விளையாட்டாக ஒரு கதை

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி.
நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது நடந்த சுவையான சம்பவங்களையோ அல்லது குடும்பத்தினரோடு சுற்றுலா / வெளியூர்ப் பயணம் மேற்கொண்டபோது நடந்த சம்பவங்களையோ கதையாக எழுதி இங்கு பகிரலாம்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 மே 2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

13 கருத்துரை

 1. அன்று ஜூன் விடுமுறையின் முதல் நாள். நானும் என் குடும்பத்தினரும் கிழக்கு கடற்கரைக்குச் சென்று எங்கள் நாளை இன்பமாக கழித்தோம். நாங்கள் காலையில் சென்றதால் கடற்கரையின் குளிர்ந்த காற்றை அனுபவிக்க முடிந்தது ! நானும் என் தங்கையும் கடலில் நீந்தலாம் என்று முடிவு செய்தோம். பெற்றோர்களிடம் அனுமதி கேட்டோம். நீச்சல் கற்றுக்கொண்டுள்ளதால் அவர்கள் பக்கத்திலேயே விளையாடும்படி கூறி அனுமதி அளித்தனர். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியோடு கடலை நோக்கி ஓடினோம். என் பெற்றோர்கள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நானும் என் தங்கையும் மகிழ்ச்சியில் கடலில் குதித்தோம் !
  இருவரும் சந்தோஷத்தோடு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது நான் என் பெற்றோரிடம் எதையோ கேட்பதற்கு சென்றேன். என் தங்கை மட்டும் தனியாக கடலில் விளையாடிக்கொண்டிருந்தாள். நான் என் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்த போது, ஏதோ சத்தம் சேட்டது. முதலில் நான் அலட்சியப்படுத்தினேன்.
  ஆனால் அந்த சத்தம் மீண்டும் நன்றாக கேட்டுக் கொண்டே இருந்தது. நாங்கள் எண்ணவென்று பார்க்க விரைந்து சென்றோம். அருகில் சென்ற போது தான் அது என் தங்கையின் குரல் என்று தெரிந்தது. அங்கே அவள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தாள். எங்களுக்கு என்ன செய்து என்று தெரிய வில்லை. என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். நாங்கள் உதவிக்கு கத்தினோம். அப்போது அருகே நீந்திக் கொண்டிருந்த ஒரு நபர் எங்கள் சத்தத்தைக் கேட்டு உதவி செய்ய விரைந்தார். என் தங்கையைக் காப்பாற்றினார். எங்களுக்கு உயிர் மீண்டும் திரும்ப வந்தது போல் இருந்தது. ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டோம். என் தங்கையிடம் எப்போதும் சண்டைப்போட்டுக்
  ொண்டிருந்த நான் அன்று தான் அவளின் அருமை தெரிந்துக் கொண்டேன். அன்றிலிருந்து என் தங்கையை அதிகமாக நேசிக்க தொடங்கினேன். அந்த நாள் என் மனதில் பசுமரத்தானிப் போல் பதிந்தது.

 2. அன்று ஜூன் விடுமுறையின் முதல் நாள். நானும் என் குடும்பத்தினரும் கிழக்கு கடற்கரைக்குச் சென்று எங்கள் நாளை இன்பமாக கழித்தோம். நாங்கள் காலையில் சென்றதால் கடற்கரையின் குளிர்ந்த காற்றை அனுபவிக்க முடிந்தது ! நானும் என் தங்கையும் கடலில் நீந்தலாம் என்று முடிவு செய்தோம். பெற்றோர்களிடம் அனுமதி கேட்டோம். நீச்சல் கற்றுக்கொண்டுள்ளதால் அவர்கள் பக்கத்திலேயே விளையாடும்படி கூறி அனுமதி அளித்தனர். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியோடு கடலை நோக்கி ஓடினோம். என் பெற்றோர்கள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நானும் என் தங்கையும் மகிழ்ச்சியில் கடலில் குதித்தோம் !
  இருவரும் சந்தோஷத்தோடு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது நான் என் பெற்றோரிடம் எதையோ கேட்பதற்கு சென்றேன். என் தங்கை மட்டும் தனியாக கடலில் விளையாடிக்கொண்டிருந்தாள். நான் என் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்த போது, ஏதோ சத்தம் சேட்டது. முதலில் நான் அலட்சியப்படுத்தினேன்.
  ஆனால் அந்த சத்தம் மீண்டும் நன்றாக கேட்டுக் கொண்டே இருந்தது. நாங்கள் எண்ணவென்று பார்க்க விரைந்து சென்றோம். அருகில் சென்ற போது தான் அது என் தங்கையின் குரல் என்று தெரிந்தது. அங்கே அவள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தாள். எங்களுக்கு என்ன செய்து என்று தெரிய வில்லை. என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். நாங்கள் உதவிக்கு கத்தினோம். அப்போது அருகே நீந்திக் கொண்டிருந்த ஒரு நபர் எங்கள் சத்தத்தைக் கேட்டு உதவி செய்ய விரைந்தார். என் தங்கையைக் காப்பாற்றினார். எங்களுக்கு உயிர் மீண்டும் திரும்ப வந்தது போல் இருந்தது. ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டோம். என் தங்கையிடம் எப்போதும் சண்டைப்போட்டுக்
  கொண்டிருந்த நான் அன்று தான் அவளின் அருமை தெரிந்துக் கொண்டேன். அன்றிலிருந்து என் தங்கையை அதிகமாக நேசிக்க தொடங்கினேன். அந்த நாள் என் மனதில் பசுமரத்தானிப் போல் பதிந்தது. 
  ஹீபா ஜேனட்
  செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

