மாறி வரும் உலகம்

Marigold

Marigold

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
ஒரு கிராமத்துப் பெண் மகிழ்ச்சியோடு கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும் படம் இது. இப்படி இன்றைய உலகம் விஞ்ஞான வளர்ச்சியால் பல வகையிலும் மாறி வருகிறது. அதைப் பற்றி உங்கள் கற்பனை சிறகு விரிக்கட்டும். கவிதையாக மலரட்டும்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 மே  2016 பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

2 கருத்துரை

 1. அளவாய் பேசினாலும் அன்போடு பேசியது அந்தக் காலம்.
  அதிகமாய் பேசுவதும் அவசரத்தில் பேசுவதும் இந்தக் காலம்.
  காத்திருந்து கடிதங்கள் பெருவது அந்தக் காலம்.
  கணினியில் கணநொடியில் கடிதம் வருவது இந்தக் காலம்.
  உணவு பழையது(கஞ்சி) ஆனாலும் பலம் தந்தது அந்தக் காலம்.
  உண்ணுவது துரித உணவு என்றாலும் துவண்டுவிடுவது இந்தக் காலம்.
  துணிப்பை தூக்கி பூமியைக் காத்தது அந்தக் காலம்.
  பிலாஸ்டிக் பையை தூக்கியெறிந்து ஓசோன் படலத்தை ஓட்டை போடுவது இந்தக் காலம்.
  அன்பிற்கில்லை அவசரத்திற்கே விஞ்ஞானம்.

 2. இது மாறி வரும் உலகம் …/
  உள்ளம் நினைக்கையில் …
  உதித்தது ஒரு கலகம்…/
  கரங்களில் ‘ஆண்ட்ராய்டை’ திணித்து …
  தேகத்தில் ‘தைராய்டை’ சிதைக்கிறது…
  “இணையம்”
  கபாலம் முதல்…
  கரண்டை வரை…
  பணம் மட்டுமே பிரதானமாய்…
  “மனிதம்”…//
  உறவுகளின் இடத்தில் …
  உறவுகளாய் விலங்கினம்…//
  தன் தாயுடன் …
  உறங்கும் நேரத்தைவிட…
  செல்ல நாயுடனே…
  உண்டு உறங்குகின்றன …
  “மழலைகள்”…//
  நாடகங்கள் கண்டுகொண்டே…
  நடைமுறையை தொலைத்துவிட்ட …
  “பெண்ணினம் “
  வெறும் பொருளை மட்டுமே …
  தாரமென கருதி….
  பொருளாதாரம் தேடியோடும்..
  “ஆணினம்”…//
  இவைதாம் மாறிவரும் உலகின் …
  மாறா பிரதிநிதிகள்..///
  ஆம்…!
  அன்றொரு நாள் …
  எந்தை கைபிடித்து ..
  யான் கற்றுக்கொண்ட உலகம்…
  மழைச்சாரல் பட்டுத்தெறித்து …
  புரியா கோலமிட்ட …
  மணல் தெருக்கள் …
  இன்று…
  கரும்பலகையாகி…
  வாகனச் சக்கரங்களின் …
  வரைபடம் வரைகிறது,…//
  மணலைச்சுட்டு, மருதானியிட்டு…
  தலைவாரி வகிடுகள் இட்ட …
  ஓட்டு வீடுகள்…
  இன்று…
  சிமென்ட் பூச்சுகளில் …
  சிகையலங்காரம் செய்து நிற்கிறது..//
  காலைகடனுக்கு …
  ஓடிய கால்கள்…/
  இன்று …
  கடன் அட்டை அடைக்க …
  ஓடுகின்றன…
  மனித நேயம் தொலைந்துபோய்…
  மிருகநேயம் நடமாடுகின்றன…
  பெரும் வன்முறைகள் …
  அதிகரித்து விட்டன…//
  மாறிவருகின்ற உலகம்…இது../
  ஒன்று மட்டும் சொல்லிக்கொள்வேன்…
  உலகம் ஒருபோதும் மாறவில்லை…/
  அதனுள் வன்மம் தொடுத்து …
  தொன்மம் குலைத்து …
  அதன் பன்மம் சிதைத்த …
  மனிதமல்லவா மாறிப்போனது…//
  மாற்றத்தையும் …
  மறுமலர்ச்சியாக்கலாம்…
  மனிதம் மனது வைத்தால்…//
  உலகின் புனிதம் காக்கும்…
  மனிதம் பேணுவோம்…
  இனி…
  கறை படிந்த கரங்கள் கழுவி…
  புத்தாடை அணிவிப்போம்…//
  புதுயுக தேவதையாய்….
  பூவுலகை …
  மாற்றம் செய்வோம்…
  புறப்பட்டு வாருங்கள்….
  தாகியா முவஃபிகா
  உயர்நிலை ஒன்று
  தஞ்சோங் காதோங் உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*