வழியில் கிடந்த பணம்

ள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்கிறீர்கள். வழியில் ஒரு 50 வெள்ளி கிடக்கிறது. எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தால், சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும்,  ஓர் இந்திய ஊழியரும் சென்று கொண்டிருக்கிறார்கள். அது யாருடைய பணமாக இருக்கும் என்று உங்களுக்குள் குழப்பம். அடுத்து நீங்கள் செய்தது என்ன, இறுதியில் அப்பணம் யாரிடம் சேர்ந்தது, அப்பணம் யாருடையது என்பதை எப்படி முடிவு செய்தீர்கள் என்பதைப் பற்றி, உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள்,  11 மார்ச் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
டிசம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்

Naren Kumar Riverside secondary school
Heba Janet St.Hildas Secondary School
Ranjith Kumar Clementi Town Secondary School

 

21 கருத்துரை

 1. அன்று பள்ளி முடிந்து, பசியோடு நடந்துக்கொண்டிருந்தேன். நிறைய மாணவர்கள் என்னை தள்ளித் தள்ளி நகர்ந்தனர். பசியின் மயக்கத்தால் என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அப்போது, நான் வாயடைந்து நின்றேன்.
  ஏன் என்று யோசிக்கிறீர்களா? அது வேறு எதுவும் இல்லை…. ஓரமாக இருந்த புல்வெளியில் ஐம்பது வெள்ளி ஒன்று இருந்த்து. நான் அதனை நோக்கி நடந்து எடுத்தேன். திடீரென்று, இரு சிறிய உருவங்கள் என் தோள் மேல் தென்பட்டன. வலது தோள் மேல் இருந்த உருவம் ”அதை காவல் நிலையத்தில் போய்கொடுத்துவிடு” என்று கூறியது. இடது தோளின் மேல் இருந்த உருவம் ”அதை நீயே வைத்துக்கொள். அதை வைத்து எதை வேண்டுமென்றால் வாங்கு” என்று கூறியது.
  எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அறத்தேயே செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்வதால், அறத்தையே செய்யலாம் எனத் தோன்றியது. ஆதலால், நான் காவல் நிலையத்திடம் சென்று பணத்தை கொடுத்துவிட்டு மன நிறைவோடு வீடு திரும்பினேன்.
  ”அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
  நண்பென்னும் நாடாச் சிறப்பு”
  மனிதனுக்கு மூச்சு விடுவது எவ்வளவு முக்கியமோ, அன்பு நற்செயல் செய்வதற்கு மிக முக்கியம்.
  பூஜா
  Unity Secondary School
  2E3

 2. ரிங்! ரிங்! என்று பள்ளி மணி ஒலித்தது மாணவர்கள் அனைவரும் சிட்டாய்ப் பறந்தனர். அப்போது பசி என் வயிற்றை கிள்ளியது அதற்கு ஏற்றவாறு என் கால்கள் வீட்டை நோக்கி வேகமாக நடைபோட்டன. அப்போது ஒரு ஐம்பது வெள்ளி நோட்டு பறந்து என் காலடியில் வந்து விழுந்தது அதை நான் குனிந்து எடுத்தேன். அதை பார்த்த என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன! அப்போது என் உள்மனம் அதை எடுத்து கொள்! என்று கட்டளை இட்டது. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே! என்று என் அறிவான மூளை என்னை எச்சரித்தது. நான் என் மூளை கூரியதருக்கு மதிப்பு கொடுத்தேன். நான் அந்த பணத்தை எடுத்து யாராவது பணத்தைத் தேடுகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.அப்போது அங்கு ஒரு முதியவரும் ஒரு இந்திய ஊழியரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நான் யாருடைய பணமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அருகிலிருந்த உணவுக்கடைக்குச் சென்ற அந்த இந்திய ஊழியர் உணவு வாங்குவதருக்கு அவருடைய பணப்பையில் இருந்து பணத்தை எடுக்க பார்த்தார். ஆனால் அதில் அவர் வைத்திருந்த ஒரு ஐம்பது வெள்ளி நோட்டைக் காணவில்லை. அதனால் அவர் அதை தேடிக்கொண்டிருந்தார் அதை பார்த்ததும் என் மூளை உடனே அந்த ஐம்பது வெள்ளி அவருடையதுதான் என்று எனக்கு கட்டளையிட்டது.உடனே நான் தாமதிக்காமல் நான் அவரிடம் சென்று அந்த ஐம்பது வெள்ளி அவருடையதா? என்று கேட்டேன். அதர்க்கு அவர் ஆமாம் என்று கூறினார். அவர் அந்த ஐம்பது வெள்ளியைப் பார்த்ததும் அவர் முகம் சூரியனை கண்ட தாமரைபோல மலர்ந்தது. பின்னர் அவர் எனக்கு நன்றி கூறினார். நான் சந்தோசத்துடன் என் வீட்டை நோக்கி நடந்தேன். என் பசி என்னை விட்டு பறந்தது.
  எஸ் பி. சுபாஷ் 1B
  செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

 3. அன்று செவ்வாய்கிழமை எனக்கு இணைப்பாடம் இருந்தது. அந்த இணைப்பாடத்தை முடித்துவிட்டு நான் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது பசி வயிற்றை கிள்ளியது. என் பணப்பையில் பணமும் இல்லை. நான் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தேன் நான் நடந்துகொண்டிருந்தபோது காலணிக்கு அடியில் ஏதோ தால் போல் இருந்தது உடனே நான் அதைப் பார்த்தேன் அது $50 வெள்ளி பணமாக இருந்தது என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன! உடனே என் குரங்கு மனம் பணத்தை எடுத்து பைக்குள் வை என்றது. என்னுடையை அறிவான மூளை என்னை எச்சரித்தது. யாருடையை பணம் கண்டுபிடி! என்று என் மூளை என்னிடம் கூறியது. உடனே அந்த பணத்தை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்தேன் என் இடது பக்கத்தில் ஓர் இந்திய ஊழியர் நடந்து சென்றுகொண்டிருந்தார் என் வலது பக்கத்தில் ஓர் முதியவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். நான் யாரிடம் போய் கொடுப்பது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். நான் முதியவரிடம் போய் கொடுக்கலாம் ஏன் என்றால் அவர் ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டுயிருப்பதுபோல் தெரிந்தது. அதனால் அவரிடம் போய், ‘ஐயா! இது உங்களது பணமா?’ என்று கேட்டேன் அப்போது அவர் பணப்பையை எடுத்து அவர் பார்த்தார் அவர் $50 வெள்ளி காணவில்லை என்று தெரிந்தது அப்போதுதான் அவருக்கு தெரிந்தது அவருடயை பணம் என்று. அவர் எனக்கு கையில் $10 வெள்ளி கொடுத்துவிட்டு என்னிடம், ‘நீ போய் ஏதாவது போய் வாங்கிகொள், ‘ என்றார் நான் அவரிடம் நன்றி கூறிவிட்டு போய் கடையில் சாப்பாடு வாங்கி அந்த இடத்திலே சாப்பிட்டேன். நான் மிக சந்தோசத்துடன் வீட்டை அடைந்தேன்.
  காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
  அது ஞாலத்தின் பெரிது- என்ற குறள் ஏற்ப நான் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது மிகப்பெரியது என்று கூறினார். என் மனம் ஆனந்தத்தில் துள்ளி குதித்தது.
  R .நமசிவா 1A
  செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி.

