வித்தியாசமான மனிதர் …

நம் தினசரி வாழ்வில், நாம் பலதரப்பட்ட, பல்வேறு குணங்களைக் கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களில் எல்லோரும் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், ஒரு சிலரின் வித்தியாசமான செயல், நடை, உடை, பாவனை, பேச்சு, முகபாவனை, சிரிப்பு, கோபம், அன்பு, உதவும் குணம், பொறுமை என்று ஏதோ ஒன்று நம்மை ஈர்த்துவிடும். அவை நம் மனதில் மறக்க முடியாதபடி நின்றும்விடும். அப்படி நீங்கள் சந்தித்த வித்தியாசமான ஒரு மனிதரைப் பற்றிய தகவல்களை ஒரு கட்டுரையாக எழுதிப் பகிருங்கள்.

கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 28 ஜூன் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*

ஏப்ரல் மாதக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்:

10 கருத்துரை

 1. எல்லோருடைய வாழ்க்கையில் எப்படியாவது ஒரு வித்தியாசமான மனிதர் இருக்கத்தான் செய்வார். கையும் காலும் இல்லாத மனிதர் என்றவுடன் நமக்கு யாரின் பெயர் ஞாபகம் வருகிறது? நிக் வுஜிசிக் (nick vujicic) . அவரை போலவே நானும் ஒருவரைப் பார்த்தேன்.

  வழக்கமான நாள்தான் அதுவும்.இரண்டாம் தவணையின் கடைசி நாள். அதற்காக நானும் எனது தாயாரும், எனது பெற்றோர்-ஆசிரியர் சந்திர்ப்பிக்கு ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தோம். சுமார் பத்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு முதியவர் ரயிலில் ஏறினார். நான் அவரைப் பார்த்து நான் வியந்துப் போய்விட்டேன். எனது கையும் காலும் ஓடவில்லை. என்னால் அது கூட சொல்லவில்லை. இரு கால்களும் கைகளும் அந்த முதியவருக்கு இல்லை. அவர் கால்களுக்கு
  ‘புரோஸ்டெடிக்’ கால் பொருத்தப்பட்டிருந்தது. அவர் தனியாக இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்!

  இரண்டு கால்களும் கைகளும் எனக்கு இருக்கும் போது, என்னால் சாதிக்கமுடிந்தது எவ்வளவு இருக்கும்போது , ஏன் நான் இப்படி இருக்கிறேன்.

  வித்தியாசமான மனிதர்தான் என்னிடம் வித்தியாசத்தை உண்டாக்கினார்.
  அவர்களை நாம் தாழ்ந்தப்படியாக பார்க்கக்கூடாது. அவர்கள் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்து போதும்.

  யாஷிகா ராதாக்கிருஷ்ணன்
  ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி

  • என் வாழ்வில் பல மனிதர்களை சந்தித்துள்ளேன் ஆனால் நான் பார்த்த
   இந்த வித்தியாசமான மனிதர் என் மனதில் உயர்ந்து நிற்கின்றார்.அந்த
   காலத்திலேயே நமது ஔவ்வயார் யாருக்கு படிப்பு , அறிவு மற்றும் தொண்டு
   செய்பவரே சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார். அப்படி நான் சந்தித்த
   மனிதர் பத்ம ஸ்ரீ (Padmashri) விவேக். அன்று (Yishun junior college) அவர் பள்ளி
   மாணவர்களுக்காக உரையாற்ற வந்திருந்தார். அவர் தமிழ் இலக்கனத்தை
   பற்றியும் தமிழின் பெருமையையும் நகைச்சுவையான கோணத்தில்
   கூறினார். அதோடு அவர் கூறிய தமிழின் முக்கியத்துவம் என்னுள் தமிழின்
   மேல் உள்ள ஆர்வத்தை அதிகரித்தது. அவரின் அறிவாற்றலும் சமூதாயத்திற்கு
   செய்த தொண்டை அறிந்தவுடன் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது

   நானும் அவரின் ஊக்குவத்தின்மூலம் நிறைய தமிழ் புத்தகங்கள் படிக்க
   ஆரம்பித்தேன்.நாம்தான் அடுத்த தலைமுறையிடம் தமிழ் இலக்கியத்தை
   கொண்டு சேர்க்க போகிறோம் என்ற பொறுப்பு என்னுள் பூத்தது. இந்த
   வித்தியாசமான மனிதரின் உரையில் நானே புதிய மனிதராக மாறிவிட்டேன்!
   இந்த வித்தியாசமான மனிதர் என்னுள் இருந்த தமிழ் பற்றை வெளிகோர்ண்து
   ஊக்குவித்துவிட்டார்.இந்த மாற்றம் நம்முள் ஏற்படும் என்று நம்புகிறேன்.

