மயங்கி விழுந்தவர்

பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரம். தனியாக நடந்து செல்கிறீர்கள். முன்னால் ஒரு நடுத்தர வயதுடைய ஆடவர் நடந்து செல்கிறார். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர், திடீரென்று மயங்கி விழுகிறார். பதறிப்போகும் நீங்கள், யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று பார்க்கிறீர்கள். சுற்றிலும் யாருமே இல்லை. அச்சூழலில், நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர் யார்? அவருக்கு, அதன் பின் என்ன நேர்ந்தது? இப்படித்தான் என்ற வரையறைகள் இல்லாமல், உங்கள் கற்பனையைப் பறக்கவிட்டு, ஒரு கதையை எழுதுங்கள்.

உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 4 ஆகஸ்ட் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*

மே மாதக் கதைப் போட்டியின் வெற்றியாளர்கள்:

 

Indhu Ramesh Singapore Chinese Girls’ School
Seva Manickam Gan Eng Seng School
M S Nithyasri Riverside Secondary School

 

10 கருத்துரை

 1. அன்று மதியம் 2.30க்கு ‘கிரீங் கீரீங்’ என்று பள்ளி மணி ஒலித்தது. அந்த ஒலியை கேட்டதும் வீட்டுக்கு நாங்கள் அனைவரும் பள்ளியைவிட்டு வீட்டுக்குச் சீட்டாய் பறத்தோம். பசி வயிற்றைக் கிள்ளியதால் நான் வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே என் வீட்டின் அருகில் உள்ள உணவகத்தில் மதிய உணவு வங்கி என் வீட்டிற்கு மெதுவாக நடந்து சென்றேன். என் வீடமைப்புக் கட்டிடத்த்னி கீழ்த்தளத்தை அடந்தபோது, ஏரத்தாள நாற்பது வயது இருக்கக்கூடிய ஆடவர் ஒருவர் தள்ளாடி தள்ளாடி நடத்துக்கொண்டிருந்தார். தீடீரென்று அவர் என் அருகில் மயங்கி தொப்பென்று கீழே விழுந்தார். அதை காண்டதும் எனக்குத் தூக்கிவாரி போட்டது. ஒரு கணம் நான் அப்படியே ஒரு சிலையைபோல உறைந்துபோய் நின்றேன்.

  மயங்கி விழுந்துகிடந்த அந்த ஆடவரின் வலது கையிலும் காலிலும் புலியின் படம் பச்சைக் குத்தப்பட்டிருந்தது. சீனராக இருந்ததால் அவரின் அந்த வெள்ளைத் தோளுக்கு அந்த வர்ணம்கொண்ட பச்சை அழகாக இருந்தது. அந்த ஆடவர் வாட்ட சாட்டமாக இருந்தாலும் ஏன் மயங்கி விழுந்தார் என்ற கேள்வி என்னுளை எழவே செய்தது. ஆனால், உதவி தேவைப்படுவொருக்கு கைகொடுக்க வேண்டும் என்று பெற்றோரும் ஆசிரியரும் சொல்லியது அப்பொழுது ஞாபகபம் வரவே, நான் சற்றும் யோசிக்காமல் என் கைதொலைபேசியை எடுத்து நான் அவசர மருத்துவ பிரிவிற்கு அழைத்தேன். பத்து நிமிடம் கழித்து அவசர மருத்துவ வண்டு வந்தது. “நீயும் எங்களுடன் வா” என்று வெள்ளை மருத்து ஆடை அணிந்திருந்த மருத்துவர் கூறினார். நானும் யோசிக்காமல் அந்த வாகனத்தில் ஏறினேன். அந்த வண்டியில் ஒரு மருத்துவர் மற்றும் ஓட்டுனர் மட்டுமே இருந்தனர். முன்பின் மருத்துவ வண்டியில் பயணிக்காததால் எத்தனை பேர் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அதனால், எனக்கு இவர்கள் மேல் ஒரு சந்தேகம் வந்தது.

  ஒரு மணி நேரம் ஆகியும் நாங்கள் இன்னும் மருத்துவணையை வந்தடையவில்லை. மனத்தில் சற்று பயம் தோன்றவே, நான் சற்று பதற்றமான தொனியில்‘ஏன் இவ்வளவு நேரம் ஆகியும் மருத்துவமனையை அடையவில்லை’, என்று கேட்டேன்.

  ‘இன்னும் பத்து நிமிடத்தில் ஜூரோங் மருத்தவமனையை அடைந்துவிடுவோம். சாலை நெரிசலாக இருக்கிறது. அதனால்தான் இந்த தாமதம்.’ என்று கூறினார்கள். எனக்கு புக்கிட் பஞ்சாங்கிலிருந்து ஏன் ஜூரோங் செல்கின்றனர் என்று சற்று சந்தேகம் எழுந்தது. அந்த ஐயத்தைப் போக்க அவர்களிடம் கேள்வி கேட்டபோது, தீடீரென்று வாகனம் நின்றது. என் அருகில் உள்ள மருத்துவர் என் முகத்தில் ஒரு கைதுண்டை வைத்தார். அப்போது என் உலகம் இருட்டாக ஆகியது.

