரம்பித்தது.அப்போது,ஓர் எதிர்பாராத சம்பவம் நடந்தது.ரவி பக்கத்தில் இருந்த ஒரு ஆற்றில் ”தொப்!” என்று விழுந்தான்.அவனுக்கு நீச்சல் தெரியாததால்,தண்ணீரில் தத்தளித்தாதான்.
  அதைப் பார்த்த பாலாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.ரவிக்கு உதவினால் அவன் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்வாவான் என்று பயந்தான் .அதனால் அவன் புறப்பட்டான்.
  ரவி எவ்வளவு கூச்சல் இட்டாலும் யாரும் அவனுக்கு உதவ வரவில்லை.சிறிது நேரத்தில், ரவி இறந்தான்.ரவியை காணவில்லை என்று காவலர்களிடம் பெற்றோர் புகார் கொடுத்தார்கள்.காவலர்கள் அவன் உடும்பை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்கள்.பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ரவியை பார்த்ததும் அவனின் பெற்றோர் அனலில் இட்ட புழுவைப் போல துடித்தாதார்கள்.ரவியின் சாவுக்கு பாலாத்தான் காரணம் என்று உணர்ந்த காவலர்கள் அவனைப் பிடித்து சிறுவர்கள் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினார்கள்.
  பாலா ரவியோடு நெருங்கி பழகினாலும் அவனிடம் உண்மையான அன்பில்லை.உண்மையான அன்பு இல்லாதவன் ஆபத்தின்போது உதவமாட்டான் என்பதை இக்கதை உணர்த்துகிறது.அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம் என்பது உண்மையன்றோ?
  மித்ரா.பா
  யூனிட்டி உயர்நிலை பள்ளி
   

 3. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நட்பு என்பது மிக முக்கியமானது. அந்த நட்பைப் பற்றி,
   ‘‘முகநக நட்ப து நட்பன்று நெஞ்சத்து
  அகநக நட்பது நட்பு’’ என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். அப்படிப்பட்ட நட்பு என் வாழ்க்கையிலும் மலர்ந்தது. அந்த நட்பு என்ற மலரில் இதழ்கள் போன்று என் நண்பர்களும் நானும் பின்னிப் பிணைந்து இருக்கின்றோம். அவர்களில் தருண் மற்றும் விக்னேஷ் என்ற இரு தோழர்கள் எனக்காகத் தங்களுடைய உயிரையும் கொடுக்கக் கூடியவர்கள். எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் அவர்கள் எனக்குப் பக்கபலமாக இருந்து காப்பாற்றுவார்கள். அதாவது,
  ‘‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
  இடுக்கண் களைவதாம் நட்பு’’ என்ற குறளுக்கேற்றாற்போல என் நண்பர்கள் ஓடோடி வந்து உதவுவார்கள்.
  உயர்நிலை இரண்டில்தான் அவர்கள் இருவரையும் சந்தித்தேன். எங்கள் மூவருடைய குணங்களும் ஒரே மாதிரி இருந்தன. அதாவது, மற்றவருக்கு உதவி செய்யும் குணமாகும்.
  அதாவது, ‘‘உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க
  முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஒருவருக்குக் கொடு.
  எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல;
  எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்’’ என்று அன்னை தெரேசா கூறியவாறு பொன்மொழிகள் எங்கள் மூவரின் மனத்தில் இருந்ததால்தான் நாங்கள் மூவரும் உயிர்த்தோழர்களாக இருந்தோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுவோம். அந்த முதியோர்களுக்கு உதவி செய்த பிறகு, அவர்களின் புன்னகை பூத்த முகத்தைப் பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். உயர்நிலை நான்கு வரை இந்தச் செயலை ஒன்றாகச் சேர்ந்து செய்தோம். தொடக்கக் கல்லூரிக்குச் சென்ற பிறகு நாங்கள் மூவரும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை ஒன்றாகச் சேர்ந்து சமூகச் சேவைகள் செய்து வருகின்றோம்.