 4. சூரியவேந்தன் தன் முழு பலத்தையும் என்னிடம் நல்கினான். அப்போது, நான் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். கதிரவனால் வியர்வை முத்துக்கள் என் முகத்திலிருந்து வழிந்தது. மேலும் என்னுடைய பள்ளிப்பை பெரிய கற்களைத் தூக்குவது போலக் கனத்தது. நான் என் கால்களை இழுத்துக்கொண்டு எப்படியோ என்னுடைய வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தேன். திடீரென்று புல்களில் கிடந்த ஒரு பொருள் என் கண்களைக் கவர்ந்தது. நான் அதைப் பார்த்துச் சிலை போல் வாயடைத்து நின்றேன். அது ஒரு ஐம்பது வெள்ளி நோட்டு!
  நான் மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தேன். நான் இந்தப் பணத்தை வைத்து என்னுடைய தொலைபேசிக்குப் புதிய உறையை வாங்கலாம். மேலும் நிறைய பொருட்களை வாங்கி என்னுடைய நண்பர்களைக் கவரமுடியும். இதுபோல் நிறைய சிந்தனைகள் என் மனதில் ஓடின. அப்போதுதான் ஒரு முக்கியமான திருக்குறள் என் மனதில் தோன்றியது.
  “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
  கள்ளத்தால் கள்வேம் எனல்.”
  பிறருடைய பொருளை அவர் அறியாத வண்ணம் கவர்ந்து கொள்வோம் என்று உள்ளத்தால் நினைத்தாலும் தீயதாகும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆதலால், நான் அந்த ஐம்பது வெள்ளிக்குச் சொந்தக்காரரைத் தேட ஆரம்பித்தேன்.
  அப்போது, சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும் ஓர் இந்திய ஊழியரும் சென்று கொண்டிருந்தனர். நான் அவர்களைக் கண்டதும், மனநிறைவு என்னைச் சூழ்ந்தது. ஆனால், அது சிறிது காலம்தான். அந்த முதியவர் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் முதுமையாகவும் இருந்தார். மேலும் அவர் ஒவ்வொரு அடியும் தள்ளாடி தள்ளாடி எடுத்து வைத்தார். என் மனம் கணத்தது. நான் சற்றும் தாமதிக்காமல் அவரிடம் சென்று “இது உங்களுடைய பணமா?” என்று பணிவுடன் கேட்டேன். அதற்கு அவர் “இது என்னுடைய பணம் அல்ல தம்பி” என்று கூறி விடை பெற்றார்.
  பிறகு நான் அந்த இந்திய ஊழியரிடம் சென்றேன். அவர் எதையோ தேடுவது போல் இருந்தார். அவர் பரபரப்புடன் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தார். இவர்தான் பணத்தைத் தொலைத்திருப்பார் என்று எண்ணி நான் அவரை நோக்கி நடந்தேன். மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். அவருடைய பதில் “நான் பணத்தைத் தேடவில்லை. என்னுடைய நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறிச் சென்றுவிட்டார்.
  எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என்று யோசித்தபோது ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது.
  “அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
  மறத்தலின் ஊங்கில்லை கேடு.”
  உலகில் உள்ள உயிர்களுக்கு நன்மை தரும் விஷயம் அறத்தைவிட (நல்ல செயலைவிட) வேறில்லை. அந்த அறத்தை மறப்பதைவிட தீயதும் வேறில்லை என்று வள்ளுவர் திருக்குறளில் எழுதியுள்ளார்.
  அதனால், நான் பணத்தை ஒரு அனாதை இல்லத்திற்கு நன்கொடையாக வழங்க முற்பட்டேன். அங்கே சென்றபோது அந்த இல்லத்தின் பொறுப்பாளர் ஐம்பது வெள்ளி தந்ததற்காக என்னைப் பாராட்டினார். உடனே, நான் இது என்னுடை பணம் அல்ல. வழியில் கிடந்த பணம் என்று கூறினேன். அதற்கு அவர் என்னுடைய பொறுப்புணர்வைக் கண்டு வியந்து என்னை உச்சிக் குளிரப் பாராட்டினார். இதில் கிடைத்த மனநிறைவு வேறு எதிலும் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் என் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தது.
  பிரேமானந் கிருஷ்ணா வசந்தன் 1E1
  புக்கிட் பாத்தோக் உயர்நிலைப்பள்ளி

 5. Antozesslyn (Yuan Ching Secondary School) ~1E1
  வியர்வை முத்துக்கள் கண்ணத்தில் வழிந்தோடின. பள்ளி முடிந்து நான் விடு திரும்பிக்கொண்டிருந்தேன்.
  அப்போது,என் கண்களுக்கு பச்சை நிறத்தில் ஒன்று மின்னியது. அது என்ன வென்று தெரிந்தக்கொள்ள என் மனதில் ஏதோ ஒன்று என்னை தூண்டிவிட்டது.
  நான் அதை நோக்கி நடந்தேன்.
  அது ஒரு 50 வெள்ளி ! நான் உடனே சுற்றும் முற்றும் பார்த்தேன். சற்று தொலைவில் ,ஒரு வயதான சீன பாட்டியும் ஒரு இந்திய ஊழியரும் சென்றுக்கொண்டிருந்தனர்.
  அது அவர்களுடையது என்று நினைத்து நான் அந்த 50 வெள்ளியை என் கையால் எடுத்துவிட்டு,”உங்கள் காசு! உங்கள் காசு!” என்று அவர்கள் பின்னால் ஓடினேன்.
  ஆனால் அவர்கள் சரித்து பேசியதால்,அவரகளுக்கு என்னை கேட்கவில்லை. திடீரென்று அவ்விருவரும் நின்று திரும்பிப் பார்த்தார்கள். நான் அவர்கள் உன்னால் ஓடி பேறு மூச்சு விட்டேன்.
  ”இது…உங்களுடையதா?” என்று என் கையை திறந்து நீட்டி ,கேட்டேன். உடனே, அந்த பாட்டி தன் பையை திறந்து பார்த்தார். பின், அவர் என் கைகளை மூடினார்.”உன் நேர்மைக்கு இதுவே உன் பரிசு”என்றார்.
  நான் அந்த உழியரைப் பார்த்தேன். அவர் சிரித்தார். நான் என் கையை திறந்து பார்த்தேன்.நான் நிமிர்ந்து பார்த்த போது அவர்கள் பக்கத்திலிருக்கும் கட்ட்டத்தின் மின் தூக்கியில் ஏறிவிட்டனர்.
  நான் உடனே வீட்டிற்க்கு சென்று என் சீருடையை மாற்றிவிட்டு ஆலயத்திற்க்கு சென்றேன். காசை அங்கிருக்கும் உண்டியலில் போட்டுவிட்டு வீடு திரும்பினேன்.
  ஆன்டோஜெஸ்லின் யுவான் சிங் உயிர்நிலை பள்ளி~1E1

 6. அன்று மாலை என் உயர்தமிழ் வகுப்பு முடிந்து சோர்வாகவும் களைப்புடனும் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது என் காலடியில் ஏதோ! கிடப்பது கண்டு குப்பைத் தொட்டியில் போடக் குனிந்து பார்த்த போது ஒரு பனிக்கூழ் சுற்றிய தாள்களுடன் ஒரு $50 வெள்ளியைக் கண்டு ஒரு உந்துதலில் குப்பைகளுடன் சேர்த்து அந்த $50 வெள்ளியைம் எடுத்து ஒருவிதப் பதட்டத்துடன் நிமிர்ந்த போது சற்றுத்தொலைவில் ஒரு சீன முதியவரும் ஒரு இந்திய ஊழயரும் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பணத்தை அவர்கள் தான் தவறவிட்டு விட்டனர் என்று எண்ணி வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல மின்னல் வேகத்துடன் சென்று அவர்களிடம் $50 காட்டினேன். அவர்கள் மறுத்துவிட்டு சென்றனர்… ஆனால் என்ன? செய்து என்று யோசித்தபோது தான் என் முன்னால் சற்றுத்தொலைவில் ஒரு சீன மூதாட்டி பழையை அட்டைப் பெட்டிகளை ஏற்றிய வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார் … எனக்கு ஒருயோசனை தோன்றியது உடனே அந்தப் பணத்தை கீழே போட்டு விட்டு பார்க்காதது போல நின்றேன். அந்த மூதாட்டிப் பணத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் ஏதோ? சீனமொழியில் கேட்டார் எனக்குப் புரியவில்லை ஆனாலும் பணத்தைப் பற்றித்தான் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு என்னது இல்லை எனச் சைகை காட்டினேன். ஆனால் அந்தப் பாட்டி சிறு புன்னகையுடன், ஓரமாக வண்டியை விட்டுவிட்டு ரயில் நிலைய மேடை நோக்கி நடந்தார்.. நானும் ஆர்வத்துடனும் ஒரு குழப்பத்துடனும் சற்று இடம்விட்டு பின் தொடந்தேன். அவர் அங்கிருந்த நிதிதிரட்டுப் பெட்டியில் போட்டுவிட்டு வண்டியை நிறுத்திய இடத்திற்குச் சென்றார்.
  அன்றிலிருந்த கற்றுக்கொண்டேன்… பிறர் பொருளை எங்கேனும் கண்டால் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் பொதுநலனுக்கு உதவும் நிதிதிரட்டுப் பெட்டியில் போடவேண்டும்..
  இதை என் தோழிகளிடமும் தெரிவித்து மனநிறைவு கொண்டேன்.
  ஸ்ரீதுர்கா சண்முகநாதன்
  உயர்நிலை இரண்டு
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

