பெண்

மார்ச் 8 – பெண்கள் தினம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தினம். இந்த ஓவியம், ஒரு பெண் எத்தனை வேலைகளை செய்து, அலுவலகத்தையும் வீட்டையும் நிர்வாகம் செய்கிறார் என்பதைக் குறிக்கிறது. இப்படத்தைப் பார்த்ததும் உங்களுக்குள் எழும் எண்ணங்களை அழகிய கவிதையாக எழுதுங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 10 ஏப்ரல் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
பிப்ரவரி மாத வெற்றியாளர்களின் பட்டியல்

Chinmayi Marshiling Secondary School (TLC)
Senthilkumar Harieswaran Umaru Pulavar Tamil Language Centre
Vishnu Gan Eng Seng Secondary School

 

19 கருத்துரை

 1. பெண் என்பவள் பிறப்பின் உச்சம் .
  உயிரற்ற உடலை உயிராக மாற்றும் பெண்னே!
  நீயோ! பிறப்பின் உச்சம்!
  உன் பிறப்போ ! ஒரு அதிசயம்
  அதில் கேளிக்கை மட்டும் தான் பெண்னே மிச்சம்.
  உயிரும் உணர்வும் சில காலம் தான் பெண்னே!
  உன் உயிரால் வந்த நாங்கள்?
  உன்னை எக்காலம் வணங்கினாலும்
  தீராது பெண்னே!
  நீயே இவ்வுலகின் மகத்துவம்!
  உலகம் தோன்றி உரிமை பிறந்து
  உன் மடியில் தவழ்ந்த நாங்கள்
  உன்னை
  மறந்தால் மறு ஜென்மம் கூட மரணம் தான்
  பெண்னே!
  அச்சமும் மிச்சமும் ஓடி ஒடுங்கிட
  அடிமை என்பது போதும் பெண்னே!
  உச்சமும் உலகமும் உன்னை போற்றி வணங்கிட
  இனி!
  ஒரு விதி செய்வோம்
  பெண்னே!
  பாரதி என்றும் நம் கண் முன்னே…….
  JEYARAJ JUSTIN
  COMMONWEALTH SECONDARY SCHOOL (2-6)

 2. பெண்ணே
  குலம் காக்க வந்த
  தேவதை நீ
  ஒரு போதும் குலைந்து போகாதே…
  சாதிக்கப் பிறந்தவள் நீ
  ஒரு போதும் சலித்து போகாதே…
  மலரப் பிறந்தவள் நீ
  ஒரு போதும் உதிர்ந்து போகாதே…
  ஒளிரப் பிறந்தவள் நீ
  ஒரு போதும் ஒளிந்து கொள்ளாதே…
  ஆக்கப் பிறந்தவள் நீ
  ஒரு போதும் அச்சம் கொள்ளாதே…
  துக்கம் வந்தபோதும்
  துவண்டுவிடாதே…
  எதிரிகள் முளைத்த போதும்
  எரிந்துவிடாதே…
  உன்னை கசக்கி எறிந்தாலும்
  கதிராய் முளைத்து வா!
  உன்னை அணை கட்டித் தடுத்தாலும்
  வெள்ளமாய் பெருகி வா!
  நான் ஒரு
  பெண்தானே என்று எண்ணாதே!
  நான் ஒரு
  பெண் என்று
  கர்வம்கொள்!
  Prathiba D/O Palanivelu
  Bendemeer Secondary School(2R6)

 3. பெண்… அவள் அன்பில் ஒரு தாய்
  பெண்… அவள் அழகில் ஒரு தேவதை
  பெண்… அவள் அறிவில் ஒரு மந்திரி
  பெண்… அவள் அரவணைப்பில் ஒர் உறவு
  பெண்… அவள் கொழுந்துவிடும் நெருப்பு
  பெண்… அவள் வெற்றியின் சிகரம்
  பெண்… அவள் தோல்வியை எதிர்க்கொள்பவள்
  பெண்… அவள் நட்புக்கோர் இலக்கணம்
  பெண்… அவள் கண்டிப்பில் ஓர் ஆசிரியர்
  பெண்… அவள் ஓர் அழகிய ஓவியம்
  பெண்… அவளைப் புரிந்துகொண்டால்
  உன் விடியலுக்கு அவள்தான் கதிர்.
  இல்லையென்றால் என்றும் புரியாத புதிர்.
  அபிகேல் ஷ்ரேயா 2B1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி

 4. பத்து மாதம் உன்னைத்
  தன் கருவில் சுமந்து பெற்றவள்.
  உன் வாழ்க்கைக்கு
  நல் வழியைக் காட்டியவள் .
  கஷ்டம் காணின்றி
  உனக்காக உழைப்பவள்.
  உன் தடைகளைக்
  கடக்க உதபுவவள்.
  இரவும் பகலுமாக
  உன்னைக் கண்ணுக்குள்
  வைத்துக் கவனிப்பவள் .
  நீ வாழ்க்கையில் வெற்றிபெற
  தன் வாழ்க்கையைத் தியாகம் செய்பவள் .
  இதெல்லாம் சித்தரிப்பது
  ஒரு பெண், உன் அம்மா.
  ராஜேந்திரன் நரேஷ் 2B1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி

 5. உலகில் தேடி தேடி அலைந்தாலும்
  மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
  தாயின் கருவறை
  அகிலத்தில் மிக சாந்த்தமான இசை
  அவளுடைய தாலாட்டுகளே ஆகும்
  ஈரைந்து மாதங்கள் என்னை
  ஒரு கருவாய் சுமந்து பெற்றாள்
  எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
  நான் அவளுக்கு பட்ட கடன் தீராது
  அத்தனை துன்பங்களையும் கடந்து
  என்னை ஒரு மதிப்புக்குறிய மனிதனாக
  ஆக்குவதர்க்கு அவள் போராடிக்கொண்டிருக்கிராள்,
  எப்போதும் போராடுவாள்
  அன்பெனும் தேனையூட்டி
  தூக்கம் இல்லாதபோது தாலாட்டி
  என்னை வளர்த்ததற்கு
  அவளுக்கு நன்றி கூறினால் போதாது
  இவள்தான் என் அம்மா
  சுதர்ஷினி 2B1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி

 6. பெண்கள் நாட்டின் கண்கள்
  பாசத்தோடு இருக்கும் உருவங்கள்
  சூரியனின்றி பூமி சுழலாது
  பெண்களின்றி இந்த உலகம் இயங்காது
  அல்லும் பகலும் உறங்கா விழிகள்
  இன்பம் துன்பம் தாங்கும் வேர்கள்
  சொல்ல முடியாது அவள் மகிமை
  கருவில் சுமந்த பெண் இனமே
  அன்பின் வடிவில் இருக்கும் தெய்வமே
  உன்னை என்றும் போற்றுவோம் வாழ்விலே
  சுதாகர் பிரதீப் 2C1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி

 7. நாட்டை ஆள்பவளும் நீயே,
  வீட்டை ஆள்பவளும் நீயே,
  நீ ஒரு பேர் மகிமை .
  உன்னொரு பிறவி பூமியில்
  காலெடுத்து வைக்க,
  உன் அனுமதியைக்
  கேட்டால்தான் வரமுடியும் .
  நான் பார்த்த முதல் தெய்வம் நீயே.
  உன் அரவணைப்பில் வளர்த்த நான்,
  எது செய்தாலும் தவறாகாது .
  பெண்னே உன் தியாகம் பெரிது .
  காய்ச்சல் வந்தாலும் காபி போடவேண்டும் ;
  கால் நடுங்கினாலும்
  காலை உணவு பண்ணவேண்டும் ;
  அந்த தாயை மதிக்கிறேன் .
  சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம்
  சண்டை போட்டு பெரிய விஷயங்களில் ,
  துணையாய் இருக்கும் அக்கா;
  அந்த அக்காவை மதிக்கிறேன் .
  என் கை பிடிச்சி அ ஆ
  சொல்லிக்கொடுத்த ஆசிரியை ;
  அந்த ஆசிரியை மதிக்கிறேன் .
  உன்னை போல்
  ஒரு தேவதை இருந்தால்தான்,
  இந்த உலகம்
  சூரியனை போல பிரகாசிக்கும் .
  சரவணன் தருண் 2D1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி

 8. நான் உனக்கு பாரம் என்றேன்
  நீயே எந்தன் துலாபாரம் என்றாள்
  நான் உனக்கு சுமை என்றேன்
  நான் உந்தன் சுமைதாங்கி என்றாள்
  என்னிடம் மதி இல்லை என்றேன்
  நீயே எந்தன் நிம்மதி என்றாள்
  என்னிடம் வேகம் இல்லை என்றேன்
  நீயே எந்தன் விவேகம் என்றாள்
  என்னிடம் பொன் இல்லை என்றேன்
  நீயே எந்தன் ஐம்பொன் என்றாள்
  என்னிடம் அதிக வருமானம் இல்லை என்றேன்
  நீயே கடவுள் எனக்கு தந்த சன்மானம் என்றாள்
  பெண்ணின் பெருமையை எடுத்துக்கூற வேறு கவிதையுண்டோ?
  பா. ஸ்ரீராம்
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப்பள்ளி

 9. மல்லிகை பூத்த தோட்டமாய்
  மலர்ந்து நிற்கும் கரு ஒன்று
  பால்பிரிந்து பெண்ணாய்
  பிறந்த பிறப்பொன்று
  சிட்டுக்குருவி வட்டமிட்டு
  அடைந்தது பெண்மை ஒரு நாளில்
  வளர்ந்து வந்த வேகம்
  சட்டென குறைந்துவிட
  பெண்மை அனுகிய பறவை
  சினுங்கி நின்றது வீட்டினிலே
  கனவுகோலம் போட நின்று
  கனவில் என்றும் மூழ்கிட
  சுட்டெரிக்கும் வார்த்தைகள்
  சூரியனைவிட கொதித்துவிட
  கனவுகூடம் கண்ணீர்கலமானது
  குலம் காக்க பெண் பிறந்து
  மனிதநலம் வாழ தெய்வமாய் திகழ்ந்து
  உறவால் சிக்குண்டு வருடும்
  மாதர்குலம் கண்ட சொர்க்கம் என்னவோ?
  பா.ஶ்ரீராம்
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப்பள்ளி

 10. பெண்  என்ற  வார்த்தை  பஞ்சைவிட
  மென்மையானது  என்று  சொல்லலாம்.
  வார்த்தை  மற்றும்  அல்ல  பெண்
  குணமும்  மென்மையானதுதான்.
  நீ , நான் , எல்லாரும் ஒரு  பெண்ணால்தான்
   இந்த பூமியில் இருக்கிறோம்  என்ற 
  என்னத்தை  நாம்  என்றும்  மறக்கக்கூடாது. 
  பெண்  பெண்மட்டும்  கிடையாது. அவள் 
  ஒரு  தாயாகவும்  திகழ்கிறாள்.
  ஒரு தாயாக இருப்பது  அவ்வளவு 
  சுலபம் கிடையாது. தன்  பிள்ளையை 
  குழந்தையிலிருந்து  பெரியவன்  ஆகும்
  வரை அவள்தான்  கணை இமை
  காப்பதுபோல  பாத்துக்கொள்ளவேண்டும்.
  அதுமட்டுமல்ல   ஒரு  நல்ல  மனைவி  அல்லது 
  குடும்பத்தலைவியாக  இருக்கவேண்டும். தன் 
  கணவன்  சொல்படி கேட்டு   ஒரு  குடும்பத்தை
  நல்ல  வழியில் நடத்தவேண்டும்.
  அதனால்  பெண்ணை  மதித்தாள்
  உன்  வாழ்க்கை  பொன்னாய்  இருக்கும்
  என்று  சொல்லி  விடு  பெறுகிறேன் 
  நன்றி  வணக்கம்.
  HARIK
  YUHUA SECONDARY SCHOOL

 11. தீயே தீயே! இல்லத்தின் நாயகி நீயே!
  குடும்பத்தினரின் பசியை போக்கும் அன்னப்பூரணி நீயே!
  பட்டங்கள் ஆண்டு, சட்டங்கள் செய்து,அதில் வெற்றி காணும் விஜயலட்சுமி நீயே!
  கணவனின் காரியங்கள் அனைத்திற்கும் பொறுமையுடன் கைகொடுக்கும் பூமாதேவி நீயே!
  அன்பு என்ற சொல்லிற்கு அர்த்தமடி நீயே!
  உன் தாழ் பணிந்து விடை பெறுகிறேன் தாயே!
  யுவராஜ் மோகன்
  உமறுபுலவர் தமிழ்மொழி நிலையம்
  3HT1

