மறக்க முடியாத பரிசு!

பரிசுகள் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பரிசைப் பற்றியும், அது ஏன் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்பதைப் பற்றியும் கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள்பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

உங்கள் கட்டுரைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதிநாள்5 ஜூலை 2015. வாழ்த்துகள்!

9 கருத்துரை

 1. ‘பரிசு’- “உழைப்பிற்கான பலனா?; நேசத்திற்கான அடையாளமா?”, என்னும் பற்பல கேள்விகள் என்னுள் அவ்வப்பொழுது எழுவதுண்டு. ஒருவன் தனது வாழ்நாளில் எண்ணற்ற அளவில் பரிசுகளைப் பெறுவதுண்டு. நானும் இதுவரைப் பல பரிசுகளை வெவ்வேறு காரணங்களுக்காகப் பெற்றுள்ளேன். அவற்றுள் மறக்க முடியாத பரிசு, என் தாய் என் முதல் பிறந்தநாள் பரிசாக என் கழுத்தில் அணிவித்த ஒரு தங்க கழுத்தணி ஆகும். இரவும் பகலும் பாராமல் அயராது உழைத்து, தன்னுடைய முதல் மாத வருமானத்தைக் கொண்டு வாங்கிய தங்க கழுத்தணியே அப்பரிசாகும். என் பெயர் பொறிக்கப்பட்ட தங்க டாலர் அக்கழுத்தணியுடன் கோர்க்கப்பட்டுள்ளது. அன்றைய கூடுதலான தங்க விலையையும், நெருக்கடியான குடும்பச் சூழ்நிலையையும் கூட பொருட்படுத்தாமல் என் தாய் எனக்காக அத்தங்க கழுத்தணியை வாங்கி எனக்கு பரிசாக அளித்தது இன்று வரை என் மனதை உருகச் செய்கிறது. விவரம் ஏதும் தெரியாத அவ்வயதில் அப்பரிசின் அருமை எனக்கு விளங்கவில்லை; விளங்கிக்கொள்ளவும் முயலவில்லை. ஆனால் இன்றோ, அது என் கழுத்தில் தொங்குவதைப் பார்க்கும்பொழுது, என் தாய் என் மேல் கொண்டிருக்கும் அளவிடற்கரிய பாசத்தை நான் நினைவுகூறுவேன். என் முதல் பிறந்தநாளுக்கு என் உற்றார் உறவினர்கள் எனக்கு பணத்தையும் விளையாட்டுப் பொருட்களையும் பரிசுகளாக வழங்கினர். எனினும், என்றோ ஒரு நாள் மறைந்துபோகும் இவற்றுடன் ஒப்பிடுகையில், என் இறுதி நாள் வரை நிலைக்கக்கூடும் தன்மையைப் பெற்றுள்ள அத்தங்க கழுத்தணியே என்னைப் பொருத்தவரை உன்னதமானதாகும்! ஒவ்வொரு தினமும் என் கழுத்தில் அமர்ந்திருக்கும் அத்தங்க கழுத்தணியை தொட்டுணரும்போது, என் தாயின் அன்பும் அரவணைப்புமே எனக்குப் புரியும். என் தாய் என் கழுத்தில் அணிவித்த அத்தங்க கழுத்தணி மட்டும் என் விழிகளுக்குப் பெரிதாக தெரியவில்லை. ஆனால், அதன் மூலம் பிரதிபலிக்கப்பட்ட என் தாயின் உள்ளன்பே என்னுள் மிக முக்கியமானதாக மிளிர்கிறது. ஆதலால், அளவில் அத்தங்க கழுத்தணி சிறியதாயினும், என் தாய் என் மேல் கொண்டிருந்த பாசத்தை உணர்த்தும் அடிப்படையில் அது கடல் அளவை மீறியதாகும்! “கடுகு சிறுத்தாலும், காரம் பெரிது,” அல்லவா?!
  பெயர்: ராஜேந்திரன் ராஜேஷ்
  பள்ளி: செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளி

 2. எனது ஐந்தாம் பிறந்தநாளின் போது எனக்கு நிறைய பரிசுகள் கிடைத்தன.அதில் எனக்கு மிகவும் பிடித்த பரிசு ஒரு பொம்மை தான்.அது ஊதா வண்ண ஆடை அணிந்திருக்கும் மேலும் அதன் தலையில் ரிப்பன் வைக்கப்பட்டு இருக்கும்.எனது பாட்டி அதை பாசத்துடனும் நேசத்துடனும் வாங்கித் தந்தார்.அந்த பொம்மை எனக்கு பிடித்ததிற்கு சில காரணங்கள் உள்ளன.முதல் காரணம் அந்த பொம்மையின் கண்கள்.அவை கருப்பு புத்தான்களால் செய்யப்பட்டுள்ளன.அதன் அழகை வற்ணிக்க வார்த்தைகள் ஏதேனும் இல்லை .அதன் கண்னங்கள் பஞ்சுமிட்டாய் போல சிவப்பாக இருக்கிம்.இது வெரும் பஞ்சு நிறைந்த பொம்மை தானே என்று பலரும் நினைக்களாம் ஆனால் என்னை போருத்தவரையில் அது எனக்கும் என் பாட்டிக்கும் உள்ள பந்தம்.என் பாட்டி இந்தியாவில் உள்ளார்.அவரை எப்பொதேல்லாம் பார்க்க நினைக்கிறேனோ அப்போது அந்ந பொம்மையை பார்த்து அவர் விரைவாக என்னை பார்க்க வத்துவிடுவர் என்று எண்ணிக் காத்திருப்பேன்.இப்பொம்மையை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.இன்று மட்டும் இல்லை என்றும் இதை பதுகாப்பேன்.
  நிவேதா நாகராஜன்
  தஞ்சோங் கத்தோங் பெண்கள் பள்ளி

 3. மறக்க முடியாத பரிசு!
  என் பெயர் நிஷிகாந்த். நான் உயர்நிலை 2ல் படிக்கும் மாணவன். எனக்குக் கதை, கட்டுரை எழுதவதில் நாட்டம் உண்டு. என் ஆசிரியரிடம் பலமுறை என் கட்டுரைகளுக்காகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன். என் பெற்றோரும் என்னை ஊக்குவிக்கத் தவறியதில்லை.
  சென்ற வாரம் எனக்குப் பிறந்தநாள் விழாவினை என் பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் என் பள்ளி நண்பர்களையும், அண்டைவீட்டு நண்பர்களையும் என் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அழைத்திருந்தேன். என் பெற்றோரும் அவர்களது குடும்ப நண்பர்கள் மற்றும் முக்கியமான சொந்தக்காரர்களை அழைத்திருந்தனர். வீடு முழுவதும் தோரணம், பலூன் என்று வீடே அழகாய் இருந்தது. மாலையில் கேக் வெட்டி மிகவும் மகிழ்ச்சியாக என் பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடிணேன்.
  என் நண்பர்களும், சொந்தக்காரர்களும் பெரிய பெரிய பரிசுப் பொருள்களை எனக்குக் கொடுத்து வாழ்த்தினர். எப்போதும் என் அப்பா கொடுக்கும் பரிசு வித்தியாசமாகவும், அந்தப் பரிசுப் பொருள் ஏதேனும் நல்ல விஷயத்தை உணர்த்துவதாகவும் இருக்கும்.
  இரவில் அனைத்துப் பரிசுப் பொருட்களையும் பிரித்துப் பார்த்தேன் அனைவரும் இயந்திர மனிதன் பொம்மை, புது சட்டை, கைக்கடிகாரம் என்று பல பரிசுப்பொருட்களை எனக்குக் கொடுத்திருந்தனர். ஆனால் எதுவும் என் மனதைத் தொட்டதாக இல்லை. கடைசியில் என் அப்பா தந்த சிறிய பரிசைத் திறந்து பார்த்தேன். ” வருங்கால எழுத்தாளருக்கு என் பிறந்தநாள் பரிசு” என்று எழுதிய வாசகத்துடன் கூடிய ஒரு அழகிய பேனா இருந்தது. என் அப்பா கொடுத்த அந்தப் பரிசு என்னை மேலும் கதைகள், கட்டுரைகள் படைக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்தப் பேனா எனக்குக் கிடைத்தப் பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசாகும்.
  ச.நிஷிகாந்த் (19)
  Teck Whye Secondary School

