விடுமுறை காலத்தில் நடந்த கதை

விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கிவிட்டது. விடுமுறை காலத்தில் உங்கள் வாழ்க்கையில் பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். அவற்றை சுவை குன்றாமல் சுருக்கமாக, கதைபோல் எழுதி, இங்கே பகிருங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 மார்ச் 2017.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

6 கருத்துரை

 1. ஆடுபுலி ஆட்டம்
  விடுமுறை நாட்களை நான் வெளிநாடுகளுக்கு என் பெற்றோருடன் சுற்றுப்பயணம் சென்று செலவிட்டிருக்கிறேன். இம்மார்ச்மாத விடுமுறை நாட்களில் என் பெற்றோருக்கு வேலைகள் இருந்ததால் என்னைக் கவனித்துக்கொள்ள சிற்றப்பாவுடன் தங்கியிருந்த என் தாத்தா, பாட்டி என் வீட்டிற்கு வந்திருந்தனர்.
  தாத்தா, பாட்டியுடன் வீட்டில் எப்பொழுதும் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொண்டிருந்தேன். கணினி விளையாட்டு, நண்பர்களோடு கைத்தொலைபேசியில் உரையாடல், அடிக்கடி நொறுக்குத் தீணிகள் வாங்கித் திண்பது என்று என் நேரத்தைத் தள்ளிக் கொண்டிருந்தேன்.
  இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த என் தாத்தா என்னை அவரருகில் அழைத்தார். தமிழ் மொழியின் அருமை பெருமைகளை எனக்குணர்த்தி காப்பிய, காவியங்களைப் பற்றி எடுத்துச் சொன்னார். திருக்குறளைப் படிக்கவைத்து வாழ்க்கையின் நெறிமுறைகளைப்பற்றிக் கற்றுக்கொடுத்தார். அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருடன் தன்னையும் என்னையும் அறிமுகப்படுத்தி தனித்தீவென வாழ்ந்த எனக்கு பல சொந்தங்களையும் உருவாக்கிக்கொடுத்தார்.
  போதாக்குறைக்கு என் பாட்டி பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் போன்ற விளையாட்டுகளைக் கற்றுக்கொடுத்து, என் நேரங்களையெல்லாம் பொன்னாக்கினார். ராகி உருண்டை, பொறி உருண்டை, புட்டு போன்றவற்றை சுவையாக செய்து கொடுத்தார்.
  என் விடுமுறை இவ்வாறு கழியுமென்று நான் நினைக்கவேயில்லை. ஒரு வாரம் ஒரு நிமிடமாகக் கழிந்தது. தாத்தா, பாட்டியிடம் தமிழர் பண்பாடு, விளையாட்டு, தமிழின் சிறப்பு இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டது என் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமைந்தது.
  C.Nishikanth(4C)
  Teck Whye Secondary School

 2. கதிரவன் தன் பொற்கதிர்களை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தான்.நான் அப்போதுதான் தூங்கி எழுந்தேன். என் தாயார் காலையிலேயே கத்திரிக்காய் சாம்பார் மற்றும் தோசை செய்தார். அவற்றின் மணம் அருமையாக இருந்தது.நான் காலை உணவை உண்டுவிட்டு மெதுவோட்டம் ஓட புறப்பட்டேன்.அன்று ஒரு விடுமுறை நாள் என்பதால் பூங்கா கூட்டமாக இருந்தது.எங்கும் சத்தம் மற்றும் சிரிப்பு. பூங்காவே ஆரவாரமாக இருந்தது.அப்போது யாரோ ஒருவர் “ஆ!” என்று அலறும் சத்தம் கேட்டது. எனக்கு முன்பு ஒரு பெரிய கூட்டம் திரண்டது.
  என்ன தான் நடந்திருக்கும் பார்க்க போன எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.தரையில் ஒரு முதியவர் மயங்கி கிடந்தார்.நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.அங்கிருந்த ஆடவரோருவர் முதியவருக்கு முதலுதவி அளித்தார்.ஆனால் முதியவர் எழவில்லை.அதனால் நான் உடனே மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டேன். கண் சிமிட்டும் நேரத்திற்குள் அவசர மருத்துவ வண்டி வந்தது.சிறிது நேரத்தில் வண்டி மருத்துவமனையை முதியவருடன் அடைந்தது.அந்த முதியவருக்கு ஒன்றுமாகிவிடக்கூடதென வேண்டி வீடு திரும்பினேன்.
  என் தாயாரிடம் நடந்ததை கூறினேன்.பிறகு நான் என் தாயாருடன் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே என் நண்பன் பாண்டியனை சந்தித்தேன்.அவன் நடந்ததைக் கூறினான்.நான் உதவிய முதியவர் பாண்டியனின் தாத்தா என்பதறிந்து ஆச்சரியப்பட்டேன். அவன் தாத்தாவை காப்பாற்றியதற்கு நன்றி கூறினான்.நாங்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கினோம்.
  LAVANYA GANESAN KIRUTHEKESH
  ST HILDAS SECONDARY SCHOOL

