மின்சாரக் கம்பியில் ஒரு குருவி!

மின்சாரக் கம்பியில் இளைப்பாறும் பறவையின் படம் இது.  இதைப் பார்த்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் கவிதையை எழுதுங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 ஜனவரி 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

5 கருத்துரை

 1. ஏன் குருவி!
  என்ன பாவம் செய்தாய் குருவி?
  அழகாக கீச்சிடும் நீ
  பார்ப்பதற்கு சிலைப்போல் இருக்கும் நீ
  அப்போது ஏன் எங்களை விட்டு சேய்கிறாய்
  ஏன் உன் மரணத்தை நோக்கி செல்கிறாய்
  உன் அழகை காண நாங்கள் ஏங்குகிறோம்
  ஆனால் நீ எங்களை விட்டு செல்கிறாய்
  அதை வெளிப்படுத்த
  மின்சார கம்பியில் குருவி!!!
  கிருத்தி ரோஷன்
  யூனிட்டி உயர்நிலைப் பள்ளி

 2. மின்சார கம்பியில் ஓரு குருவி
  சிட்டுக்குருவி..சிட்டுக்குருவி…
  சிட்டாய் பறக்கும் சிட்டுக்குருவி…
  கால ஓட்டத்தில் உன் கணக்கு குறைந்ததோ…
  ஒற்றையாக தனித்து நிற்கிறாயோ…
  மரங்கள் மறைந்து,கூடு இழந்து
  மின்கம்பியில் அமர்ந்தாயோ…
  இயற்கை விவசாயத்தின் பங்காளியே…
  விவசாய வளம் குன்றியதால்-உன்
  வாழ்வின் வசந்தம் குறைந்தது.
  அடுத்த தலைமுறை உன் வடிவை
  சித்திரத்தில் மட்டுமே காணும்-இழிநிலையை மாற்றுவோம் !
  இனி… மனிதமும் மரங்களும் வளர்ப்போம்!
  susmitha 3E2
  yuan ching secondary school

 3. ஏ குருவி!
  சிட்டுக் குருவி!
  ஒரு கவியின் 
  சிநேக அழைப்பு!
  கீச்சிடும் குருவி நண்பா!
  நீ அருகி வரும் இனமல்ல-சிங்கையில்
  நீ அழியா வாழும் இன்பமான இனமே!
  உன் சின்னஞ்சிறு கால்
  நிற்பதோ மின்சார கம்பியில்
  உனக்கு அதுதான் ஊஞஞ்சலோ!
  சின்னஞ்சிறு சிறகுகள் தான் 
  ஆனால் என்னாலும் உயரத்தில் 
  உன்னை விட உயரத்தில் நான் 
  என  கூறவே மின்சார கம்பியில்
  சிட்டுகுருவி நீ அமர்ந்தாயோ?
  உருவத்தில் இல்லை உயர்வு!
  உள்ளத்தில் உள்ளது உயர்வு!
  அதை உணர்த்தவே
  மின்சார கம்பியில் குருவி!!!
  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலைப் பள்ளி

 4. என் அருமை தோழியே !
  சின்னஞ் சிறு குருவியே !
  சிட்டு சிட்டு குருவியே !
  சிறகடிக்கும் குருவியே !
  மின்னலென பறந்து வந்து
  மின்சாரக் கம்பிதனில் அமர்த்திருப்பது ஏனோ !
  என்னால் செய்ய முடியாததை உன்னால் செய்யமுடியும் என்பதை காட்டத்தானோ!
  இல்லை இல்லை !
  என்னாலே முடியும் என்றால் உன்னால் ஏன் முடியாது என்பதை எனக்கு உணர்தத்தானோ!
  நானும் என் இலக்கை அறிந்து உயரே பறந்து வெற்றி பெறுவேன் என் அன்புத் தோழி!
  பாஸ்கரன் நித்யஸ்ரீ ,
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி,
  சிங்கப்பூர் .

 5. உல்லாச வானில்
  மின்சார கம்பியில்
  ஊஞ்சல் ஆடும் குருவியே!
  உன் போல் சிறகு எனக்கிருந்தால்
  அகிலம் முழுதும் அலைந்து திரிந்து
  அன்பின் விதையை தூவிடுவேன்.
  இயந்திரத்தோடு இயந்திரமாய்
  இயந்திரதனமாய் வாழ்ந்திடும்
  இயந்திர மனிதனின் இதயத்தில்
  இயற்கையின் இனிமையை பாய்ச்சிடுவேன்.
  பேரிடர் நிகழும் காலத்தில்
  அப்பாவி மக்களைக் காக்கவே
  அகிலம் முழுவதும் சுற்றிடுவேன்.
  சிட்டுக்குருவியே சிட்டுக்குருவியே
  உன் போல் நானும்
  ஊஞ்சலில் ஆடிடவே
  உந்தன் சிறகை தருவாயா
  சரவணன்
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*