பேரங்காடிகள், உணவங்களில் நடந்த கதை

பேரங்காடிகள், உணவுக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவை நாம் அடிக்கடி செல்லும் வாய்ப்புள்ள இடங்கள். அங்கு நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். சில நேரங்களில் பல வகையான சம்பவங்களையும் காண நேர்கிறது. சில சமயம் நமக்கேகூட அப்படிப்பட்ட சம்பவங்கள் நேர்வதுண்டு. விறுவிறுப்பான, நாம் பாடம் கற்றுக் கொள்ளகூடிய,  அந்த சம்பவங்களை, கதைகளை எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 14 பிப்ரவரி  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

5 கருத்துரை

 1. பேரங்காடிகள், உணவங்களில் நடந்த கதை:
  காலைப் பொழுது விடிந்தது.நான் பள்ளிக்குச் சென்றேன்.பள்ளி முடிய இரவு சுமார் எட்டு மணியாகிவிதட்டது.நான் களைப்புடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.பாதிவழியில் கனத்த மழை பேய்ய ஆரம்மித்தது.இடியும் மின்னலும் வந்தது.நான் மின்னல் வேகக்தில் ஓரு பேரங்காடிக்குல் சென்றேன்.அக்கே ஒரு உணவு கடை இருந்தது.அந்த உணவின் மணம் என் மூக்கை துலைத்தது.பசி என் வயிற்றை கிள்ளியது.என் பணப்பையை திறந்து பார்த்தேன்.போதிய பணம் இருந்தது.நான் சாதம் வாங்கினேன்.பசி என் வயிற்றை கிள்ளியது.சாப்பாடை சாப்பிட என்னால் காற்றுகொள்ள முடியவில்லை
  மழை விட்டது.நான் சாப்பிட்டுக்கொண்டே வீடு திறும்பலாம் என்று முடிவசெய்தேன்.உணவு பெட்டிய திறக்கும்போது மணம் என் மூக்கை துலைத்தது.ஒரு வாய் எடுக்கும்போது எனன்கு சற்று அடிகல் தள்ளி ஒரு முதியோர் பசியில் வாடிக்கொண்டிருந்தார்.நான் என் உணவை என் பள்ளிப் பையில் வைத்துவிட்டு அவரின் பக்கம் சென்றேன்.அவர் என்னை பார்த்தார்.நான்,அவரிடம் வணக்கம் கூறினேன்.பிறகு,நலமா?என்று கேட்டேன்.அவர்,தன் பிள்ளைகள் தன்னை ஒதிக்கியதாவகும் ஒநு நாள் முழவதும் சாப்பிடவில்லை என்று கூறினார்.நான் மனம் உடைந்துப் போனேன்.என் பசி பெரியதா அல்லது அவர் பசி பெரியதா என்று என்னிடமே கேட்டேன்.பதில்,அவருடையதுதான்.அதனால் நான் சற்றும் தாமதிக்காமள் என்னிடமுள்ள உணவை அவரிடம் கொடுத்தேன்.அவர் நன்றி கூறினார்.அவர் கண்களிருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.நான் என் நேர்மையான செயலை நினைத்து பெருமையுடன் வீட்டுக்குச் சென்றேன்.
  மொகம்மது மஸீன்
  செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

 2. இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கிவிடும்.எனவே,வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு இனிப்பு பலகாரங்களை வாங்க வேண்டும் அல்லவா ? அதற்காக நானும் என்னுடைய அம்மாவும் அருகில் உள்ள பேரங்காடிக்குச் சென்றோம்.அங்கு சென்ற நாங்கள் பலவித இனிப்புப் பலகாரங்களைப் பார்த்துகொண்டிருந்தோம்.
  நான் சற்று நேரத்திற்குப் பிறகு சலிப்பு அடைந்தேன்.என் ஆர்வம் குறைந்தது,அதனால் நான் பேரங்காடியை சுற்றி பார்க்க சென்றேன்.நடக்கும் போது பேரங்காடியில் கூட்டம் கூடியது.அப்போது நான் ஒரு வயதான தாத்தா இருக்கையில் உட்கார்ந்து மிகவும் கவலையாக இருப்பதை நான் பார்த்தேன்.நான் அவரின் சொக்ததின் காரணத்தை கேட்டேன்.அவர் தன் பிள்ளைகலால் கைவிடபட்டதை என்னிடம் கூறினார்.அவர் மூன்று நாட்களுக்கு சாப்பிடாமல் பட்னியாக இருந்ததை என்னிடம் கூறினார்.நான் அந்த தாத்தாவின் மீது இரக்கபட்டு நான் என் அம்மாவிடம் திரும்பி சென்று அந்த தாத்தாவின் பாவமான கதையை கூறினேன்.என்னுடைய அம்மா அந்த தாத்தாவை பார்த்தது அவர் வாங்கிய பலகாரங்களிள் ஒன்றை அந்த தாத்தாவிடம் கொடுத்து அவருக்கு சில நாட்களுக்கு வேண்டியதற்க்கு பணத்தையும் கொடுத்தார் நான் அந்த தாத்தாவுக்கு நான் கை அசைத்து நான் பேரங்கடியிலிருந்து வெளியே வந்தேன்.நான் இந்த தாத்தாவுக்கு உதவி சேய்த்தேன் இன்று எனக்கு மிகவும் மகழ்ச்சியாக இருந்தது.
  ருத்ராஹரி 
  செயின்ட ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி 

