விழாக் காலம்

விழாக் காலத்தை நினைவூட்டும் படம் இது. புத்தாண்டு, கிறிஸ்மஸ், பொங்கல், தீபாவளி எனறு பல விழாக்கள். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் விழாவைப் பற்றிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்…
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள்,   14 பிப்ரவரி  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

12 கருத்துரை

 1. மகிழ்ச்சி புஷ்வானமாய் பொங்க
  கவலைகள் ராகெட்டாய் பறக்க ,
  இன்ப துன்பம் தரசக்கரமாய் சுழல ,
  தன்னம்பிக்கை எறியும் பாம்பு வட்டாய் வளர ,
  பட்டாசு அணுகுண்டாய் வெடிக்க ,
  நம் வாழ்க்கை அனைவர்க்கும் வான்வேடிகையாய்
  மகிழ்ச்சி அளிக்க ,
  அனைவரிடம் சரவெடியாய் நட்பாய் பிணைந்து ,
  இந்த தீபாவளி சிறக்க ,
  அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

 2. நாம் கொண்டாடும் பண்டிகை தீபாவளி
  அது நம் வாழ்க்கைக்கு ஊட்டும் ஒளி
  தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளி
  அன்று சாப்பிட வேண்டும் களி
  அன்று கொழுத்தி போடுவது மத்தாப்பு
  உறவினர்கள் இடையே வெடிக்கும் சிரிப்பு பட்டாசு
  பாலாஜி ஹர்ஷினி பாலா
  பய லேபர் மேதொடிஸ்ட் பெண்கள் உயர்நிலை பள்ளி

 3. தீபாவளி வந்தாசு
  குதுகலமும் வந்தாசு
  நல்லா சாப்பிட்டாச்சு
  உறவினர்களுடனும் பேசியாச்சு
  மனம் நிறைந்து  வீடுக்கும்  போயாச்சு
  ஜனனி
  சுவா சு காங் உயர்நிலை பள்ளி

 4.                                                          பொங்கல்                                 
  தை மகள் தந்த சீதனமாம் – பொங்கல் !   
  தரணி வாழ் தமிழரெல்லாம் கொண்டாடும் – பொங்கல் !
  பொங்கும் மங்கலம் எங்கும் தங்கச் செய்யும் – பொங்கல் !
  இனம் , மொழி , மதம் கடந்து வந்த – சமத்துவ பொங்கல் !
  கதிரவனுக்கும் , உழவுக்கும் நன்றி நவிலும் – உன்னதப் பொங்கல் !
  கரும்போடு , சரக்கரை பொங்கலும் உண்டு மகிழும் – பொங்கல் !
  தமிழர் பண்பாட்டை ஓங்கி எடுத்துரைக்கும் – பொங்கலோ பொங்கல் !
  susmitha (2E2)
  yuan ching secondary school

 5.                                                          பொங்கல்                                 
  தை மகள் தந்த சீதனமாம் – பொங்கல் !   
  தரணி வாழ் தமிழரெல்லாம் கொண்டாடும் – பொங்கல் !
  பொங்கும் மங்கலம் எங்கும் தங்கச் செய்யும் – பொங்கல் !
  இனம் , மொழி , மதம் கடந்து வந்த – சமத்துவ பொங்கல் !
  கதிரவனுக்கும் , உழவுக்கும் நன்றி நவிலும் – உன்னதப் பொங்கல் !
  கரும்போடு , சரக்கரை பொங்கலும் உண்டு மகிழும் – பொங்கல் !
  தமிழர் பண்பாட்டை ஓங்கி எடுத்துரைக்கும் – பொங்கலோ பொங்கல் !
  susmitha
  (2E2)
  yuan ching secondary school

