ரசித்த மொழி

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
தமிழ்மொழி விழா 2016 நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நீங்கள் நேரில் கலந்து கொண்ட தமிழ்மொழி விழா பற்றியோ / தொலைக்காட்சியில் கண்டு ரசித்த தமிழ்மொழி விழா பற்றியோ / தமிழ்முரசு போன்ற நாளிதழ்களில் படித்து ரசித்த தமிழ்மொழி விழா பற்றியோ ஒரு காணொளி தயாரித்து அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த தமிழ் திரைப்படப் பாடலைப் பற்றி நீங்கள் பேசித் தயாரித்த காணொளியாகவும் அது இருக்கலாம்.
காணொளியை நீங்களே பேசித் தயாரிக்கலாம் அல்லது மற்றவர்கள் பேசுவதைக் கொண்டும் தயாரிக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் திறனை வெளிப்படுத்தும் ஒரு காணொளியை (Video), உங்கள் கைத்தொலைபேசியிலோ அல்லது மற்ற தரமான புகைப்படக் கருவிகளைப் (Camera) பயன்படுத்தியோ எடுத்து, அதை ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அவை இந்த இணையத்தளத்தில் வலையேற்றம் செய்யப்படும்.
நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
உங்கள் காணொளிகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 மே  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

1 Comment

Your email address will not be published.


*