 3. நானும் என் நண்பர்களும் அடுக்குமாடி கட்டடத்தின் கீழ் தலத்தில் காற்ப்பந்து விழையாடினோம்.அவ்விடத்தில்,காற்பந்து விழையாடக்கூடாத் என்று ஒரு எச்சறிக்கை பழகையில் இருந்தது.ஆனால் நாங்கள் அதை மதிக்காமள் விழையாடினோம்.நாங்கள் செறுப்பை கோல் கம்பியாகப் பயன்படுத்தினோம்.
  போட்டி கடுமையாக இருந்தது.என் நண்பன்,ராமு பந்தை வேகமாக உதைத்தான்.அது கோலாகியது!அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினான்.அவன் மகிழ்ச்சி சிறிய நேரம்தான் நீடித்தன.
  அப் பந்து மின்னல் வேகத்தில் சென்று ஒரு பாட்டியை அடித்தது.பாட்டி கீழே விழுந்தார்.எங்கள் கைகளும் ஓடவில்லை காள்ளளும் ஓடவில்லை.நாங்கள் அவ்விடத்தைவிட்டு சிட்டாய் பறக்க நினைத்தபோது ஒரு காவளர் பார்த்துவிட்டார்.அவர் எங்களை பார்த்துவிட்டார்.எங்களை அழைத்தார்.அச்சம் எங்கள் மனதை கவ்வியது, உயிர் எங்களைவிட்டு பிறிந்ததுபோல் இருந்நது.நான் செத்தேன் என்று என்னிடமே கூறினேன்.
  அவர் எங்கள் பள்ளி பெயரை கேட்டார்.நாங்கள் திக்கி தடுமாறி கூறினோம்.இனி இவ்வாறு செய்தால் அபராதம் என்று கூறிவிட்டு சென்றார்.நாங்கள் தலை குனிந்து வீடு திறும்பினேம்.
  முகமத் மசீன்
  செயின்ட் ஹில்டச் செகோண்டரி

 4. கதிரவன் மெல்ல மெல்ல பூமியை எட்டிப்பார்த்தான்.சிறிது நேரத்தில் தனது ஒளிக்கதிர்களை பூமியன் மீது படரவிட்டான்.நான் காற்பந்து விளையாட பிடிக்கும்.நான் காற்பந்து நண்பர்களுடன் விளையாடுவேன்.நாங்கள் காற்பந்து சந்தோஷமாக விளையாடுவோம்.நாங்கள் எல்லொரும் போட்டிகளில் கலந்துகொள்வோம்.நாங்கள் போட்டிகளிள் கலந்துக்கொண்டு வெற்றி பெறுவொம்.நாங்கள் மகிழச்சி அடைவோம்.நம் பெற்றொர்கள் தன் பிள்ளைகளை பாராட்டுவார்கள்.
  ஸ்ட ஹில்தாஸ் secondary

 5. நான் என் குடும்பத்துடன் இந்தியாவிற்கு சென்றோம். நான் இந்தியாவில் நிறைய செய்தேன்.என் அம்மா நிறைய சாரியை வாங்கினார்.நான் நிறைய வாங்கினான்.இந்தியாவில் நான் நிறைய கோவிலுக்கு சென்றேன்.அந்த கோவிகல் மிகவும் அழகாக இருந்தது.என்னுடைய இந்திய பயணம் மிகவும் நல்லாக இருந்தது.

