மீன் பறக்குமா?

ஒரு மீன், விமானம்போல் பறக்க, அதைப் பிடித்துக் கொண்டு பறந்து, ஒரு நகரத்தைக் கடக்கும் மனிதனின் புகைப்படம் இது. மீமிகைக் கற்பனை என்று சொல்லப்படும் அதீத கற்பனையைச் சொல்லும் படம். இப்படத்தைப் பார்க்கும்போது, உங்கள் மனதிலும் கற்பனை சிறகடிக்கும். அதை ஓர் கதையாக எழுதுங்கள்.

உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 18 நவம்பர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

*

4 கருத்துரை

 1. பெரியவர்களாலும் சிறுவர்களாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. எவளவு பெரியது, அல்லது சிரியது என்ற அளவில்லாத ஒன்று. பல காரணங்களால் உருவாக்கப்பட்டது. பல உணர்சிகளை தரும் அது. ஆனால், அதை தீர்மானப்படுத்துவது யார்? நீங்கள் தான். என்ன இது? இது தான் நம் கற்பனைகள், கனவுகள்.

  நம் கற்பனைகளையும் கனவுகளையும் உண்மையாக்குவது நம் கடமை. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் கடினமாக உழைக்க வேண்டும். ‘கடின உழைப்பின் பலம் இனிமையானது’ என்றது போல, நாம் கடினமாக உழைத்தால் நாம் கற்பனைகள் கனவுகள் சிலது உண்மையாக மாறும்.

  அது செய்வது எளிதமாக இருக்கும் என்பது அவசியமில்லை. வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும். ஆனால், எந்த பிரச்சினை வந்தாலும், உறுதியாக நின்று, ‘என்னால் முடியும்’ என்ற மனநிலையுடன், உங்கள் பிரச்சினைகளை போராடிக்கொண்டு உங்கள் கற்பனைகளையும் கனவுகளையும் சாதியமாக்குங்கள்.

  ஆனால், இதைவிட முக்கியமானது, நம்மால் அனைத்தும் செய்ய முடியும் என்ற எண்ணம் ஆகம். நம் திறமையோ, அறிவினாலோ அல்ல, நம் உள்ளில் உள்ளவரால் தான். அவர் யார்? அவர் தான் கடவுள். கடவுளால் அனைத்தும் செய்ய முடியும். நாம் செய்யவேண்டிய ஒன்று, கடவுளை நம்புவது மட்டுமே. அப்படி செய்தால், நம் கற்பனைகளும் கனவுகளும் கடவுளின் வழியிலும் நேரத்திலும் நடக்கும்.

  வண்ணங்கள் என்பது நாம் சாதிக்கும் நம் கற்பனைகளும் கனவுகளும் ஆகும். நாம் வரையும் ஓவியம், நம் வாழ்க்கை. அதை நம்மால் முடியும் வரை வண்ணம் தீட்டுவோம், ஓர் அழகிய ஓவியத்தை வரைவோம். தைரியமாக உங்கள் கனவுகளையும் கற்பனைகளையும் உண்மையாக்கி மாற்றிக்கொள்ளுங்கள்.

  Gloria Vadukkoot Chacko
  St.Hilda’s Secondary School

 2. என் பெயர் சோமசுந்தரன். நான் ஒரு விஞ்ஞானி. வேற்றுகிரக வாசிகளைப் பற்றியும், வேறு கிரகத்திற்கு நமது பூமியிலிருந்து செல்ல உருவாக்கும் கருவியைப் பற்றியும் நான் ஆராய்ச்சி செய்கிறேன். பல் ஆண்டுகளாக நான் வேறு கிரகத்திற்கு பூமியிலிருந்தே செல்ல ஒரு கருவியை உருவாக்க ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். அந்த ஆராய்ச்சியன் கடைசி கட்டத்தில் நான் இப்போது இருக்கிறேன். கருவியை வேலை செய்ய வைக்க நான் தேவையான சக்தியை மட்டும் தயாரித்து அதற்கு கொடுத்தேன் என்றால், அக் கருவி வேலை செய்துவிடும். அந்த சக்தியை உற்பத்தி செய்ய நான் அணு சக்தியை பயன்படுத்தினேன். இரு அணுக்கள் அதிக வேகத்தில் மோதும்பொழுது உருவாகும் சக்தி, இந்த கருவியை வேலை செய்ய உதவும். இவ்வழியை பயன்படுத்தி நான் கருவிக்கு தேவைப்பட்ட சக்தியை உற்பத்தி செய்தேன். நான் கருவியிலிருந்த சிறிய திரையில், சென்றடைய வேண்டிய இடத்திற்கான கோட்டில் ‘செவ்வாய் கிரகம்’ என்று தட்டச்சு செய்து கருவியை இயக்கினேன்.