  தண்ணீர் என் மேல் தெளிப்பதை நான் உணர்ந்து என் கண்களைத் திறந்தேன். நான் முதலில் ஒரு முகத்தை பார்த்தும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என் முன்னால் நின்றுகொண்டிருந்தது ஒரு தீவிரவாதி. அதை என்னால் நம்பமுடியவில்லை. பயம் என்னைக் கௌவிக்கொண்டது. இருப்பினும், அன்று தமிழ் வகுப்பில் தமிழ் ஆசிரியர் கற்றுக்கொடுத்த

  அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
  உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை!
  என்ற பாரதியார் பாடலை முனுமுனுத்துக்கொண்டு தைரியத்தை வரவழைத்து
  “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டேன்.
  அவர் சிரித்துக்கொண்டு என் கைதொலைபேசியை என்னிடம் நீட்டினார்.

  “உன் பெற்றோருக்கு அழைத்து பத்தாயிரம் வெள்ளி எடுத்துவர சொல்லு” என்று மிரட்டினார். பாரதியார் பாடலை நினைவில் நிருத்தி என்ன வேண்டும் என்று கேட்க மட்டுமே துணிவு இருந்தது. அவர்களின் கட்டளையை மீர துணவு இல்லாததால், நான் பயத்துடன் என் அப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். தொலைபேசி தொடர்பு இணைக்கப்பட்டவுடன், ‘அப்பா! அப்பா! என்று அழத்தொடங்கினேன். என் அப்பாவின் குரளைக் கேட்பதற்குள் அந்த ஆடவன் கைத்தொலைபேசியை என்னிடமிருந்து பிடுங்கி
  “உன் பிள்ளை உயிரோடு வேண்டுமென்றால் என்றால் பத்தாயிரம் வெள்ளி எடுத்துட்டு வா” என்று அவரை மிரட்டினான். “காவலர்களுக்கு அழைத்தால் உன் பிள்ளை உயிரோடு இருக்கமாட்டான்” என்று கூறி என் கைதொலைபேசியை அருகில் உள்ள மேசையில் வைத்தான். ஒரு மணி நேரம் கழித்து ஒரு வாகனம் நிற்கும் ஒலி கேட்டது. அப்போது என் அப்பா ஒரு பெரிய பையுடன் வந்தார். அவரை கண்டதும் என் முகம் ஒரு பூ மலர்ந்தது போல் இருந்தது.

  தீடீரென்று என் அப்பா ஒரு துப்பாக்கியை எடுத்து விரைவாக தீவிரவாதியின் காலில் சுட்டார். நான் அப்போது ஓட்டம் பிடித்து என் அப்பா அருகில் சென்று, ” முட்டாள்களே! என் அப்பா ஒரு காவலர் ” என்று நான் பெருமையாக கூறினேன். “பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்” என்று என் அப்பா கூறினார். பிறகு பல காவலர்படை ஒன்றாக வந்து அந்த கடத்தல் மன்னனையும் அவனின் கூட்டத்தையும் கைது செய்தனர்.
  அன்றிலிருந்து நான், ஊர் பேர் தெரியதவர்களின் வாகனத்தில் ஏறக்கூடாது என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.

  Rovin
  Greenridge Secondary School

 2. பள்ளியில் வாரக் கடைசி என்பதால் பள்ளி மணி ஒலித்தபோது நான் உல்லாச வானில் சிறகடித்தப் பறந்தேன். வீட்டிற்க்குப் வேகமாக நடந்துப் போய்க்கொண்டிருக்கும் போது , தூரத்தில் நான் ஒர் ஆடவர் தரையில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்தேன். ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். அந்தப் பக்கம் ஆல் நடமாட்டமே இல்லை. தனியாக போக எனக்கு பயமாக இருந்தது. எனக்கு எதாவுது ஆகிவிடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. அதும் இப்பொழுதெல்லாம் நிறைய பேர் ஏமாந்துப்போய் விடுகிறார்கள். மறுபுறம் என் மனம் அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கேள்வி கேட்டது. அப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால் அந்தக் குற்ற உணர்ச்சி என்னைக் கொன்றுவிடும்.

  ஆதலால், நான் வேகமாக ஒரு நொடிக் கூட யோசிக்காமல் அவரிடம் ஓடினேன். என் பையிலிருந்து தண்ணீரை எடுத்து அவர் முகத்தில் தெளித்தேன். அவர் கண்விழித்த போது அவர் எங்கே இருக்கிறார் என்றுகூட தெரியவில்லை. குண்டர்களைப் போல் அவரின் முகத்தில் தழும்பு இருந்தது. தங்க மணி அவரின் கழுத்தை சுற்றி இருந்தது. கையில் தங்க கை கடிகாரம். ஆழமான குரல் அவருக்கு இருந்தது. எனக்குத் தெரியாத ஒரு ஆடவரை எப்படி ஒரே நொடியில் அவரைப் பார்த்து எப்படிப் பட்டவர் என்று முடிவு செய்யலாம் என்று நினைத்தேன். என் அம்மா எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறுவார். அறம் செய்ய விரும்பு என்று ஔவையார் பாட்டியும் பாடிச்சென்றதை எப்படி கடைபிடிக்காமல் இருப்பது? அதனால், அவருக்கு கைகொடுக்க முடிவெடுத்தேன்.