 6. அன்று சனிகிழமை மாலை நேரம்.ஆன்று எனக்கு ஒரு ஹாக்கி போட்டி இருந்தது. நான் செங்காங் துறைவுக்கு சென்று என் அனியினருக்கு காத்திருந்தேன். போட்டி ஆரம்பிககு முன் இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன.
  “பீப்!பீப்!”என்று நடுவர் ஊதியை ஊதிநான்.என் குளு உற்சாகத்துடன் விளையாடிக்கொன்டிருந்தார்கள்.எல்லோரும் முடிந்தவரை முயற்சிசெய்தோம். ஐம்பது நிமிடங்கள் கழித்தன. இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன.
  திடீரென்று “ஆ!ஆ!”என்று சத்தம் கேட்டது. நான் தான் அந்த சத்தத்தை போட்டிருந்தேன் என்று உணர்ந்தேன். நான் ஓடும்போது கீழே வழிக்கி விழுந்தேன.ரத்தம் என் காயிலிருந்து சொட்டிக்கொன்டே இருந்தது. மற்ற குளுயிலிருந்து ஒருவர் என்னிடம் வந்து வலிக்கிறதா இல்லையா என்று கேட்டு என்னை நாற்காலியில் ஆமர கொன்டு சென்றாள். நான் அவரின் கருணத்தை கண்டு ஆதிர்சியில் இருந்தேன்.
  போட்டி முடிந்துவிட்டது. என் குளு வெற்றி அடைந்தோம். எல்லோரம் ஒருவர் ஒருவரை பாராட்டனார்கன். நானும் மற்ற குளுவைப் பாராட்டினேன்.வெற்றி எல்லாவற்றையும் அல்ல. நமக்கு சிறந்த தோழமை இருக்கவேண்டும்.

 7. ஒ௫ மகிழ்வான நேரத்தில்,நான் இந்தியாவில் இருந்து அங்கே இருக்கும் என் தாத்தா-பாட்டியின் வீட்டில் இருந்து என் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.நான் என் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.நான் என் உணவை சாப்பிடும் போதே நான் ஜன்னலின் வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்போது,நான் சில சிருவர்கள் கால்பந்து விளையாடுவதைப் பார்த்தேன்.அதனால்,நான் உடனே உணவை சாப்பிட்டு அவர்களுடன் விளையாட செனறேன்.நான் சில நேரம் அவர்களுடன் பழகிவிட்டேன்.நாங்கள் எல்லோரும் கூட விளையடினோம்.எனக்கு நேரம் போவதே தெரியவில்லை.நான் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கினேன்.அப்போது ஒரு காண முடியாத காட்சி நடந்த்து.என் நண்பன் ஒருவன் திடீர் என்று வேகத்தில் பந்தை உதைத்தான்.பந்து பறவை போல பறந்து எங்கோ போய் விழுந்த்து.ஏற்கனவே இரவு ஆனதால் இருள் சுழ்ந்த்து.எனக்கு இருள் என்றால் பயம்.ஆனால்,நான் துணிச்சலாக பந்தை எடுக்கப் போனேன்.வழியில் ஏதோ ஒன்று காலில் சிக்கியது.நான் பயந்து அலரினேன்.என் சத்தம் கேட்ட நண்பர்கள் என் தாத்தாவையும் பாட்டியையும் அழைத்தார்கள்.அவர்கள் என்னை வந்து பார்த்து வயிறு குலுங்கச் சிரித்தாரகள்.நான் என் காலை பார்த்தபோது ஒரு கயிறு சிக்கி இருந்த்து.அதை பார்த்து நானும் கல கலவென்று சிரித்து வீட்டிற்க்கு சென்றேன்.அந்த நிகழ்வு என் மனதில் பசுமரத்தானி போல் பதிந்துவிட்டது.
  சசிக்குமார் ரோஹித்
  செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