 7. பள்ளியில் நடந்ததை நினைத்துக்கொண்டே களைப்பாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன்.நிமிர்ந்து நடக்கக்கூட முடியாத அளவிற்கு களைப்பு.அதனால் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு தரையைப் பார்த்துக் கொண்டு வீட்டை நோக்கும் வழியில் ஐம்பது வெள்ளி கிடப்பதை சுற்று முற்றுப் பார்த்துவிட்டு பிறகு எடுத்தேன்.
  அந்த வழியே சீன முதியவரும் இந்திய ஊழியரும் முன்னும் பின்னுமாகப் போய்க்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் சென்று இந்த வெள்ளி உங்களில் யாருடையது என்று கேட்டதும் உடனே இருவரும் என்னுடையது! என்னுடையது! என்று சொன்னார்கள். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால், நான் எவ்வளவு வெள்ளி என்றே சொல்லவில்லை. அப்படி இருக்கும் போது இருவரும் என்னுடையது என்றதும், அதிர்ச்சியாகவே இருந்தது. அதனால் , நான் இருவருக்கும் அந்த வெள்ளியை இரண்டாக கிழித்து கொடுத்தேன்.
  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.உடனே நான் என்னை மண்ணித்துவிடுங்கள் செய்தது தவறு தான். இருந்தாலும், நான் சிறியவனானாலும் அந்த ஐம்பது வெள்ளி பணத்தை என்னுடையது என்று எடுத்து செல்லாமல் உங்களை அழைத்து யாருடையது என்றதும் சிறிதும் யோசிக்காமல் என்னுடையது என்றீர்கள் .மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதை உணர்த்தவே நான் அப்படி செய்தேன்.என்னை மண்ணித்துவிடுங்கள் என்று அவ்விருவரிடமும் மண்ணிப்புக் கூறிவிட்டு வீட்டிற்கு பெருமிதத்தோடுச் சென்றேன்.
  தருண்
  உயர்நிலை இரண்டாம் ஆண்டு
  பொங்கல் உயர்நலைப்பள்ளி

 8. “ரிங்!ரிங்!” என்று மாணவர்களின் பொறுமையை சோதித்து கொண்டிருந்த பள்ளி மணி ஒலித்தது. அன்று வெள்ளிக்கிழமை.அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையாக இருப்பதால் பொழுதை எப்படி உல்லாசமாக கழிக்கலம் என்ற யோசனையுடன் மாணவர்கள் தேன் கூட்டிலிருந்து வெளிவரும் தேனீக்கள் போல ரீங்காரமிட்டுகொண்டு பள்ளியிலிருந்து வெளியேறினர். அவர்களுள் நானும் ஒருத்தி.
  சிறிது நேரம் கழித்து, நான் கீழே பாதையில் ஏதோ கிடப்பதை பார்த்தேன்.நான் மெதுவாக குனிந்து அதை எடுத்தேன்.ஆஹா ! என்ன ஆச்சரியம்!கீழே $50 கிடந்த்து.நான் நிமிர்ந்து யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன்.
  சிறிது தூரத்தில்,ஒரு சீன முதியவரும் ஒரு இந்திய ஊழியரும் செல்வதை கண்டேன்.அது யாருடைய பணம் என்று எனக்கு தெரியவில்லை. அதனால், நான் புத்திசாலித்தனமான யோசித்து யாருடையது என்று அறிய ஒரு திட்டதுடன் அவர்களிடம் சென்று ,”ஐயா,நீங்கள் ஏதேனும் பணத்தை தொலைத்தீகளா?” என்று வினவினேன்.அவர்கள் தங்கள் பணப்பையை சேதித்தபின் ,”இல்லையே”என்று பதிலளித்துவிட்டு சென்றனர்.
  நீண்ட நேரம் யோசித்தபின், நான் பக்கத்தில் உள்ள பேரங்காடியிள் பணத்தை செலவிடலாம் என்று முடிவேடுத்தேன்.இனிப்பு பண்டத்தை நுகர்ந்த எறும்பு விரைந்து செல்வது போல நான் அந்த பேரங்காடிக்குள் நுலைந்தேன்.
  நான் என்ன வாங்கலாம் என்று யோசித்துகொண்டிருந்த போது என் பெற்றோர் கூறியது நினைவிற்கு வந்தது.அவர்கள் அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசை பட கூடாது என சொல்லியிருக்கீறார்கள்.அதனால் நான் அந்த 50 வெள்ளியை காசாலரின் அருகில் இருந்த நன்கொடை பெட்டிக்குள் போட்டேன். பொருளுக்குரியவரிடம் சேர்க்கவில்லை எனினும் யாரும் இல்லாத முதியவர்களுக்காவது பயன்படும் என்ற மனதிருப்தியுடன் வீட்டிற்கு சென்றேன்.
  ஐனனி ஸ்ருதி
  யுவான் சிங் உயர்நிலை பள்ளி

 9. நான் ஒரு நாள் பள்ளி முடிந்து விரைவாக வீட்டிற்குச் செல்ல இரயில் நிலையம் நோக்கி வேகமாக ஓடினேன். அப்போது என்னை ஒருவர் பின்னாலிருந்து கூப்பிடுவது கண்டு திடுக்கிட்டு நின்றேன் ஆங்கு சோமு கையில் $ 50 வெள்ளியைக் காட்டிக் கொண்டு நின்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன? என்று சைகையில் கேட்டேன் அவன் அருகிலுள்ள புல் தரையைக் காட்டினான்.
  புரியாமல் அருகில் சென்று என்ன என்று கேட்டேன். அவன் கீழே கிடந்தது வா … சாப்பிடப் போகலாம் என்றான். நான் ஒரு கணம் யோசித்து .. சோமு இது உன் பணம் இல்லை ஆகவே நான் வரமாட்டேன் என்று மறுத்துக் கூறினேன். உடனே எனக்கு ஒரு யோசனைத் தோன்றியது உடனே சோமுவை அழைத்துக் கொண்டு இரயில் நிலையம் சென்றேன். அங்குள்ள அதிகாரியிடம் கூறி நன்கொடைப் பெட்டி எங்குள்ளது என்பதை தெரிந்து கொண்டு சோமுவிடம் கூறி அதில் போடவைத்து விட்டு.. சோமுவிற்கு நன்றி கூறிக் கொண்டடிருந்த போது … என் அத்தை என்னைப் பார்த்து விட்டு கேட்டார் ..ஸ்ரீஹரி என்ன இங்கே என்று .. சோமு நடந்ததைக் கூறினான். அவர் பெருமிதத்துடன் எங்களை அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து பாராட்டினார்.. இதனால் சோமுவிற்கும் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..