  கிருத்தி ரோஷன்
  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

 4. அவளின் பெயர் ஆர்த்தி. நான் அவளுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன். சகோதரர்கள் போல் பழகினோம். ஆனால் அந்த நாள் எல்லாமே மாறியது. அவளைப் பற்றி நம்பியிருந்த எல்லாவற்றிக்கும் நேர்மாறாக இருந்தது.
  அன்று இருந்த தேர்வில் நான் நினைத்து பார்க்காத ஒன்றை செய்தென். என்னை அறியாமலேயே முன்னிருந்த மேசையில் இருந்த விடைத்தாதாளிலிருந்து எல்லா விடைகளையும் பார்த்து எழுதியிருந்தேன். நான் செய்த காரியத்திலிருந்து மீண்டு வர முடியாது என்று என்னை சமாதானப்பபடுத்திக் கொண்டேன்.
  வகுப்பு முடிந்தவுடன் வழக்கம் போல் ஆர்த்தியுடன் இடைவேளைக்குச் செல்லல அவளை நெருங்கயபோது தனக்கு பசிக்கவில்லை என்று கூறி என்னை வலியுறுத்தி கீழே அனுப்பிவைத்தாள். நான் செல்வதற்கு முன் அவள் ஆசிரியரின் மேசையை நெருங்குவதை கண்டேன். அவள் படிப்பு தொடர்புடைய கேள்வியைத்தான் கேட்க செல்கிறாள் என நினைத்து சென்று விட்டேன். ஆனால் அதன் பின் விளைவுகளை நாந்தான் அனுபவிக்க போகிறேன் என அப்போது தெரியவில்லை.
  நான் வகுப்பில் மீண்டும் காலடி எடுத்துவைத்த மறுநிமிடம் ஆசிரியர் என்னை கோபத்துடன் அழைத்தார். வகுப்பிலிருந்த அனைவரின் முன் என்னை கண்டபடி திட்டினார். இதன் நடுவில் ஆர்த்தியின் முகத்தைக் கண்டேன். அவளின் கண்களில் துன்பத்தைக் கண்டேன். அப்பொழுது தான் எனக்குப் புரிந்தது. அவள் என்னுடன் கீழே வராததற்குக் காரணம் அவள் நான் செய்த செயலை ஆசிரியரிடம் போட்டு கொடுக்கத்தான். அவளுடைய போலி மன்னிப்பை நான் ஏற்க மறுத்தேன்.
  வீட்டில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. இந்நேரத்தில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருக்கும் என் அம்மாவின் கண்கள் நெருப்பு போல் எரிந்தன. அம்மா என்னை திட்டியிருந்தால் கூட நான் தாங்கியிருந்திருப்பேன். ஆனால் அவர் அதற்கு நேர்மாறாக எனக்கு அமைதி சிகிச்சையை அளித்தார். அது மட்டுமல்லாமல் நான் நான்கு வருமாதங்களாக காத்திருந்த இசை நிகழ்ச்சிக்கு இனி செல்ல இயலாது என உறுதியாக கூறி விட்டார். எனக்கு உலகமே இருண்டது போல் தோன்றியது. இதற்கு எல்லாம் ஒரே காரணம் தான். அது ஆர்த்தி.
  Madheswaran Niveytha
  Methodist Girls’ School

 5. பூவைவிட்டு இதழ்கள் பிரிந்தும், அதன் வேர் முறிவதில்லை.
  மேகங்களைவிட்டு மழைத்துளிகள் பிரிந்தும், மேகங்கள் மறைவதில்லை.
  நண்பர்கள் பிரிந்தும், நட்புகள் தூங்குவதில்லை.
  நட்பு … எனக்கும் டீலனுக்குமுள்ள உறவு.