  பக்கத்தில் கடை எதுவும் இல்லை. அவரின் வீட்டு ‘தோப் பாயோ’ ( toa payoh) வில் இருக்கிறது என்றுக் கூறினார். அதனால், நான் அவரை என் விட்டிற்க்குப் அழைத்துச் சென்றேன். அம்மா வீட்டில் இருப்பார் அவரிடம் நடந்தவற்றைக் கூறி சிரிதாக எதாவுது சாப்பிடக் கொடுக்களாம் என்று நினைத்தேன். ஆனால், அன்று வழக்கத்திற்கு மாறாக, என் அம்மா வீட்டில் இல்லை. எனக்கு பதற்றமாக இருந்தது. “இங்கேயே உட்கார்ந்துக் கொள்ளுங்கள் நான் கழிவரையைப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறிவிட்டு தனியாக அவரை நடு வீட்டில் நாற்காலியில் உட்கார வைத்தேன்.

  கழிவரைவிட்டு வெளிவந்ததும் எனக்கு காத்திருந்தது அதிர்ச்சி. வீட்டில் வரவேற்பு அறையிலிருந்த விலைமதிப்புள்ள வானொலிப்பெட்டியும் என் திறன்பேசியும் மற்றும் மடிக்கணினியும் இருந்த இடத்தில் இல்லை. அந்த ஆடவரும் வரவேற்பறையில் இல்லை.

  அன்று தான் நான் எவ்வளவு பெரிய அறிவாளி என்று தெரிந்துக்கொண்டேன். அன்னை தெரிசாவைப் போல் அவருக்கு உதவி செய்ய நினைத்து இப்போ வடிவேலுவைப் போல் வாயைப் பிழந்து நின்றுக்கொடிருந்தேன். இப்பொழுதெல்லாம் திருடன்கள் இவ்வளவு புத்திசாளிகளாக இருக்கிறார்கள் , எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் நான் அவரைவிட பெரிய அறிவாலி தான் . அம்மா சேர்த்து வைத்த போக்கிஷங்கள் ஒரே நிமிடத்தில் போய்விட்டது. இப்போ புரிகிறது. என் அம்மா கூறுவார்கள்,

  ‘அப்சரா நீ சுலபமாக எல்லோரிடமும் ஏமார்ந்துப் போய் விடுகிறாய்.” திருடர்களுக்கு நான் ஒருத்தரை போதும் அவர்களக்கு நானே சுலபமாகக் பணத்தை சம்பாதிக்க உதவிகரம் நீட்டுவேன். நல்ல வேலை பொருட்களை மட்டும் எடுத்துப் போய்விட்டான், என்னை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அம்மா வீட்டிற்கு வந்தாலும் நான் அவர் கையால் சாக தானே போகிறேன். அம்மா என்னை என்ன செய்யப் போகிறார்களோ!? இன்று என்னுடைய விதி அவ்வளவுதான்.

  அப்சரா
  கிரீன்ரிட்ஜ் உயர்நிலை பள்ளி

 3. அன்று நான் பள்ளி முடிந்து வீடுதிரும்பினேன். இணைப்பாட நடவடிக்கை இருந்ததால் அன்று சற்று களைப்பாகவும் , வீட்டிற்கு சென்று நிறை வீட்டுப்படத்தை செய்து முடிக்கணும் என்று கவலையுடன் சென்றேன். என் பள்ளி பையை அணினித்துக்கொண்டு சென்றது என் கழுத்தை வெட்டியது. பேருந்திலிருந்து இறங்கியதிலிருந்து என் வீட்டின் கீழே வரைக்கும் , என் முன்னாள் ஒருவர் ஒரு பெரிய பையை கொண்டு சென்றார், திடிரென்று அவர் கீழே மயங்கி விழுந்தார். அப்போது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் முதன் முறையாக ஒருவர் மயங்கி விழுவதை பார்த்ததால் , சிறிதளவு பயம் ஏற்பட்டது. அப்போது நான் “999” என்ற எண்ணுக்கு என் கைதொலைபேசியிலிருட்னது அழைத்தேன். பயத்தினுள் இருந்ததால் , எனக்கு அவசர சிகிச்சை வண்டியின் என் கூட மறந்துவிட்டது. காவலதிகாரிகள் வந்ததும் என்னை பாராட்டினார்கள் அதோடு அந்த ஆடவர் சிறையிலிருந்து தப்பித்து வந்தவர் என்று சொன்னார்கள். நான் பேச்சில்லாதவனாக நின்றேன். காவல் அதிகாரிகளோ என்னை பற்றி விசாரணை செய்துவிட்டு சென்றுவிட்டார்கள். நான் அந்த குற்றவாளி ஏன் இங்கு வந்திருக்கணும் என்று யோசித்துக்கொண்டேயி வீட்டிற்கு சென்றேன். என் அம்மாவிடம் நடந்ததை கூறினேன். அவரோ எதையும் யோசிக்காமல் இருக்க
  சொல்லிவிட்டு அவர் அறைக்குள் சென்றுவிட்டார்.

  Duraikumaran
  Bendemeer secondary school.

 4. எனக்கு சிறுபிள்ளையாக இருந்தபோதே பல நோய்களுக்கான இயற்கை தரும் மருந்தைப் பற்றி கற்றுக்கொள்ள கொள்ளை ஆசை. சித்தவைத்தியத்தில் என் பாட்டி சிறந்த தேர்ச்சி பெற்றிருந்திருந்ததால் நான் அவரோடு கற்றுக்கொண்டேன். என் பாட்டி இறந்தததால் நான் என் ஆசையை விட்டுக்கொடுக்கவில்லை, தொடர்ந்து சித்தவைத்தியம் கற்றுக்கொண்டேன். இந்தியாவுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கு இருக்கும் செடிகளை வைத்து மருந்து தயார் செய்வேன்.