  ஸ்ரீஹரி
  உயர்நிலை ஒன்று
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

 10. அன்று நான்,துணைப்பாட வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தான்.வழியில் ஓர் ஐம்பது வெள்ளி நோட்டை பார்த்தேன்.அதை உடனே எடுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.அப்போது,ஒரு சீன முதியவரும் ஓர் இந்திய ஊழியரும் ஆளுக்கு ஒரு பக்கமாக எதையோ நீண்ட காலமாக தேடிக்கொண்டிருப்பதை பார்த்தேன்.பிறகு அவர்கள் என்னை நோக்கி வருவதை கண்டேன்.இருவரும் என்னிடம் வந்து,”அது என்னுடைய பணம்.” என்று கூறினார்.இருவரும் ஒரே பதிலை கூறியதால்,அது யாருடைய பணம் என்று எனக்கு தெரியவே இல்லை.நானும் தமிழர் அந்த ஊழியரும் தமிழர்.அதனால்,அந்த தமிழர் கூறுவதுதான் உண்மையாக இருக்கும் என்று நான் நினைத்தான்.அந்த பணத்தை அந்த தமிழ் ஊழியரிடம் கொடுத்துவிட்டான்.பிறகு அந்த தமிழ் ஊழியர் கடைக்கு சென்று அந்த ஐம்பது வெள்ளியை பத்து வெள்ளி நோட்டுகளாக மாற்றிவிட்டு அந்த சீன ஊழியரிடம் வந்து இருபது வெள்ளியை கொடுத்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.சீன முதியவரிடம் ஏன் பணத்தை கொடுத்தார் என்று நான் அவரிடம் கேட்டபோது அவர்,”அந்த ஐம்பது வெள்ளியில்,இருபது வெள்ளி அவருடையது;முப்பது வெள்ளி என்னுடையது.இந்த சீன முதியவரிடம் நான் இருபது வெள்ளி கடன் வாங்கியிருந்தேன்.அதை அவரிடம் கொடுக்க சென்றபோதுதான் இந்த ஐம்பது வெள்ளி தொலைந்துபோனது.அந்தநாள் அவரும் அதை எனக்கு தேட உதவினார் .இந்த ஐம்பது வெள்ளியை கண்டுபிடித்துவிட்டதால் அவரிடம் கடன் வாங்கிய இருபது வெள்ளியை அவரிடம் கொடுத்துவிட்டேன்.” என்று கூறினார்.ஒருவரின் இனத்தை பார்த்து அவர் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று தவறாக எடை போட்டுவிடக்கூடாது என்று அன்று நான் கற்றுக்கொண்டேன்.இனிமேல் எதையும் நன்கு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று நான் எண்ணினேன்.
  ரெத்தினம் ரெபேக்கா
  சூவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 11. கதை
  நேர்மையா? பேராசையா? என் மனம் படபடவென்று துடித்துக்கொண்டிருந்தது. ஐம்பது வெள்ளியை இலவசமாக கொடுத்தால், யார் வேண்டாம் என்று மறுப்பார்கள். கீழே, புல் தரையில் ஐம்பது வெள்ளி காசு இருந்தது. நான் அச்சுழநிலையில் சிக்கி இருந்தேன். நான் அந்த பணத்தை எடுக்க துணிந்தான், ஆனால் என மனதில் உள்ள கடமை உணர்வும், நேர்மை உணர்வும் அச்செயலை புரிய, தடுத்தது. மாறாக, நான் அப்பணத்தை கையில் எணுத்துக்கொண்டு அக்கம் பக்கம் பார்த்தேன். சற்று தொலைவில், நான் ஒரு சீன முதியவரையும், ஒரு இந்திய ஊழியரையும் கண்டேன். அந்த ஐம்பது வெள்ளி யாருடையதாக இருக்கும் என்று ஓரே குழப்பமாக இருந்தது.
  என்ன வழிதான் இருக்கிறது? காவல் நிலையத்திற்குச் சென்று கொடுத்துவிடலாம். ஆனால், அனைத்து காவலர்களும் நேர்தமையானவர்கள் என்று என்ன உறுதி? தொலைவில் இருக்கும் இரண்டு பேரை அது தங்களுடையதா கேட்கலாம். ஆனால், அவர்கள் உண்மையை கூறாமல், பணத்தை உரிமை கொண்டாடலாம் அள்ளவா? இது போல், எனக்கு பல யோசனைகள் தோன்றியது. நான் ஒன்றை செயல்படுத்தினேன்.
  நான் அவ்விருவரின் முன் சென்று, அந்த ஐம்பது வெள்ளி காசை தெரியாமல் கீழே போட்டுவிட்டதுப் போல் நடித்தான். நான் உடனே ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிற்துக் கொண்டேன். நான் கவனித்துப் பார்த்தால், சீன முதியவரோ, அவரால் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக அந்த பணத்தை நோக்கில் சென்றார். ஆனால், அந்த இந்திய ஊழியர் உடனே தன் பணப்பையை எடுத்துப் பார்த்தார். அவர், தன் பணப்பையில் தன்னுடைய பணம் இருக்கிறதாக என்று பார்த்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். இச்செயலிலே, அந்த பணம், இந்திய ஊழியரது என்று தெரிந்துவிட்டது.
  நாம் என்ரும் மற்றவரின் பொருள் மீது ஆசைப் படக்கூடாது, பேராசையும் கூடாது.
  -நிஷாந்தி(2A1)

 12. கதை
  நேர்மையா? பேராசையா? என் மனம் படபடவென்று துடித்துக்கொண்டிருந்தது. ஐம்பது வெள்ளியை இலவசமாக கொடுத்தால், யார் வேண்டாம் என்று மறுப்பார்கள். கீழே, புல் தரையில் ஐம்பது வெள்ளி காசு இருந்தது. நான் அச்சுழநிலையில் சிக்கி இருந்தேன். நான் அந்த பணத்தை எடுக்க துணிந்தான், ஆனால் என மனதில் உள்ள கடமை உணர்வும், நேர்மை உணர்வும் அச்செயலை புரிய, தடுத்தது. மாறாக, நான் அப்பணத்தை கையில் எணுத்துக்கொண்டு அக்கம் பக்கம் பார்த்தேன். சற்று தொலைவில், நான் ஒரு சீன முதியவரையும், ஒரு இந்திய ஊழியரையும் கண்டேன். அந்த ஐம்பது வெள்ளி யாருடையதாக இருக்கும் என்று ஓரே குழப்பமாக இருந்தது.
  என்ன வழிதான் இருக்கிறது? காவல் நிலையத்திற்குச் சென்று கொடுத்துவிடலாம். ஆனால், அனைத்து காவலர்களும் நேர்தமையானவர்கள் என்று என்ன உறுதி? தொலைவில் இருக்கும் இரண்டு பேரை அது தங்களுடையதா கேட்கலாம். ஆனால், அவர்கள் உண்மையை கூறாமல், பணத்தை உரிமை கொண்டாடலாம் அள்ளவா? இது போல், எனக்கு பல யோசனைகள் தோன்றியது. நான் ஒன்றை செயல்படுத்தினேன்.
  நான் அவ்விருவரின் முன் சென்று, அந்த ஐம்பது வெள்ளி காசை தெரியாமல் கீழே போட்டுவிட்டதுப் போல் நடித்தான். நான் உடனே ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிற்துக் கொண்டேன். நான் கவனித்துப் பார்த்தால், சீன முதியவரோ, அவரால் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக அந்த பணத்தை நோக்கில் சென்றார். ஆனால், அந்த இந்திய ஊழியர் உடனே தன் பணப்பையை எடுத்துப் பார்த்தார். அவர், தன் பணப்பையில் தன்னுடைய பணம் இருக்கிறதாக என்று பார்த்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். இச்செயலிலே, அந்த பணம், இந்திய ஊழியரது என்று தெரிந்துவிட்டது.
  நாம் என்ரும் மற்றவரின் பொருள் மீது ஆசைப் படக்கூடாது, பேராசையும் கூடாது.
  -நிஷாந்தி(2A1)
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 13. வழியில் கிடந்த பணம்
  பள்ளி முடிந்தவுடன் நான் சோர்வுடன் வீட்டிற்கு திரும்பினேன். அப்போதுதான் நான் புல்தரையில் ஒரு ஐம்பது வெள்ளி பணத்தை பார்த்தேன். யாரும் அருகிலும் இல்லை. நிமர்ந்து பார்த்தவுடன் சற்று தொலைவில் ஒரு சின மூதாட்டியும், ஒரு இந்திய ஊழியரும் நடந்து செல்வதை கவனித்தேன். எனக்கு மிக குழப்பமாகிவிட்டது. நான் இந்த பணத்தை என்னுடன்வைத்துக்கொள்வது சரியில்லை. ஆனால், பார்த்துவிட்டு பார்காத போல கவலையில்லாமலும் செல்லக்கூடாது. எனக்கு முன்பு செல்லும் இருவரில் ஒருவருடைய பணமாகதான் இருக்கும் என்று நான் முடிவு எடுத்தேன். இப்போது என் கேள்வி இந்த பணம் யாருடையது என்பதை முடிவு எடுப்பதே ஆகும். அதனால் அவர்கள் இருவரிடமும் சென்று பணம் ஏதும் காணவில்லையா என்று வினாவினேன். மூதாட்டி “ஆம்! என் பணம் காணவில்லை, நான் எவ்வாறு சாப்பிடுவேன்?” என்று புலம்பினார்.
  “அகத்தின் அழகு முகததில் தெரியும்”
  என்பதற்கு ஏற்ற மாதிரி அவருடைய முகம் வாடி இருந்தது. உண்மையிலும் அவர் பணம் தானா என்பதை உறுதி செய்ய ஒரு சில கேள்விகள் கேட்டேன். அந்த கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் கூறியதால் பணம் அவருடையதுதான் என்று தீர்மானித்து, மூதாட்டியிடம் ஓப்படைத்தேன். அவருடைய முகம் சூரியனைக் கண்ட தாமரையைப் போல் மலர்நதது. நானும் மகிழ்ச்சியுடனும் மன நிமதியுடன் வீட்டிற்கு தொடர்ந்து திரும்பினேன்.
  வசுமதி – 2A1
  கிளமெண்டி டவுன் உயர்நிலை பள்ளி

