விழா என்றாலே உணவுதான், மகிழ்ச்சிதான்!

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
விழாக்கள்தான் எவ்வளவு மகிழ்ச்சியானவை. விழாக்களுக்காகக் காத்திருப்பதுதான் எவ்வளவு சுகம். விழாக்களைப் பற்றிய உங்கள் கவிதைகளை இங்கே பகிருங்கள்!
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 ஜூலை  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

4 கருத்துரை

 1. பூக்களை போல
  எங்கும் புன்னகை
  பூத்திருக்கும் விழாக்காலம்
  சேர்ந்து கூடி
  குடும்பத்தோடும் தோழர்களோடும்
  கழிக்கும் இன்பக்கலாம்
  பற்பல சுவையான
  உணவு வகைகளும்
  நிறைந்த இனிப்பான தருணங்கள்
  பழைய காலங்களை
  நினைவில் கொண்டு
  உறவுகள் வலுவாகும் தருணங்கள்
  கடந்த சண்டை சச்சரவுகள்
  சிரிப்பு சாதத்தில்
  கரையும் நேரம்
  பெரியோர்களுக்கு நன்றி செலுத்தி
  அன்பை வெளிப்படுத்தும்
  மன நிம்மதியான நேரம்

  தாஹிரா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 2. தமிழ் வருட பிறப்புநாள்
  சித்திரைப் பெண்ணே…..சித்திரைப் பெண்ணே….!
  சீர் கொண்டு வா…..
  சில்லென்று மழை பொழிந்து – நீர் கொண்டு வா…..!
  மஞ்சள் மலர்கள் மத்தாப்பாய் சிரிக்கும்…..
  காய் கனிகள் காய்த்துக் குலுங்கும் -உன் முகங்கண்டு
  இன, மத பேதமின்றி
  தரணி வாழ் தமிழரெல்லாம்
  உவகையுடனே கொண்டாடும் ஒரு பெருநாள்- சித்திரை புதுவருடத் திருநாள் !
  இனிப்போடு , கசப்பும் ஒரு சுவையாய் உண்டு மகிழ
  இன்பமும் துன்பமும்
  வாழ்க்கையில் உண்டு என உரைக்க
  வந்த நன்னாள் – தமிழ் வருட பிறப்புநாள்
   susmitha 2E2 yuan ching secondary

 3. விழா என்றாலே உணவுதான், மகிழ்ச்சிதான்!
  தன்னந்தனியாய் நிற்கும் நிலவோடு!
  நட்சத்திரக்கூட்டம் சேர்ந்து ஜொலிப்பதுபோல்!
  ஒற்றைக் குடும்பமாய் இருக்கும் வீட்டில்!
  சொந்தங்களின் வருகையால் இல்லம் ஜொலிப்பது
  விழாக்காலங்களில் மட்டுமே!
  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
  விழாக்களில் சாப்பாட்டுக்கில்லை திண்டாட்டம்!
  ரொட்டி வெண்ணெய் இவற்றிலிருந்து விடுதலை!
  வானவில்லாய் மேஜையை அலங்கரிக்கும் உணவுகளால் கவலை இல்லை!
  சாப்பாடு என்றாலே ஓடி ஒழியும் பிள்ளைகள்!
  சப்புக்கொட்டி சாப்பிடும் அதிசயங்கள்!
  உறவினர் உள்ளங்களில் குதூகலங்கள்!
  மனதும் வயிறும் நிறைக்கும் உணவுகள்!
  பலகாரங்கள் இல்லாத தீபாவளியா?
  சர்க்கரைப் பொங்கல் இல்லாத தைத்திருநாளா?
  கொலுக்கட்டை இல்லாத பிள்ளையார் சதுர்த்தியா?
  பாயாசம் இல்லாத திருமணமா!
  பிள்ளைகள் விரும்பும் அனைத்து உணவையும்!
  கொண்டு வந்து சேர்க்கும் விழாக்களும் பண்டிகைகளும்!

 4. விழா என்றாலே உணவு தான், மகிழ்ச்சிதான்
  விழா என்றால் மகிழ்ச்சி
  மகிழ்ச்சி என்றால் இனிப்பு
  இனிப்பு என்றால் பலகாரம்
  பலகாரம் பேரில் இருப்பது காரம்
  ஆனால் நினைவில் வருவது அம்மா
  ஆம் அம்மா செய்யும் இனிப்பு,
  அன்பு கலந்து ஆசை கலந்து
  இனிப்பு கலந்து ஈகை கலந்து
  உள்ளம் மகிழ மனம் ஊஞ்சலாட வைக்கும்
  அம்மா செய்யும் இனிப்பு!
  விழா என்றாலே மகிழ்ச்சி
  மகிழ்ச்சியின் உச்சம் ஒன்றுகூடுதல்
  ஒன்று கூட முன் பகை மறந்து
  இன்று நமக்கு தான் என்ற மகிழ்ச்சியில்
  மனம் கூத்தாடும்
  கூத்தாடும் போது மனமும் உடலும்
  சோர்ந்து போகாது
  ஒன்றுகூடி அன்னையின் அன்பில்
  உருவான அன்னம் அமுதமாக உள் இறங்க
  மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலை பள்ளி

Your email address will not be published.


*