வசந்தம், ஒலி 96.8 – பிடித்த நிகழ்ச்சி

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
வசந்தம் தொலைக்காட்சியில் பல்வேறு நல்ல  நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகின்றன. நாடகங்கள், தகவல் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று பலவற்றையும் தினமும் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. ஒலி 96.8 லும் பல நல்ல நிகழ்ச்சிகள். இவற்றுள், நீங்கள் பார்த்து அல்லது கேட்டு ரசித்த நிகழ்ச்சிகள் எவை? அவை ஏன் உங்களுக்குப் பிடித்தது? அதில் எந்த அம்சத்தை நீங்கள் அதிகம் ரசித்தீர்கள்? அவற்றுள், இதை இன்னும் மேம்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கும் விஷயம் ஏதாவது உண்டா? இப்படிப்பட்ட கருத்துகளை, ஒரு கட்டுரை வடிவில் எழுதி இங்கு பகிருங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 3  ஏப்ரல் 2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

8 கருத்துரை

 1. வசந்தத்தில் பல விதமான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அதில் எனக்குப் பிடித்தமான நிகழ்ச்சி என்னவென்றால், “இமயத்தை நோக்கி”. இந்த நிகழ்ச்சி பலரின் உண்மை கதைகளைக் காட்டுகிறது. அவர்களுடைய சவால்களை எப்படி எதிர்நோக்குகினார்கள் என்று கூறுவார்கள். இந்த நிகழ்ச்சி பல இளையர்களுக்கு ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும் இந்நிகழ்ச்சி ஊக்குவிப்பாக இருந்தது. ஒரு தொடரில், சீனப் பெண்மணி ஒருவர் பெற்றோர்கள் இல்லாததால், ஒரு தமிழ் குடும்பத்தினர் அவரைத் தத்தெடுத்தனர். அதனால், சிறிய வயது முதல் அவர் தமிழ் கற்றார். அவர் மற்ற பிள்ளைகளுக்குக் கற்பித்தார். அவர் ஒரு தமிழ் ஆசிரியாக வரவேண்டும் என்று விரும்பினார். அவர் தமிழ் ஆசிரியாக வருவதற்கான கல்வியைக் கற்றார். கடைசியில், அவர் ஒரு தமிழ் ஆசிரியர் ஆனார். அவருடைய விடாமுயற்சியால், அவர் அந்த பணியில் சேர்ந்தார். மேலும், அவர் மாணவர்களுக்கு நிறைய உதவிச் செய்தார். மாணவர்கள் தமிழில் சிறப்பாகச் செய்ய அல்லும் பகலும் உழைத்தார். மாணவர்களும் அவருடன் ஒற்றுமையாக இருந்தார்கள். கடைசியில், மாணவர்கள் தமிழில் சிறப்பாகச் செய்தனர் மற்றும் தமிழை நேசித்தார்கள். சமீபத்தில், அவருக்கு பக்கவாதம் வந்தது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல், அவர் இன்னும் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குக் சொல்லிக்கொடுக்கிறார். என் கடைசி மூச்சு உள்ள வரை நான் தமிழ் சொல்லிக் கொடுப்பதை நிறுத்த மாட்டேன் என்று அவர் சொன்னார். இதில் கூறப்படும் கதைகள் மூலம், தமிழ் மொழி மீதான என நேசிப்பு அதிகரித்தது. இளையர்களாகிய நாம் தமிழுக்கு என்ன செய்கிறோம்? தமிழுக்காக நானும் விடாமுயற்சி, கடின உழைப்பு,தன்னம்பிக்கை ஆகியவற்றை மேற்கொண்டு கண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்வேன்.

  வர்ஷா (Varsha)
  சூவா சு காங் உயர்நிலைப்பள்ளி (Chua Chu Kang Secondary School)