 8. நமது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பது அவசியம்.அதனால், ஆண்டுதோரும், சிலர் தங்களது குடும்பங்களோடு சுற்றுலாவை மேற்கொள்வார்கள். அதை போலவும், நான் என் குடும்பததினருடன் சுற்றுலாவை மேற்கொண்டப்போது, திருப்புமுனையாக ஒரு சம்பவம் நடந்தது. அது என்னவென்று தெரியுமா? தெரியவேண்டுமா? வா, இப்போதே அதை நோக்கிச் செல்லலாம்.
  டிசம்பர் விடுமுறையின் பொது, என் பெற்றோர் எங்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தார்கள். இந்த செய்தியை கேட்டதும், நானு ஆனந்த கடலில் மூழ்கினேன். சிறு வயதிலிருந்தே, நாங்கள் மலேசியாவிற்கே செனறக்கொண்டே இருந்தோம். அங்கே சென்று சென்று எனக்கு அலுத்து போய்விட்டது. அதனால், இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நம்பினேன் ஆனால்….
  அது ஒரு மூன்று-நாள் பயணமாக இருந்தது. நமது பைகளை அடுக்கியப்பின், விமான நிலையத்திற்கு புறப்பட்டோம். இரவு நேரமாக இருந்ததால், களைப்போடு அங்கே சென்றடைந்தோம். எங்களது இரவு உணவை உண்ட பிறகு,விமானத்தில் ஏறினோம்.
  விமானப்பயணம் சுமார் பதின்மூன்று மணி நேரத்திற்கு நீடித்தது. அங்கே வந்தடைந்ததும். என்னால் என் கண்களை நம்பமுடியவில்லை. இந்த நாட்டின் விமான நிலையம் நவீனத்துடன் தோற்றமளித்தது. அதிக எழிலுடன் காட்சியளிட்டது. ஆனால், நமது சாங்கி விமான நிலையம் தான் சிறப்பானது!
  பைகளை எடுத்த பிறகு, தங்கும் விடுதிக்குச் சென்றோம். பைகளை கீழே போட்ட பிறகு, சுற்றுலா பேருந்தில் ஏறி,நாட்டின் தேசிய விலங்கியல் தோட்டத்திற்கு சென்றோம். சிங்கப்பூரில் பார்க்காத மிருகங்களும் இங்கே கண்டோம். கங்காரு, குவாலா கரடி போன்ற மிருகங்களை கண்டு களித்தோம். அப்போது, குவாலா கரடியுடன் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது.நான் அன்போடு கரடியை தூக்கினேன். ஆனால், திடீரென்று அந்த கரடி என்னை கடித்தது. அந்த தருணத்தில் என் உயிர் என் உடலை விட்டு பிரிந்துவிட்டது என்ற உணர்வு எனக்கு வந்தது. இவ்வளவு சிறிய கரடி இவ்வளவு வலியை உண்டாக்குமா? என்னால் வலியை தாங்க முடியவில்லை. என் கையில் பலத்த காயமும், இரத்தமும் இருந்தது. அங்கே இருந்த அதிகாரிகள் முதலுதவி செய்தார்கள்.
  அன்று நடந்த சம்பவம் என் மனமில் பசுமரத்தாடிப்போல் பதிந்துவிட்டது.
  S Prithi Nadine Dithyaveena
  Saint Hilda’s Secondary School