 4. எனது ஐந்தாம் பிறந்தநாளின் போது எனக்கு நிறைய பரிசுகள் கிடைத்தன.அதில் எனக்கு மிகவும் பிடித்த பரிசு ஒரு பொம்மை தான்.அது ஊதா வண்ண ஆடை அணிந்திருக்கும் மேலும் அதன் தலையில் ரிப்பன் வைக்கப்பட்டு இருக்கும்.எனது பாட்டி அதை பாசத்துடனும் நேசத்துடனும் வாங்கித் தந்தார்.அந்த பொம்மை எனக்கு பிடித்ததிற்கு சில காரணங்கள் உள்ளன.முதல் காரணம் அந்த பொம்மையின் கண்கள்.அவை கருப்பு புத்தான்களால் செய்யப்பட்டுள்ளன.அதன் அழகை வற்ணிக்க வார்த்தைகள் ஏதேனும் இல்லை .அதன் கண்னங்கள் பஞ்சுமிட்டாய் போல சிவப்பாக இருக்கிம்.இது வெரும் பஞ்சு நிறைந்த பொம்மை தானே என்று பலரும் நினைக்களாம் ஆனால் என்னை போருத்தவரையில் அது எனக்கும் என் பாட்டிக்கும் உள்ள பந்தம்.என் பாட்டி இந்தியாவில் உள்ளார்.அவரை எப்பொதேல்லாம் பார்க்க நினைக்கிறேனோ அப்போது அந்ந பொம்மையை பார்த்து அவர் விரைவாக என்னை பார்க்க வத்துவிடுவர் என்று எண்ணிக் காத்திருப்பேன்.இப்பொம்மையை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.இன்று மட்டும் இல்லை என்றும் இதை பதுகாப்பேன்.
  நிவேதா நாகராஜன்
  தஞ்சோங் கத்தோங் பெண்கள் பள்ளி

 5. தாய் என்பது கடவுள் தந்த ஓர் அற்புதமான பரிசு. அதை நான் இழந்து விடக் கூடாது என்று மனதினுள் வேண்டிக்கொண்டே அவசர மருத்துவ சிகிச்சை நடக்கும் இடத்திற்கு வெளியே அமர்ந்திருந்தேன்.
  சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் என் தாயார் சிக்கிக்கொண்டார். பலத்த காயங்கள் கொண்ட அவர் பிழைப்பாரா மாட்டாரா என்பதே ஒரு கேள்விகுறியாகவே இருந்தது. மனதில் அச்சத்தோடு நகைத்தை கடித்துக்கொண்டு அந்த கேள்விக்கான பதிலுக்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்தார். எனது மனம் பட படத்தது. மனத்தில் நிறைய எண்ணங்கள் அங்குமிங்குமாய் அலைந்தன. அடுத்ததாக என்ன கூறுவார் என்று நான் பயத்தோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் மருத்துவரோ
  புன்னகை பூத்த முகத்தோடு வந்து “உன் தாயார் பிழைத்துக்கொண்டார். அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை” என்று உத்தரவாதமாய் கூறினார்.
  இதை கேட்ட பின்பு தான் எனது இதயம் துடிப்பதை என்னால் உணர முடிந்தது. அவர் கூறிய அந்த பொன்னான வார்த்தைகளை கேட்ட போது எனக்கு இறகுகள் முளைத்து வானில் பறப்பது போல் இருந்தது. என் தாயாரை திருப்பி கொடுத்ததே கடவுள் எனக்கு தந்த ஒரு மறக்க முடியாத பரிசாகும்.
  Rifayah Jumana
  Tanjong Katong Girls School

 6. Murugan Sinegha Tanjong Katong Girls’ School
  ‘மறக்க முடியாத பரிசு’. இந்த மூன்று வார்த்தைகளை நான் கண்டவுடன் எனக்கு அது தான் மின்னலென நினைவுக்கு வந்தது. அதை பார்கும் பொழுதெல்லாம் நட்சத்திரங்களைப் போல் மின்னும், கண்கள் கூசும். அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரால் கொடுக்கப்பட்டது. எனக்கு அதை பிடிக்குமா பிடிக்காதா என்று கேட்டால், எனக்கு பதில் கூற தெரியாது. மற்றவர்கள் எனக்கு அது பிடித்திருக்கிறதா அல்லவா என்று கேட்டால், எனக்கு அது பிடிக்கவில்லை என்று கூறினாலும் கூட, அவர் முன்னால் எனக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்ல வாய்வராது. அப்படிபட்ட ஒரு பரிசு தான் அது.
  அது ஒரு அழகான பட்டுப் பாவாடை, சட்டை, என் பாட்டி நான் இந்தியாவிற்கு சென்றிருந்த போது என் பிறந்தநாளிற்காக எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே என்று பார்த்து பார்த்து வாங்கிய பட்டு பாவாடை சட்டை தான் அது. முதலில் அதைக் கண்டவுடன் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் ஒரு முறை அதை அணிந்து பார்த்ததோடு சரி, அதை மறுபடியும் தொட்டு கூட பார்க்கவில்லை. எனக்கு அது பிடிக்கவேயில்லை. ஆனால் என் பாட்டி அது எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, வலுக்கட்டாயமாக சிரித்துக்கொண்டே ‘நன்றாக உள்ளது’ என்று சொன்னேன். இதற்கு முன்னால் என்னிடம் யாராவது ஒரு பரிசு கொடுக்கும் போது எனக்கு பிடிக்கவில்லை என்றால், பிடிக்கவில்லை கூறிவிடுவேன். ஆனால் அவரிடம் மட்டும் அப்படி சொல்வதற்கு எனக்கு வாய் வரவில்லை. தொண்டை குழிக்குள் வார்த்தைகள் அடைத்துக்கொண்டு வெளிவர தவித்தன. மனதார அந்த அற்புதமான பரிசை வாங்கிக்கொண்டேன். அதை அணியாவிட்டாலும், அதை என்றென்றுமே நான் பாதுகாத்து வருவேன். இது தான் எனக்கு என் பாட்டி கொடுத்த மறக்க முடியாத பரிசு.