 2. வசந்தம் தொலைக்காட்சியில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி ரீல் மன்னன் ஆகும். பொதுவாக சினிமா தொடர்பான தகவல்களைக் கூறும்போது என்னைப் போன்ற இளையர்களை இந்த நிகழ்ச்சி மிகவும் கவர்கிறது. சனிக்கிழமை தோறும் இந்த நிகழ்ச்சியைக் காண எனக்கு மிகவும் ஆவலாக இருக்கும். சினிமா திரைப்படங்கள், அதில் நடித்த நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள், பாடல் ஆசிரியர், இயக்குநர்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் கூடுதலாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி எனக்கு வழங்குகிறது. ஒவ்வொரு வாரமும் புதிய சொற்களைத் தெரிந்து கொள்ளும்போது எனக்கு உற்சாகமாக இருக்கும். இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய இரு சொற்களின் வித்தியாசங்களைக் கற்றுக்கொடுத்தது இந்த ரீல் மன்னன்தான் . மேலும் ஒவ்வொரு திரைப்படத்தை எப்படி எல்லாம் கடினப்பட்டு உருவாக்கிறார்கள், எத்தனை பேரின் முயற்சியிலும், வேர்வையிலும் உருவாக்கப்படுகிறது என்பதை அழகாக விளக்குகிறது இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொகுப்பாளர் தகவல்களை மிக விறுவிறுப்பாகப் படைக்கும் விதம் என்னைக் கவர்ந்துள்ளது. அவர் தொலைக்காட்சி பிரபலங்களைப் பேட்டி காணும் விதம் மிக நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் இருப்பதால் நேரம் போவதே தெரிவதில்லை. எதிர்க்காலத்தில் நானும் இது போன்ற ஒரு விறுவிறுப்பான தமிழ் நிகழ்ச்சியின் படைப்பாளராக வேண்டும் என்பதே எனது குறிக்கோள். வசந்தம் தொலைக்காட்சி இது போன்ற சுவாரசியாமான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும்போது இளையர்களிடம் தமிழையும், நமது கலாச்சாரத்தையும் மிக விரைப்பாகக் கொண்டு சேர்க்கலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.
  கிரிட்டிஷா
  செங்காங் உயர்நிலை பள்ளி

 3. எனக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘ ஹாலோ ஹாலோ சுகமா’ என்பதாகும். வசந்தம் ஒளிவழியில் விழி மீது வழி வைத்து என்னைக் காக்க வைக்கும் ஒரு உன்னத படைப்பு. எதிர்க்காலத்தில் மருத்துவராக சேவையாற்ற வேண்டும் என்ற எனது குறிக்கோளுக்கு இந்த நிகழ்ச்சி நல்ல உரமாக அமைகிறது. குறிப்பாக நமது இந்திய சமூகத்தைப் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளையும் அதற்கேற்ற மருத்துவ ஆலோசனைகளையும் மிக அழகாக ஒவ்வொரு வாரமும் விளக்குகிறார்கள். அப்போது தான் நம் இந்தியர்களிடையே இருக்க கூடிய பல நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. மேலும், ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய முறை உடற்பயற்சியோ அல்லது நடனமா அறிமுகம் செய்கிறார்கள். படைப்பாளரின் துருதுருவென்று படைக்கும் பாணியால் நாமும் இது போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்ள முனைகிறோம். குத்து நடனம் மூலம் உடற்கொழுப்பைக் குறைக்கும் அங்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் மருத்துவ மற்றும் அறிவியல் தொடர்பான சொல்வளம் எனக்குத் தெரிய வருகிறது. இதனால் என்னால் கட்டுரையையும் மற்ற எழுத்துப்படைப்புகளையும் நன்றாக எழுத முடிகிறது. மேலும், என்னைப் போன்ற இளையர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பற்றி நன்றாக விளம்புகின்றது. இந்த நற்பழக்கங்கள் சிறுவயதிலேயே இருந்தால்தான் நமது இந்திய சமூக ஆரோக்கியம் மேம்படும்.
  அரவிந்தன்
  செங்காங் உயர்நிலை பள்ளி

 4. எனக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘ ஹாலோ ஹாலோ சுகமா’ என்பதாகும். வசந்தம் ஒளிவழியில் விழி மீது வழி வைத்து என்னைக் காக்க வைக்கும் ஒரு உன்னத படைப்பு. எதிர்க்காலத்தில் மருத்துவராக சேவையாற்ற வேண்டும் என்ற எனது குறிக்கோளுக்கு இந்த நிகழ்ச்சி நல்ல உரமாக அமைகிறது. குறிப்பாக நமது இந்திய சமூகத்தைப் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளையும் அதற்கேற்ற மருத்துவ ஆலோசனைகளையும் மிக அழகாக ஒவ்வொரு வாரமும் விளக்குகிறார்கள். அப்போது தான் நம் இந்தியர்களிடையே இருக்க கூடிய பல நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. மேலும், ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய முறை உடற்பயற்சியோ அல்லது நடனமா அறிமுகம் செய்கிறார்கள். படைப்பாளரின் துருதுருவென்று படைக்கும் பாணியால் நாமும் இது போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்ள முனைகிறோம். குத்து நடனம் மூலம் உடற்கொழுப்பைக் குறைக்கும் அங்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் மருத்துவ மற்றும் அறிவியல் தொடர்பான சொல்வளம் எனக்குத் தெரிய வருகிறது. இதனால் என்னால் கட்டுரையையும் மற்ற எழுத்துப்படைப்புகளையும் நன்றாக எழுத முடிகிறது. மேலும், என்னைப் போன்ற இளையர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பற்றி நன்றாக விளம்புகின்றது. இந்த நற்பழக்கங்கள் சிறுவயதிலேயே இருந்தால்தான் நமது இந்திய சமூக ஆரோக்கியம் மேம்படும்.
  அரவிந்தன்
  செங்காங் உயர்நிலை பள்ளி