   தமிழை நேசிப்போம்! அது நமது அடையாளம்!

   ஸ்ரீநிதி
   பொங்கொல் உயர்நிலை பள்ளி

 2. ‘குழந்தையின் அழுகையின் அர்த்தம் புரிந்த அகராதி புத்தம் அம்மா’ என்பவர் தான் என் வாழ்க்கையில் நான் முதன் முதலாக சந்தித்த வித்தியாசமான மனிதர் ஆவார். வேலைக்குச் செல்லும் போது அவர் பொறுப்பானக் காவல்துறை அதிகாரியாக மாறுவதும் வீட்டை அடையும் போதுப் பாசமான அம்மாவாக மாறுவதைக் காணும் போது நான் பிரமித்து போவது உண்டு. வேலையில் சந்திக்கும் பிரச்சினைகளை வீட்டுக்குக் கொண்டு வருவது பல பெற்றோர்க்ள் செய்யும் தவறான செயலாக இருக்கின்றது. ஆனால், என் அம்மா அவர் வேலை இடத்தில் உள்ள சவால்கள் அனைத்தையும் மறுந்து விட்டு அவரின் பிள்ளைகளின் ஊக்குவிப்பாக இருக்க அனைத்து முயற்சியும் செய்பவர். என் அம்மாவிடம் இருக்கும் இந்த குணம் தான் அவரை வித்தியாசமான மனிதராக நான் கருத காரணம்.

  JANAKESWARI
  JURONG SECONDARY SCHOOL

 3. நான் பாலர் பருவத்தில் இருந்தபோது என்னுடைய தந்தையுடன் இணைந்து திரு.ரஜினிகாந்த் நடித்த படங்களும் பார்ப்பேன்.அப்போது முதல் அவருடைய நடிப்பு, தோற்றம்,நடை,உடை குறிப்பாக பாவனை என் மனதை தொட்டுவிட்டது.நான் சற்று பெரியவனான பின் அவரின் வாழ்க்கை வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்த்தேன் . அப்போதுதான் அவர் மற்ற நடிகர்களைப்போல நடிகர் பாரம்பரையிலிருந்து வந்தார் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன் .
  அவர் வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த ஒரு சாதாரண பேருந்து நடத்துனர். தன் கடும் , உழைப்பாலும் , விடா முயற்சியாலும் ‘சூப்பர் ஸ்டார் ‘ என்ற பட்டத்தை வென்றவர் என்னும் தகவலை அறிந்து கொண்டேன். அன்றிலிருந்து அவர் மீது எனக்கு தனி மதிப்பு உண்டாயிற்று . அவரைக் காண வேண்டும் என்ற வேட்கை மேலும் அதிகாயிற்று .
  நாங்கள் போனவருடம் மலேசிய சென்ற போது அந்த வேட்கையும் தணிந்தது . அவர் ‘கபாலி’ படக்குழுவினருடன் இருந்ததை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது . அருகில் சென்று பேச முடியாமல் போனாலும் எனக்கு பார்த்ததே எல்லையில்லா மகிழ்ச்சி .
  நிறைய படங்கள் வெளிவந்தாலும் அவருடைய ‘படையப்பா ‘ படத்தில் வரும் தத்துவம் இன்னும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. வாழ்க்கையில் ஆயிரம் தடைகள் வந்தாலும் அவற்றை படிக்கற்களாக நினைத்து உயரவேண்டும் என்பதே அந்த தத்துவம் அவரின் அண்மைக்கால படமான ‘எந்திரன்’ படத்தில் இயந்திரங்களை பாதுகாப்பாக இயக்கவில்லை என்றால் அது நமக்கே அழிவை உண்டாக்கிவிடும் என்று சிறுவர்களுக்கும் புரியும்படி சொல்லி இருப்பார்.
  வானத்தில் ஆயிரம் நட்ச்சத்திரங்கள் இருந்தாலும் அவை எல்லாம் மின்னுவதில்லை . அதுபோல திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் ஒருசிலர் மக்கள் மனதை கவர்கிறார்கள்.
  நான் திரு ரஜினிகாந்த் அவர்களை ஒரு வித்தியாசமான மனிதராக பார்க்கிறேன் . அந்த எண்ணம் ஒருநாள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
  ‘ஆசையில்லா மானிடர் இந்த வையகத்துல் இல்லை ‘ என்பது ஆன்றோர் வாக்கு. எனக்கும் இவரை நேரில் பார்க்க வேண்டும் என்பதே ஆசை.

