நம்பிக்கை தந்த பாடல்!

‘ஒவ்வொரு பூவும் சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே… ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே’ என்ற பாடலைக் கேட்கும்போது நமக்குள் தன்னம்பிக்கை உணர்வு பிறக்கிறது. இப்படி, பல பாடல்கள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அளிக்ககூடியவையாக இருக்கின்றன. அப்படி உங்களுக்கு உற்சாகமளித்த, தன்னம்பிக்கை அளித்த பாடல் எது? ஊக்கமூட்டிய வரிகள் எவை? எந்த வகையில் அவை உங்களுக்கு பலனளித்தன? போன்ற கருத்துக்களைக் கட்டுரையாக எழுதி எங்களோடு பகிருங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 30 செப்டம்பர் 2016. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

4 கருத்துரை

 1. எனக்கு நம்பிக்கை தந்த பாடல் ‘எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே’ என்பதே ஆகும். அந்த பாட்டில் மாணவனாகிய நாம் மனது வைத்தால் எல்லா நற்செயல்களும் செய்து கடல்,மலை,காற்று,பூமி போல நாம் நம்மை பெற்றவருக்கும் இந்த உலகிற்கும் பெருமை சேர்க்க முடியும் என்பதை உணர்த்துகிறது.அதற்கு நாம் ,எல்லா செயல்களையும் முன்னால் நின்று ஆர்வத்துடனும் ,திறன்படவும் செய்ய வேண்டும்.நதி எவ்வாறு ஊர் மக்ககளுக்கு உதவி செய்து விட்டு பலனை எதிர்பார்காமல் ஓடுகிறதோ நாமும் செய்த செயல்களுக்குகு பலனை எதிர்பார்க்கக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறது. நாம் சிந்தும் வேர்வைத்துளி ஒவ்வொன்றும் மக்களின் மனதில் வேர் வைக்கும் என்பதை தெளிவு படுத்துகிறது. நல்ல செயல்களை நாளை செய்வோம் என்று நேரத்தை வீணாக்காமல் இன்றே அதை செய்வதன் அவசியத்தை உணர்த்துகிறது. நமக்கு ஏற்படும் துன்பத்தை பற்றி எண்ணி வருந்தாமல் அதை இரைவன் பார்த்து கொள்வார் என்பதை புரிந்து நாம் பிறந்தோம்,இருந்தோம்,சென்றோம் என்றில்லாமல் நம் வாழ்வை சிறந்த முறையில் வாழவேண்டும் என்பதை இப்பாடல் அறிவுறுத்துகிறது.
  வள்ளியம்மை
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 2. நம்பிக்கை தந்த பாடல்
  எனக்கு பிடித்த பாடல் வரிகள்,’சாட்டை’ படத்தில் வரும்,
  ”நண்பா வா நண்பா!
  நண்பா வா நண்பா!
  சிறகுகள் விரித்திடு பறக்கலாம்
  வரும் சிரமங்கள் பொரித்துடு சிரிக்கலாம்
  அலைகடல் என தினம் குதிக்கலாம்
  கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம்!”
  இவ்வரிகள் நான் துவளும் சமயத்தில் என்னை உற்சாகப்படுத்தும் வரிகளாக என்னுள் பாடிக்கொகொள்வேன். நான் தன்னம்பிக்கையோடு என் முயற்சிகளை தொடர இப்பாடல் வரிகள் மிகவும் உதவியுள்ளன. எத்தனை தடைகள் வந்தாலும் அழுவதை விடுத்து முன்னேறி வெற்றியை காண இவ்வரிகள் கற்றுத் தந்துள்ளது. இப்பாடல் வரிகளே என்னை கவர்ந்த வரிகள் ஆகும்!!!
  மித்ரா.பா
  யூனிட்டி உயர்நிலை பள்ளி.