 5. எனக்குப் பிடித்த நிகழ்ச்சி சுவை என்பதாகும். உணவு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் பல நாட்டுக்கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு உணவு வகைகள் மிக வித்தியாசமாக இருக்கும். அவற்றைப் பற்றியெல்லாம் இந்த நிகழ்ச்சியில் விளக்குகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு சமையல் நிபுணர் தனது உணவகத்தின் பிரசித்தி பெற்ற உணவை மிக எளிமையாகச் சமைத்துக் காட்டுவார். அதைப் பார்க்கும்போது எனக்கும் சமையல்கலையில் ஆர்வம் பொங்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்க கூடிய அழகு குறிப்புகளும் பகிர்ந்து கொள்வார்கள். பதின்ம வயதினாரக எனக்கு அவை மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளன.
  முகத்தின் சருமத்தை எப்படி பாதுக்காப்பது, அதற்கேற்ற உணவுகளை உண்பது போன்ற ஒரு அங்கம் என் மனதில் பசுமரத்தாணி போல அமைந்து விட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் கடைசி அங்கமாக ஒரு சமையல் அங்கம் உள்ளது. வசந்தம் தொலைகாட்சி கலைஞர்கள் இரு குழுவாகப் பிரிந்து கொண்டு போட்டிபோடுவார்கள். நகைச்சுவை மிக்க அரங்கமாக இருப்பதால் அது எனக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற சமையல் நிகழ்ச்சிகள் பொதுவாக இல்லத்தரசிகளையும் பெண்களையும்தான் கவரும். ஆனால், என்னைப் போல இளையர்களைக் கவரும் அம்சம் இந்த நிகழ்ச்சியில் உள்ளது. அதன் விறுவிறுப்பும் சுவாரசியமான பாணியில் படைக்கப்படும் விதமும்தான் இந்த நிகழ்ச்சி வெற்றிபெற காரணங்கள் என்று நான் நம்புகிறேன்.