  நகையும் சதையும் போன்ற நட்பு என்றெல்லாம் புகழாரம் சூட்ட முடியாது. ஆனால், நாங்கள் ஒருவருக்கொருவர் மதித்து நடந்து கொண்டோம். ஒரே இணைப்பாட நடவடிக்கையில் சந்தித்த நாங்கள், நாடகக் கலையின் மீது ஒத்துப் போன பற்றைக் கொண்டிருந்தோம். அதுவே எங்களது நட்புக்கு அடித்தளமாக அமைந்தது என்று கூறலாம். ஒரே வகுப்பில் பயிலாவிட்டாலும், எங்களது இணைப்பாட நடவடிக்கையில் இருவருக்கும் தலைமைத்துவ பதவிகள் கிடைத்ததன் பொருட்டு, இருவரும் சக உறுப்பினர்களுடன் முகாம்களை ஏற்பாடு செய்வது, நடிப்பு திறன்களை வளர்ப்பதற்குரிய பட்டறைகளை வழிநடத்துவது, என்று எங்களுக்கிடையே இருந்த புரிந்துணர்வும் நட்புணர்வும் மெருகூட்டப்பட்டன. ஆனால், எங்கள் நட்பில் ஏதோ ஒரு திடீர் விரிசல்…
  நாளடைவில், எங்களுக்குள் ஏதோ ஒரு வறட்டு கௌரவம். படிப்பில் என்னைவிட கெட்டியான அவன், என்னிடம் தன் செருக்கை வெளிக்கொணர்கிறானோ என்ற எண்ணம் உருபெற்றது. என்னுடன் சகஜமாக பழகுவதை நிறுத்துவிட்டான். பேச்சும் அவ்வளவு இல்லை. அவனைவிட படிப்பில் சற்று மங்கியிருந்த என்னை தூற்றிவிட்டானோ என்ற அச்சம்… பொறாமை என்றும் கூறலாம்.
  படிப்பில் தான் பெற்ற சிறப்புத் தேர்ச்சிக்காக நட்பைத் தூற்றுபவனல்ல டீலன். இல்லை இல்லை… பெயருக்கும் புகழுக்கும் முன் நட்பெல்லாம் தூசுதானே?!
  அனைத்துத் தேர்வுகளும் நிறைவு பெற்றன. தேர்வு மண்டபத்திலிருந்து வெளியேறிய பின், டீலன் என்னை நோக்கினான்.
  ‘’வா, மதிய உணவைச் சேர்ந்து உண்ணலாம்,’’ என்று என்னிடம் தன்மையுடன் கேட்டான்.
  அந்நொடி எங்கள் நட்பிற்கும் ஜீவனுண்டு என்பது ஊர்ஜிதமானது…
  ராஜேந்திரன் ராஜேஷ்
  விக்டோரியா தொடக்கக்கல்லூரி

 6. நான் சிறுவயதில் இருக்கும்போது, இந்தியாவில் உள்ள என் அம்மாவின் கிராமத்தில் வளர்ந்தேன். என் பெற்றோர்கள்சிங்கப்பூரில் வேலை செய்தார்கள். எனக்கு அப்பொழுது சகோதரனும் இல்லை. மேலும், என் தாத்தா வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வார். ஆகையால், நானும் என் பாட்டியும் தனியாக வீட்டில் வாழ்ந்தோம். இருப்பினும், என்னுடன் விளையாட எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்.
  மனிஷா, அம்மு, ஈஸ்வர், அருண், விக்கி என்பவர்கள்தான் என் தோழர்களாக இருந்தார்கள். நாங்கள் ஒன்றாகவிடிகாலையில் எழுந்து எங்களின் பள்ளிப்பாடங்களை படிப்போம். பிறகு, நாங்கள் ஒன்றாக பள்ளிக்குபுறப்படுவோம். மாலையில் பள்ளி முடிந்தவுடன், நாங்கள் வீட்டின் முன்வாசலில் விளையாடுவோம்.
  விடுமுறை தினங்களின் பொழுது, காலையிலே எழுந்து என் நண்பர்களின் வீட்டிற்கு சென்று விளையாடஆரம்பித்துவிடுவேன். தாயம், பல்லாங்குழி, நொட்டியடித்தல், போன்ற விளையாட்டுகளை நாங்கள்விளையாடுவோம். மண் பானை செய்தல், ஆற்றில் குளித்தல் போன்ற நிறைய நடிவடிக்கையில் ஈடுபடுவோம்.
