மகிழ்ச்சி

இந்த முகங்களில்தான் எத்தனை மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கான காரணம் என்ன? விடுமுறையா? கிடைத்த பரிசா? சந்தித்த நட்புகளா? காரணம் எதுவாகவும் இருக்கலாம். அதேபோல், இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் உங்கள் மனத்தில் பல கருத்துகள் தோன்றலாம். இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 22 நவம்பர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
செப்டம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்

9 கருத்துரை

 1. மகிழ்ச்சி என்றால் என்ன?
  தோற்றமா?உணர்ச்சியா?
  நினைக்கும்போதெல்லாம் வரக்கூடிய ஒன்று அது அல்ல.
  மகிழ்ச்சி நமக்கு வரும்போது கூடவே வரும் சிரிப்பு.
  என் மகிழ்ச்சி எல்லாம் காற்பந்து விளையாடும்போது வரும்.
  உங்களுக்கு அது வரலாம்.
  ஆனால் எப்போது வரும்?
  அதுதான் கேள்வி.மகிழ்ச்சிக் கொண்டு மகிழந்திருங்கள்.

  M.NEELAKANDAN
  YUHUA SECONDARY SCHOOL

 2. மகிழ்ச்சி
  செடியில் பூக்கும் மலரை விட
  நொடியில் பூக்கும் உங்கள் புன்னகை அழகு!
  உலக அதிசயம் காண கர்வமில்லை
  உங்கள் மகிழ்ச்சியை கண்டபின்.
  இறைவன் படைப்பில் இயல்பு கெடாமல்
  இன்றும் இருப்பது இந்த சிரிப்பு!
  நீங்கள் கொஞ்சம் சிரித்தாலும் தேனாய் இனிக்குது
  மனதில் ஆனந்தம் பொங்குது,
  உங்கள் சிரிப்பு முகத்தை பார்த்து.
  கடவுள் தந்த வரம் மகிழ்ச்சி
  உண்மையான கவிதை என்பது,
  அழகான வரிகளை சொல்வது அல்ல,
  குழந்தைகளின் சிரிப்பை சொல்வது.
  இறைவன் தந்த முதல் முகவரி சிரிப்பு தான்.
  வாழ்நாட்கள் அதிகம் வேண்டாம்,
  வாழும்நாட்கள் மகிழ்ச்சியாய் இருந்தாலே போதும்.
  வெளிப்படையாக இருப்பவர்களை விட
  உங்களைப் போல் வெளிப்படையாக சிரிப்பவர்களுகே
  உலகில் மதிப்பு அதிகம்.
  ஆழம் தெரியாமல் விழுந்தேன்
  உங்கள் கன்னக்குழி சிரிப்பில்.
  அதிகாலை பொழுதில் சூரியனின் வெளிச்சம் கண்டேன்
  வானத்தில் பறவைகள் பறப்பதை கண்டேன்
  உங்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியை கண்டேன்
  நீங்கள் அன்பாக பேசி வெல்வதை விட
  சிரிப்பால் வெல்வதே அதிகம்
  சிரித்து சிரித்து சிறைப்படுத்தும் கலையை
  உங்களுக்கு கற்றுத்தந்தது யாரோ??
  நீங்கள் குழந்தைகளின் புன்னகைக்கு காரணமானால்
  உங்கள் பாவங்கள் சிறிதேனும் குறைக்கப்படும்!
  மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக வையுங்கள்!
  சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்
  மனம் விட்டு சிரிப்போம்! கவலையை மறப்போம்!
  சுபத்ரா
  JURONG WEST SECONDARY SCHOOL

 3. ஆனந்தத்தில் திளைத்தேன்
  வயிறு குலுங்க நகைத்தேன்
  மூத்து சரப் பற்களை காட்டினேன்
  ச்ழ்ச்ஸாசயில் சிறகடித்து பறந்தேன்ச்சஸமயத்தில்,
  முகம்ச்ச்ச்ச் பொலிவடைந்தது
  அகத்தின் அழகு தெரிந்தது
  கவலைகள் மறைந்தது
  கோபங்கள் ஒழிந்தது
  அச்சமே பயமடைந்தது
  வாழ்வின் அர்த்தமே
  அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது
  சங்கர்ரமணி கீர்த்தனா
  ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி

 4. ஜாதி, மதம், இனம், மொழி
  இதையெல்லாம் தாண்டி வருவது
  காதல் மட்டுமல்ல…
  காய்ச்சலும்தான்?
  உடனே மருந்து குடிங்க!
  பிரதிபா
  பெண்டிமியர் உயர்நிலைப்பள்ளி