  அன்று ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். என் முன் இருந்த அவர், ஒழுங்காக தான் நடந்து சென்றுகொண்டிருந்தார். ஆனால் திடீரெனெ கீழே மயங்கி விழுந்தார். பக்கத்தில் யாரும் இல்லாததால் நானோ அவர் பக்கம் சென்று பார்த்தேன். அவரை எங்கோ பார்த்திருப்பது போல இருந்தது. அவருடைய மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. ரத்தத்தை நிறுத்த பக்கத்திலிருந்த யார்ரோவ் (yarrow) மூலிகையைப் பயன்படுத்தினேன். பிறகு மருத்துவ வண்டியைக் கூப்பிட்டேன்.

  “இவருக்கு வந்திருக்கும் நோய் சாதாரண நோய் அல்ல. வேறெங்கும் இதுவரை வராத புதிய நோயாக உள்ளது. காப்பாற்றுவது கடினம்.” என்றார் மருத்துவர். நானோ விடவில்லை. என் பாட்டி கூறியது நினைவுக்கு வந்தது. “நம்மால் முடிந்த வரைக்கும் உயிரைக் காப்பாற்ற போராட வேண்டும். முடியாது என கூறக்கூடாது.” என்பது தான் அவர் கூறிய முதல் அறிவுரை. நான் மருத்துவர் தடுப்பதைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்தேன்.

  எங்கும் பல்லாயிரக்கணக்கான கருவிகள் பொருட்டப்படுத்தப்பட்டிருந்தன. ஆடவரோ அசைவின்றி இருந்தார். செயற்கை சுவாசத்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தார். நான் ஒரு நிமிடமும் வீணாக்காமல் அவரருகே சென்று பார்த்தேன். அவர் கண் ஒரு வித பழுப்பு நிறத்தில் இருந்தது தெரிந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு இவ்வகையான அறிகுறிகள் கொண்ட விபரீத நோய் என் பாட்டியின் ஊரிலும் தாக்கி பலரைக் கொன்றதாகக் கூறியிருந்தார். அதற்கான மூலிகை மிகவும் அரிதானது எனவும் கூறியிருந்தார். ஆனால், நல்ல வேலையாக அவர் ஒரு மூலிகையைப் பத்திரமாக வைத்திருந்தார். நான் உடனே வீட்டுக்கு ஓடிச் சென்றேன்.

  “கண் திறக்கிறார்!” என அலறியவாறு ஆடவரின் மனைவி வெளியே ஓடி மருத்துவரைக் கூப்பிட்டார். “இந்தச் சிறுமி என் கணவரைக் காப்பாற்றிவிட்டாள்.” என்று என்னை நன்றி பெருக்கோடு பார்த்தார். மருத்துவரோ என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார். “இவர் யார் என்று தெரியுமா? சித்தவைத்தியதில் தலை சிறந்து விளங்கும் குரு தீபக் ஆவார்! அவருக்கே சித்தவைத்தியம் செய்து காப்பாற்றிவிட்டாயே!” என வாய் பிளந்தார். நானோ அதிர்ச்சியடைந்தேன். குரு தீபக்கின் நூல்களை வைத்து தான் என் பாட்டி இறந்ததற்குப் பிறகு சித்தவைத்தியம் கற்றுக்கொண்டேன்! அதுவரை பேசாத குரு, என்னை பார்த்து, “என் உயிரை காப்பாற்றியது போல மற்றவர்களுக்கும் நீ உதவ வேண்டும்! நாளையிலிருந்து நீ என்னிடமிருந்து சித்தவைத்தியத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்.” என்று கூறி புன்னகை புரிந்தார். நான் செய்த சிறு உதவிக்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைத்ததை எண்ணி ஆச்சரியப்பட்டேன்.

  க.கபாஷினி
  மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி
  உயர்நிலை
  2

 5. பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரம். தனியாக நடந்து செல்கிறீர்கள். முன்னால் ஒரு நடுத்தர வயதுடைய ஆடவர் நடந்து செல்கிறார். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர், திடீரென்று மயங்கி விழுகிறார். பதறிப்போகும் நீங்கள், யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று பார்க்கிறீர்கள். சுற்றிலும் யாருமே இல்லை. அச்சூழலில், நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர் யார்? அவருக்கு, அதன் பின் என்ன நேர்ந்தது?
  எனது இதயம் ‘படக் படக்’ என்று தாளம் போட நான் பயத்தில் செய்வதறியாது திகைத்தேன். ‘இப்பொழுது நான் என்ன செய்வதென்றே தெரியவில்லையே! அருகில் வேறு யாருமில்லை! அவருக்கு என்ன ஆகியது என்று முதலில் பார்க்க வேண்டும்.’ என்று என் மனதிற்குள் எண்ணியவாரே மயங்கி விழுந்தவரை நோக்கி விரைந்தேன். என் தண்ணீர் புட்டியிலிருந்து தண்ணீரை அவரது முகத்தின் மீது தெளிக்க நான் முற்பட்டபோது திடீரென்று அந்த நபர் ஒரு கைகுட்டையினால் எனது வாயை மூடுவது மட்டும் தான் எனக்கு நினைவில் இருந்தது. அதற்குப் பின் நடந்தது எதுவும் எனக்கு நினைவில் இல்லை. எவ்வளவு மணி நேரம் கடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

