மாலையான பூக்கள்

பூக்கள், மாலையாகி விற்பனைக்குக் காத்திருக்கும் அழகே இப்படம். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்…
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள்,  31 அக்டோபர்  2015.
இது தேர்வு மற்றும் விடுமுறை காலமாக இருப்பதால், பலரும் பங்கேற்க வசதியாக இறுதிநாள் 31 அக்டோபர் வரை நீட்டிக்கப்படுகிறது.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

5 கருத்துரை

 1. அடடா! என்ன வனப்பு மற்றும் மூக்கைப் பிலக்கும் சுகந்தம்
  பூவே! தேசம் எங்கும் உன் வாசம்
  உன் இனிய நறுமணத்தால் என்னையே மறந்து
  நான் வேறு உலகத்திற்கு சென்றேன் பறந்து
  மாலையாக காட்சி அளிக்கும் உன்னை
  பகவனுக்கு வாங்கச் சொல்வார் என்னை
  உன்னைப் போல் உலகில் எதுவும் புனிதமாக இல்லைதானே
  அதனால் நீ எங்களுக்கு வழங்காதது தொல்லைதானே
  நீ மாலை பருவம் அடைய ஒன்று சேர்ந்ததைப்போல
  நான் என் பலத்தை எல்லாம் ஒன்று சேர்த்து உன்னை பின்பற்றுவேன் எடுத்துக்கோலாக
  சுவாத்தி 1E1 புக்கிட் வியு உயர்நிலை பள்ளி

 2. நான் நிறங்கள் பார்க்க, பிரகாசமான மற்றும் தெளிவாக
  பச்சை மற்றும் மஞ்சள், சிவப்பு மற்றும் நீல
  நான் மிகவும் சிறிய இன்னும் துடிப்பான, ஒரு கடையில் பூக்கள் பார்க்கிறேன்
  நிச்சயமாக மற்றவர்களின் இதயங்களை ஈர்க்கும்
  மலர்கள் என் இதயம் சூடு, அவர்கள் என் ஆத்துமா ஆற்றவகிறார்கள்
  மலர்கள் கதைகள் மற்றும் வண்ண உலக நிரப்ப
  மலர்கள் அழகாக, அதனால் நறுமணம் கமழும் உள்ளன
  என் கண்கள் கண்ணீர் போன்ற மகிழ்ச்சியை நிரப்பப்பட்ட என்று
  நான் பார்வை மற்றும் வாசனை மறக்க மாட்டேன்
  மிகவும் அற்புதமான மற்றும் அழகான பூக்கள்
  மீனா 
  Bukit View செகோண்டரி School

 3. மாலையான பூக்கள்
  பூக்களே! உங்களிடம் தான்
  புன்னகைக்க கற்றுக் கொள்ள வேண்டும்!
  வசந்த காலத்து தேவதைகளே! கதம்ப மலர்களின் கலவையே!
  ஒற்றுமையை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்!
  உதிரியாக நீ இருந்தால்….
  கடவுள் சன்னதியில் அர்ச்சிக்கப்படுகிறாய்!
  ஒன்றாகக் கோர்த்த மாலையாய் இருந்தால்….
  கடவுள் பிரசாதமாகிறாய்!
  அழகின் முகவரியே! மணமக்களின் கழுத்தில்
  அழகுக்கு அழகு சேர்க்கும் உன்னைப்
  பாடாத கவிஞர் எவரும் இருக்கமுடியுமோ?
  C.நிஷிகாந்த்
  Teck Whye Secondary School

 4. வண்ண வண்ண பூக்களே !
  வாசம் தரும் பூக்களே !
  கள்ளமில்லா மழலையின் சிரிப்பை போன்ற மலர்களே !
  இயற்கையின் நல் கொடையே !
  மாலையாக இணைந்த மலர்களே !
  ஒற்றுமையின் பலத்தை ஓங்கி உணர்த்தும் உண்மையே !
  பூவோடு சேர்ந்த நாரும் – மணம் பெறும் !
  நல்லாரோடு சேர்ந்து நாமும் – வளம் பெறுவோம் !
  மலர்கள் ஒன்றானால் – மாலை !
  மனங்கள் ஒன்றிணைந்தால் – மனிதம் !
  இதுவே உன்னிடம் நான் கற்ற பாடம் !
  kalimuthu susmitha
  yuan ching secondary school
  1E2

 5. மாலையான பூக்கள்!
  அது ஒரு தென்றல் வீசிடும் இனிய மாலை
  கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்கள்
  சூரியகாந்தி சோகமாக இருந்தது
  அதற்குப் பிடிக்காதது அதன் வண்ணம்
  பக்கத்திலோ சிவந்த அழகிய ரோஜா
  அதன் சோகத்தை பறவை பார்த்தது
  அதற்கான காரணத்தையும் கேட்டது
  சூரியகாந்தி மனம் திறந்தது இவ்வாறு
  அனைவரும் விரும்பும் அழகிய மலர் ரோஜா
  மற்றவருக்கு விரும்பி பரிசளிக்கும் மலர் ரோஜா
  அன்பின் சின்னம் ரோஜா மலர்
  எனக்கு மட்டும் ஏன் இந்த வண்ணம்
  பறவை சொன்னது
  நீதான் பிரபஞ்சத்தின் அரசனான
  சூரியனின் பெயரைத் தாங்கி நிற்கிறாய்
  அழகை விட நாம் எவ்வளவு பயனுள்ளதாக
  இருக்கிறோம் என்பது தான் முக்கியம்
  சூரியகாந்தி மனம் தெளிந்து
  சூரியன் போல பிரகாசித்தது
  அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!!!
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*