 3. “தீபாவளி நெருங்குகிறது. வீடு அசுத்தமாக இருக்கிறது. சுத்தம் செய்!சுத்தம் செய்!” என்று என் அம்மாவின் சத்தமான குரல் ஒருபுறம், எனக்கு பிடித்தமான நிகழ்ச்சியின் இறுதி சுற்று மறுபுறம். சுறுசுறுப்புடன் நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்த நான், வேறு வழி இல்லாமல் சோம்பேறித்தனமாக வீட்டை சுற்றம் செய்ய முடிவு செய்தேன். முதலில் சேமிப்பு அறையை(store room) சுத்தம் செய்ய அதை நோக்கி
  நடந்துச்சென்றேன்.பொருட்கள் நிரம்பிருந்த பெட்டி ஒன்றை எடுத்து என் அருகில் வைத்தேன். அப்போதுதான் அந்த புகைப்படத்தை நீண்ட நாள் சென்று பார்த்தேன். அது எனக்கு அந்த நாளை ஞாபகப்படுத்தியது. என் தம்பி என்னை விட்டு பிரிந்த நாள்.
  விடுமுறை என்றாலே பலபேர் குடும்பத்தொடு அல்லது உறவினர்களோடு நேரம் செலவழிக்கவே விரும்புவார்கள். அதேபோல் நானும் என் குடும்பத்தினரும் முடிவு செய்தோம். ‘சாங்கி'(changi) கடற்கரைக்கு செல்ல முடிவு எடுத்த என் பெற்றோர்கள் என் அத்தையின் குடும்பத்துக்கு அங்கு வருமாறு தகவல் சொன்னார்.நான்கு வயதான என் தம்பிக்கு கடற்கரையென்றால் மிகவும் பிடிக்கும்.
  அங்கு சென்றதும் அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். என் அத்தையின் குடும்பம் வந்த பிறகு நாங்கள் அனைவரும் சிரித்து பேசி கொண்டு இருந்தோம். பிறகு நாங்கள் அருகில் இருக்கும் ‘பத்தாமிற்கு'(Batam) செல்ல முடிவு எடுத்தார்கள். நாங்கள் அனைவரும் அந்த படகில் ஏற சென்றோம். அப்போது ஓர் சந்தேகபடும் போல ஓர் ஆடவர் நின்று கொண்டு இருந்தார். அவரை நான் பார்த்ததுபோல இருந்தது.
  என் பெற்றோர்கள் என் அத்தையிடமும் மாமாமிடவும் சத்தமாக பெசி கொண்ட இருந்தார். என் தம்பியையும் என் அத்தையின் மகளையும் என் பொறுப்பில் விட்டுவிட்டார்கள். அவர்கள் இருவரும் விளையாடிகொண்டு இருக்கும்போது நான் என் கைதொலைபேசியை பயன்படுத்திக்கொண்டு இருந்தேன். திடீரென நாங்கள் இருந்த படகின் இயந்திரம் வேலைசெய்யாமல் அந்த படகை மூழ்க வைத்தது. என் இரு கரங்களில் அவர்கள் இருவரையும் பிடித்துகொண்டு நான் என் பெற்றோர்களிடம் ஓடினேன். பிறகு ஒரு சிறிய படகு ஒன்று வந்தது. நாங்கள் எல்லோரும் அதில் ஏறினோம். எங்கள் கண் முன் எந்த படகு மூழ்கியது. சிறிது நேரம் கழித்து என் அம்மா கதற ஆரம்பித்தார். என் தம்பியை நான் அப்படகிலிருந்து இறக்கவில்லை. என் கவனகுறைவால் ஒன்றுமே தெரியாத என் தம்பியை நாங்கள் இழந்தோம்.
  நாட்கள் கழிந்தன. நான் செய்தி பார்த்துகொண்டு இருக்கும்போது நான் பார்த்த அந்த சந்தேக நபரின் குடும்ப பிரச்சனையால் அந்த படகின் இயந்திரத்தை வேலைசெய்யாதபடி செய்தார் என்று.”மேரி, அந்த புகைபடத்தை வைத்துவிட்டு சுத்தம் செய்….” என்று என் அம்மா அமைதியாக சொல்லி என்னை திரும்பவும் நினைவுக்கு கொண்டு வந்தார். அந்த ஒரு ஆடவரின் பிரச்சனையால், ஒன்னும் தெரியாத என்ன தம்பியை நான் இழந்துவிட்டேன். கவனக்குறைவால் நாம் எதைவேண்டுமானாலும் இழம்போம்.
  Noorin Ayisha
  St Hilda’s Secondary School