 7. கே.ஹர்ஷிதா
  ஸ்ட. ஹில்தாஸ் செகோண்டரி ஸ்கூல்
  அன்று கிறிஸ்துமஸ் நாள். என்னுடைய உறவினர்கள் அனைவரையும் எங்கள் வீட்டின் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தோம்.
  கிறிஸ்துமஸ் என்றாலே என் நினைவிற்கு வருவது கேக், பரிசுகள், போன்றவை ஆகும்.
  எல்லோரும் என் பரிசை அன்று காலையிலே கிறிஸ்துமஸ் மரத்திற்கு அடியிலே வைத்து விட்டார்கள்.
  ஆனால், என் அன்பு அண்ணன் மட்டும் அன்று மதியம் தான் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவதாக இருந்ததால், கொண்டாட்டத்தின் போது அந்த பரிசை கொடுப்பதாக கூறியிருந்தார்.
  எல்லோருடதையும் விட அவருடைய பரிசைப் பார்க்க தான், நான் ஆவலுடன் காத்திருந்தேன்.
  மதியமும் வந்தது, கொண்டாட்டமும் ஆரம்பித்தது. ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்த நபரும் வந்து விட்டார். அவரைப் பார்த்தவுடன் எனக்கு குதுகலமாக இருந்த்து. “அண்ணா!” என்று ஆர்வத்துடன், அவரை அழைத்தேன்.
  என்னை கண்டவுடன் அவரும் ஆனந்தத்தோடு வந்து, என்னை கட்டி அணைத்தார். அளவு மிஞ்சிய ஆர்வம் இருந்தாலும், நான் பரிசுப் பொருளைப் பற்றி கேட்கவில்லை. அவர் பரிசை கொடுக்கவும் இல்லை, அதை பற்றி பேசவும் இல்லை.
  சற்று வருத்தமாக இருந்தாலும், அதற்கென்ன பரவாயில்லை என்று அதை பற்றி மறந்து விட்டேன்.
  எல்லோரும் ஆரவாரத்துடன் உணவை உண்டுக்கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள்.
  அப்பொழுது என் வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. “யாராக இருப்பார்கள்?” என்ற கேள்வியோடு கதவை திறந்தேன்.
  ஆனால், அங்கே யாருமே இல்லை. ஆறு அடி உயரத்திற்கு ஒரு பெட்டி வண்ணத்தாள் சுற்றி இளஞ்சிவப்பு நிற சாட்டின் ரிப்பன் முடிச்சிட்டு இருந்தது. “என்ன செய்வது?” என்று திருதிரு என்று முழித்த படி இருந்தேன்.அப்பொழுது, என் அண்ணன், என் பக்கத்தில் வந்தார்.
  “அதை திறந்து பார்!” என்றார். ஒரு துளி அச்சத்துடன், அதை திறந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம்! இராணுவத்தில் பணிப் புரியும் என் தந்தை் அதற்குள் நின்றுக்கொண்டு இருந்தார்!!