 3. நானும் வள்ளியும் எங்கள் தோழி, பூஜாவுக்கு, பிறந்தநாள் பரிசு வாங்க பேரங்காடிக்கு சென்றிருந்தோம். பசி எனக்கு வயிற்றை கிள்ளியதால் நாங்கள் இருவரும் விரைவு உணவகத்தை நோக்கி நடைபோட்டோம். மதிய உணவு வேளையாக இருந்ததால், பள்ளி மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்களின் கூட்டம் அலை மோதியது. நாங்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, நான்கு உயர்நிலை பள்ளி பயிலும் மாணவர்கள் தங்களின் பூபந்தாட்ட மட்டைகளையும் பைகளையும் இரண்டு மேசைகளின்மீது பரப்பினர். இதை கண்டு என் இரத்த நாளங்கள் சூடேறி கொதித்தன. அப்போது, ஒரு தாயார் இரண்டு பிள்ளைகளுடன் உணவகத்திற்குள் நுழைந்தார். “பசங்களே, உங்களுடைய உடமைகளை எடுத்து வைத்துகொண்டால் இந்த மேசையில் நாங்கள் அமர்ந்துகொள்ளலாம். பொது இடங்களில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.” என்று கண்டித்தார். அவர்கள் உடனே அனைத்து பொருட்களையும் எடுத்து ‘டப் டப்’ என்று கீழே போட்டனர். நாங்கள் இருவரும் பொது இடத்தில் சிறுவர்கள் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி எங்கள் கருத்துகளை பரிமாற்றி கொண்டிருந்தோம்.
  தீடிரென்று, “அம்மா!” என்று யாரோ கதறிய சத்தம் எங்கள் கவனத்தை ஈர்த்தது. அந்த பெண்மணி மாணவர்களின் மட்டையால் தடுக்கி கீழே விழுந்துவிட்டார்! மேலும், அவர் வாங்கிய உணவு மற்றும் குளிர்பானங்கள் தரையில் சிதறி கிடந்தன.இதற்கு காரணமான நான்கு மாணவர்களும் என்ன செய்வது எது செய்வது என தெரியாமல் கற்சிலையாய் நின்றனர். அவர்களின் முகத்தில் கிளி தாண்டவம் ஆடியது. உணவகத்தில் வேலை செய்பவர்கள் உடனே வலியில் துடித்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டினர். அவர் கோவைபழத்தைபோல் சிவந்து காணப்பட்டார். நான்கு பசங்களும் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். “உங்களுடைய அக்கறை இல்லாத நடத்தை பற்றி உங்கள் உயர்நிலை பள்ளிக்கு எழுதினால், உங்களைபோல் உள்ளவர்கள் திருந்துவார்கள்!” என்று மிரட்டினார். அச்சத்தில் அதிர்ந்த மாணவர்கள் அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் சாப்பாடு வாங்கி தருவதாக கூறி சூழ்நிலையை சமாளித்தனர். இதை பார்க்கும்போது பள்ளி சீருடையின் முக்கியதுவத்தை நாங்கள் அறிந்தோம். பள்ளி சீருடையை அணிந்தால் நாம் நம் பள்ளியை பிரதிநிதிக்கிறோம். அது மட்டுமில்லாமல், அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி செயல்பட வேண்டும்.
  தாஹிரா
  உயர்நிலை 4
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 4.                                             உதவிக்கரம்                                                                                                                   
                        திரு ரவி உதவி செய்யும் குணம் உடையவர். அவர் நகரத்தில் வசித்துக்கொண்டிருந்தார். அன்று அவருடைய பிறந்தநாள். அவர் தன்னுடைய பெற்றோரிடமிருந்து ஆசிர்வாதம் பெறுவதற்காக கிராமத்திற்கு புறப்பட்டார்.அவர் பேருந்தில் ஏறி கிராமத்திற்கு சென்றுக்கொண்டிருக்கும் வழியில் அவருக்கு கடுமையாக பசித்தது. அவர் சாப்பிடுவதற்காக அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பக்கத்திலிருந்த ஒரு உணவகத்திற்கு சென்றார். திரு ரவி உணவகத்தில் இட்லி சாப்பிட்டார். அப்போது, இரண்டு ஏழை சிறுவர்கள் திரு ரவி சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கவனித்த திரு ரவி அக்குழந்தைகளின் மேல் இரக்கப்பட்டு அவர்களை நோக்கி சென்றார்.”உங்களுக்கு சாப்பிடுவதற்க்கு ன்ன வேண்டும்?” என்று அக்குழந்தைகளிடம் திரு ரவி கேட்டார். அக்குழந்தைகள் திரு ரவி சாப்பிட்டுக்கொண்டிருப்பதை கேட்டனர். திரு ரவி அக்குழந்தைகளுக்கு இட்லி வாங்கிக்கொடுத்தார். அவர் தன்னுடைய உணவை சாப்பிடாமல் ஆனந்த கண்ணீருடன் அந்த பிள்ளைகள் சாப்பிடுவதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் திரு ரவியிடம் நன்றி கூறினார்கள். திரு ரவி அவர்கள் இருவருக்கும் நூறு வெள்ளி கொடுத்தார்.பிறகு அவர் பணம் கட்டுவற்காக கடைக்காரரிடம் சென்றார். கடைக்காரர் திரு ரவியி்ன் மனிதாபிமானத்தை பாராட்டி விட்டு பணத்தை வாங்க மறுத்து விட்டார்.அன்றிலிருந்து கடைக்காரர் மனிதனி்ன் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார்.