  நான் மெல்ல என் கண்களைத் திறந்தபோது நான் ஒரு பாழடைந்த கட்டடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்ததையும் நான் ஒரு நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்ததையும் மட்டும் என்னால் உணர முடிந்தது. பயத்தில் என் கைகள் நடுங்கின. அப்பொழுது சிலர் உரக்க பேசிக்கொள்வது மட்டும் எனக்குக் கேட்டது. ‘அந்த சிறுமி எழுந்துவிட்டாளா? அவளுடைய பெற்றோருடைய கைத்தொலைபேசி எண்கள் என்னவென்று அவள் எழுந்தவுடன் கேட்டு பணத்தைப் பறிக்க வேண்டியது தான்! நமது அடுத்த குறி யார்?’ என்று யாரோ பேசும் குரல் எனக்குக் கேட்டது. ஒரு கணம் என் ரத்தமெல்லாம் உறைந்து விடுவது போல ஓர் உணர்வு ஏற்பட்டது. ‘அப்படியென்றால் எனக்கு முன்னால் சென்ற ஆடவர் தான் என்னைக் கடத்திருக்க வேண்டும்! உதவி செய்வதற்குப் போய் நான் மாட்டிக்கிட்டேனே! இப்பொழுது நான் எவ்வாறு இங்கிருந்து தப்பிப்பது என்று தெரியவில்லையே! நான் என் பெற்றோரை மறுபடியும் பார்ப்பேனா?’ என்று பல்வேறு எண்ணங்களும் வினாக்களும் எனது மனதில் தோன்றின. பயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு எவ்வாறு அவ்விடத்திலிருந்து தப்பித்து எனது பெற்றோரை மீண்டும் சந்திப்பது என்று யோசிக்க முயற்சித்தேன். ஆனால் என் சிந்தனை அறிமுகமில்லாத ஒருவரின் குரலால் தடைப்பட்டது.

  அரக்கன் போல் எனது கண்களுக்குத் தோற்றமளித்த அந்த உருவம் வேறு யாருமில்லை, மயங்கி விட்டவன் போல் நடித்தவன் தான். அவனது இரக்கமில்லா சிரிப்பொலியைக் கேட்டு என் மனம் பயப்பட என் நாக்கோ எனது கோபத்தை அவன் மீது கொட்ட துடித்தது. ஆனால், எனது வாயை மூட அவன் ஒட்டியிருந்த பசைப்பட்டையை அவன் அகற்றாததால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. என் மனதில் இருந்த பயம் உறுதியாக மாறியது. அதன் வெளிப்பாடாக நான் கயிற்றால் பிணைக்கப்பட்டிதலிருந்து விடுப்பட எனது சக்தி அனைத்தையும் பயன்படுத்தினேன். ஆனால், அந்தகடத்தல்காரன் என் முயற்சிகளை முறித்து விட்டான். பிறகு, நான் எதிர்பார்க்காத செயல் ஒன்றையும் ஆற்றினான்- பசைப்பட்டையை அவிழ்த்தான். உடனே, என் மனதில் நான் அடைத்து வைத்திருந்த அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினேன். ‘உனக்கு என்ன தான் வேண்டும்? பணம் வேண்டுமென்றால் வேலைக்குச் சென்று சம்பாதிக்க தெரியாதா? இப்படித்தான் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் உன் பலத்தைக் காட்டுவாயா? ஆமாம், நான் தெரியாமல் தான் கேட்கிறேன் எந்த நம்பிக்கையில் எனது பெற்றோருடைய கைத்தொலைபேசி எண்ணை உன்னிடம் கொடுப்பேன் என்று நினைத்தாய்? நீ என்ன செய்தாலும் சரி, நான் கொடுக்க முடியாது!’ என்று கூறினேன். பேசியது நான் தானா என்று ஒரு கணம் எனது மனம் யோசிக்க, எனது துணிச்சலான சொற்களால் கடத்தல்காரர்களும் அதிர்ந்து போயிருந்னர்.