 9. “இவ்வாண்டின் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு எனது பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காகப் பற்பல போட்டிகளை ‘கலை விழா’ என்னும் பெயரில் நடத்தியது. பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, புதிர்ப் போட்டி, கவிதைப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று பல்வேறு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. நான் புதிர்ப் போட்டிக்குத் தலைமை வகித்தேன். புதிரப் போட்டிகளுக்கான கேள்விகளைத் தயாரிப்பதும், போட்டி நாளன்று எல்லாம் சரியாக நடக்கின்றனவா என்று கண்காணிப்பதும் எனது பொறுப்பாகும். ஆதலால், போட்டிக்கான கேள்விகளை எழுத, நான் தமிழ்மொழியின் மீதும், தமிழ்க் காலாச்சாரப் பழக்கவழக்கங்களின் மீதும், தமிழர்களின் வரலாற்றின் மீதும் அதிக ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியிருந்தது.
  இதனால் நான் தமிழைப் பற்றியும் தமிழ் நூல்களைப் பற்றியும் பலப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். உதாரணத்திற்கு, திருக்குறளை திருவள்ளுவர் இயற்றினார் என்கிறோம். ஆனால், சமணமத (Jainism) நூல்களின்படி திருக்குறளை எழுதியவர் ஆச்சாரியர் குண்டகுண்டர் என்று பலச் சான்றுகள் இருக்கின்றன. ஆதே போல, தமிழில் சில எண்களுக்குத் தனிப்பட்ட பெயர்கள் இருக்கின்றனவாம். உதாரணத்திற்கு, 10^18 என்பதற்கு இளஞ்சி, 10^15 என்பதற்கு நெளை, 10^12 என்பதற்கு ஈகியம், 10^9 என்பற்கு தொள்ளுண், 1/3200 என்பதற்கு கீழ் இருமா, 3/5120 என்பதற்கு கீழ் மூன்று வீசம் மற்றும் 1/160 என்பதற்கு அரைக்காணி என்றெல்லாம் பண்டையத் தமிழர்கள் எண்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இது நம்முள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
  ஆகையால் ‘கலை விழா’-வின் புதிர்ப் போட்டிக்குத் தயார் செய்யும்போது நான் தமிழைப் பற்றி இவ்வாறான சுவாரசியமான செய்திகளை அறிந்துகொண்டேன். மேலும் அவற்றைப் பற்றிக் கேள்விகளாக உயர்நிலைப் பள்ளி மாணவர்வர்களுக்கு விடுத்தது, அவர்களுள் தமிழின் பழமைத்துவத்தைப் பற்றியும் தமிழின் சிறப்பைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் என்று நான் நம்புகிறேன். அதுமட்டுமில்லாமல், தமிழைப் போன்ற ஒரு புராதன, செழிப்பான மொழி இவ்வுலகில் வேறேதும் இருக்க இயலாது என்பதையும் ‘கலை விழா’ எனக்கு உணர்த்தியது. ஆகையால், தமிழன் என்று சொல்வோம்; தலை நிமிர்ந்து நிற்போம்!
  குமாரவேல் விக்னேஷ்
  ஆங்கிலோ-சீனத் தன்னாட்சிப் பள்ளி
  5-ஆம் ஆண்டு”