 12. பெண்கள் பூக்கள் தான்…
  எல்லோரின் உள்ளங்களில்,
  இல்லங்களில் பூக்களாய் பூத்ததால்தான்…
  நாம் நல்வழிகளில் பூச்செடிகளாய் இருக்கிறோம்,
  இல்லை என்றால் நாம் முட்புதர்கள் தான்.
  ஒரு குடும்பம் ஆலயம் போல,
  அந்த ஆலயத்தின் தூண்கள் பெண்கள் தான்…
  அவை பலமாகவும் எதையும் தாங்கிக்கொள்ளும் சக்தி உடையதாக இருப்பதால்தான்,
  அது ஒரு ஆலயமாகிறது,
  இல்லை என்றால் அது வேறும் செங்கலும் மண்ணும் தான்.
  உணவு இட்ட கைகள் மட்டும் அல்ல,
  பெண்களின் கைகள்…
  உன்னதர் இடம் எல்லோரையும் படித்து இழுக்கும் அன்பின் கயிறுகள்,
  பெண்கள் இல்லையென்றால் அகிலத்தில் யாருமில்லை…
  என்றும் நின்று விடாத பெண்களின் பணியை எல்லோரும் மதித்துப் போற்றுவோம்.
  Ramesh Sreenithi
  Bendemeer Secondary School

 13. பெண்  என்ற  வார்த்தை  பஞ்சைவிட
  மென்மையானது  என்று  சொல்லலாம்.
  வார்த்தை  மற்றும்  அல்ல  பெண்
  குணமும்  மென்மையானதுதான்.
  நீ , நான் , எல்லாரும் ஒரு  பெண்ணால்தான்
   இந்த பூமியில் இருக்கிறோம்  என்ற 
  என்னத்தை  நாம்  என்றும்  மறக்கக்கூடாது. 
  பெண்  பெண்மட்டும்  கிடையாது. அவள் 
  ஒரு  தாயாகவும்  திகழ்கிறாள்.
  ஒரு தாயாக இருப்பது  அவ்வளவு 
  சுலபம் கிடையாது. தன்  பிள்ளையை 
  குழந்தையிலிருந்து  பெரியவன்  ஆகும்
  வரை அவள்தான்  கணை இமை
  காப்பதுபோல  பாத்துக்கொள்ளவேண்டும்.
  அதுமட்டுமல்ல   ஒரு  நல்ல  மனைவி  அல்லது 
  குடும்பத்தலைவியாக  இருக்கவேண்டும். தன் 
  கணவன்  சொல்படி கேட்டு   ஒரு  குடும்பத்தை
  நல்ல  வழியில் நடத்தவேண்டும்.
  அதனால்  பெண்ணை  மதித்தாள்
  உன்  வாழ்க்கை  பொன்னாய்  இருக்கும்
  என்று  சொல்லி  விடு  பெறுகிறேன் 
  நன்றி  வணக்கம்.
  HARIK
  YUHUA SECONDARY SCHOOL

 14. பெண்ணே!
  நீ நீயாக இரு!
  உன்னை
  நாணல் போல் வாழ்வாய்!
  என்று சொன்னேனே தவிர
  நாணத்தோடு மட்டும் வாழ் என்று
  சொல்லவில்லை!
  உன்னை!
  வெட்கத்தோடு வாழ்வாய்
  என்று சொன்னேனே தவிர
  அதையே ஆடையாக்கி கொள் என்று
  சொல்லவில்லை!
  உன்னை!
  தலைகுனிந்து வாழ்வாய்
  என்று சொன்னேனே தவிர
  தாழ்ந்து போ என்று
  சொல்லவில்லை!
  உன் சுற்றம்
  உன்னை குற்றம்
  சொல்லும்போது
  நீ விலகிப் போகாமல்
  விடைக்கொடுத்துப்பார்!
  அது உன் புரட்சி தீக்கு
  ஒரு தீப்பொறியை கொடுக்கும்!
  ஆகையால்!
  பெண்ணே!
  நீ நீயாக இரு!
  Senthilkumar Harieswaran 2HT1
  Umar Pulavar Tamil Language Centre