 5. எத்தனை மொழிகள் இந்த உலகில்
  எல்லாவற்றையும் மிஞ்சி நின்று நட்பை வளர்க்கிறது
  இந்த மகிழ்ச்சி மட்டும்!
  இந்த புன்னகை மட்டும்!
  பூக்களாக புன்னகைத்திடுங்கள்
  தேனாக அன்பைச் சுரந்திடுங்கள்!
  எல்லா மொழிகளுக்கும் உண்டு
  எழுத்து வடிவம்
  மகிழ்ச்சிக்கு மட்டுமே
  அன்பின் வடிவம்!
  தடக் தடக் தொடர்வண்டிப் பயணத்தில்
  சாரை சாரையாக மக்களை ஏற்றி
  ஊர்கிறது இயந்திர வண்டி
  கூட்ட நெரிசலில்
  விழி பதுங்கி நிற்கும் நேரம்
  எல்லோர் கவனத்தையும் திருடி
  மகிழ்விக்கிறாள் அந்த மழலை மலர்!
  அலுப்பும் சலிப்பும்
  மனது பங்குப் போட்டு
  தருணங்கள் ரசிப்பதற்கு
  தடை போட்டு நிற்கின்றன!
  கடிகார முள்ளின் வேகத்தை மிஞ்சும்
  மக்களின் கால்கள்…
  மகிழ்ச்சியடைய நேரமில்லை என்று
  செப்புகிறார்கள்.
  வேகமாக நகரும் வாகனங்களுடன்
  நம் நாட்களும் ஓடுகிறது…
  வாழ்க்கையில் புன்னகைக்கவும் மகிழ்ச்சியடையவும் காலம் இல்லை
  என்கிறார்கள்.
  இயந்திர வாழ்க்கையில் நின்று ரசிக்க வேண்டிய வானவில்
  வெறும் வண்ணக்கலவையாகவே தெரிந்தால்
  வேதனைப்பட வேண்டிய யதார்த்தம்!
  மழலை மகிழ்ச்சி போல
  மனதை வருடும்
  எத்தனையோ மயிலிறகுகளாய்
  இனிய நிகழ்வுகள்…
  அத்தனையும் நமக்காக
  வாழ்க்கையெனும் ஓவியத்தில்
  வெவ்வேறு வண்ணங்களாக!!!
  மகிழ்ச்சி என்பது எழில்வாய்ந்த்து.
  வாழ்க்கை நமது முகம் போன்றது.
  நமது முகம் எழில்வாய்ந்த்தாக இருக்கவேண்டும்
  நம் வாழ்க்கை மகழ்ச்ணி நிறைந்த்தாக இருக்கவேண்டும்.

  யாஷிகா ராதாகிருஷ்ணன்
  ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி

 6. பூவை போல் மலரும் அந்த முகம்
  அது நமக்கு தரும் சுகம்
  அதை பார்த்த உடன் என்னுடைய நாள் மழுமை அடையும்
  அதை போல் நிறைய நாட்கள் வர எனக்கு ஆசை
  என் நண்பர்களுடனும் விளையாட எனக்கு கொள்ளை ஆசை
  மகழ்ச்சி

 7. இந்த புவியில் பிறக்கும் ஒவ்வொரு மானிடர்களும் மகிழ்ச்சியோடு பிறப்பதில்லை,
  ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடன்தான் பிறந்திருக்கர்கள்!
  மகிழ்ச்சில்லாத வாழ்கை சிறகில்லாத பறவைக்கு சமம்,
  பறவைக்கு அழகு சிறகு, நமக்கு அழகு மகிழ்ச்சியாக இருப்பது!
  மகிழ்ச்சிப்படுபவர்கள் எல்லாரும் கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை,
  கவலைகளை மறக்க கற்றுக்கொண்டவர்கள்!
  உங்கள் வாழ்கை, நீங்கள் அழுவதற்கு நூறு காரணங்கள் கொடுக்கும்,
  ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கொடுங்கள்!
  உங்கள் மகிழ்ச்சியை வைத்துக்கொண்டு இந்த உலகத்தை மாற்றுங்கள்,
  இந்த உலகத்தை உங்கள் மகிழ்ச்சியை மாற்ற விடாதீர்கள்!
  மகிழ்ச்சியாக இருங்கள் அப்படத்தில் இருக்கும் மாணவர்கள் போல!
  “வாய்விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும்!”
  சிரித்து மகிழ்ச்சியாக இருபவர்கள் நோய் நொடி இல்லாமல் தலை நிமிர்த்து நில்லுங்கள்!
  நோய் உள்ளவர்கள் மருந்தை வாங்கி காசையும் வாழ்க்கையையும் விரையமாக்கதிர்கள்,
  நீங்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தாலே போதும்.
  சிந்தித்து செய்லடுங்கள்!
  மகிழ்ச்சியாக இருங்கள்!
  Duraikumaran
  Bendemeer secondary school

 8. மகிழ்ச்சி
  ஸ ரி க ம த நி சத்தம், நீ சிரித்தால் என் இருதயத்தில் ஒரு யுத்தம்
  அழுத சிசுவுக்குத் தன் தாயைக் கண்டவுடன் மகிழ்ச்சி
  கற்றவனுக்கு மதிப்பெண்கள்தான் மகிழ்ச்சி
  உழவனுக்கு தை அறுவடைதான் மகிழ்ச்சி
  பாலர்களுக்கு நண்பர்களுடன் ஓடி ஆடி விளையாடுவதுதான் மகிழ்ச்சி
  செந்தமிழை மொழிந்தால்தான் ஒரு தமிழனுக்கு மகிழ்ச்சி
  மகிழ்ச்சிக்கு எல்லையில்லை
  என் கவிதைக்கும் முடிவில்லை

  க்ரிஷ்மிதா சிவ்ராம்
  Riverside Secondary School

 9. புன்னகை பூத்த முகம்
  பூ பூத்த போல்
  மனம் எங்கும் கலகலப்பு
  மனதை சாந்தம் ஆகும் மகிழ்ச்சி
  மனதை மயக்கும் பொழுது போல்
  மனதில் வண்ணத்துப்பபூச்சி பறக்கும் நேரம்
  மத்தவர்களை வயிர் குழுங்க வைக்கும் நேரம்
  தேவதர்ஷினி

Your email address will not be published.


*