மர்மக்கதை தெரியுமா?

மர்மக் கதைகள் / துப்பறியும் கதைகள் ஆர்வமூட்டுபவை. அப்படிப்பட்ட கதைகளை நீங்கள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ நீங்கள் படித்திருக்கலாம். உங்கள் பெற்றோரோ அல்லது நண்பர்களோ உங்களோடு பகிர்ந்திருக்கலாம். அவற்றை உங்களுடைய வார்த்தைகளில் சுவை குன்றாமல் சுருக்கமாக எழுதி இங்கே பகிருங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 ஜனவரி 2017.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

2 கருத்துரை

 1. ஒரு முறை நான் ஒரு வலைத்தளத்தில் சில சிறு துப்பறியும் கதைகளைப் படித்தேன். அதில் ஒருக் கதை என்னை மிகவும் ஆர்வமூட்டியது.
  அபிஜீத் என்னும் துப்பறிவாளர் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஒரு சுவாரசியமான குற்றக் காட்சியையொட்டி விசாரணை செய்ய வட இந்தியாவிலிருந்துப் புறப்பட்டார். அபிஜீத் தமிழ்நாட்டில் பட்டுக்கோட்டையின் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தை அடைந்தார். அவ்வூரின் காவல் துறை மேல் அதிகாரி அபிஜீதைச் சந்தித்தார். அபிஜீதின் தாயார் குஷி, தமிழ் நாட்டில் ஒரு வழக்கறிஞராக பணிபுரிந்திருந்தார், அபிஜீத்துக்கு தமிழ் நன்றாகத் தெரியும். வயதிர்க்கு மூத்தவனாக அமையும் குமரனை, அபிஜீத் அண்ணா என்றவாறு அழைத்தார். இரவாகிவிட்டதால், இருவரும் குமரனின் வீட்டை நோக்கிச் சென்றனர்.
  வழியில், அபிஜீத் குமரனிடம் அக்குற்றத்தைப் பற்றி விசாரித்தார். குமரனோ அவரிடம் அப்பிரச்சனை எங்கேயிறுந்து ஆரம்பித்தது என்பதைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார் …
  அவ்வூரின் தலைவர், திரு மூர்த்தியின், தாத்தா பல ஆண்டுகளுக்கு முன்பு, அவ்வூருக்கு பல நன்மைகள் செய்துள்ளார். ஆகையால், அவருடையக் குடும்பத்தினர்கள் இச்சமுதாயத்தின் தலைவர்களாக அமைகின்றன. திரு மூர்த்திக்கு மனைவி குமுதேனியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். முதல் பையன் ராமு கட்டட கலைஞராக பணிப்புரிகிறார். இரண்டாவதுப் பையன் புவனேஷ் சிங்கப்பூரில் படித்துக்கொண்டிருக்கிறான். சமீபத்தில்தான் ராமின் கல்யாணம் நடந்தது.
  திருமண நாள் இரவு அன்று, பதினொரு மணிக்கு அந்த வீட்டுப் பணிப்பெண் தாமரையிடம் மூர்த்தி காபி எடுத்துவரச்சொன்னார். காபி எடுத்து வரும்பொழுது, மூர்த்தியின் கதவு மூடியிருந்தது. தாமரை எவ்வளவோ தட்டிப் பார்த்தும் மூர்த்தி கதவைத் திறக்கவில்லை. பதற்றத்தில் தாமரை, குமுதேனியையும் புவனேஷையும் அழைத்தாள். கடைசியாக கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தாள், மூர்த்தியின் கழுத்து வெட்டப்பட்டிருந்தது. அக்குற்றவாளியால், அந்த அறையிலிருந்து ஜன்னல் வழியாகத் தப்பித்து ஓடிச் செல்ல இயலாது. ஏனென்றால், அந்த ஜன்னல்களில் சில கம்பிகள் உடையாமல் அப்படியே இருந்து என்றவாறு குமரன் தன் கதையை முடித்தான்.
  அடுத்தநாள் காலையில், அபிஜீத் மூர்த்தியின் வீட்டுக்குக் குமரனுடன் சென்றான். மூர்த்தியின் குடும்பத்தினர்களைச் சந்தித்து சில விசாரணைக்கு உட்பட்ட கேள்விகளைக் கேட்டார். சம்பவம் நடந்த இரவு, கல்யாணத்திற்க்கு வந்திருந்த விருந்தினர்களுடன் குமுதேனி பேசிக்கொண்டுருந்தார். புவனேஷ் தனது நண்பர்களுடன் இணயத்தில் தொடர்புக்கொண்டிருந்தான். புவனேஷுக்குத் தெரியாமல், அபிஜீத் புவனேஷின் வலைத்தளத்தைப் பார்த்துக்கொண்டார். சில விருந்தினர்கள் மூலம், குமுதேனி அந்த இரவு அவர்களிடம் பேசிக்கொண்டு தான் இருந்தார் என்பதை தெரிந்துக்கொண்டார். புவனேஷும் குமுதேனியும் கூறுவதில் எவ்விதமான பொய்யுமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