  VISHNU 2B
  PUNGGOL SECONDARY SCHOOL

 4. எல்லோருடைய வாழ்க்கையில் கன்டிபாக ஒரு வித்தியாசமான மனிதரை பார்க்கவோ படிக்கவோ செய்வர். அவர்களில் எல்லோரும் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், ஒரு சிலரின் வித்தியாசமான செயல், நடை, உடை, பாவனை, பேச்சு, முகபாவனை, சிரிப்பு, கோபம், அன்பு, உதவும் குணம், பொறுமை என்று ஏதோ ஒன்று நம்மை ஈர்த்துவிடும். அவை நம் மனதில் மறக்க முடியாதபடி நின்றும்விடும். அதைப்போல் என்னுடைய மனதில் இருக்கும் வித்தியாசமான மனிதர் கௌதம புத்தர்.

  கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். அவர் வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார்.

  ஒரு சமயம் அரச குடும்ப வழக்கப்படி உறவினரான இளவரசர் ஒருவருடன் சேர்ந்து, காட்டுக்கு வேட்டைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. வேட்டையின்போது உறவினர் எய்த அம்பால் அடிபட்ட பறவை ஒன்று கௌதம புத்தர் காலடியில் வந்து விழுந்தது. அவர் அதை அன்புடன் எடுத்து, அதன் உடலில் தைத்திருந்த அம்பை நீக்கிவிட்டு அதன் காயத்திற்குப் பச்சிலை மருந்திட்டு கட்டி குணப்படுத்திக் கொண்டிருந்தார். அவ்வேளை அங்கு வந்த அந்த இளவரசர், அந்தப் பறவையை அடித்தவன் தான் என்றும், அது தனக்கே உரியது என்றும், அதை அவனிடம் கொடுக்க சென்னான். அதற்கு கௌதம புத்தர் “ஓர் உயிரை அழிப்பவனுக்கு இருக்கும் உரிமையை விட அதைக் காப்பற்றவனுக்கு அதிக உரிமை இருக்கிறது” என்று கூறி அதைக் கொடுக்க மறுத்துவிட்டார்.

  பின் கடும்சினத்துடன் அரண்மனை திரும்பிய அவன், கௌதமரின் தந்தையாகிய மன்னரிடம் சென்று முறையிட்டான். மன்னர் பாரபட்சமின்றி அப்பறவையைச் சபையில் வைத்து, “பறவை யாருடைய குரலுக்குச் செவி சாய்க்கின்றதோ அவருக்கு அது சொந்தம்”, என்று கூறினார். அதன்படி முதலில் அந்த இளவரசன் குரல் கொடுத்தான். ஆனால் அந்த பறவையோ எந்தவொரு உணர்வும் இல்லாது இருந்த இடத்தில் இருந்தது. அடுத்து, கௌதமர் குரல் கொடுத்து அழைத்தபோது, அந்தப் பறவை உடனே பறந்து சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது. இதன் மூலம் கௌதமர் இளமையிலிருந்து உயிர்களிடையே மிகுந்த அன்பு காட்டி வந்துள்ளார் என்பதை பார்க்கலாம். கௌதமர் செய்த இந்த வித்தியாசமான செயலால் இந்த பறவையின் அன்பை வென்றார்.