  தீடீரென மிகவும் வெளிச்சமானது. ஆதீத ஒலியால் நான் என் கண்ணை மூடினேன். கண்ணை மூடித் திறந்துப் பார்த்தால் என் கண்களை என்னால் நம்பயிலவில்லை. என் கண் முன் இருந்த காட்சி, ஒரு சிவப்பு, கரடு முரடான நிலப்பகுதியல்ல. அப்படித் தான் செவ்வாய் கிரகம் இருக்கும். ஆனால் அது அப்படியில்லை. வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் வாகனங்கள், எங்கும் மின்விளக்குகள், பூமியைவிட தொழில்நுட்பத்தில் முன்னேரிய ஒரு இடமாக இருந்தது. என்னடா இது என்று பார்த்தால் நான் தட்டச்சு செய்தது ‘செவ்வாய்’ இல்லை, ‘சிவ்வாய்’. நான் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்திருந்தேன். அந்த மகிழ்ச்சியல் துள்ளிய நான் திடீரேன விழ ஆரம்பித்தேன். என் கருவி ஒரு கடிகாரமாக மாறி என் கையில் பொருந்திக்கொண்டது. விழுந்துக்கொண்டிருந்த நான், ஒரு விமானம் மீது மோதினேன். அது ஒரு சாத விமானமல்ல. அதைப் பார்க்க ஒரு பெரிய நீலத் திமிங்கிலம் போலிருந்தது. அதை மோதி, விழுந்துக்கொண்டிருந்த நான், அதிலிருந்து தொங்கிய ஒரு கயிற்றைப் பிடித்துக்கொண்டேன். அக் கயிறு தான் எனக்கும், எமனின்ன பாசக் கயிறுக்கும் இடையே இருந்த நூல் என்று எனக்கு புரிந்தது. ஆகயால் நான் அதைக் கெட்டியாக பிடித்துக்கொண்டேன். அந்த விமானம், நான் அதில் தொங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அறியாமலேயே பறந்துகொண்டிருந்தது. அது நான் வந்தரிங்கியே நகரத்தை சுற்றியது. அங்கிருந்த மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்களாகயிருந்தனர். அவர்கள் நிறத்தில் பச்சை; கண்கள் மூன்று; கரங்கள் நான்கு; மொத்தத்தில் பூலோக மனிதர்களைவிட வித்தியாசமான உயிரினங்கள்.

  நான் நகரத்தை ரசித்துக்கொண்டேயிருந்தபோது, ஒரு துப்பாக்கியின் தோட்டா, எதிர்பாராத நேரத்தில் என் காதுகளை ஒரசிக்கொண்டு என்னைத் தாண்டி, வேகமாகச் சென்றது. என்னடா என்று திரும்பி பார்த்தபோது, நான் தொங்கிக்கொண்டு சென்ற விமானத்தை பின் தொடர்ந்து பல துப்பாக்கிகள் ஏந்திய போர் விமானங்கள் பறந்துகொண்டிருந்தன. இது என்னை பேரதர்ச்சியல் ஆழ்த்தியது. அந்தப் போர் விமானங்கள் என்னை குறி வைத்து தான் தாக்கிக்கொண்டிருந்தது. நான் அவர்கள் இனத்தை சேராதவர் என்பதால் என்னை கொல்ல எண்ணிணார்கள் என்று நான் நினைக்கிறேன். இவர்களிடமிருந்து தப்பிக்க நான் அந்த கயிற்றை ஏறி, திமிங்கிலம் விமானத்திற்குள் சென்றேன். உள்ள எல்லாம் அதீ நவீன கருவிகளாகயிருந்தன. இவற்றையெல்லாம் நான் நமது பூமியில்கூட காணதில்லை. இவ்வளவு அறிவியல் அறிவு மிகுந்த உயிரினம்குளமா இந்த பச்சை உயிரினங்கள் என்று நான் வாய் பிளந்தேன்.