  Rasyesa
  செங்காங் உயர்நிலை பள்ளி

 6. வசந்தம் தொலைகாட்சியில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகத் தொடர்கள் தினமும் ஒளிபரப்பாகின்றன.அதில் என்னை கவர்ந்தது “பிரபு தேவா” எனும் சிறுவர்களுக்கான நகைச்சுவை நாடகத் தொடராகும்.அத்தொடர் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த தொடராக அமைந்துள்ளது.இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு மணி எட்டிலிருந்து எட்டரை வரை ஒளிபரப்பாகியது.இத்தொடரின் இயல்பு என்னை முற்றிலும் கவர்ந்தது.இதில் இரண்டு இளைஞர்கள்,பிரபு மற்றும் தேவா என்பவர்கள் தான் முக்கிய கதாபாத்திரங்கள்.இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி ஒன்றாக கடந்து வருகிறார்கள் என்பது தான் கதையின் சுருக்கம்.இத்தொடரில் எனக்கு பிடித்த பாகத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
  அதில் இரண்டு இளைஞர்கள்,தனியாக வந்த ஒரு சிறுமியிடம் பணம் கேட்டு அவளை தொல்லை செய்வார்கள்.இதை பார்த்த பிரபுவும் தேவாவும் அந்த இளைஞர்களை தட்டி கேட்பார்கள்.ஆனால் அந்த இளைஞர்கள் அவர்களை பயமுறுத்தி ஓடவிடுவார்கள்.”இளங்கன்று பயமறியாது” என்பதற்கு உதரணமாக அந்தச் சிறுமி பயத்தில் ஓடாமல் தைரியத்துடன் இருப்பாள்.மேலும் காவலர்களுக்குத் தகவல் கொடுத்துவிடுவேன் என்று அவள் சொன்னவுடன் அந்த இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு சென்றுவிடுவார்கள். எனக்கு அச்சிறுமியின் துணிச்சல் மிகவும் பிடித்திருந்தது.
  எந்த கருத்தும்,கதையுடன் திரையில் பார்க்கும்பொழுது “பசுமரத்தாணி” போல மனதில் எளிதாக பதிந்துவிடும். என்னை போன்ற எல்லா சிறுவர்களுக்கு இது பொருத்தமான மற்றும் பிடித்தமான நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.இதை போன்ற பல நல்ல தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் வசந்தம் தொலைக்காட்சியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
  நிவேதா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 7. வசந்தத்தில் சுட்டிகளின் வசந்தம் வீசும் கண் கவர் நிகழ்ச்சி சுட்டிஸ் கிளப் ,இதுவே எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி .ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள சிறுவர்கள் தங்கள் தனித் திறமைகளை மக்களுக்கு வெளிபடுத்தும் அசத்தலான நிகழ்ச்சிதான் சுட்டிஸ் கிளப் .சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வெள்ளிகிழமை என்றாலே மகிழ்ச்சி தான் அதிலும் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகும் 5-6 மணி வரை அனைவருக்கும் பன்மடங்கு மகிழ்ச்சியை அளிக்கும் .இந்நிகழ்ச்சியை ஹரிணி,சுப்ரா,ஆதித்யா போன்ற இளம் சிறுவர்கள் நகைச்சுவையுடனும் ,அருமையான தமிழிலும் ,பல நல்ல கருத்துகளுடனும் தொகுத்து வழங்கிய பாங்கு என்னை தமிழின் பால் ஈர்த்தது .பெரும்பாலான நிகழ்சிகள் பாட்டு ,நடனம் என்று ஏதோ ஒரு திறமையை மட்டுமே வெளிபடுத்தும் நிகழ்ச்சியாகவும் ,போட்டிதன்மயுடனும் ஒளிபரப்பாகின்றன . இதனால் சிறுவர்கள் பேரும் புகழும் அடைந்தாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் .ஆனால் எந்த வித கட்டுப்பாடுமின்றி சிறுவர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்த ஊக்குவிக்கும் ஒரு நிகழ்ச்சியே சுட்டிஸ் கிளப் .இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஆடல்,பாடல்,மேடை பேச்சு,நாடகம் ,மேஜிக் ஏன் தற்காப்பு கலையை கூட தனியாகவோ அல்லது குழுவாகவோ செய்து தங்கள் திறமையை வெளிபடுத்தினர் .போட்டி தன்மை இல்லாததால் இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து,மனம் தளராமல் மேலும் மேலும் பயமின்றி தங்கள் திறமையை மெருகேற்றி வெளிபடுத்த உதவும் நிகழ்ச்சி.திறன் வெளிப்பாடு நிகழ்ச்சி என்றாலே போட்டி என்ற நிலையை தலைகீழாக மாற்றி சிறுவர்களை ஊக்குவித்தது மட்டுமின்றி, வீட்டில் இருந்து சிறுவர்கள் தொகுபாளர்களுடன் தொலைபேசி மூலம் பேசும் வாய்ப்பையும் ,தங்கள் கருத்துகளை கூறவும் வாய்ப்பு அளித்த நிகழ்ச்சியாக விளங்கியது.அனைத்து நல்ல விசயங்களும் முடிவிற்கு வருவதுபோல் இந்நிகழ்ச்சியும் முடிவிற்கு வந்தது ,ஆனாலும் இந்நிகழ்ச்சி பல எதிர்கால நல்ல கலைஞர்களை உருவாக்கி என்றும் என் மனதில் அழியா இடம் பெற்றுள்ளது .
  தருண் திருமேனிநாதன்
  DPS International School

 8. சிங்கப்பூர் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அழகான நாடாகும். நான் தொலைக்காட்சியையே ஒரு பெரும் பொழுதுபோக்காக எண்ணுகிறேன். வசந்தம் தொலைக்காட்சி பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பான பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும்,’தாளம் நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியாகும்.
  நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியும் நடக்கும் விழாக்கள், பண்டிகை நிகழ்ச்சிகள், மாணவர்கள் பங்கேற்கும் போட்டிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் முதலானவற்றைத் தொகுத்து அந்தந்த வாரங்களில் வெள்ளிக்கழமைதோறும் இரவு 9 மணியளவில் ஒளிபரப்புகிறார்கள். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இரு தொகுப்பாளர்கள் படைப்பதால் வேறு இனத்தவர்களும் இந்தியர்களிடையே நடக்கும் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நாட்டுநடப்புகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடைய எனக்கு அடுத்தடுத்த வாரங்களில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி பற்றிய விபரங்களைக் கொடுப்பதால் பல புகழ்பெற்ற தமிழ் பேச்சாளர்களின் சொற்பொழிவை பலமுறை நேரில் கண்டு பயனடைந்திருக்கிறேன். அதனால் பள்ளியிலும், பேச்சரங்கிலும் பயமின்றி, தங்குதடையின்றி பேசவும் கற்றுள்ளேன். ‘தாளம்’ நிகழ்ச்சிக்கு நன்றி.
  C.Nishikanth
  Teck Whye Secondary School

Your email address will not be published.


*