  மற்றொரு நாள் ஒரு கடும் நோயாளி நோயின் கொடுமை தாங்காது தரையில் விழுந்து துன்பப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு கண் கலங்கினார். அவர் இதை பார்க்கக்கூடாது என்று மன்னர் நினைத்தாரோ அவற்றை அவர் பார்க்க நேர்தது. அன்றிலிருந்து மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை அவர் உணர்ந்தார். அதனால், ஒரு நாள் விடியற்காலை தன் அன்பு மனைவி, அருமை மகன், சொகுசு அரண்மனை வாழ்கையை துறந்து தன்னந்தனியே வழி நடந்து, ஒரு காட்டை அடைந்தார் அவர். இவ்வாறு அவர் அங்கு தியானம் செய்தார். பின், அவருக்கு ஞானம் வந்து அவர் கௌதம புத்தர் ஆனார். அவர் செய்த வித்தியாசமான செயலால் மிருகங்களின் அன்பை பெற்றுள்ளார். அவர் மிருகங்களுக்கு கடும் அன்பை நாம் ஏன் மனிதர்களுக்கு காட்டக்கூடாது.

  Jeyaraj Justin
  Commenwealth Secondary School

 5. எனக்கு ஒரு நண்பனைப் பாலர் பள்ளியிலிருந்தே தெரியும். அவன் சிறு வயதிலிருந்தே நனறாக படிப்பான். வேலைகளைச் திறம்பட செய்வான். பிறருக்கு உதவி செய்வான். பிறரை நன்றாக ஊக்குவிப்பான். எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பான். அவனுடைய பக்கத்திலிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வான். ஆனால் பலருக்கு அவனைப் பிடிக்காது. ஏனென்றால் அவன் ஒரு திருநங்கை, அவன் திருநங்கை என்பதால் பலர் அவனை பக்கத்தில் கூட நெருங்க மாட்டார்கள். அவன் செய்யும் அனைத்து செயலும் வித்தியாசமாக இருக்கும். அவன் நம்மைப் போல சராசரியான மனிதனல்ல அவன் பேச்சு, நடை, உடை, பாவனை, சிரிப்பு, கோபம் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அவன் பேசும் போது அவன் கைகள் இலக்கின்றி செல்லும் அதனாலேயே பலர் பேசுவது இல்லை. அவன் அணியும் உடை பெண் போல இருக்கும். பலருடன் இவ்வளவு வேறுபட்டாலும் அவன் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் அவன் எப்பொழும் போல இருப்பான். பலர் அவனை ஒதிக்கினாலும் அவன் அதையெல்லாம் நினைக்காமல் அனைவருக்கும் உதவி செய்வான். அவனை எல்லோரும் வித்தியாசமான பிறவி என்று கூறுயுள்ளனார். அந்த நண்பனே என்னைக் கவர்ந்த வித்தியாசமானவர்.

  முனாஸ்ஸா ஐன்
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 6. நான் வாழ்க்கையில் பல விதமான மனிதர்களை சந்தித்துள்ளேன். அவர்களில் சிலர் மட்டுமே என்றும் நினைவில் நிற்பார்கள். அந்த வகையில் நான் சந்தித்த வித்தியாசமான மனிதரை தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். அவரின் சிறந்த கருத்துகள், சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறை அவற்றை அறிந்து வியந்து போனேன். அவர் வேறு யாருமல்ல அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்கன் பெண் தலைவர் மிசால் ஒபாமாதான்.

  உயர்வு தாழ்வு பார்க்காமர் அனைவரையும் சமமாக பார்க்கும் குணமே மிக வித்தியாசமான பண்பு. சுய நலம் இல்லாமல் ஊனமுற்றவர்களுக்கும் ஏழை மக்களுக்கும் தேவைப்பட்ட உதவிகளை செய்து கொடுத்தார். பெண்ணுரிமைக்காகவும் பெண்ணியக்கத்திற்காகவும் பல ஊக்கம் தரும் உரைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடத்தியுள்ளார். இதற்காக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளார். இவரின் மனித நேயமிக்க செயலால் பலரின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளார். பெண்களுக்கு கல்வி அவசியம் என்று ஆணித்தரமாக கூறினார். இவரின் சமுதாய சிந்தனை என்னை மட்டுமல்ல அனைத்து மக்களுடைய மனங்களையும் கவர்ந்தவர் நம் மிசால் ஓபாமா. அறிவும் அன்பும் கலந்த ஒரு தேவதை, இவ்வுலகத்திற்கு ஒரு பாதுக்காப்பாளர். இவரை நினைக்குந்தோறும் என் உள்ளம் மிகிழும். அவரைப்போல் பல நல்ல செயல்களைச் செய்ய நினைக்கிறேன். என்னை கவர்ந்த வித்தயாசமான மனிதர் என்று இவரைத்தான் சொல்வேன்.

