மழை, மழை, அடை மழை!

கொட்டும் மழையைத் தொட்டுப் பார்ப்பது மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றும் கவிதையை எழுதுங்கள். இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

உங்கள் கவிதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதிநாள்5 ஜூலை 2015. வாழ்த்துகள்!

13 கருத்துரை

 1. துளி துளி அழகிய மழை துளி
  என் மேல் விழுந்ததே
  அது விழுந்த போது என் முகம் மலர்ந்ததே
  மழையில் ஆடி பாட என் மனம் சொன்னதே
  ஆனால் அனுபவிக்கும் முன்பே என்னை விட்டு சென்றதே
  அந்த அழகிய மழைத் துளியை தேடி சென்றேனே
  அது மாயமாய் மறைந்ததை கண்டு நான் வியந்தேனே
  அதனின் வருகைக்காக காத்திருந்தேனே
  அழகிய மழை துளியை நம்பி ஏமார்தேனே
  அது சிறு சிறு துளிகளாக மறுபடியும் வந்ததே
  அதை கண்ட என் மனம் துள்ளி குதித்ததே
  மீண்டும் அதை காக்க வைக்க மனம் விரும்பவில்லையே
  அதனுடன் நாள்தோறும் விளையாடி என் நாளை கழித்தேனே
  ரா ஸ்ரீஆண்டாள்
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 2. வெள்ளித்துளிகள் தொடர்கதையாய் விழுமே,
  மனதில் உவகைப் பொங்கி எழுமே! ஒவ்வொரு துளியும் குளிரும் வண்ணம்,
  உன்னைத் தொட்டுணரும் மேனி சிலிர்ப்பது திண்ணம்!
  அடடா அடடா என்ன சுகம்,
  அளவிலடங்கா சொத்திருந்தும்
  இதற்கீடா ஓரு சுகம்?!
  விரல் மேல் விழுந்து வழிந்தோடும்
  மழைத் துளியே,
  விரல் நுனியில் தொங்கும்பொழுது கண்டு களிப்பது என் விழியே!
  மழைத் துளி பல கோடி நூறாயிரம்,
  அவை ஒவ்வொன்றும் பூமிக்கு கடவுளின் வரம்!
  மழைத் துளிகள் எண்ணற்றவை வானிலிருந்து விழும்;
  என் மேல் படும் துளிகள் தாயின் அரவணைப்புக்குச் சமம்!
  “மழையே மழையே, அடைமழையே …”

 3. மழை மழை
  என் மனதின் அலை
  உன் சத்தம்
  என் காதிற்கு சுகம்
  உன் அழகு
  என் மனதில் ஒரு படகு
  ஜனனி
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 4. வெள்ளித்துளிகள் தொடர்கதையாய் விழுமே,
  மனதில் உவகைப் பொங்கி எழுமே! ஒவ்வொரு துளியும் குளிரும் வண்ணம்,
  உன்னைத் தொட்டுணரும் மேனி சிலிர்ப்பது திண்ணம்!
  அடடா அடடா என்ன சுகம்,
  அளவிலடங்கா சொத்திருந்தும்
  இதற்கீடா ஓரு சுகம்?!
  விரல் மேல் விழுந்து வழிந்தோடும்
  மழைத் துளியே,
  விரல் நுனியில் தொங்கும்பொழுது கண்டு களிப்பது என் விழியே!
  மழைத் துளி பல கோடி நூறாயிரம்,
  அவை ஒவ்வொன்றும் பூமிக்கு கடவுளின் வரம்!
  மழைத் துளிகள் எண்ணற்றவை வானிலிருந்து விழும்;
  என் மேல் படும் துளிகள் தாயின் அரவணைப்புக்குச் சமம்!
  “மழையே மழையே, அடைமழையே …”
  பெயர்: ராஜேந்திரன் ராஜேஷ்
  பள்ளி: செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளி

 5. ஜன்னலின் ஓரம் சாரல் அடிக்கும் மழை
  அது எனக்கு இப்போது வேண்டும் அழை
  கையை நீட்டி நீர் துளிகளைப் பிடிக்க 
  அது நம் கைகளை நனைக்க 
  சிறு துளிகளுக்குள் தெரியும் ஒளி
  அது என் மனதில் ஏற்படுத்திம் வலி
  ஹர்ஷினி பாலா
  பாயா லேபார் மேதொதிஷ்த் பெண்கள் பள்ளி

 6. மழை, மழை, அடை மழை!
  ——————————————-
  குளிர்ந்த காற்று மனதை
  சிலிர்க்கச் செய்கிறது!
  மயில் தோகை விரித்து மழையின்
  வருகையை உறுதி செய்கிறது!
  கருமேகங்கள் ஒன்று திரண்டு
  பூமியில் நீரைத் தெளிக்கிறது!
  ஒளியிழந்த பூமியை
  இடி இடித்து அவ்வப்போது ஒளி தருகிறது!
  குடை இருந்தும் மழையில்
  நனைய ஆசை பிறக்கிறது!
  மண்வாசணை மணமணக்க!
  வெள்ளிக் காசுகளை புவியில் நனைக்க!
  துள்ளித் துள்ளி வரும்
  மழையே! அடைமழையே!
  என்றும் உன் குளிர்ச்சி
  எங்கும் பரவட்டும்!
  ச.நிஷிகாந்த்
  தெக் வாய் உயர்நிலைப் பள்ளி