 10. அன்று வழக்கம்போலப் பள்ளிக்கு அரக்கப் பரக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன். என் தந்தையோ நான் பொறுப்பின்றி இருப்பதைச் சுட்டிக் காட்டி என்னை வசை பாடிக் கொண்டிருந்தார். எதையும் காதுகளில் வாங்கிக்கொள்ளாமல், புத்தகப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். என் தாயாரோ பசியாறிவிட்டுப் போகச் சொன்னார். நான் வேண்டாமென்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அன்று என் பள்ளியில் நாடகப் போட்டி நடைபெறும் நாள். நானும் அதில் பங்கெடுத்திருந்தேன். நானும் என் தோழி தேவியும் அல்லும் பகலும் ஒத்திகையில் ஈடுபட்டோம். நான் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். போட்டியை நினைத்துக் கொண்டே பள்ளிக்குச் சிட்டாய்ப் பறந்தேன்.
  பள்ளியை அடைந்தவுடன் நான் தேவியைச் சந்தித்தேன். தேவி என்னிடம் நாடகத்திற்குத் தேவையான பொருள்களை எல்லாம் கொண்டுவந்தாயா? என வினவினாள். ‘ஆம்’, கொண்டு வந்துள்ளேன்’ என்று உறுதியுடன் கூறினேன். அப்போது தேவி என்னிடம் “போட்டி மதியம் 12.15 மணிக்குதான் ஆரம்பிக்கிறது. நம் பள்ளி 12 மணிக்கு முடிகிறது. அதனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் நாம் ஒத்திகை பார்ப்போம்” என்று கூறினாள். பிறகு பள்ளி மணி ஒலித்தது. ஆசிரியர் வகுப்புக்குள் வந்தார். அவர் எங்களை அறிவியல் பாட நூலை எடுக்கச் சொன்னார். புத்தகத்தை என் பள்ளிப் பையிலிருந்து எடுக்கும்போது, நாடகத்திற்குத் தேவையான முக்கிய ஒன்றை கொண்டுவரவில்லை என்பதை உணர்ந்தேன்.
  அப்போது எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. என்முகம் குப்பென்று சிவந்துவிட்டது. முகத்தில் வேர்வைத் துளிகள்அரும்பின. நான் பிரமித்துப் போய் நின்றேன். பேச்சு எழவில்லை. அதிர்ந்து போய் தயக்கத்துடன் கண்களை மூடிக்கொண்டு திரும்பினேன். தேவி என்னைப் பார்த்தாள். நான் அவளிடம் நாடகத்திற்குத் தேவையான மந்திரக் கோலையும் துணியையும் வசனத்தையும் கொண்டுவர மறந்துவிட்டேன் எனக் கூறினேன். தேவி உடனே அச்சம் அடைந்ததோடு என்மேல் சினம் கொண்டாள். அவள் எந்த நேரத்திலும் எரிமலைபோல் வெடித்துவிடுவாள் என்பதை உணர்ந்தேன். நான் உடனே திரும்பிக்கொண்டேன். என்னால் பாடத்தை கவனிக்கவே முடியவில்லை. பொருள்களை எப்படிக் கொண்டுவருவது என்னும் எண்ணம் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் நான் மூழ்கி இருந்தேன். திடீரென்று என் மூளையில் பளீரென்று ஒர் யோசனை தோன்றியது. வகுப்பு முடிந்த உடனே தேவியிடம் சென்று “தேவி! என் தவற்றுக்கு என்னை மன்னித்துவிடு, பள்ளி முடிந்ததும் என் தந்தையை அழைத்து அவற்றைக் கொண்டுவரச் சொல்கிறேன்” என்று கூறினேன். அவள் கோபத்துடன் ‘சரி’ என்று கூறினாள்.
  பிறகு பள்ளி மணி ஒலித்தது. எல்லாரும் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். நான் உடனே கழிவரைக்குச் சென்று என் தந்தையை அழைத்து பொருள்களை எடுத்துக் கொண்டு உடனே பள்ளிக்கு வரச் சொன்னேன். அவர் என்மேல் புலிபோல் சீறிப்பாய்ந்தார். எனக்குப் பொறுப்புணர்வு மற்றும் சுயக்கட்டுப்பாடு இல்லை என இடித்துரைத்து, பள்ளிக்கு வரச் சம்மதித்தார்.
  நான் அவருக்காகப் பள்ளி நுழைவாயிலில் காத்துக் கொண்டிருந்தேன். அவர் வந்தவுடன் பொருள்களை எடுத்துக்கொண்டு பள்ளி மண்டபத்திற்கு விரைந்தேன். போட்டி தொடங்கிவிட்டது. அதனால் எங்களால் இறுதி ஒத்திகை பார்க்கமுடியவில்லை. தேவி எனக்குத் தைரியம் கூறிச் சிறப்பாகச் செய்யச் சொன்னார். எங்கள் முறை வந்தவுடன் நாங்கள் மேடைக்குச் சென்றோம். பதற்றத்தில், ஆங்காங்கே சில தவறுகள் செய்தோம். எப்படியோ நடித்து முடித்தோம்.
  பிறகு முடிவுகளுக்காகக் காத்திருந்தோம். நடுவர்கள் எங்களுக்கு இரண்டாம் பரிசு என அறித்தனர். நாங்கள் பரிசுகளைப் பெற்றுக்கொண்டோம். நான் தேவியிடம் மன்னிப்புக் கேட்டேன். நான் மட்டும் ஒழுங்காக போட்டிக்குத் தேவையான பொருள்களைக் கொண்டுவந்திருந்தால், நாங்கள் ஒத்திகை செய்திருப்போம். பதற்றம் அடைந்திருக்கமாட்டோம். தேவி, “பரவாயில்லை, உன் உதவி இல்லையென்றால் நாம் இரண்டாம் பரிசு பெற்றிருக்கமாட்டோம்” எனக் கூறி சமாதானம் செய்தாள். இருந்தாலும் நான் கவனக் குறைவாகவும் பொறுப்பின்றி நடந்து கொண்டதாலும் இரண்டாம் பரிசு கிடைத்தது. இல்லையென்றால் முதல் பரிசு கிடைத்திருக்கும். அன்று என் பொறுப்பில்லாச் செயலை எண்ணி வருந்தினேன். இனிமேல் பொறுப்புடன் நடக்கவேண்டும் எனத் தீர்மானித்தேன். அன்றிலிருந்து நான் பொறுப்புடன் நடந்துகொண்டுவருகிறேன். என் பொறுப்புணர்வை வளர்த்த அந்த அனுபவம் என் மத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளது. இந்த அனுபவம் ஒரு மகிழ்ச்சியான சம்பவமாக இல்லாவிட்டாலும், என் தவற்றை உணர வைத்தது, என்னைத் திருத்தி என்னுள் பொறுப்புணர்வை வளர்த்தது. அதனால் இந்த அனுபவம் என் மனத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டது.