  ஆனால், அந்த உணர்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. நான் அடுத்து எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது என்று யோசிப்பதற்குள் அந்த கடத்தல் கும்பலிலிருந்த இன்னொருவன்,’உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் எனது நண்பனையே எதிர்த்து வினா எழுப்புவாய்?’ என்று மிருகம் போல சீறினான். திடீரென்று, அவன் பின்னால் இருந்த கத்தியை என் கழுத்தில் அழுத்தினான்.என் இதயத்தில் உதித்த பயத்தைக் கட்டுப்படுத்தி அவனது பலகீனத்தை எவ்வாறு அவனுக்கு எதிராக பயன்படுத்துவது என்று சிந்தித்தேன். என்னால் எதையும் கண்டுப்பிடிக்கவில்லை இருப்பினும் சிறிது நேரம் கழித்து, அவனுடைய கைகள் சற்று தடுமாறியதை என்னால் உணர முடிந்தது. ‘என்ன பயமா? தாராளமாக என்னனைக் கொன்றுவிடு, பிறகு உனக்குப் பணத்தை யார் தருவார்?’ என்று நான் கூறினேன். நான் ஊகித்திருந்தபடி என் திட்டம் நன்றாகவே வேலை செய்ய தொடங்கியது.
  ‘உனக்கு எவ்வளவு தைரியம்-‘ என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் அந்த அறையின் கதவுகளை உடைத்து உள்ளே என்னைச் சரியான நேரத்தில் கடவுள் போல் காப்பாற்ற வந்தனர் காவலர்கள். கண் சிமிட்டும் நேரத்தில், காவல் அதிகாரிகள் கடத்தல்காரர்களை கைது செய்துவிட்டனர். நான் சில மணி நேரங்களில் எதிர்நோக்கிய வேதனையும், மனப்போராட்டமும் என் கண்களிலிருந்த கண்ணீர் துளிகளை வரவழைத்தது. ‘அழ அவசியமில்லை. இப்பொழுது நீ பத்திரமாக உள்ளாய்! நடந்ததை மறந்துவிடு!’ என்று ஒரு காவல் அதிகாரி எனக்கு ஆறுதல் கூறியவாறு என்னைக் கயிறுகளிலிருந்து விடுவித்தார். நான் எனது உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாடிலிருந்து மீண்டவுடன் காவல் அதிகாரிகள் என்னை வெகு நேரம் காணாததால் எனது பெற்றோர் காவல் புகார் செய்திருந்ததால் அவர்கள் என்னைத் தேடிக்கொண்டு வந்ததை என்னிடம் கூறினர். நானும் என்ன நடந்தது என்று கூற என் வீடும் வந்தது. எனது பெற்றோரை மீண்டும் பார்ப்பதில் என் மனம் நிம்மதியடைந்தது. அந்த சம்பவம் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்.

  Singapore Chinese Girls’ School (1 HT)
  சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

 6. வெள்ளிக்கிழமை என்றாலே அலாதியான மகிழ்ச்சிதான். பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். எனக்கு முன் சற்று தூரத்தில் நாற்பது மதிக்கத்தக்க ஒரு ஆடவர் சென்றுக்கொண்டு இருந்தார். திடீரென்று கண் இமைக்கும் நொடியில் மயங்கி விழுந்தார். அதைப் பார்த்து நான் அதிர்ச்சியுவுற்று, கண்களை சுழலவிட்டேன். மனித நடமாட்டம் இல்லை. என்னுடைய அலைகள் இரண்டு நாட்களுக்கு முன்பாக செய்தித்தாளில் வந்த செய்தியை ஞாபகப்படுத்தியது இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மயங்கி விழுந்த ஒரு நபர் அருகில் சென்ற பள்ளி சிறுவனை மயக்கமடைய செய்து, அவளிடம் பள்ளி சுற்றுலாவுக்கு செலுத்துவதற்கு, இருந்த $200, ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டார். அதனால் என்னிடம் பணம் இல்லை. என் பிறந்தநாள் என்பதால் விலை உயர்ந்த கடிகாரத்தை என் பெற்றோரின் அனுமதிப்பெற்று அன்று மட்டுமே அணிந்திருதேன்.

  தயக்கமுற்ற நான் விழிப்புணர்வு தட்ட தொலைவில் நின்று அவரை நன்கு கவனித்தேன். அவரின் கண் இமைகள் உருண்டதை கவனிக்க மடிந்தது. என்னுடைய சந்தேகம் உறுதி ஆனது. என் மனதில் எனக்கு சொல்லிக்கொடுத்த நடவடிக்கைகள் ஓட தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சற்றுப் பின்னோக்கி நடந்தேன். அதற்குள் அந்த நபர் எழுந்து அமர்ந்தார். என்னைப் பார்த்து கைகளை அசைத்து, தண்ணீர் தருமாறு சைகையில் காட்டினார். எனக்கு பயம் தட்ட, வெளியில் காட்டிக்கொள்ளாமல் என் கைத்தொலைபேசியை எடுத்து அவர் காதில் படுமாறு உரக்க பேசினேன். நான் அவர் கண் முன்னே அவசர வண்டிக்கு பேசிவிட்டு காவல்நிலையத்துக்கும் தொடர்புகொண்டு இதுபோன்ற அசம்பாவிதம் நடந்திருப்பதாகவும், அந்த நபரை எனக்கு அடையாளம் தெரியவில்லை என்றும், உடனே உதவிக்கு வருமாறும் பேசிவின்னு கைத்தொலைபோசியை அணைத்தேன்.

  அப்போது சற்றும் நான் எதிர்பாராத நிகழ்வு நடந்தது. அநத் நபர் வேகமாக எழுந்து. வேகமாக ஓடத்தொடங்கினார். அதற்கு முன்பே அவரை நான் என் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்துவிட்டேன், அந்த திருடனைப் பிடிக்க முடியவில்லை. இதோ அவரின் புகைப்படம் என்று காட்டினேன்.காவலர் ஒருவர் என்னிடம் பராவாயில்லைத் தம்பி, பிடிக்க முடியாவிட்டாலும் நீ பாதுகாப்பாக இருந்துள்ளாய், அருகில் சென்று இருந்தால் அவ்வளவுதான். பஈதுகாப்பு விழிப்புணர்வு மக்களிடம் இருந்தாலே திருடர்கள் பயப்படுவார்கள். அவர்களால் எதுவுமே செய்யமுடியாது’ என்று என்னைப் பாராட்டினார், அன்று ஏனோ என் மனம் எதையே பெரிதாக சாதனை செய்துவிட்டதைப் போல உணர்த்தியது.