 7. சீ. சிவ ரஞ்சனா
  காரிருள் மேகத்தின் கண்ணீரே மழை
  அம்மழையில் நனைந்த பசுமை இலை
  கார்காலக் காட்சிகளை கண்டு களிப்பதே தனிக்கலை
  நான் கண்ட காட்சிகளால் வியப்படைந்து ஆகிவிட்டேன் கற்சிலை
  மழைநீரில் நீந்தி இசைப்பாடும் தவளை
  ஓடுகின்ற மழைநீரில் தாவி ஓடும் கயல்கள்
  கயல்களின் அருகைக்காக காத்திருக்கும் கொக்கு
  சாளரத்தின் வழியாக என் மீது வந்து விழும் மழைச்சாரல்
  வழிப்போக்கர் கைகளில் உயற்த்திப் பிடிக்கப்பட்ட கொடை
  பார்த்துப் பார்த்து நடந்தபோதும் பாதி நினைந்த அவர்களின் உடை
  அடை மழையின் காரணமாய் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு
  மழைநர் கிடைத்த மகிழ்ச்சியில் நிமிர்ந்து நிற்கும் பயிர்களுக்கோ செருக்கு
  சீ. சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 8. மழை கொட்டுகிறது,மழை கொட்டுகிறது,
  ஒவ்வொரு துளியிலும்
  ச ரி க ம ப த நி ச இசை ,
  துள்ளி விளையாடுகிறது பூசை,பத்து நாள் உண்ணாநிலை
  இருக்கும் விவசாயிக்கும் வரும் பேராசை.
  நற் பக்கம் இங்கு,இருக்கிறது வேற் பக்கம் அங்கு.
  விளையாடி விளையாடி பிடித்தது சளி
  வெள்ளத்தில் ஆகிரார்கள் பலப்பேர் பலி, இஷ்த்தமும் கஷ்த்தமும் சேர்ந்து , மழை கொட்டுகிறது,மழை கொட்டுகிறது

 9. காய்ந்து கிடக்கிறது வரப்பு!
  உணவில்லாமல் இறந்து விட்டன உழவுக்காக இருந்த மாடுகள்!
  உணவில்லாமல் அமைதியாக அழுகின்றன குழந்தைகள்!
  சந்தோசத்திற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை பல மைல் தூரத்திற்கு!
  இன்னும் ஒருவாரம் ஆகும் தண்ணீர் விற்பவர் வருவதற்கு!
  மழைத்துளி! கண்ணீர்த்துளி!!
  இரண்டும் துளிகள் தான்!
  ஆனால் இவை இரண்டிற்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!
  மழைத்துளிகள் இல்லை என்றால் விவசாயியின் கண்களில் கண்ணீர்த்துளிகள்!
  விவசாயி வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்.
  அவரது கண்களில் ஒரு மேகம் தென்படுகிறது.
  மனதில் வேண்டுகிறார் மழை பொழிய!
  ஒரு துளி! இரண்டு துளிகள்! பல துளிகள்!
  கள்வனை போல மெதுவாக மண்ணில் விழுந்தன!
  மகிழ்ச்சியுடன் கையை நீட்டினார் விவசாயி!
  அந்த மழைத்துளிகளை எடுத்து தனது கண்ணீர் த்துளிகளை துடைத்தார்!
  நீர் உயர, நெல் உயர்கிறது!
  நெல் உயர, வரப்பு உயர்கிறது!
  வரப்பு உயர, விவசாயியின் கைகள் உயர்கின்றன!
  வருணதேவனுக்கு நன்றி சொல்ல!
  விவசாயி சேற்றில் காலை வைத்தால் தான் நாம் சோற்றில் கையை வைக்க முடியும்!
  மழைக்கு நன்றி! விவசாயிக்கு நன்றி!!
  மழையே உயிரின் ஆதாரம், பூமியின் ஆதாரம்!!
  தேஜல்
  சுவா சுகாங் உயர்நிலை பள்ளி

 10. முருகன் சிநேகா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி
  மேகம் கருக்க, தேகம் சிலிர்க்க
  குளிர் காற்றும் வீசியதே!
  அடடா! அடை மழைதான் என்றது
  என் மனமே!
  துளித் துளியாய் விழுந்ததே மண்ணிலே!-அதுவே
  முத்து முத்தாக தெரிந்ததே என் கருமேனியிலே!
  தோகை விரித்தாடும் மயில் போல
  இடியும் இசை முழங்க மின்னலும் ஒளிகொடுக்க
  அடைமழையில் நடனமாட ஆசை!
  அடைமழையில் அம்மா செய்து கொடுத்த பலகாரமும்
  இன்றும் தித்திப்பாய் இருக்கிறது நாவினிலே!
  அடை மழையில் குடை பிடித்து நடந்தும் என்
  ஆடை முழுவதும் நனையுமே! – ஆம்
  அடை மழையில் நனைந்திட என்றும்
  அடம்பிடிக்கும் சிறு குழந்தை தான் நான்

 11. Jeeva from Unity secondary school 1HTL
  மழை, அனைவருக்கும் மழை நல்லது.அது கீழ் விளையாடும் போது நாம் மகிழ்ச்சியை தருகிறது மற்றும் தாவரங்கள் வளர முடிகிறது

  • Jeeva from Unity secondary school 1HTL
   மழை, மழை அனைவருக்கும் நல்லது.அது கீழ் விளையாடும் போது நாம் மகிழ்ச்சியை தருகிறது மற்றும் தாவரங்கள் வளர முடிகிறது

 12. Jeeva from Unity secondary school 1HTL
  மழை, மழை அனைவருக்கும் நல்லது.அது கீழ் விளையாடும் போது நாம் மகிழ்ச்சியை தருகிறது மற்றும் தாவரங்கள் வளர முடிகிறது

Your email address will not be published.


*