  Naveena 4N
  Bukit View Secondary School

 11. அப்பா!ராம் அண்ணா! மணி ஆறு முப்பது ஆகுது சீக்கிரமாக உங்களுடய உடைகளை மாத்திக்கொண்டு வாங்க’ என்று ஒரு குரல் என் செவிகளுக்கு எட்டியது. பதிலுக்கு, ‘தோ வந்துட்டமா! நந்திதா நீ போய் உன் தோழி சுவாதியை அழைச்சிட்டுவா! என இன்னொரு இரண்டு குரல்கள் கேட்டது. உங்களுக்கு ஒன்றுமே புரிந்திருக்காதே! சரி இப்போது நான் என்னைப் பற்றி உங்களிடம் அறிமுகம் படுத்திக்கொள்கிறேன். என் பெயர்தான் சுவாதி. நான்தான் நந்திதாவின் நெருங்கிய தோழி. நீங்கள் சற்றுநேரத்துக்கு முன் படித்த உரையாடல் வேறுயாருமில்லை நந்திதா, அவள் அப்பா மற்றும் அண்னண் ரவி பேசிக்கொண்டதுதான். நந்திதாவும் நானும் அண்டை வீட்டுக்காரர்கள் என்றதால்தான் அவர்கள் பேசியது எனக்கு கேட்டது.எனக்கு சகோதர்கள் என சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதர்க்குள், அம்மா மதிய உணவு சமைத்ததில் களைந்துப்போய் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார். அதனால், நான் அவருக்கு மற்ற வேலைகளில் உதவிப் புரிவேன். என் அப்பாவை சந்திப்பது மிக கஷ்டம். அவர் வெளியூரில் வேலைப் புரிவதால், மாத்திற்கு ஒரு முறைதான் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொறு சனிக்கிழமை மாலையில் நான், நந்திதா, அவள் அப்பா மற்றும் அண்ணா ஆகிய நாள்வரும் கீழே இருக்கும் பூப்பந்து நீதிமன்றத்துக்குச் சென்று பூப்பந்து விளையாடுவோம். எனக்கும் நந்திதாவுக்கும் பூப்பந்தாட்டம் என்றால் உயிர். நாங்கள் இருவரும் எங்கள் பள்ளி மூலமாக நிறைய போட்டிகளில் கலந்துக்கொண்டு, நிறைய அருமையான பரிசுகளை வென்றதில்லாமல், எங்கள் பள்ளிக்கு பெருமைச் சேர்த்து, எங்கள் பள்ளியிலேயே சிறந்த விளையாட்டார்கள் என பட்டம் வாங்கினோம். நீங்கள் இப்போது என்ன நினைகிறீர்கள் எனச் சொல்லவா? இக்காலத்தில் பூப்பந்தாட்டம் என்றால் ஆண்கள் விளையாட்டாக கருதப்படுகிரதே மற்றும் எப்படி பெண்ணாகலால் இந்தமாதியான விளையாடுகளில் வெற்றிப்பெற்று சிறந்து விளங்க முடிகிறது என்றதுதானே! அன்றும் இன்றும் மக்கள்களில் நிறையோர் இப்படிதான் தப்பு கணக்கு போட்டுவருகின்றனர். ஆனால், அது உண்மையே அல்ல. பெண்கள் தங்கள் மேலே நம்பிக்கை வைத்து தங்களால் முடியும் என மண உறுதியுடன் இருந்தால் ஆண்களுக்கு சமமாக தேர்ச்சி பெறலாம்- ஏன்! ஆண்களுக்கு மேலைக் கூட உயரலாம். நான் சிறுவயதிலிருந்து இன்றுவரை இன்னும் என்னால் முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறதால்தான் நான் என் படிப்பிலும் பூப்பந்தாட்டத்திலும் தேர்ச்சிப் பெற முடிகிறது.
  சுவாத்தி 2E1
  புக்கிட் வியு உயர்நிலை பள்ளி