 14. ஐந்து அல்ல, பத்து அல்ல, ஐம்பது வெள்ளி! அதை கையில் எடுத்துக்கொண்டு சிலைப் போல் நின்றேன். சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும் இந்திய ஊழியரும் நடந்து சென்று கொண்டிருந்ததை கண்டேன். சற்றும் யோசிக்காமல் அவர்களிடம் சென்று அப்பணம் அவர்களுடையதா என்று கேட்டேன். அதிசயமாக அது அவர்களுடையது இல்லை என்று கூறினர். என் ஆச்சரியத்திற்கு அளவில்லை. வேறு வழியின்றி எடுத்த இடத்தில் வைக்க சென்றேன். அதன் உரிமையாளர் அதை கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கையில் வைக்க சென்றேன். அத்தருணத்தில் ஒரு மலாய் ஆடவர்,” திருடன்! திருடன்!” என்று அலறிக்கொண்டே என்னை நோக்கி ஓடினார்.என் மனம் ‘படக்! படக்!’ என்று தாளம் போட்டது. என் கையை பிடித்து” என் ஐம்பது வெள்ளியை திருடியுள்ளான்!” என்று தொண்டை கிழிய கத்தினார். என்ன செய்வதறியாமல் நின்றேன். அந்த பதற்றத்தை கேட்ட முதியவரும் ஊழியரும் களத்திற்க்குள் நுழைந்தனர். நான் பணத்தை திருடவில்லை என்று அந்த ஆடவரிடம் எடுத்து கூறினார். அவர்கள் செய்த உதவிக்கு நான் நன்றி கூறினேன். அந்த ஆடவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அந்நாள் என் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.
  கேசவ் 2B1
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 15. வழியில் கிடந்த பணம்
  அன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நேரம், கதிரவனின் ஒளிகீற்று தகதக என்று மன்னியது. நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். மனது மகிழ்ச்சியில் கரைபுரண்டு ஒடியது. அதற்கு காரணம் என் பிறந்தநாள் அன்று, அதுவும் இம்முறை வார இறுதி நாட்களில் வருகிறது. என் அப்பா என் பிறந்தநாள் பரிசாக நூறு வெள்ளி நோட்டை அன்பளிப்பாக முன்கூட்டியே கொடுத்து, அம்மாவுடன் சென்று வேண்டிய பொருளை வாங்கிக் கொள்ள சொன்னார்.
  எனவே இரட்டிப்பு மகிழ்ச்சியில் ‘என்ன வாங்கலாம்?’ என்று யோசித்தப்படி ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை முணுமுணுத்தப்படி நடந்து செல்லும்போது என் காலில் ஏதோ தட்டுப்பட்டது. ‘ஆகா! என்ன ஆச்சரியம்!’ கீழே ஐம்பது வெள்ளி நோட்டு ஒன்று கிடந்தது.
  எனக்கு கடவுளும் பிறந்தநாள் பரிசு கொடுதத்துவிட்டார் என்று மனதிற்குள் எண்ணியவாறு அதை எடுத்து ‘இதில் என்ன வாங்கலாம்?’ என்று யோசிக்க தொடங்கினேன். அடுத்த நொடியே நான் நினைப்பது தவறு என்று என் மனம் கூறியது. கூடவே என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த,
  உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
  கள்ளத்தால் கள்வோம் எனல்
  என்னும் திருக்குறளும். அடுத்தவர் பொருளை நாம் எடுக்க நினைததாலே தீமையுண்டாகும் என்னும் அதன் கருத்தும் நினைவுக்கு வந்தது.
  நோட்டை கையில் வைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் கண்ணைச் சுழலவிட்டேன். எனக்கு சற்று தொலைவில் ஒரு இந்திய ஊழியரும், ஒரு சீன முதியவரும் சென்று கொண்டிருந்தனர். இவர்களில் யாரோ ஒருவர்தான் பணத்தை தவற விட்டு இருக்கவேண்டும் என்று எண்ணியவாறு அவர்களை நோக்கி நடந்தேன்.
  ஆனால் மனதிற்குள் குழப்பம் பணம் யாருடையது என்பதை எவ்வாறு கண்டறிவது? நேரடியாக கேட்டால், இருவரும் தங்களுடையது என்றால் என் செய்வது? என்று எண்ணியபடி நடந்த எனக்கு அப்பா கொடுத்த நூறுவெள்ளி பணம் என்னுடைய பையில் இருப்பது நினைவுக்கு வர யோசனை தட்டுப்பட்டது.
  அவர்களின் அருகில் சென்றதும், ‘ஐயா ஒரு நிமிடம்’ என்றதும். இருவருமே நின்று என்னைப் பார்த்தனர். மேலும், நான் அவர்களிடம் ‘ஐயா உங்கள் இருவரில் ஒருவர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்டவுடன் இந்திய ஊழியர் ‘என்ன வேண்டும் தம்பி?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஐயா! என் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளார்கள் நான் என் பாட்டிக்கு பள்ளி முடிந்து வரும்போது, பழங்கள் வாங்கி வருவதாக கூறியிருந்தேன். ஆனால், சில்லரை கொண்டு வர மறந்துவிட்டேன். என்னிடம் உள்ள நூறு வெள்ளிக்கு யாராவது ஒருவர் சில்லரைக் கொடுத்து உதவ முடியுமா? என்று கேட்டேன்.
  அதற்கு இந்திய ஊழியர் ‘தம்பி என்னிடம் அவ்வளவு தொகை இல்லை, மன்னித்துவிடு’ என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஆனால் சீன முதியவரோ ‘தம்பி, நான் இப்போதுதான் என் மனைவியை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காக தானியங்கி இயந்திரத்தில் இருநூறு வெள்ளி பணம் எடுத்து வந்தேன். நான் உன்னுடைய நூறு வெள்ளிக்கு இரண்டு ஐம்பது வெள்ளி நோட்டாகத் தருகிறேன்’ என்று கூறினார்.
  பைக்குள் கைவிட்ட அவர் முகம் அதிர்ச்சி அடைந்தது. ‘ஐயா என்னவாயிற்று’ என்று நான் வினவினேன். அதற்கு முதியவர் ‘தம்பி நான் நான்கு ஐம்பது வெள்ளி நோட்டுக்களை வைத்திருந்தேன். இப்போது மூன்றுதான் உள்ளது. ஓன்றைக் காணவில்லை’ என்று பதற்றத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து தேட ஆரம்பித்தார்.
  சற்றுத் தூரம் சென்றதும், இங்கு நான் வந்தப்போது தான் என் தொலைபேசி ஒலிந்தது. பையிலிந்து தொலைபேசியை எடுக்கும்போது, பணத்தை தவற விட்டிருக்கலாம் என்று கூறிவிட்டு தேட ஆரம்பித்தார்.
  அப்போது நான் அவரிடம் ‘ஐயா! பதற்றம் வேண்டாம். உங்கள் நோட்டு இந்தச் செடிக்கு அருகில் கிடந்தது. நான் யாருடையது என்பதை அறியவே உங்கள் இருவரிடமும் சில்லறைக் கேட்டேன். இதோ உங்கள் பணம் என்று அவரிடம் கொடுத்தேன்.
  பணத்தை பார்த்ததும் பெரியவரின் முகம் நிம்மதி அடைந்தது. மிகவும நன்றி தம்பி’ என்று அவர் என்னிடம் கூறியதுடன் நீ வாழ்க்கையில் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்று ஆசி கூறிவிட்டு நகர்ந்தார்.
  எனக்கு அந்த பிறந்தநாள் மிகவும் மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்தது. ‘அறம் செய்ய விரும்பு’ என்னும் ஆத்திசுசூடிக்கு ஏற்ப நான் இன்னும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
  விஷ்ணு -2B
  பொங்கோல் உயர்நிலை பள்ளி
  PUNGGOL SECONDARY SCHOOL

 16. ஆசை
  அன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து கொண்டிருந்த எனது சீருடை, வியர்வையால் தோய்க்கப்பட்டிருந்தது. “ஒரு வெள்ளி இருந்தால் ஒரு குளிர் பானம் வாங்கியிருக்கலாமே,” என்று தாகத்துடன் நான் யோசித்தேன்.
  அன்று என்னவோ தெய்வம் என் பக்கம் அவரின் காதை திருப்பிக் கொண்டிருந்தார் போல் இருந்தது. நடந்து கொண்டிருந்த வழியில் ஒரு ஐம்பது வெள்ளி கிடந்தது என் கண்களில் தென்பட்டது. அதை கண்டவுடன் என் கண்கள் நூறு வாட் விளக்குகளைப் போல மின்னின. நான், தொட்டால் மறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதை ஒரு பலவீனமான கண்ணாடித் துண்டைத் தூக்குவது போல மெதுவாக தூக்கிப் பார்த்தேன். ‘ஆண்டவா! ஒரு வெள்ளியைக் கேட்டேன், ஆனால் ஐம்பது வெள்ளியைத் தந்த உன் பெரிய மனதை எப்படிப் பாராட்டுவது?’ என்று யோசித்துக் கொண்டே புத்துணர்ச்சியுடன் என் வழியில் சென்றேன்.
  சிறிது தூரம் சென்றதும் ஒரு எனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த ஒரு சீன முதியவரைப் பார்த்தேன். “இது அவருடைய பணமாக இருக்குமோ!’ எனக் குழப்பமாக இருந்தது. என் கையில் இருந்த பணத்தை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். முன்னால் சென்றுகொண்டிருந்த முதியவர் திடீரென நின்றார். தன் சட்டைப் பைகளைத் தடவித் தடவிப் பார்த்தார். அவரது முகத்தில் பதட்டம் தெரிந்தது. என் கையில் இருப்பது அவர் பணம் தான் என்று புரிந்தது. ஒரு பக்கம் என் மனசாட்சி அவரிடம் கொடுத்துவிடு என்று கூற, மறு பக்கம் என் தாகம்,
  “இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. எதுவும் தெரியாதது போல நடந்து போ! குளிர் பானம் மட்டுமல்ல, இன்னும் நிறைய பொருள்களை வாங்கலாம்” என்றது.
  அப்பொழுது, ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. நான் இந்த தவற்றை செய்தால் மீண்டும் மீண்டும் பிறரின் பொருளை அபகரிக்கத் தோன்றும். ‘பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்’ நான் திருடனாகி சிறைக்குச் சென்றால் . . . யோசிக்கவே நடுக்கமாக இருந்தது. விடுவிடுவென நடந்து, அந்த முதியவரிடம் பணத்தைக் கொடுத்தேன். அவர் முகத்தில் தோன்றிய புன்னகை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
  ரித்திகா – 2/6
  யீஷுன் டவுன் உயர்நிலை பள்ளி
  Yishun Town Secondary School