 15. அவள்
  ———

  சேலைக்கு அழகு தருபவள்
  கண்ணாடிக்கு பொலிவுசேர்ப்பவள்
  வாழ்க்கையின் பாதி வருபவள்
  உயிரின் பாதியாய் இணைபவள்
  கண்களால் பேசும் பாஷை
  புரிந்துகொள்ள வழியே இல்லை
  தலைகுனிந்து நடக்கும் அடக்கம்
  சற்று சிந்துமே அழகிய வெட்கம்
  மகிழ்ச்சியை அள்ளி சில நாள் தருவாள்
  கண்ணீரை பரிசாய் சில நாள் தருவாள்
  எந்த வேளையிலும் அவள்தான்
  ஏனென்றால் அவள் அப்படித்தான்!
  க விஷ்ணு [3G]
  கான் யெங் செங் பள்ளி

 16. பெண்கள் நாட்டின் கண்கள்
  அவள் ஆன்களின் பாதியாக திகழ்பவள்
  அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் சேய்ய கூடியவள்
  அன்பை சரிசம்மமாக வெளி படுத்துபவள்
  உயிருக்கு அர்தம் தருபவள்
  தாயும் பெண்தான் பூமா தேவியும் பெண்தான்
  குடும்பத்திற்காக வலிகளை தாங்குபவள்
  பணத்தையும் தைரியத்தையும் மேலும் படிப்பையும் தரும் கடவளும் பெண்
  சோர்வாக இருக்கும் போது உற்சாகம் அளிப்பதும் பெண்
  தன்னையை வருத்திக் கொள்ளும் புஜைகளில் தன் குடும்ப நண்மைக்காக இடுபடுபவள்
  தன் வாழ்க்கையை மற்றவர்களுக்காக சமர்பிப்பவள்
  Gobikha [2E1]
  Unity Secondary School

 17. பெண்ணும் பொண்ணும் ஒன்று
  இவ்விரண்டையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்
  வீட்டையும் தன் வேலையும் பார்த்துக்கொள்வாள் ஒரு பெண்
  பெண் இல்லை என்றால் வேலை ஒன்றும் நடக்காது.
  பெண்கள் எப்படி எல்லோரையும் பார்த்துக்கொள்கிறாளோ
  அவளையும் நாம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
  காலில் காலணி அணியாமல் நடந்தால் முள் குத்தும்
  அதேபோல் உலகில் பெண்கள் இல்லை என்றால் எதுவுமே நடக்காது.
  Archana
  Unity secondary school

 18. பெண் என்பவள் உலகத்தில் சிறந்தவள்
  பெண் என்பவள் தாய் … அவள்
  கனவுளுக்கு சமம்…
  தாய் எப்பொழுதும் அழகானவள்
  அறிவானவள் … .
  சுறுசுறுப்பிற்கு ஆசிரியை
  நல்ல மனம் உடையவள்
  இறக்கக் குணத்தின் தியாகச்
  சுடர் … அம்மா .. அவள் ..
  பெண்….
  நம்மைச் சிறப்பாக பார்கக்கும்
  குடும்பத்தின் தலைவி … அவள்
  அங்ககீகரிக்காவிட்டால் – ஆண்மகன்
  தகுதி இல்லை உலகிலுள்ள ஆண்களுக்கு
  பெண் உலகின் தெய்வம்
  குடும்ப விளக்கு
  பெண் வெற்றியின் சிகரம்..
  அவளை மதித்தப் பெண்ணாகப் பார்..
  அவள் தோழி… பெண்ணுருவிலுள்ள
  தெய்வத்திற்கே .. தெய்வம்..
  ஸ்ரீதுர்கா சண்முகநாதன்
  உயர்நிலை இரண்டு
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 19. Thanuskodi Lalitha
  1E4
  பென்
  உலகத்தின் பொன்
  அன்பானவள் என்றால் பென்
  பொருமையானவள் என்றால் பொன்

Your email address will not be published.


*