 3. ” வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல் ” என்ற என் வாழ்க்கைக்கு ஊக்கமளித்த இந்த பாடலை கேட்கும்பொழுது என் மனது என் மூன்றாம் வகுப்பு நாட்களை நினைக்க ஆரம்பித்து விடுகிறது.
  நான் சிறுவயதில் இருந்தபோது, முதல்முதலாக இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தேன். நான் பூன் லே கார்டன் தொடக்கநிலை பள்ளியில், மூன்றாம் வகுப்பில், புதிய மாணவியாக சேர்க்கப்பட்டேன். எனக்கு அப்பொழுதெல்லாம், சிறிதளவு ஆங்கிலம் தெரியும். ஆகையால் நான் மற்ற மாணவர்களுடன் பேச முடியாமல் தவித்தேன் . கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பள்ளிப் பாடங்களை செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டேன். இதையல்லாம் அறிந்த என் தாயார், என் பள்ளிப் பாடங்களில் எனக்கு உதவிச் செய்ய எண்ணினார்.
  அன்றிலிருந்து எனக்கு என் பள்ளிப் பாடங்களை என் தாயார் கற்ப்பிக்க ஆரம்பித்தார். நான் எப்பொழுதும் விடிகாலையிலே படிக்க ஆரம்பித்தேன். என் தாயார் எனக்கு நிறைய பயிற்ச்சித்தாள்களை வாங்கிக்கொடுத்தார்.
  இதுபோன்ற கடின உழைப்பினால், அந்த வருடத்தில் நான் என் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றேன். இது என் பெற்றோருக்கு மிகுந்த ஆனந்தத்தை அழித்தது.
  நான் மற்ற மாணவர்களுடன் மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தேன். நான் பள்ளி முடிந்து வீட்டிற்க்கு களைப்பாக வரும்பொழுது, என் தாயார் என்னை உற்சாகப்படுத்த எனக்கு ஒரு பாடலைப் பாடுவார். அப்பாடலை கேட்பதற்க்கு மிகவும் நன்றாக இருக்கும்.
  எதிர்நீச்சல் என்னும் திரைப்படம், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அத்திரைப்படத்தில் வரும், வெற்றி வேண்டுமா? என்னும் பாடல் வி.குமார் என்னும் இசை இயக்குனரால் இயக்கப்பட்டது. இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ளார். “வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல் “என்னும் இப்பாடலின் முதல் வரி என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
  இன்றும் அந்த பாடலை கேட்கும் பொழுது என்னை அறியாமல் என் உடலிலம் உணர்விலும் ஒரு ஊக்கம் ஏற்படத்தான் செய்கிறது.
  நிகேத்னா
  உயர்நிலை இரண்டு
  யுவான் சிங் உயர்நிலை பள்ளி

 4. படையப்பா என்ற திரைப்படத்தில் படையப்பாவும் நீலாம்பரியும் என்ற கதாபாத்திரங்களுக்கு இடையே இருந்த காதலாக மாற்றிய பகைமையைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்ததாகும். ஆனால், அவர்கள் இருவரின் நடிப்பு அற்புதமாக இருந்தாலும் அப்படத்தில் வெளிவந்த “வெற்றி கோடி கட்டு” என்ற பாடல்தான் என்னை மிகவும் கவர்ந்தது.
  அந்தப் பாடலில் எனக்கு நம்பிக்கை கொடுக்கும் வரிகள் நிறைந்தவை. “வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா” அவற்றில் ஒன்று. இந்த வரி பாட்டில் எனக்கு மிகவும் பிடித்ததாகும. வாழ்க்கையில் ஏராளமான தடைக்கல்லை சந்திப்பது வழக்கம். ஆனால் இவை ஒரு நன்மையாக பார்த்து வெற்றிக்கு ஒரு படி நெருக்கமாக இருப்பதை பார்க்க வேண்டும் என்று இந்த வரியின் அர்த்தமாகும்.
  பாடலில் எனக்கு கவர்ந்த இன்னொரு வரி என்பது “மலைகளை  முட்டும்  வரை  முட்டு லட்சியம்  எட்டும்  வரை  எட்டு படையெடு  படையப்பா.” நான் செய்யும் வேலைகளில் என் உறுசிறப்புநிலைக்கு செய்வதற்கு இந்த வரி ஊக்கம் அளிக்கிறது. மேலும், இந்த வரி என்னை எந்த செயலும் செய்வதற்கு பெரும் ஊக்கமளிக்கிறது.
  இந்த வரிகளால் “வெற்றி கொடி கட்டு” என்ற பாடல் எனக்கு நம்பிக்கை தரும் பாடல்களில் ஒன்றாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த பாடல் எனக்கு பிரச்சனைகள் இருக்கும்போது வாழ்க்கையைப்பற்றி ஒரு பது கண்ணோட்டம் கொடுக்கிறது.
  சுபன்ராஜ் பிள்ளை
  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*