  விமானத்திலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. போர் விமானங்கள் விமானத்தை குறி வைத்து தாக்க ஆரம்பித்தனர். நல்ல வேளை, நானிருந்த திமிங்கிலம் விமானம் ஒரு ஆளில்லா விமனாம். ஆகயால் நான் அதை வேகமாக இயக்கி, போர் விமானங்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்தேன். ஆனால் போர் விமானங்கள் என் விமானத்துடைய வேகத்திற்கு ஈடுகொடுத்து பறதந்தது. என்னைச் சுற்றி ஒரு போர்சூழலே அமைந்தது. அவஞ்செர்ஸ் திரைப்படம் இறுதிக்காட்சி போலிருந்தது. இந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஒரே வழி தான். நான் என் கருவியை பயன்படுத்தி திருப்பி பூமிக்குச் செல்ல வேண்டும். அதையே செய்திட வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். நான் கருவியை இயக்கிக்கொண்டிருக்கும்பொழுது, யாரோ விமானத்தை உடைக்கும் சத்தம் கேட்டது. யார் என்று பார்த்தால், அந்தப் பச்சை உயிரினங்கள் தான். என் கருவியை நான் வேகமாக இயக்கச் செய்து, சென்றடைய வேண்டிய இடத்திற்கான கோட்டில் நான் பூமியென்று தட்டச்சு செய்தேன். என் கருவி வேலை செய்ய ஆரம்பித்தது. அப்போது என் செவிகளில் ஒரு குரல் கேட்டது. ‘ நாம் பூமியை அழிக்கப்போகிறோம் என்று தெரிந்துகொண்டு மனிதர்கள் நம்மை அழிக்க ஒருவனை அனுப்பியுள்ளார்கள். அவனை நாம் அழிக்க வேண்டும்’ என்பதைத் தான் நான் கேட்டேன். அதை இரு பச்சை உதடுகளிலிருந்துக் கண்டேன். அவன் ஏன் அதைக் கூறினான் என்று சிந்திப்பதற்குள் நான் பூமியை அடைந்துவிட்டேன். மனிதர் குளத்தை நோக்கி ஒரு பெரிய போர் வருகிறது மட்டும் எனக்கு புரிந்தது.

  Muthaiah Hindbashini
  Bendemeer Secondary School

 3. சூரியனும் சந்திரனும் சங்கமிக்கும் அந்திப் பொழுதில், தென்றல் காற்று இதமாய் நம்மை வருடிச் செல்ல, படகில் சவாரி செய்து கொண்டே நீலவானத்தையும், நகரும் வெண்மேகக் கூட்டங்களையும் ரசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.நீல வண்ண கடல்நீரை கையில் அள்ளி விளையாட எனக்கு கொள்ளை ஆசை.

  அன்றும் அப்படிதான்.நாங்கள் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது, என்னைக் காப்பாற்றுங்கள் என்ற அபய குரல் கேட்டு திடுக்கிட்டேன். சுற்றும் முற்றும் கூர்ந்து நோக்கியபோது ஒரு மீனின் வால் எங்கள் படகில் மாட்டிக்கொண்டிருந்தது.”மீனால் பேச முடியுமா?”என்ற சிந்தனையோடு என் தந்தையோடு அதன் அருகில் சென்றேன். அது மீண்டும்,”உதவி!உதவி!”என்று அரற்றியது. நான் என் தந்தையின் உதவியுடன் அதன் வாலை படகிலிருந்து விடுவித்தேன். மகிழ்ச்சி அடைந்த மீன், நாங்கள் செய்த உதவிக்கு நன்றி கூறியது. அது மட்டுமின்றி தான் ஒரு அதிய மீன் என்றும் தனக்கு பறக்கும் சக்தி உள்ளது எனவும் கூறியது.