 8. ‘மறக்க முடியாத பரிசு’. இந்த மூன்று வார்த்தைகளை நான் கண்டவுடன் எனக்கு அது தான் மின்னலென நினைவுக்கு வந்தது. அதை பார்கும் பொழுதெல்லாம் நட்சத்திரங்களைப் போல் மின்னும், கண்கள் கூசும். அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரால் கொடுக்கப்பட்டது. எனக்கு அதை பிடிக்குமா பிடிக்காதா என்று கேட்டால், எனக்கு பதில் கூற தெரியாது. மற்றவர்கள் எனக்கு அது பிடித்திருக்கிறதா அல்லவா என்று கேட்டால், எனக்கு அது பிடிக்கவில்லை என்று கூறினாலும் கூட, அவர் முன்னால் எனக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்ல வாய்வராது. அப்படிபட்ட ஒரு பரிசு தான் அது.
  அது ஒரு அழகான பட்டுப் பாவாடை, சட்டை, என் பாட்டி நான் இந்தியாவிற்கு சென்றிருந்த போது என் பிறந்தநாளிற்காக எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே என்று பார்த்து பார்த்து வாங்கிய பட்டு பாவாடை சட்டை தான் அது. முதலில் அதைக் கண்டவுடன் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் ஒரு முறை அதை அணிந்து பார்த்ததோடு சரி, அதை மறுபடியும் தொட்டு கூட பார்க்கவில்லை. எனக்கு அது பிடிக்கவேயில்லை. ஆனால் என் பாட்டி அது எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, வலுக்கட்டாயமாக சிரித்துக்கொண்டே ‘நன்றாக உள்ளது’ என்று சொன்னேன்.
  முருகன் சிநேகா
  இதற்கு முன்னால் என்னிடம் யாராவது ஒரு பரிசு கொடுக்கும் போது எனக்கு பிடிக்கவில்லை என்றால், பிடிக்கவில்லை கூறிவிடுவேன். ஆனால் அவரிடம் மட்டும் அப்படி சொல்வதற்கு எனக்கு வாய் வரவில்லை. தொண்டை குழிக்குள் வார்த்தைகள் அடைத்துக்கொண்டு வெளிவர தவித்தன. மனதார அந்த அற்புதமான பரிசை வாங்கிக்கொண்டேன். அதை அணியாவிட்டாலும், அதை என்றென்றுமே நான் பாதுகாத்து வருவேன். இது நான் எனக்கு என் பாட்டி கொடுத்த மறக்க முடியாத பரிசு

 9. வாழ்க்கையில் சிறந்த பரிசு என்று நான் நினைப்பது எனது பெற்றோர். ஒருவருக்கு வாழ்க்கையில் வெற்றி பெற உறுதுணையாக முதலில் நிற்பது அவரது பெற்றோர் தான்.
  கடவுள், பூமியில் இருக்கும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்த்துக்கொள்ள முடியாது என்பதால் தான், பெற்றோரை அனுப்பி வைத்தார் என்று என் ஆசிரியர் அடிக்கடி கூறுவார்.
  ” மாதா, பிதா, குரு, தெய்வம் ” என்று படித்திருக்கிருக்கிறேன்.. குழந்தைகள் பெற்றோரை உதாரணமாகக் கொண்டு வளர்கிறார்கள். மேலும் அவர்களின் ஒவ்வொரு செயலிலிருந்தும் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.
  திரு.லீகுவான் யூ இறந்தபோது எனது அப்பா அவரைப் பற்றி, அவரது வாழ்க்கையைப் பற்றி விவரித்தார். அவருக்கு ஓர் அர்ப்பணிப்புள்ள தாய் கிடைத்ததால் தான், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவரால் படிக்க முடிந்தது.
  நான் ஒருமுறை இந்தியா சென்றிருந்தபோது எனது தாத்தா வீட்டில் இந்தியாவின் முதல் பிரதமர் திரு.ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் படித்தேன். அவரது தந்தை திரு.மோதிலால் நேரு, எண்ணற்ற செல்வம் இருந்தாலும் கல்விச்செல்வம் முக்கியம் என்பதால்,தனது ஒரே மகன் ஜவஹர்லாலை இங்கிலாந்தில் பன்னிரண்டு வருடம் அவரைப் பிரிந்திருந்து படிக்க வைத்தாராம்.
  மேலும் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி. இந்திராகாந்திக்கு அவரது தந்தை ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்து கடிதம் எழுதும்போதெல்லாம் உலக வரலாற்றைப் பற்றி எழுதுவாராம்.
  எனது அப்பா சொந்தமாகத் தொழில் செய்கிறார். இரவில் நாங்கள் சேர்ந்து சாப்பிடும்போது அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். ஒரு பிரச்சினை வரும்போது அவசரப்படாமல் நிதானமாக எப்படி யோசிப்பது, கோபப்படாமல் பொறுமையாக எப்படிக் கையாள்வது, ஒழுக்கத்துடன் எப்படி இருப்பது என்று விவரிப்பார். ஏனெனில் நமது கோபம், அவசரபுத்தியால் மனித உறவுகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மேலும் எனது தாய், அவருக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும், எங்களது நலன், படிப்பு ஆகியவற்றில் முதல் கவனம் செலுத்துவார்.
  “தந்தை தாய் பேண்” என்ற பழமொழிக்கு ஏற்ப எனது பெற்றோரை அவர்களது கடைசிகாலம் வரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வேன்.
  தேஜல்
  சுவா சுகாங் உயர்நிலை பள்ளி

Your email address will not be published.


*