முகபாவங்கள்

முகங்கள் – இதுதான் இம்மாத புகைப்படப் போட்டிக்கான கருப்பொருள். அன்பு, மகிழ்ச்சி, ஆச்சரியம், கோபம், சோகம், சிரிப்பு என்று நம் முகம் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியது. அப்படிபட்ட முகங்களைப் புகைப்படமெடுத்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com.
உங்கள் புகைப்படங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள்,  31 அக்டோபர்  2015. இது தேர்வு மற்றும் விடுமுறை காலமாக இருப்பதால், பலரும் பங்கேற்க வசதியாக இறுதிநாள் 31 அக்டோபர் வரை நீட்டிக்கப்படுகிறது.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

5 கருத்துரை

Your email address will not be published.


*