  அந்த மீனிற்கு நான் செய்த உதவிக்கு கைமாறாக எனக்கு பிடித்த இடத்திற்கு அது என்னை அழைத்துச் செல்வதாகவும் கூறியது. நான் அதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோதே அது தன் உடலை வான்குடையை போல வளைத்தது. அதன் அடி வயிற்று பகுதியில் இருந்து நான்கு பக்கமும் கயிறுகளால் இணைக்கப்பட்ட பலகை ஒன்று வந்தது. அது என்னை பலகையின் மேல் ஏறி கயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னது. நான் ஏறியவுடன், “நீ செல்ல விரும்பும் இடத்தைச் சொல், நான் உன்னை அங்கே அழைத்துச் செல்கிறேன்,” என்றது.

  நான் உடனே பலகையில் ஏறிக்கொண்டு, “நான் ஐரோப்பாவில் உள்ள ஈபில் கோபுரத்தைப் பார்க்க வேண்டும்,” என்று கூறியவுடன், அது பறக்க ஆரம்பித்தது.என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. ஒருபுறம் பயமும், மறுபுறம் மகிழ்ச்சியும் கலந்த கலவையாய் நான் வானில் பறந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு நிலையை அடைவதற்குள் ஈபில் கோபுரத்தின் மேல் இருந்தேன்.அதன் மேலிருந்து ஐரோப்பாவின் அழகைக் கண்டு ரசித்தேன்.”என்ன ஒரு இயற்கை எழில் கொஞ்சும் நாடு”, காணக் கண் கோடி வேண்டும். அதன் பின் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கும் என்னை அழைத்துச் சென்றது. கடைசியாக என்னைச் சாங்கி கடற்கரையில் இறக்கிவிட்டது.

  “மாலா, மாலா மணி ஆறாகிவிட்டது பள்ளிக்குச் செல்ல நேரமாகிவிட்டது!” என்ற அம்மாவின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தேன். அப்பொழுதுதான் நான் கண்டது கனவு என்பதை உணர்ந்தேன். ஆஹா! என்ன ஒரு அற்புதமான கனவு, நனவானால் நன்றாய் இருக்குமே என்று எண்ணியவாறே பள்ளிக்கு கிளம்பத் தொடங்கினேன்.

  M S Nithyasri
  Riverside Secondary School

 4. கதிரவன் உதித்து தன் செங்கதிர்களை அதிலம் முழுவதும் பரப்பி ஒளியை அள்ளிச் சொரித்தான். அன்று பள்ளி விடுமுறை என்பதால் நான் காலையில் எழுந்து பொழுதை நூலகத்தில் கழிக்க முடிவு செய்தேன். நான் என் காலை கடன்களை முடித்துவிட்டு நூலகத்திற்குச் செல்ல தயாரானேன்.சிறிது நேரத்தில் நூலகத்தை அடைந்தவுடன் புத்தகப்புழுவான நான் முதலில் தமிழ் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த பேழைக்குச் சென்று படிக்க ஒரு புத்தகத்தை எடுத்தேன் . அப்புத்தகத்தின் பெயரோ ‘ மாய மீன் ‘.அந்த புத்தகத்தை பார்த்தவுடன் அதை படித்தே தீர வேண்டும் என்ற ஒரு ஆசையில் அப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்த பின் படிக்க அரம்பித்தேன் .