  விஷ்ணு
  பொங்கோல் உயர்நிலைப் பள்ளி

 7. சூரியன் தன் கதர்களால் வறுத்து எடுத்த மதிய வேளை, வெளியே யாரையும் காணவில்லை. மெளத்தை ரசித்துகொ கொண்டு சற்று தூரம் நடந்துக்கொண்டு இருந்த போது, ஒரு நடுத்தர வயதுடைய ஆடவரை சந்தித்தேன். அவர் கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டே இருந்தார். என்னை பார்த்தார், மறுபடியும் தொலைபேசியைப் பார்த்தார். அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கும் போதே, மயங்கி விழுந்தார். நான் பயந்து என்ன என்று பார்க்க சென்றேன்.

  கடவுளை வணங்கி, ஆடவரின் கன்னத்தில், தட்டினேன். மறுபடியும் தட்டினேன். ஆனால் அசைவில்லை, நாள் எழுந்து நிற்கும்போது, ஆடவர் என் கையை வலுவாக பிடித்துக்கொண்டார், மறுக்கையால், என் வாயை முடினார். கைகளை ஆட்டி கையை அகற்ற முயற்சி செய்தேன். அவர் வாயை மூடிக்கொண்டே பக்கத்தில் இருந்த வண்டியில் தள்ளினார். அங்கு நான்கு பேர் இருந்தனர். என்னை அறைக்குள் தள்ளினார்கள். பயத்தில் இதயத்துடிப்பு வேகமாக அடித்தது. என்னைக் கடத்திய ஆடவர் என் முன்னே வந்தார். ‘உங்களுக்கு என்ன வேண்டும்? எவ்வளவு பணம் கேட்டாலும் என் அப்பா உனக்கு தருவார்’ என்று பயந்துக்கொண்டே கூறினேன். அதற்கு ‘ எனக்கு எதுவும் வேண்டாம், நீ மட்டும் போதும், உன்னை வைத்து நான் பல விஷயங்களை சாதிக்க போகிறேன்’ என்று கூறினார். என் கைத்தொலைபேசியை எடுத்து என் அப்பாவிற்கு அடிக்க கட்டளையிட்டார். நானும் அவர் சொன்னதைச் செய்தேன். என் குரல் கேட்டு என் அப்பா பதறினார். அவன் ‘ கேட்டுச்சா! இப்ப நீ என்ன செய்யுற ஒரு மாததிற்கு முன் என் அண்ணா மேல் ஒரு கொலை கேசு போட்டியே, அதை வாப்பஸ் வாங்குற, இல்லை, இந்த அழகான தேவதை பொணமா தான் வருவா’ இதே நாளைக்குள் செய்யுற’ என்று மிரட்டினார். என் அப்பா கெஞ்சுவது என் காதில் கேட்டது.

  என் முன்னே இரண்டு வழிகள் தான் உள்ளது. ஒன்று என்னை மீட்க என் அப்பா வாபஸ் வாங்க வேண்டும், இல்லை என்றால் என்னைத் தியாகம் செய்வது. அவன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறித்தேன். என்னை நானே சுட்டுக்கொண்டேன். இப்போது என் அப்பா ஒரு கொடிய மிருகத்திற்கு உதவு செய்யவேண்டாம். என்னால் ஒருவனின் தூக்கு உறுதுயாயிற்று. கடவுள் எப்போதும் ஒருவரை இவ்வுலகத்திற்கு அனுப்ப ஒரு காரணம் உண்டு. ஆனால் அதற்கு பொருமையாக இருந்தால்தான், நம்மால் காரணத்தை கண்டு பிடிக்க முடியும. என் தந்தை 42 ஆண்டுகள் காத்திருந்தார். நான் பிறந்ததற்கு காரணத்தைக் கண்டுபிடிக்க எனக்கு 16 ஆண்டுகள் எடுத்தன……

  ரீனா மெர்லின்
  பொங்கோல் உயர்நிலைப் பள்ளி

 8. ஆறு மணி ஆனாது, இணைப்பாட வகுப்பு முடிந்தது. வீட்டிற்கு செல்ல புறப்பட்டேன். வீட்டிற்கு நடந்து தான் செல்வேன். அப்போது என் முன்னால் ஒரு ஆடவர் கைத்தொலைப்பேசியர் பேசிக்கொண்டே நடந்துகொண்டு இருந்தார். திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்தார். திடுக்கிட்டு போன நான், உதவி செய்ய யாராவது இருக்கிறார்களா என்று தேடிப்பார்த்தேன். அந்த நேரம் பார்த்து யாருமே இல்லை. உடனே அவசர வாகனத்திற்கு தொடர்பு கொண்டேன். பிறகு நான் முதல் உதவி பயிற்சியை அவருக்கு செய்தேன். சற்று நேரத்தில் அவசர ஊர்தி வந்தது. வந்த மருத்துவ உதவியாளர்கள் என்னுடைய விவரங்களைக் கேட்டார்கள். நான் முதல் உதவி பயிற்சியை நன்றாக செய்தேன் என்று கூறினார்கள். பிறகு அவரைக் கூட்டி சென்றார்கள்.