  துர்க்கா தர்ஷினி
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 7. மனிதர்கள் பெரும்பாலும் மற்றவர்களை பின்பற்றுவார்கள் ஒரு சிலர்தான் தனித்துவத்துடன் விளங்குவர். இவர்கள் வித்தியாசமானவர்கள் அப்படிப்பட்டவர்களில் எனக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி நான் எழுதப்போகிறேன்.

  என் தாத்தா இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். அவர் முதலில் ஊழியராக வேலை பார்த்தார். அவரின் வியாபாரம் திறன்களைக் கண்டு அவரின் முதலாளி என் தாத்தாவின் தனி வியாபாரத்தை ஆரம்பிக்க அறிவுரை கூறினார். என் தாத்தா ஐந்து அடி கடையை ஆரம்பித்து அதை வருடங்கள் செல்ல செல்ல அவர் அதை வளர்த்து வந்தார். அவருடைய விடாமுயற்சிதான் எனக்கு மிகவும் பிடித்தது.

  என்னுடைய தாத்தா வயதான காலங்களில் கூட வேலைக்குச் சென்றார். அவர் ஆரம்பித்த வியாபாரத்தை கைவிடாமல் செய்தார். இருப்பினும், அவர் வீட்டுக்கு வரும்பொழுது கல கலப்பாக இருப்பார். அவர் எங்கள் எல்லோருக்கும் கதைகள் கூறி சிரிக்க வைப்பார். அவர் மற்றவர் போல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்க்கும் போது நான் ஆச்சரியம் அடைவேன். அவர் ஒரு வேலையைச் செய்யும் பொழுது அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு செய்வார். அவர் மற்றவர்களிடம் வேலையை பற்றி விவரிக்கும் போது அது நகைச்சுவை கலந்து மற்றவர்களுக்கு புரியும்படி விளக்குவார்.

  என் தாத்தா அதிகமாக படிப்பார். அவர் இணையதளம் மூலமாக நிறைய புத்தகங்கள், செய்திகள் வாசிப்பார். அவரின் மொழி திறன் ஆழமானது. அவர் இலக்கியங்களை விரும்பி படிப்பார். அப்படி படித்த விசயங்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார். அவற்றால் எனக்கும் தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகமானது. அவரின் பேச்சு, கருத்து, பண்புகள் மிகவும் வித்தியாசமானது. அவர் மிகவும் புரிந்துணர்வு மிக்கவர். ஒரு முதியவர் நூலகத்திற்கு சமமானவர் என்று கூறவார்கள். என் தாத்தா அதற்கு ஒரு எடுத்தகாட்டாக விளக்குகிறார். என்னைப் பொறுத்தவரை வித்தயாசமான மனிதர் என் தாத்தாதான்.

  ஹட்ரியா ஐனாஸ்
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 8. உலகில் ஏழு பில்லயன் மக்கள் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதாவது ஒரு வழியில் அல்லது விஷயத்தில் வித்தியாசமாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் சிலர் மட்டும் தான் மிகவும் தனித்துவமாக, எல்லோரும் அவரை கவனிக்குமாறு நடக்கிறார்கள். இந்தத் தனித்துவம் தான் பலரைக் கவர்கிறது.