  மூன்று நாட்களுக்குப் பிறகு அபிஜீத், குமரன், தாமரை, குமுதேனி, ராமு, புவனேஷ் ஆகிய ஐவரையிம், மூர்த்தியின் அறைக்குள் அழைத்து வந்தார். “மூர்த்தியைக் கொலைச் செய்தக் குற்றவாளி யார் என்று நான் கண்டுபிடித்துவிட்டேன்,” என்றுக் கூறினான். “யார் அது” என்றுக் கேட்டபோது, “தாமரையே! “, என்று பதிலளித்தார்.
  இரண்டு நாட்களுக்கு முன்பு, தாமரையின் கிராமத்துக்கு தாமரைக்கே தெரியாமல் அபிஜீத் சென்றார். தாமரையின் வீட்டுக்குச் சென்று, அவளுடைய அறையை நன்றாக தேடிப் பார்த்தார். ஆனால், எந்த ஓரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பதால், தாமரையின் அண்டை வீட்டாளர்களிடமிருந்து தாமரையைப் பற்றியச் சில முக்கிய தகவல்களைப் பெற்றார்.
  அந்த ஐவரிடம், “மூர்த்தி தான் தாமரையின் தந்தை,” என்று அபிஜீத் கூறினார். அதற்கு தாமரை, “ஆம், அவர் என் தந்தை தான். என் அம்மாவை கல்யாணம் செய்துக்கொள்வேன் என்றுப் பொய்க் கூறி, என் அம்மாவை ஏமாற்றிவிட்டார். என் அம்மாவை பலரும் புறக்கனித்து அவரைப் பற்றித் தவறாகப் பேசினார்கள். சொந்தக் குடும்பமே அவரை வெறுத்தது. இவ்வாறு என் அம்மா சாகும் வரைக்கு, அவரைப் பலரும் கொடுமைப்படுத்தினர். ஆதலால், பழி வாங்க வேண்டும் என்றத் திட்டத்தில் அவரைக் கொலைச் செய்தேன். அன்று இரவு நான் ஒரு சிறிய இரும்புக் கம்பியால்,அந்த அறையை உள்ளிலிருந்துப் பூட்டினேன். ஆதலால், யாரும் என் மேல் சந்தேகப்படமாட்டார்கள் என்று நினைத்தேன். நான் தான் மூர்த்தியைக் கொலைச் செய்தேன். அதற்கான எவ்வித தண்டனையையும் ஏற்றுக்கொள்கிறேன்,” என்றுக் கூறினாள்.
  இவ்வாறு மூர்த்தியை கொலைச் செய்தவர் யாரென்பதை அபிஜீத் வெறும் நான்கு நாட்களிலே கண்டுப்பிடித்த பெருமை அவரையேச் சாகும்.
  நிகேத்னா, விரைவுநிலை மூன்று
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 2. இரவு மணி பன்னிரெண்டு. நான் தெருவில் நடந்துக்கொண்டிருந்நதேன்.எனக்கு தூக்கம் வந்தது. ஆனால் வீட்டை சென்றடைய வேண்டுமே!
  திடீரென்று பின்புறம் ஒரு குரல். நீண்ட வெள்ளை தாடியோடும் சிவந்த பெரிய கண்களோடும் இருந்த பெரியவர் ஒருவர் என்னிடம் வழி கேட்டார். அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவருடைய ஆடைகளும் வெண்நிறத்தில் இருந்தன. ஒரு பேயைப் போலத் தோற்றமளித்தார். நான் பயந்துகொண்டே வழி சொன்னேன்.
  அந்த நேரம் பார்த்து, ஒரு கார் கட்டுபாடு இழந்து, அதிக வேகத்தில் என்னை நோக்கி வந்தது. நிச்சயம் மரணம்தான் என்று தெரிந்து விட்டது. ஓவென்று அலறினேன். அடுத்த நொடி அந்தப் பெரியவர் என்னைத் தூக்கி ஓரத்திலிருந்த புல்வெளியில் வீசினார். அந்தக் கார் அவரை இடித்துத் தள்ளி, தூக்கி எறிந்தது.
  நான் அதிர்ச்சியோடு எழுந்தேன். அந்தக் கார் நிற்காமல் சென்று விட்டது. நான் பெரியவரைத் தேடினேன். அவரைக் காணவில்லை. திடீரென அவர் மறைந்தார் . நான் அதிர்ந்தேன். அந்த சம்பவம் இன்றுவரை எனக்கு ஒரு மர்மமாகும்.
  LAVANYA GANESAN KIRUTHEKESH
  ST HILDAS SECONDARY SCHOOL

Your email address will not be published.


*