  நான் உதவி செய்த வரை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது. ஒரு வாரம் சென்றது. காலையில் என் பள்ளி தலைமையாசிரியர் ஒரு மாணவி செய்த நல்ல செயலால், நம் பள்ளியில் புதிதாக சேர்ந்த ஆசிரியர் உயிரோடு இருக்கிறார் என்று கூறினார். நான் உதவி செய்த புதிய ஆசிரியர் பள்ள கூடத்தில் நன்றியை எனக்கு தெரிவித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரின் மனைவிக்கு விபத்து ஏற்பட்ட செய்தியைக் கேட்டதும், அவருக்கு மாரடைப்பு வந்தது என்று விளக்கினார். நான் செய்த செயலுக்கு, பள்ளி என்னைப் பாராட்டி ஒரு சான்றிதழை வழக்கியது.

  அஃப்ரின்
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 9. அன்று செவ்வாய்கிழமை நான் இணைப்பாட நடவடிக்கையால் மிகவும் சேர்வாக இருந்தது. என்னுடன் வந்த நண்பனும் பாதி வழியில் இறங்கிச் சென்றுவிட்டான். பேருந்து நிறுத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தேன். அந்த வழியாக ஆட்கள் நடமாட்டம் இல்லை. நடந்துக்கொண்டு இருக்கும் போது ஒரு நடுத்தர வயதினர் ஒருவன் எனக்கு முன் நடக்க தொடங்கினான். அவரைப் பார்க்கும் போது ரொம்ப வயதானவார தெரியவில்லை. அவர் திடீரென மயங்கி விழுந்தார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பக்கத்தில் சென்று பார்த்தேன். அவரிடம் அசைவு இல்லை. யாருக்காவது அழைக்கலாமா? என்று யோசித்து என் கைத்தொலைபேசியை எடுத்தேன். அவன் என் கைத்தொலைபேசியைப் பறித்துக்கொண்டு தலை தெறிக்க ஓடினான். ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. காவல் நிலையத்துக்கு செல்வதா? அல்லுது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் கூறுவதா? என்று குழப்பத்தில் இருந்தேன்.

  சரி, வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறலாம் என்ற எண்ணத்துடன் வீட்டுக்குச் சென்றேன். வீட்டுக்குச் செல்லும் வழியில், நான் என் முட்டாள்தனத்தை நினைத்து கோபப்பட்டேன். எப்படி இவ்வளவு ஏமாளியாகவும் முட்டாளாகவும் இருந்தேன் என்று எண்ணி வெட்கமாக இருந்தது.

  அஸ்லாம்
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 10. “டிரிங்…!” என பள்ளி மணி ஒலித்தது. அதைக் கேட்டதும் என் மனம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது. நான் என் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வேக வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என் மனம் முழுவதும் ஒரு விதமான பரவசம். ஆம் இன்று என் கனவு நனவாகப் போகும் நாள். ஆறு வருட கடும் பயிற்சிக்கு பின் இன்று மாலை நடக்கவிருக்கும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்குபெற போவதைப் பற்றி எண்ணியபடி நான் என் அடுக்கு மாடி குடியிருப்பின் தாழ்வாரத்தை அடைந்தேன்.

  அப்பொழுது எனக்கு சற்று தொலைவில் நடுத்தர வயதுடைய ஒருவர் சற்றே தள்ளாடிய படி நடந்து செல்வதைக் கண்ணுற்றேன். கண்ணிமைக்கும் பொழுதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். சுற்றும் முற்றும் பார்த்தேன், ஒருவரையும் காணவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அவரருகே சென்றேன். அருகில் சென்று பார்த்தால்,”ஆ!”அவர் என் தோழி மாலாவின் தந்தை.

  சற்றும் தாமதிக்காமல், நான் மருத்துவ வாகனத்தை அழைத்தேன். பின் நான் மாலாவின் தாயாரை அழைத்து நடந்தவற்றை விவரித்தேன். அதற்குள் மருத்துவ வாகனம் வந்துவிட்டது.அடுத்த பத்தாவது நிமிடத்தில் நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் கூறினார்.என்னுடைய ரத்தவகை பொருந்தியதால் நான் சற்றும் தயங்காமல், உடனே ரத்த தானம் செய்ய சம்மதித்தேன்.

  தக்க சமயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அவர் உயிர் பிழைத்துவிட்டார். நீச்சல் போட்டியில் கலந்துக்கொள்ள இயலாமல் போனதில் எனக்கு ஓரு பக்கம் வருத்தம் இருந்தாலும், தக்க சமயத்தில் ஓரு உயிரைக் காப்பாற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அடுத்த வருடம் வரும் நீச்சல் போட்டியில் கலந்துக்கொள்ள முடியும். ஆனால் ஓரு உயிர் போனால் திரும்ப வரமுடியாது என்பதை உணர்ந்தேன்.
  “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது”,என்பது திருவள்ளுவரின் வாக்கு. மாலாவின் குடும்பத்தினர் கண்களில் தெரிந்த நன்றி உணர்வில் நான் அதை அறிந்தேன்.

  நித்யஸ்ரீ
  ரிவர்சைடு உயர்நிலை பள்ளி

Your email address will not be published.


*