  இதே போல இருக்கும் ஒருவர் தான் என்னுடைய நெருங்கிய நண்பன் தர்ஷன். அவன் மற்றவர்களைப் போல் இல்லை. அவன் பள்ளிக்கு வந்த முதல் நாள் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவனை எல்லோரும் பார்த்துகொண்டிருந்தனர். அவன் நடையில் ஒரு கம்பீரம் இருந்தது. அதோடு தலை நிமிர்ந்து நடந்தான். இதுவே வித்தயாசமான இருந்தது. அவனின் கண்கள் எப்போதும் மற்றவர் கண் பார்த்து பேசுவான். அனாவசியமாக அவன் கண்களை அலையவில்லை. இதவே அவனைத் தனித்துக் காட்டியது. மேலும் எப்பொழுதும் மனதில் இருப்பதை கூறுவான்.

  முதல் தடவை என்னிடம் பேசியபோது, வணக்கம் கூறவில்லை, என்னிடம் ஒரு தத்துவத்தைக் கூறினான். அது என்னவென்று ஞாபகம் இருக்கிறது. ‘இயற்கையை அழித்தால் மனித இனம் அழியும்’ என்று கூறினான். இதேபோல் அவர் யாராவது ஒருவரை முதல்முறையாக பார்த்தால் அவர்களிடம் அவன் தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமல், ஏதாவது ஒரு தத்துவத்தைக் கூறிவிட்டு, பின்னர் அறிமுகம் செய்துகொள்வான். மற்றவர்கள் பதில் கூறும்போது அல்லது தத்துவத்தின் அர்தத்தை கேட்டால், அதன் பதிலை கூறிவிட்டு பேச்சைத் தொடர்வான். இது போல் செய்தபோதுதான் நான் அவனைச் சந்தித்தேன்.

  அதுமட்டுமில்லாமல் நிறைய மாணவர்களுக்கு காதல் கதைகள், உண்மையற்ற கதைகள் பிடிக்கும். இவன் அப்படி அல்ல இவனுக்கு உண்மையான கதைகள்தான் பிடிக்கும். அவன் ஓய்வு நேரங்களில் நூலகத்தில் யாரும் செல்லாத ஒரு மூலையில் அமர்ந்து புத்தகங்களைப் படித்துப் படிப்பான். இவற்றை எல்லாம் காணும்போது, அவன் மற்றவர்களைப் போலவே இல்லை, கண்டிப்பாக வித்தியாசமான மனிதனேதான்.

  கலையரசு லாவண்யா ரினி
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 9. எனக்கு மிகவும் பிடித்த வித்தியாசமான மற்றும் மற்றவர்களுடைய ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு விசித்திரமான ஒரு மனிதர், பிரபல கற்பனை துப்பரிவாளர் ஷர்லோக் ஹோமஸ்தான்.

  தலையில் ஓர் வேட்டைக்காரர் தொப்பியும், நீளமான கோட் மற்றும் வாயில் ஓர் வளைவான புகைப்பிடிக்கும் குழாய் கொண்டு தோற்றமளிப்பார். ஷர்லோக் ஹோமஸ் அவர்களுடைய தோழன், டாக்டர் ஜான் வாட்சன், மர்மம் நிறைந்த குற்றங்களுக்கு விடை கண்டுப்பிடிக்கு உதவுவார். நான் அவரைப் பற்றி, முதன்முதலில் ஓர் புத்தகத்தில் படித்தேன். அவருடைய துப்பறியும் ஆற்றல் மிகவும் வியக்கத்தக்கது. ஒருவரின் வரலாறுப் பற்றியும், அவருடைய பழக்கவழங்களைப் பற்றியும், அம்மனிதனின் தோற்றத்தை வைத்தே கற்றுக்கொள்ளும் அருன்திறன் கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் குற்றக் காட்சியைப் பார்த்தவுடன், பத்து நிமிடங்களில் அவ்விடத்தைப் பற்றி முழுமையாகக் கற்றுக்கொள்வார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அவர் சிறிய நுணுக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவர் ஓர் மர்மத்திற்கு விடைக் கண்டுப்பிடிக்கும் வரை முயற்சி செய்வார். கடைசியாக அவருடைய துப்பறியும் திறனுக்கும் வித்தியாசமான சிந்தனையாற்றலும் செய்கைக்கு ஈடு இணையே இல்லை. கற்பனையான கதாபாத்திரமாக இருந்தாலும் என் மனதில் ஓர் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார்.

  ஜனனி ராமசந்திரன்
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*