 17. வழியில் கிடைத்த பணம்
  பணம் நிரந்தரம் அல்ல நற்குணமே நிரந்தரம். பணத்தை கொடுத்தால், நற்குணத்தை வாங்க இயலாது. நம் பொருளை நாம் உணர்ந்து வாங்கினால் அது நம்மிடமே வந்து சேரும்.
  வீட்டிற்கு சென்றுக்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு பணப்பை கிடந்தது. அதில் ஐம்பது வெள்ளி இருந்தது. அந்த ஐம்பது வெள்ளியை வைத்து என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருக்கும்போது ஒரு சத்தம் கேட்டது.
  உடனே நான் அப்பணத்தை எடுத்துக்கொண்டு அச்சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றேன். அங்கே என் தோழன் அகிலன் அடிப்பட்டு தரையில் வலியில் துடித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கும் எனக்கும் கையடக்கத் தொலைப்பேசி இல்லாததால் அவனை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றேன். அவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த ஐம்பது வெள்ளியை செலவழித்தேன். சிகிச்சைக்குப் பிறகு அவனிடம் என்ன ஆயிற்று என்று கேட்டேன். அவன் தன்னுடைய பணப்பையைத் தொலைத்ததாகவும் அதில் ஐம்பது வெள்ளி இருந்ததாகவும் கூறினான். அதை தேடும் முயற்சியில் தான் விழுந்துவிட்டதாக கூறினான். அவனிடம் பூங்காவில் கிடைத்த பணப்பையைக் காட்டினேன். அதைப் பார்த்த மகிழ்ச்சியில் அவன் அதைக் கட்டி அணைத்து என்னிடம் நன்றி கூறினான். பிறகு அவன் பணப்பையில் இருந்த ஐம்பது வெள்ளியைப் பற்றி விசரித்தான். அவனுடைய சிகிச்சைக்காக அந்தப் பணத்தை செலவழித்தாக கூறினேன். அதற்கு அவன் நன்றி கூறிவிட்டு வீட்டிற்கு சென்றான்.
  ஷண்முகநாதன்
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 18. ஆதவன் தன் செங்கதிர்களை நீட்டிய காலை நேரம் . குயில்கள் மரத்திலிருந்து ‘கீச், கீச்’ என்று சத்தமிட்டன. மரங்கள் காற்றில் தலையசைத்தன. பூக்கள் அனைத்தும் பூத்து குலுங்கின. நான் வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்ப ஆரம்பித்தேன்.
  நான் பள்ளிக்கு செல்ல நேரமாகிவிட்டதால் என் நடையைத் துரிதப்படுத்தினேன். இறுதியாக நான் என் பள்ளியின் வாசலை அடைந்தேன். அப்போது ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. அருகில் சென்றுப்பார்த்தபோது அங்கே ஒரு ஐம்பது வெள்ளி ரொக்கமாக இருந்தது. அந்த ஐம்பது வெள்ளி ரொக்கத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஐயயம் ஏற்பட்டது. அது எப்படி… ஒரு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அவ்வளவு உயர்ந்த ரொக்கத்தைக் கொண்டு வருவார்கள் என்பது தான் ஏன் ஐயம். பிறகு அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது. என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
  அப்போதுதான் என் ஆசிரியர் கூறிய பழமொழி நினைவுக்கு வந்தது. அந்த பழமொழி என்னவென்றால் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது அதன் பொருகள். இன்று நல்லதை செய்தால் நாளை நமக்கு நல்லது நடக்கும். அதற்கு பதிலாக தீய செயலைச் செய்தால் நாளை நமக்கும் தீயது நடக்கும். இதை மனதில் கொண்டு உடம்பில் உள்ள அனைத்து சக்தியையும் திரட்டிக்கொண்டு காவல் நிலையத்தை நோக்கி ஓடினேன்.
  காவல் நிலையத்தில் ஒரு மூதாட்டி காவல் அதிகாரியிடம் முறையாக புகார் செய்துகொண்டிருந்தார். நான் அதே அதிகாரியிடம் ஐம்பது வெள்ளி ரொக்கத்தை ஒப்படைத்தேன் அதைப்பார்த்த அதிகாரியின் முகத்திலும் அந்த மூதாட்டியின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கண்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
  பிறகு அந்த அதிகாரி என்னிடம் அனைத்தையும் விளக்கினார். நீ இப்போது கொடுத்த பணம் இந்த மூதாட்டிக்கு உரியது. நல்லவேளை நல்ல மனதுடைய உன்னிடம் அந்த பணம் கிடைத்தது. என்றார். அப்போது அந்த மூதாட்டியின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பொங்கி வழிந்தது. நான் மன நிறைவுடன் பள்ளிக்குச் சென்றேன். அன்று பள்ளிக்கு தாமதமாக சென்றேன். பின்னார் ஏன் தாமதம் என்ற காரணத்தை விளக்கினேன். இதனை அறிந்த துறைத்தலைவர் என்னைப் பாராட்டி எனக்கு உதவியாளம் என்ற பட்டத்தை அளித்தார். நான் உல்லாச வானில் சிறகடித்து பறந்தேன். எனக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது.
  மகன் தந்தைக்குகாற்றும் உதவி இவன்தந்தை
  என்னூற்றான் கொள்எனும் சொல்’
  இதை நினைத்து என் பெற்றோர்கள் ஆனந்தம் அடைவர்கள் என்று நம்புகிறேன்.
  ஸ்ரீநிதி
  PUNGGOL SECONDARY SCHOOL