 12. கல்யாண சமையல் சாதம்
  —————————————-
  கல்யாண சமையல் சாதம்..
  காய்கறிகளும் பிரமாதம்..
  அந்த கௌரவப் ப்ரசாதம்
  இதுவே எனக்கு போதும்..
  ஹஹஹஹ ஹஹஹஹ..
  எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. சென்ற வருடம் நான் இந்தியா சென்றிருந்தபோது, திருமண நிகழ்ச்சி ஒன்றைக் காண வாய்ப்பு கிட்டியது. பாரம்பரிய வழக்கங்களுடன் நடைபெற்ற அந்த நிகழ்வு பார்க்க ஆச்சரியமாகவும் பரவசமாகவும் இருந்தது. தாலி கட்டி முடித்த பிறகு அனைவருடனும் நான் சாப்பிட சென்றேன். “பாரம்பரிய திருமணமானதால், உணவும் பாரம்பரிய வழக்கப்படி பரிமாறப்படும். இலையை பார்த்து பயந்து விடாதே.. எந்த ஒரு உணவையும் வீணடிக்காதே ” என்று என்னுடைய தாய் என் காதைக் கடித்தார்.
  முதல் பந்தியில் இடம் கிடைக்காததால் அடுத்த பந்திக்கு காத்திருந்தோம். சுவாரஸ்யமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களை ஒரு ஓரமாக நின்று கொண்டே நாகரிகமாக கவனிக்கத் தொடங்கினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சாபிட்டார்கள். சாதத்தை பந்து போல உருட்டி கிரிக்கெட்டில் வீசுவது போல தொண்டையில் அடைத்தனர். சிலர் உள்ளங்கை முதல் முழங்கை வரை சாம்பார், காரக்குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று அருவியில் விழுந்து குளிப்பதை போல சாப்பிட்டார்கள். சிலர் நாக்கை மட்டும் நீட்டி பட்டும் படாமலும் சாதத்தை உள்ளே செலுத்தினர். ஒரு சிலரோ, விரல் நகத்திற்கு வலித்துவிடுமோ என்று எண்ணி நாசூக்காக சாபிட்டார்கள். எது எப்படியோ, பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் சந்தோஷம் என்னும் அலை மோதியது. எவரைப் பற்றியும் கவலைப் படாமல் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்று அறுசுவைகளையும் ரசித்து ருசித்து உணவை பற்றி விமர்சனம் செய்து அதை பாராட்டி சென்றவர்களை பார்த்து நான் சிலையாய் நின்றேன்.
  வீட்டில் கூட பரிமாறும் உணவின் சுவையை அறியாமலேயே முள்கரண்டியால் சாப்பிட்டு பழகிய நான், பந்தியில் சாபிட்டவர்களை ஆணி அடித்தாற்போல வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். முகம் சுளிப்பதா அல்லது நவ நாகரிக பழக்க வழக்கங்களால் நம்முடைய பாரம்பரியத்தை மறந்த என்னை பார்த்து நொந்து கொள்வதா என்று திணறிக் கொண்டிருந்தேன்.
  மாற்றம் எனக்கு தான் தேவை. நாகரிகம் என்ற பெயரில் துரித உணவு வகைகளை கொரித்த நான் இனியாவது உணவை அறிந்து, தெரிந்து, ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
  அம்பரீஷ் கார்த்திகேயன்,
  3Ht1/3S1, UPTLC , ACS BARKER

 13. சென்ற விடுமுறையின் போது, நான் என் குடும்பத்தார் மற்றும் என் உறவினர்களோடு மலேசியாவில் உள்ள மலாக்காவிற்கு சென்றோம். சுற்றுலா பயனம் மேற்கொண்டோம். பயணத்தின்போது, குடும்பத்தாருடன் ஒன்று கூடி செலவழிக்க நிறைய நேரம், நல்ல சந்தர்பமாக அமைந்தது. நாங்கள் முதல் நாள் அங்கு உள்ள பேரங்காடிக்கு சென்றோம். விளையாட்டு பொருட்கள் இருக்கும் பகுதியில், நானும் என் தங்கையும் அங்கு விற்கப்படும் பொருட்களை பார்த்துகொண்டு இருந்தோம். திரும்பி பார்த்த நான்
  என் அருகில் இருந்த என் தங்கையை காணாமல் அதிர்ச்சியில் உரைந்து போனேன். பதற்றத்தில், என் கைகள் இரண்டும் நடுங்கின. அங்கும் இங்கும் சென்று அவளை நான் கண்ணீருடன் தேடினேன். திடீரென்று, ஒரு அழுக்குரல் சத்தம் என் காதுகளுக்கு எட்டியது. திரும்ப பார்த்தால் என் தங்கை முகத்தில் பயத்துடன் நின்றாள். நான் ஓடோடி சென்று அவளை அனைத்துக்கொண்டேன். நாங்கள் எவ்வளவு தான் சண்டை போட்டு கொண்டாலும், அவள் இல்லாத அந்த நிமிடங்களை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை.

Your email address will not be published.


*