 4. விடுமுறையை பல பயனுள்ள வழிகளில் கழிக்கலாம், உதாரணத்திற்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்வது, வீட்டை சுத்தம் செய்வது, வெளிநாடுகளுக்கு செல்வது போன்றவை. நானோ, இந்தியாவிற்குச் சென்று எங்கள் குடும்ப பிணைப்பையும் ஒற்றுமையையும் வளர்த்தேன்.
  நீண்ட நாள் விடுமுறையின்போது, குடும்பத்துடன் மேலை நாடுகளுக்குச் செல்வது எங்களது வழக்கமாகும். வழக்கத்திற்கு மாறாக, சென்ற ஆண்டு, இந்தியாவில் உள்ள எங்கள் சொந்த கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
  கூட்டுக் குடும்பம் என்பது இந்தக் காலத்தில் அறிதே. எனினும், இவ் விடுமுறையின்போது, நான் என் பெரியப்பா, சித்தப்பா, பாட்டி போன்ற உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களில் சிலரை நான் பார்த்து பத்து வருடங்களாகி இருக்கும். மீண்டும் அவர்களை சந்திப்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
  என் தாத்தாவும் பாட்டியும் எங்களுக்கு ஏட்டில் மட்டும் தெரிந்த தமிழ் கலாச்சாரத்தை நேரில் அறிமுகம் செய்தனர். நாங்கள் எல்லோரும் குடும்பமாகச் சேர்ந்து கோலாட்டம், பல்லாங்குழி, பரமபதம், பம்பரம், நொண்டி போன்ற விளையாட்டுகளில் ஈடுப்பட்டோம். அவை என் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டன.
  மேற்ச் சொன்ன விளையாட்டுகள் அனைத்தும் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளித்தது என்றால் அது மிகையாகாது. கணினி மற்றும்
  ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விளையாடும் எங்களுக்கு உடலாலும் உள்ளத்தாலும் விளையாடியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
  விளையாட்டுகளோடு நில்லாமல், உணவுமுறை, தெய்வவழிபாடு மற்றும் முன்னோரின் வழிபாடு எல்லாம் நமது பாரம்பரியத்தை உணரும் வண்ணம் அமைந்தது. ஆப்பம், வெள்ளை பணியாரம், சுவரொட்டி போன்ற பல உணவுகளின் சுவை இன்றும் என் மனதை விட்டு அகலவில்லை.
  பரப்பளவில் மிகவும் பிரமாண்டமான ஆலயங்களையும், சற்றே மாறுப்பட்ட வழிப்பாடு முறைகளையும் நேரில் அறிந்துகொண்டோம். வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த நம் முன்னோர்களைப் பற்றியும் அவர்களை வழிபாடு செய்யும் முக்கியத்துவத்தையும் தெரிந்துகொண்டோம்.
  இவ்வாறாக, எங்கள் குடும்பத்தையும், நம் தமிழ் இன கலாசாரத்தையும் நேரில் கண்டு, உணர்வில் கலந்து, மனதில் தங்கும் வண்ணம் அமைந்த இவ்விடுமுறை என் மனதில் பசுமரத்தானிப்போல் பதிந்தது.
  சேவா மாணிக்கம்
  கான் எங் செங் பள்ளி