 19. அன்று வெள்ளிக்கிழமை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் பள்ளி முடிந்தவுடன், வீட்டிற்கு செல்ல முற்படும்பொழுது, என் மனதில் ஓடும் அதே வழக்கமான வார இறுதி திட்டங்களை அசைப்போட்டுக்கொண்டு களைப்புடன் நடத்துக்கொண்டிருந்தேன்.
  பள்ளியிலிருந்து என் வீட்டிற்கு நடைபாதையில் செல்ல இருபது நிமிடங்கள் ஆகும். அசதியும் சோர்வும் மறக்கும் வண்ணம் நான் நடந்து செல்கின்ற பாதையில் ஆங்காங்கே பச்சைப்பசேலாக காட்சியளிக்கும் செடி கொடிகளும், மரங்களும் அதிலுள்ள பறவைகளின் ரீங்காரமும், மழை வருவதுபோல் பயம் காட்டும் வான்மேகங்களும் எனது களைப்புத்தெரியாமல் இருப்பதற்கு என்றுமே உதவும்.
  வீடு செல்கின்ற இந்த பயணத்தில் ஒரு குறுகிய பாதையின் வழியே நுழைந்தவுடன் சற்றும் நான் எதிர்ப்பாராத விதமாக அங்கு கீழே ஒரு பொருள் கிடத்த்தைக் கவனித்தேன், அருகில் சென்று உற்றுப் பார்த்தேன். அது ஒரு கைப்பையை போலக் காட்சியளித்தது. ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும் இந்தப்பையை யாரோ தவறவிட்டிருப்பார்களோ என்ற சிந்தையில் வேகமாக சுற்றும் முற்றும் பார்த்தேன், யாராவது எதையாவது தொலைத்ததைத் தேடிக்கொண்டிருக்கிறார்களா? என்று என் பார்வைக்கெட்டியவரை அங்கு யாரும் இல்லை. அதை கையில் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். என் ஆர்வக்கோளாறு அந்தப் பைக்குள் என்ன இருக்கும் என்று சிந்தித்தது. தவறில்லை என்று அப்பையைத் திறந்துப் பார்த்தேன். பெரிய அதிர்ச்சி! ஆம்! பணமேதான்!
  ஐம்பது வெள்ளித் தாள்களை கொத்தாக மடித்து வைக்கப்பட்டிருந்தது. எவ்வளவு தொகை இருக்கிறது என்று எண்ணிப்பார்க்க தோன்றவில்லை, ஆனால் அதன் கனம் ஆயிரம் வெள்ளியாவது இருக்கும் என்று தோன்றியது. என் கால்கள் சற்று வேகமாகவே நடக்கத் தொடங்கியது. அருகில் இருந்த காவல் நிலையத்திற்குள் வேகமாக சென்றேன்.
  காவலர் ஒருவரிடம் பதற்றத்துடன் நடந்தவற்றைக் கூறி பணப்பையை ஒப்படைத்தேன். அப்பொழுது. காவலர் என் முன்னிலையிலேயே அங்கு முகவாட்டத்துடன் அமர்ந்திருந்த முதியவரை அழைத்தார். அவரிடம். ‘ஐயா! இது நீங்களை சற்றுமுன் தொலைத்த பணப்பையா? பாருங்கள்’ என்றார். வேகமாக பணப்பையைப் பிடுங்கிய வண்ணம் பெரியவர் அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.
  முதியவரின் முகத்தில் நான் பார்த்த களிப்பு என் மனதிற்கு பெரிய நிம்மதியை அளித்தது. அப்பையை அவர் சரிபார்த்துக்கொண்டே என்னிடம் ‘மகளே! இப்பணம் என் மனைவியின் மருத்துவ செலவிற்காக நான் தானியக்க இயந்திரத்திலிருந்து எடுத்து வரும் வழியில் தவறவிட்டேன்’ என்று கூறினார். என்னை ஆசி கூறி நன்றிகளைத் தெரிவித்தார்.
  ‘மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
  தானஞ்செய் வாரின் தலை’
  என்கின்ற திருவள்ளுவரின் கூற்றுபடி மனத்தொடு பொருந்திய உண்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன் தவத்தோடு தானமும் செய்பவர்களை விட சிறந்தவன் ஆவான் என்று நான் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.
  தனுஸ்ஸ்ரீ
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 20. அன்று நடந்த சம்பவத்தை இன்னும் நினைத்து நான் பூரித்தேன் அன்று என் வாழ்க்கையின், ஒரு திருப்பு முனையான நிகழ்வாக அமைந்தது. நான் அன்று செய்த நல்ல காரியத்தை நினைத்து பெருமைப்பட்டேன்.
  இணைப்பாட நடவடிக்கையை முடிந்து, பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். மணி மாலை 6.30 இருக்கும். சூரியனுக்குத் தூக்கம் வந்துவிட்டது. கண்களை மெதுவாக மூட ஆரம்பித்தான். நானும் என் கண்களை மூட மிகவும் ஏங்கினேன். ஆனால் பள்ளி வேலைகள் இருந்தன, அதை எல்லாம் முடிக்க வேண்டும். என் வாழ்கையில் நடந்த சந்தோஷமான நிகழ்வுகளை நினைத்து நடந்தேன். அப்போது நடந்து கொண்டிருந்தபோது, ஒரு நீல ஐம்பது டாலர் பணத்தைப் பார்த்தேன். அது வேறு எங்காவது காற்றில் பறக்கும் முன், அதை நான் எடுத்தேன், அத்தருணம், எனக்கு எதுவும் தோன்றிவில்லை, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என நினைத்தேன். பல நாட்களாக, நான் ஒரு புது பையை வாங்க ஆசைப்பட்டேன். ஆனால் அந்த மாதம் மட்டும், என் குடும்பம் சில நிதி சிக்கல்களைச் சந்தித்தன. அதனால் வாங்கித்தர முடியாது என என் பெற்றோர்கள் கூறினார்கள். இனை நினைத்து சிறிது நாட்களுக்கு நான் அனிச்சம் மலரைப் போல வாட்டமான முகத்துடன் காணப்பட்டேன். அந்த நேரத்தில் கிடைத்த பணத்தை எண்ணி பூரித்தேன்.
  நான் ஆசைப்பட்டதை கடைசியாக வாங்க முடிந்தது என நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். பணத்தை என் பணப்பையில் வைத்து, சந்தோஷமாக வீட்டை அடைந்தேன். பணப்பையைத் திறந்து அந்த $50 பணத்தைப் பார்த்து முகம் மலர்ந்தேன். படிப்பறையில் உட்கார்ந்து, படிக்க தொடங்கும்போது, யாரோ என்னை அழைத்தார். ஆனால் வீடு அமைதியாக இருந்தது. திடீரென்று, ஒரு சிறிய வெள்ளை தேவதை என் கண் முன் தோன்றியது ‘நீ செய்வது எல்லாம் சரியா ரீனா? என அதன் கைகளைத் தட்டி என்னைக் கேட்டது. நான் எதுவும் நடக்காதது போல் செயல்பட்டேன். ‘நான் எதுவும் செய்யவில்லையே’ என்று பதிலளித்தேன். நான் உண்மையைக் கூறவில்லை என தேவதை கண்டுபிடித்தது.
  அடுத்து, ஒரு சிறிய சிவப்பு சாத்தான், தேவதை பக்கத்தில் தோன்றியது. நான் நன்றாக குழப்பமடைந்தேன். ‘முதலில் நீங்கள் யார்? இங்கு என்ன பண்றீங்க? என கோபத்துடன் கேட்டேன். ‘சற்று காத்திரு, உன்னுடைய கேள்விக்கு நீயே பதில் கண்டுபிடிப்பாய்’ என்று தேவதைக் கூறியது. சாத்தான் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து என்னை பார்த்துகொண்டிருந்தது. ‘நீ செய்தது சரியா? என்று மறுபடியும் கேட்டது.
  ‘மற்றவர்களின் பணத்தை நீ செலவழிக்கிறாயா? அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்று உனக்கு தெரியுமா? என்று தேவதைக் கேட்டது. ‘யாரோ ஒருவர் கவனக்குறைவாக இருப்பதற்கு ரீனா என்ன செய்ய முடியும்? என்று எதிர்ப்பதமாக சாத்தான் கேட்டது. இந்த மாதம் உன் குடும்பம் ஏற்கனவே நிதி சிக்கல்களில் மாட்டி கொண்டது. உன் அப்பா கடன்களை அடைக்க எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என தெரியுமா? ஒரு ஐம்பது டாலரை தொலைத்துவிட்டால், அவர் எவ்வளவு வேதனைப்படுவார் என உனக்கு தெரியுமா?’ என்று தேவதைக் கேள்விகளைக் கேட்டது. என் முகம் சுருங்கியது. தேவதை கேள்விகளை கேட்கும்போது, என்னுள் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. ‘நான் எதுவும் பேசவில்லை, ‘இதை ரீனா மட்டும் செய்வதில்லை, உலகத்தில் மற்றவர்களும் தான் இதைப்போல் செய்கிறார்கள். யாரும் சரியானவர் இல்லை’ ‘ரீனா பை வாங்கணும் என் ஆசைப்படுகிறாள். இது அவளுக்கு நல்ல வாய்ப்பு’ என்று சாத்தான் உற்சாகப்படுத்தினான். பணத்தைப் படுத்திகொள்ள சாத்தான் என்னைத் தூண்டினான். அவள் சொன்னதிலும் உண்மை இருந்தது. ‘நிறுத்து சாத்தான்’! ஒருவர் அவன் தூக்கத்தை எல்லாம் தியாகம் செய்து, வேலை செய்து, சம்பாதிப்பான்; நீ அதை சுலபமாக செலவு செய்வாய்? என்று தேவதைக் ஆத்திரமாக கேட்டது. ‘இந்த பணத்தை வைத்து, ஒருவர் தனது உணவிற்குப் பயன்படுத்தலாம், இதற்கு பெயர் ஆசைப்படுவதில்லை, பேராசைபடுவது’! என்று தேவதை கூறியது. நான் செய்தது மிகவும் தவறு என்று அப்போது நன்றாக உணர்ந்தேன். என்க்குள் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. என்னை நினைத்து, நான் வெட்கப்பட்டேன். ‘ரீனா! இது ஒரு லூசு! தேவதைச் சொல்வதை நீ எதுவும் காதில் வாக்கிகொள்ளதே! இதை விட்டால், உனக்கு வேறு வாய்ப்பு கிடைக்காது’! என்று சாத்தான் தூண்டினான். தேவதை என்னைப் பார்த்து முறைத்தது. ‘உனக்கே எல்லாம் தெரியும், உன் குடும்பத்தினர் இந்த மாதம் கடன்களை கட்டிகொண்டு இருக்கிறார்கள், அதனால்தான், உனக்கு வாங்கி தரவில்லை’? ‘நீ கேட்டதை எதையாவது வாங்கி தராமல் இருந்திருக்கிறார்களா? என்று தேவதைக் கேட்டது. இதை எல்லாம் கேட்கும்போது, என் குற்ற உணர்ச்சி அதிகரித்தது. ஆனால் சாத்தான் என்னை தூண்டினான்.
  என் தம்பி விகாஷ், அப்போது கதவைத் திறந்தான். சாத்தானும் தேவதையும் மறைந்தது. அவன் என் அறையை சுற்றும் முற்றம் பார்த்து, கதவைச் சாத்தினான். சாத்தானும் தேவதையும் பின்னர் வரவில்லை. தேவதை சொன்னது எல்லாம் எனக்கு உறைத்தது. அது சென்ற பிறகும், என் குற்ற உணர்ச்சி போகவில்லை. என் மனதிலே இருந்தது. பணப்பையிலிருந்த பணத்தை பார்ததேன். என்னை நினைத்து வெட்கப்பட்டேன். அவமானமாக உணர்ந்தேன். நான் செய்த காரியத்தை எண்ணி நான் வருந்தினேன்.
  மறுநாள், காலையில் எழுந்தவுடன், அன்றைக்கு அந்த ஐம்பது டாலர் பணத்தை பள்ளியில் தந்துவிடவேண்டும் என முடிவு எடுத்தேன். பள்ளியை அடைந்தது, நான் பொது அலுவலகம் சென்றேன். ‘மற்றவர்களின் உழைப்பை நான் எடுக்க விரும்பவில்லை, ‘ என்று மனதில் நினைத்துக்கொண்டு, பணத்தை வெளியே எடுத்தேன். அங்கு இருந்த ஆசிரியரிடம், பணத்தை நான் கண்டுபிடித்தாக கூறினேன். பின், பணத்தை ஒப்படைத்தேன். அவர் என்னை பார்த்து, புன்னைகை அளித்தார். அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது, என்னை நினைத்து நான் பெருமைப்பட்டேன்.
  ரீனா
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 21. அன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நேரம், கதிரவனின் ஒளிகீற்று தகதக என்று மன்னியது. நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். மனது மகிழ்ச்சியில் கரைபுரண்டு ஒடியது. அதற்கு காரணம் என் பிறந்தநாள் அன்று, அதுவும் இம்முறை வார இறுதி நாட்களில் வருகிறது. என் அப்பா என் பிறந்தநாள் பரிசாக நூறு வெள்ளி நோட்டை அன்பளிப்பாக முன்கூட்டியே கொடுத்து, அம்மாவுடன் சென்று வேண்டிய பொருளை வாங்கிக் கொள்ள சொன்னார்.
  எனவே இரட்டிப்பு மகிழ்ச்சியில் ‘என்ன வாங்கலாம்?’ என்று யோசித்தப்படி ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை முணுமுணுத்தப்படி நடந்து செல்லும்போது என் காலில் ஏதோ தட்டுப்பட்டது. ‘ஆகா! என்ன ஆச்சரியம்!’ கீழே ஐம்பது வெள்ளி நோட்டு ஒன்று கிடந்தது.
  எனக்கு கடவுளும் பிறந்தநாள் பரிசு கொடுதத்துவிட்டார் னெறு மனதிற்குள் எண்ணியவாறு அதை எடுத்து ‘இதில் என்ன வாங்கலாம்?’ என்று யோசிக்க தொடங்கினேன். அடுத்த நொடியே நான் நினைப்பது தவறு என்று என் மனம் கூறியது. கூடவே என் ஆசிரியர் சொல்லிக் கொண்டுத்த,
  உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
  கள்ளத்தால் கள்வோம் எனல்
  என்னும் திருக்குறளும். அடுத்தவர் பொருளை நாம் எடுக்க நினைததாலே தீமையுண்டாகும் என்னும் அதன் கருத்தும் நினைவுக்கு வந்தது.
  நோட்டை கையில் வைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் கண்ணைச் சுழலவிட்டேன். எனக்கு சற்று தொலைவில் ஒரு இந்திய ஊழியரும், ஒரு சீன முதியவரும் சென்று கொண்டிருந்தனர். இவர்களில் யாரோ ஒருவர்தான் பணத்தை தவற விட்டு இருக்கவேண்டும் என்று எண்ணியவாறு அவர்களை நோக்கி நடந்தேன்.
  ஆனால் மனதிற்குள் குழப்பம் பணம் யாருடையது என்பதை எவ்வாறு கண்டறிவது? நேரடியாக கேட்டால், இருவரும் தங்களுடையது என்றால் என் செய்வது? என்று எண்ணியபடி நடந்த எனக்கு அப்பா கொடுத்த நூறுவெள்ளி பணம் என்னுடைய பையில் இருப்பது நினைவுக்கு வர யோசனை தட்டுப்பட்டது.
  அவர்களின் அருகில் சென்றதும், ‘ஐயா ஒரு நிமிடம்’ என்றதும். இருவருமே நின்று என்னைப் பார்த்தனர். மேலும், நான் அவர்களிடம் ‘ஐயா உங்கள் இருவரில் ஒருவர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்டவுடன் இந்திய ஊழியர் ‘என்ன வேண்டும் தம்பி?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஐயா! என் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளார்கள் நான் என் பாட்டிக்கு பள்ளி முடிந்து வரும்போது, பழங்கள் வாங்கி வருவதாக கூறியிருந்தேன். ஆனால், சில்லரை கொண்டு வர மறந்துவிட்டேன். என்னிடம் உள்ள நூறு வெள்ளிக்கு யாராவது ஒருவர் சில்லரைக் கொடுத்து உதவ முடியுமா? என்று கேட்டேன்.
  அதற்கு இந்திய ஊழியர் ‘தம்பி என்னிடம் அவ்வளவு தொகை இல்லை, மன்னித்துவிடு’ என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஆனால் சீன முதியவரோ ‘தம்பி, நான் இப்போதுதான் என் மனைவியை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காக தானியங்கி இயந்திரத்தில் இருநூறு வெள்ளி பணம் எடுத்து வந்தேன். நான் உன்னுடைய நூறு வெள்ளிக்கு இரண்டு ஐம்பது வெள்ளி நோட்டாகத் தருகிறேன்’ என்று கூறினார்.
  பைக்குள் கைவிட்ட அவர் முகம் அதிர்ச்சி அடைந்தது. ‘ஐயா என்னவாயிற்று’ என்று நான் வினவினேன். அதற்கு முதியவர் ‘தம்பி நான் நான்கு ஐம்பது வெள்ளி நோட்டுக்களை வைத்திருந்தேன். இப்போது மூன்றுதான் உள்ளது. ஓன்றைக் காணவில்லை’ என்று பதற்றத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து தேட ஆரம்பித்தார்.
  சற்றுத் தூரம் சென்றதும், இங்கு நான் வந்தப்போது தான் என் தொலைபேசி ஒலிந்தது. பையிலிந்து தொலைபேசியை எடுக்கும்போது, பணத்தை தவற விட்டிருக்கலாம் என்று கூறிவிட்டு தேட ஆரம்பித்தார்.
  அப்போது நான் அவரிடம் ‘ஐயா! பதற்றம் வேண்டாம். உங்கள் நோட்டு இந்தச் செடிக்கு அருகில் கிடந்தது. நான் யாருடையது என்பதை அறியவே உங்கள் இருவரிடமும் சில்லறைக் கேட்டேன். இதோ உங்கள் பணம் என்று அவரிடம் கொடுத்தேன்.
  பணத்தை பார்த்ததும் பெரியவரின் முகம் நிம்மதி அடைந்தது. மிகவும நன்றி தம்பி’ என்று அவர் என்னிடம் கூறியதுடன் நீ வாழ்க்கையில் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்று ஆசி கூறிவிட்டு நகர்ந்தார்.
  எனக்கு அந்த பிறந்தநாள் மிகவும் மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்தது. ‘அறம் செய விரும்பு’ என்னும் ஆத்திசுசூடிக்கு ஏற்க நான் இன்னும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என்றத் தீர்மானத்துடன் வீட்டை நோக்கி நடக்க …
  விஷ்ணு
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*