  அப்புத்தகத்தை படிக்க அரம்பித்ததுதான் எனக்குத் தெரியும், அதன் பின் புத்தகத்தின் சுவாரஸ்யத்தில் மயங்கியதில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. ‘மாய மீன் ‘ என்னும் இக்கதையில் ராதா என்ற விவசாயியின் மகள் தண்ணீர் எடுக்க செல்லும்போது நடக்கும் ஒரு சம்பவமே இக்கைதையாகும். கதைப்புத்தகத்தை பாதி வழியாக படித்துக்கொண்டிருந்தபோதே , தீடீரென்று புத்தகத்திலிருந்து கண்ணை கூசும் வெளிச்சம் ஒன்று வந்தது. ஏதோ என்னை இழுப்பதைப்போல் உணர்ந்தேன் . யாரென்று பார்ப்பதற்குள் கண் சிமிட்டும் நேரத்தில் நான் வேறொரு இடத்தில் இருப்பதை உணர்ந்தேன். சுற்றும் முற்றும் பார்த்தபின்னரே நான் கதை உலகத்தில் ராதா என்னும் கதாபாத்திரமாக இருப்பதை கண்டறிந்தேன்.

  கதையின்படியே நான் கிணற்றுக்குச் சென்று தண்ணீர் இரைக்க வாலியை கிணற்றுக்குள் விட்டு எடுத்து தண்ணீரை மோண்டு எடுத்தேன். தண்ணீரை எடுத்து என் பானையில் ஊற்றும்போதுதான் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்த்திருந்தது.வாளியில் தக தக வென்று ஜொலித்துக்கொண்டிருந்த ஒரு தங்க மீனைக் கண்டேன். தங்கத்தை போல் மின்னிக்கொண்டிருந்த அம்மீன் திடீரென்று என்னிடம் கதற ஆரம்பித்தது. ” தயவு செய்து கடலில் என்னை விட்டுவிடுங்கள் என்று ” என்று தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தது . அதை கேட்டவுடன் நான் மனம் இறங்கி அதை கடலில் விட்டுவிட விரைந்துச் சென்றேன். மீனை பத்திரமாக விட்டவுடன் , நான் மன நிறைவோடு வீடு செல்ல திருமும்போது அம்மீன் எனக்கு நன்றி கூறி கைமாறாக என்னுடைய ஆசை ஒன்றை நிறைவேற்றுவதாக கூறியது. நான் ஊடனே எனக்கு தண்ணீரில் எவ்வளவு நேரம் வெண்டுமானாலும் காற்று இல்லமால்
  கடல்த்தேவதையைப் போல் கடலுக்கு அடியில் வாழும் ஒயிரிணங்களை கண்டு ரசிக்க வேண்டும் இருக்க என்றுக் கேட்டுக்கொண்டேன். தங்க மீன் உடனே என்னை தன்னுடைய துடுப்பை பிடித்துக்கொள்ள சொன்னது. பின்னர் அது என்னை கடலிற்குள் கொண்டுச்சென்று சுற்றிக்காட்டியது. நான் நீல நிறமான கடலை கண் சிமட்டாமல் மெய்மறந்து பார்த்துக்கொண்டு வந்தேன்.கடலில் இருந்த பற்பல கடல் உயிரினங்களை மட்டற்ற மகிழ்ச்சியுடன் பார்த்தேன். இறுதியில், தங்க மீன் என்னை கடற்கடையில் விட்டு விட்டு மீண்டும் ஒருமுறை என்னிடம் நன்றிக்கூறிவிட்டு என்னிடமிருந்து விடைப்பெற்று சென்றது.

  நான் கடற்கடையிலிருந்து காலடி எடுத்து வைத்ததும் மீண்டும் நூலகத்தில் நான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்துச் சேர்ந்தேன். நான் ஆச்சிரியத்தில் என் கையிலிருந்த புத்தகத்தை பார்த்த போது தான் புரிந்தது. நான் மும்மரமாக படித்துக்கொண்டிருந்த இப்புத்தகத்தின் கதையை கொண்டு நானே அந்த கதாபத்திரமாக மாறியதைப் புரிந்துக்கொண்டேன். ஆனால், நான் அன்று கண்டது கனவா நினைவா என்பது இன்றுவரையிலியும் எனக்கு ஒரு புரியாத மர்மமாகவே இருக்கின்றது.

Your email address will not be published.


*