 5. கலாட்டா கல்யாணம்!
  என் அண்ணனின் திருமனம் நன்றாகவே நடக்கவில்லை. எடுத்தவுடனே எதிர்மறையாக பேசுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உண்மைத்தான். ஆனால் வாழ்க்கை எப்போதுமே நேர்மறையாக இருக்காது. எதிற்மரைச் சம்பவங்கள் இருக்கதான் செய்யும். அப்படி ஒரு எதிர்மறைச் சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்.
  முன்பு கூறியது போல், என் அண்ணனின் திருமணம் நன்றாகச் நடக்கவில்லை. முதலில் நான், அண்ணன், அம்மா, அப்பா ஆகியோர் திருமண மண்டபத்திர்குச் சென்றோம். உள்ளே நான் கண்ட காட்சி என்னை என் கண்களை நம்பவிடாமல் செய்தது. மண்டபம் மிகவும் குப்பயாகவும் அலங்கறிக்காமலும் காணப்பட்டது! வேலைகளைச் செய்ய ஆள் ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் யாரையும் காணோம். இறுதியில் நாங்களே சுத்தப்படுத்தும் வேலையையும் அலங்கறிக்கும் வேலையயும் செய்தோம்.
  திருமணத்திற்கு நேரம் நெருங்கிகொண்டிருந்து, ஆனால், யாரும் வரவில்லை. இரண்டு மனி நேரம் கழித்தும் யாரையும் காணோம். வெளியில் வந்து பார்த்தபோதுதான் நாங்கள் தவறான மண்டபத்திருக்கு வந்திருந்ததை அறிந்தோம். உடனடியாக நாங்கள் சரியான மண்டபத்திற்குச் சென்றொம். அங்கே வந்திருந்த விருந்தினர்களின் முகங்களில் ஒரு பயங்கர கோபம் தெரிந்தது. நாங்கள் அண்ணனை மேடை வரை பின்தொடர்ந்தோம். மணப்பென்னின் முகத்தை அரியாத என் அண்ணன்,” அப்பா! யார் இந்தப் பொண்ணு? பாக்கப் பேய் மாரி இருக்கா?” என்று என்னிடம் கேட்டார்.”உங்கள் மனைவி,” என்று கூறியபோது அண்ணன் தன் வருங்காலத்தைப் பற்றி யோசித்து நடுங்கினார்.
  தாலி கட்டும் நேரம் வந்தது. அந்தோ பரிதாபம்! தாலியை எங்கும் காணவில்லை! அக்கினிக் குழம்பை சீரியெரியும் எரிமலையைப் போல் சீறினார் மணப்பெண்னின் அப்பா.”முதலில், மிகவும் தாமதமாக வந்தீர்கள். இப்பொழுது தாலியைத் தொலைத்து விட்டீர்கள்! அடக் கடவுளே!”
  புரோகிரர் குறுக்கிட்டார்.” என் இத்தனை வருட சேவையில் இப்படி நடந்தது முதல் முறை!” என்று கத்திவிட்டு சென்றார். புரோகிரர் இல்லாமல் திருமணம் நடக்குமா? நாங்கள் அவமானத்தோடு வீடு திரும்பினோம். நான் திருமணம் நடக்கவில்லை என்ற வருத்தத்தோடு நாற்காலியின் மீது அமர்ந்தேன். நான் என் முன் இருந்த மீதிப் பத்திரிக்கை கட்டினை கண்டு என் நெற்றியை அடித்தேன். பத்திரிக்கையை கட்ட என்ன பயன்படுத்தினார்கள் தெரியுமா? தாலியை தான்.
  தாருண் தணிகைவேல்
  கான் எங் செங் பள்ளி

 6. பயனுள்ள வகையில் பள்ளி விடுமுறை……
  நான் என் விடுமுறைக் காலத்தில் பயனுள்ள ஒரு வேலையைச் செய்ய ஆசைப்பட்டேன். அப்போது நான் என் நண்பர்களோடு சேர்ந்து வீட்டிற்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்றேன். இதற்குக் காரணம் என் பள்ளி விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதே.அந்த முதியோர் இல்லத்தை அடைந்த போது நான் கண்ட முதல் காட்சி என் மனதை உருக வைத்தது. ஒரு இரண்டு கால்களையும் இழந்த முதியவர் ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்த படி எதையோ எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். கனத்த மனதுடன் முதியோர் இல்லத்தைச் சுற்றிப் பார்த்தபோது வேறு வேறு மனநிலையையுடைய பலரைச் சந்தித்தேன்.
  அவர்களின் கதைகளைக் கேட்டபோது என்னுள் ஏதோ ஒரு பாரம் அழுத்துவது போன்று இருந்தது. அந்த நாள் முழுவதும் அவர்களுடனேயே இருந்து அவர்களுக்குத் தேவையான அதாவது பாத்திரங்கள் கழுவுவது சாப்பாடு பரிமாறுவது போன்ற பல வேலைகளைச் செய்து கொடுத்தேன். சில முதியவர்கள் தனிமையாக இருந்து கொண்டு கவலையில் இருந்தனர். அவர்களிடம் மனம் விட்டுப் பேசி மனபாரத்தைக் குறைக்க முயற்ச்சி செய்தேன். ஆங்கிலம் தமிழ் மொழி தெரியாதவர்களுடன் சைகையில் சில நடவடிக்கைகளைச் செய்து சிரிக்க வைத்தேன். வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, அந்த முதியோர்களின் அனைத்து கவலைகளும் மறைந்தது போன்ற உணர்வு எனக்குத் தோன்றியது. ஒரு நாளாவது அவர்களின் தனிமை வாழ்க்கையிலிருந்து விடுவித்து மகிழ்வித்த பெருமிதத்தோடு வீடு திரும்பினேன். உதவி என்பது பொருளாக கொடுப்பது மட்டுமல்ல உழைப்பாலும் கொடுக்க முடியும் என்பதை அன்று அறிந்து கொண்டேன். அது எவ்வகையில் மகிழ்வைக் கொடுத்தது என்பதையும். தெரிந்து கொண்டேன்.
  லெவின்
  ஜூரோங் உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*