மழை மட்டுமா அழகு?

‘மழை மட்டுமா அழகு? சுடும் வெயில்கூட ஒரு அழகு’ என்று எழுதினார் கவிஞர் நா. முத்துக்குமார். நீங்கள் எதை அழகென்று நினைக்கிறீர்கள். அந்த அழகைப் பற்றி ஒரு கவிதை எழுதி எங்களோடு பகிருங்கள்.

உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 5 ஜூன் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***

ஏப்ரல் மாத, கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்
Monica Daniel – Fajar Secondary School
Nandhakumar Ragavi – Commonwealth Secondary School
Subramanian Karthikeyan – Bendemeer Secondary School
****

1 Comment

 1. உலகத்தின் அதிசயங்களில் மழை ஒன்று!
  அளவாய் வரும்போது அமுதத்துளி!
  அளவின்றி வரும்போது விஷத்துளி!
  அறவே வருதாதபோது
  அனைவரின் கண்களிருந்தும் வழியும் கண்ணீர்துளி!
  இதுவே மண்ணின் உயிர்த்துளி!
  சித்தத்தில் உறுதிக்கொண்டு சேமிப்போம் மழைத்துளி!

  சேவா மாணிக்கம்
  கான் எங் செங் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.

*