 5. ‘ கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் ‘ என்னும் பெரியோர் வாக்குப்படி என் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத சம்பவம் நிகழ்ந்த்து. அந்தச் சம்பவம் என்றும் என் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு நான் இந்தியாவிற்குச் சென்றபோது என் குடும்பத்தோடு ஒரு பேரங்காடிக்குச் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது நடுத்தர வயதுள்ள ஓர் ஆடவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு கால் இல்லை என்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன். அவரை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. உடனே என் மனம் சூரியனைக் கண்ட பனி போல் இளகியது. நான் என் பெற்றோர்களிடம் அவருக்கு பணம் கொடுத்து உதவலாம் என்று கூறினேன். என் பெற்றோர்கள் முதலில் மறுத்தனர். ஆனால் நான் அவர்களைத் தொடர்ந்து கெஞ்சியதால் வேறு வழியின்றி அவருக்கு பணம் கொடுத்து உதவினார்கள். அன்று ஒருவருக்கு உதவி செய்தேன் என்ற திருப்தியில் நான் நிம்மதியாகத் தூங்கினேன்.
  சில நாட்கள் சென்றன. என் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒரு சுற்றுலா கண்கட்சிக்குச் சென்றேன். அப்போது நான் கண்ட காட்சியை என்னால் நம்பமுடியவல்லை. ஆம். நான் பார்த்த அந்த கால் இல்லாத ஆடவர் அங்கு தரையில் நின்று கொண்டிருந்தார். அதே முகம், அதே குரல் நான் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன். அப்போது என் முகத்தை யாரோ ‘ பளார் பளார் ‘ என்று அரைந்ததுப்போல் இருந்த்து. உடனே அந்த ஆடவரிடம், ” நீங்கள் தானே அன்று கால்கள் இல்லாமல் பிச்சை எடுத்து கொண்டிருந்தீர்கள்? நான் கூட உங்களுக்கு பணம் கொடுத்தேனே ! ” என்று எரிமலையாய் வார்த்தைகள் வெளிவந்தன. ஆனால், அந்த ஆடவர், ” யார் நீ ? நான் உன்னை பார்த்தது கூட இல்லையே ! ” என்று கோபமாகக் கத்தினார். எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த என்னுடைய பெற்றோர்கள் , ” ஆம்! இவன் பணத்திற்காக கால் இல்லாததுப் போல் நடித்து மக்களை ஏமாற்றுபன் ! ” என்று கூறினார்கள். இறுதியில் நாங்கள் மன குழப்பத்தோடு வீடு திரும்பினோம்.
  அன்றுதான் நான் ஒன்றை உணர்ந்தேன். இந்த உலகில் ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இனிமேல் கண்ணால் காண்பதையும் , காதால் கேட்பதையும் நம்பக்கூடாது என்றும் தீர விசாரித்து அதை மட்டும் நம்பவேண்டும் என்றும் உணர்ந்தேன். இந்த பாடத்தை நான் என் இறுதிமூச்சுவரை மறக்கமாட்டேன்.
  முருகன் சிநேகா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

Your email address will not be published.


*