 6. ஒளி தந்து விடியலிட்டு
  உலகிற்கு கண்ணாகும்
  உதய சூரியனுக்கு
  நன்றி சொல்லும் திருநாள் …
  நாள்தோறும் வயலில் உழைக்கும்
  காளைகளுக்கு நன்றி சொல்லும் திருநாள்
  தமிழர் திருநாள் அது
  தமிழர்களை வளமாக்கும் நாள்
  உழைக்கும் உழவர்களின்
  களைப்பை போக்கி
  களிப்பில் ஆழ்த்தும்
  உற்சாகப்படுத்தும் திருநாள்!
  மிரட்டி வரும் காளைகளை
  விரட்டி அடக்கும் வீர திருநாள்!
  பொங்கலோ பொங்கல்
  என்று மனதில் மகிழ்ச்சி பொங்கும்
  பொங்கல் திருநாள்!
  முருகன் சிநேகா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 7. தீபாவளி
  இரவில் பகலைக் கொண்டு வந்து
  மனதில் இனிப்பை ஊட்டி
  துயரங்களை எரித்தொழித்து
  உறவுகளை இணைக்கும் 
  தீபமே தீபாவளி
  க.பிரணவன்
  யூசூன் நகர உயர்நிலைப் பள்ளி

 8. நம்மவரின் மறுபக்கத்தை
  மலரச் செய்தது;
  ஓர் ஆணிவேரின் மரணம்
  ஊரெங்கும் கண்ணீர்த் திருவிழா!
  அஷ்வினி செல்வராஜ்
  இராப்பிள்ஸ் தொடக்கக் கல்லூரி

 9. மக்கள் யானைக் கூட்டத்தைப் போல் இருக்கும் நேரம் திருவிழா
  மக்கள் நிம்மதியாய் வயிற்றை நிரப்பிக் கொண்டு இருக்கும் நேரம் திருவிழா
  மக்கள் தங்கள் வீட்டை அலங்காரப்படுத்தும் நேரம் திருவிழா
  மக்கள் எந்தத் தொல்லையும் இல்லாமல் இருக்கும் நேரம் திருவிழா
  விக்னேஷ்
  Gan Eng Seng School

 10. ஒரு நல்ல நாளில் ஊர் எடுத்தது ஒரு விழா
  வண்ண ஆடைகள் சூடி வந்து சென்றனர் மக்கள்
  கத்திக் கத்திப் பேசிய வார்த்தைகள்
  காற்றில் சிதரிய சிரிப்புகள்
  இங்கும் அங்கும் தெரிந்த முகங்களைக் கண்டு
  மின்னி மறைந்த முறுவல்கள்
  வெயிலில் வியர்த்து அலங்காரம் கரைய
  அதைத் துடைத்தெறிந்த கைக்குட்டைகள்
  தாகம் தணித்த குளிர்பாணக் குவளைகள்
  மறுநாள் காலையில் அனைத்தையும் பெருக்கித் தள்ளினார்கள்
  துப்புரவாளர்கள் மட்டுமல்ல; மக்களும்தான்!
  திவ்யா
  இராப்பிள்ஸ் தொடக்கக் கல்லூரி

 11. ஒலிபெருக்கியில் கேட்ட பாடல்களை
  எதிரொளியாய் பரவச் செய்த 
  காற்றிற்கு நன்றி கூறினேன்
  காலையின்று மாலையின்றி
  எந்தவிதமான நேரகாலமின்றி சிரித்துக் கொண்ட
  இலைகளை நோக்கி மகிழ்ந்தேன்
  மலர்ந்த முகத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்த
  மலர்களையும் கண்டேன்
  மேளதாளத்திற்கு ஏற்பப் பாடிவந்த
  பறவைகளையும் பார்த்தேன்
  யார் யாரோ கூடியிருந்த கூட்டத்தில்
  கண்ணுக்குத் தெரியா வண்ணம்
  தீனியைத் தாங்கிச் செல்லும்
  எறுப்புகளையும் கண்டேன்
  பல தீபங்களை ஏற்றி வைத்து
  ரசித்த பெண்களின் மத்தியில்
  மத்தாப்புடன் ரசித்து வந்தேன்
  எந்தவித அழைப்புமின்றி
  என் மகிழ்ச்சிக்குப் பங்கேற்க வந்த இவர்களை.
  வித்யா
  சிராங்கூன் தொடக்கக் கல்லூரி

 12. சமுதாயத்தோடு கொண்டாடும் விழா
  இரவு பகல் பாராமல் கொண்டாடும் விழா
  தீப ஒளியைக் கொண்ட விழா
  உறவுகளை இணைக்கும் விழா
  அதுவே தீபாவளித் திருவிழா
  சக்திவேல்
  யூசூன் நகர உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*