  நேரம்போவதே தெரியாமல் விளையாடுவோம். இடையிடையே என் பாட்டியின் கைப்பக்குவத்தாலான ஆவிபறக்கும் இட்லிகள், இடியாப்பம் மற்றும் பணியாரம் எங்களின் வயிற்றுப்பசியைபோக்கும். மதியவேளைகளில் சாப்பிட்டவுடன் அருகில் உள்ள பழத்தோட்டத்திற்கு செல்வோம். அங்கே மரங்களின்கிளைகளில் கைறுகள் கட்டி ஊஞ்சல் ஆடுவோம். மரங்களில் ஏறி மா, வாழை, கொய்யா என்று எங்களுக்குதேவையான பழங்களை உண்போம்.
  அப்பொழுதல்லாம், நான் மிகவும் குண்டாக இருந்தேன். என்னை பலரும் கேலி செய்வது வழக்கம். நான் கவலைஅடைந்ததும் வழக்கம். அத்தருணங்களில், என் நண்பர்கள் என்னை சமாதானப்படுத்தி எனக்கு அறிவுரைகூறுவார்கள். ஒரு முறை மாட்டுப் பொங்கள் தின நாள் அன்று, கிராமத்தில் நிகழும் விளையாட்டுகளைப் பார்க்கநாங்கள் சென்றோம். ஜல்லிக்கட்டு, வழுக்கு மரம், உரி அடி, சிலம்பாட்டம், கபடி போன்ற நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டே பார்த்தோம்.
  அப்பொழுது, சில கபடி விளையாட்டாளர்கள் எங்களை நோக்கி நடந்தார்கள். என் உடல் எடையை கண்டுகேலிச்செய்தனர். என் முடியில் இருந்த ரப்பர் பேண்டையும் கிளிப்பையும் விளையாட்டாக பிடுங்கினர்.பயத்தினாலும் வலியினாலும் நான் அழத் தொடங்கினேன். உடனடியாக, எங்கள் குழுவிலேயே மூத்தவனாக இருந்தஅருண், அந்த கபடி விளையாட்டாளர்களிடம் சென்று சண்டையிட்டு என்னிடம் வந்து அவர்களை மன்னிப்புகேட்கவைத்தான். அந்த கபடி விளையாட்டாளர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள்.என்னுடைய ரப்பர் பேண்டையும் கிளிப்பையும் திருப்பித் தந்தார்கள். என்னை சமாதானப்படுத்த, மனிஷா என்னைஒரு சவ்வுமிட்டாய் கடைக்கு அழைத்துச் சென்றான். அந்த சவ்வுமிட்டாய்காரர் எனக்கு கைக்கடிகார வடிவத்தில்ஒரு சவ்வுமிட்டாய் செய்து கையில் கட்டிவிட்டார். நாங்கள் அதை சாப்பிட்டுக்கொண்டே வீடு திரும்பினோம்.
  இவ்வாறு நாங்கள் ஒருவருக்கொருவர் உதவிச் செய்து இணைபிரியாத நண்பர்களாக வளர்ந்தோம். ‘’கூடிவாழ்ந்தால்கோடி நன்மை’’ என்ற பழமொழிக்கு ஏற்ப எங்களின் ஒன்றுமையான நட்பு எங்களுக்கு அதிக நன்மைகளும் விட்டுகொடுத்து வாழும் மனப்பான்மையும் வளர்த்தது. எனக்கு இப்படிப்பட்ட அரிய நட்பு கிடைத்ததை எண்ணி பெறுமை அடைகிறேன். இப்பொழுதும் சிலநேரங்களில் நான் பிரயாணம் செய்யும்பொழுது என் மனது அந்த சம்பவங்களையும் நண்பர்களையும் எண்ணி அசைபோட்டுக்கொண்டிருக்கும்.
  நிகேத்னா
  உயர்நிலை இரண்டு
  யுவான் சிங் உயர்நிலை பள்ளி

Your email address will not be published.


*