பள்ளியில் நடந்த கதை

பள்ளியில் இல்லாத கதைகளா? எத்தனை விதமான நிகழ்ச்சிகள், போட்டிகள், கொண்டாட்டங்கள்! அப்படி உங்கள் பள்ளியில் உங்களுக்கு நடந்த, உங்கள் நண்பர்களுக்கு நடந்த அல்லது நீங்கள் கேள்விப்பட்ட ஆர்வமூட்டும் சம்பவங்களை / கதைகளை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 5 ஜூலை 2015. வாழ்த்துகள்!

6 கருத்துரை

 1. என் பள்ளியில் நடந்த மிகவும் பிரமாண்ட நிகழ்ச்சி சீன புத்தாண்டு ஆகும். 
  அதில் பல வகையான நிகழ்ச்சிகள் நடந்தன. முதலில்  சீன புத்தாண்டு பற்றி 
  ஒரு நாடகம் படைக்கப்பட்டது. அதன் பிறகு எங்களுடைய ஆசிரியர்கள் பாட்டு பாடி நடனம் ஆடி குதுலகப்படுத்தினார்கள். அதன் பறகு தலைமையாசிரியர் ஆசிரியர்களுக்காக சில விருதுகளைக் கொடுத்தார். அதன் பிறகு 
  மிகவும் அழகான வகுப்புக்கான விருதை எங்கள் வகுப்புக்கு
   வழங்கப்பட்டது. எங்கள் வகுப்பின் சட்டாம்பிள்ளை விருதை 
  வாங்கும்போது. நாங்கள் ஆரவாரம் செய்தோம். அந்த  சீன புத்தாண்டு நிகழ்ச்சியை நான் என்று மறக்கமாட்டேன்.
  ஹர்ஷினி பாலா
  பாயா லேபார் மேதொதிஷ்த் பெண்கள் பள்ளி

 2. என் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டங்கள் அனைத்து மாணவர்கள் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி ஆகும். சென்றவருட கொண்டாட்டத்தில், பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழ் மாணவர்கள் அனைவரும் பொங்கல்பானைகளை மிகவும் அழகாக பல வண்ணங்களில் அலங்கரித்தனர். மேலும், நாங்கள் அனைவரும் குழுக்களாக பிரிந்து கோலம் போட்டோம். குழுவாக செயல்பட்டு சிறப்பாக வரைந்த கோலம் பரிசுகள் தட்டி சென்றது. எங்கள் ஆசிரியர்கள் கோலத்திற்கும் ரன்கோளிகும் இருக்கும் வித்தியாசங்களை எங்களுக்கு எடுத்து கூறினார். பொங்கலை பற்றி நான் பல சுவரசியமான தகவல்கள் தெரிந்துகொண்டேன். அதுமட்டுமில்லாமல், பல வித பொங்கல் வகைகளை ருசித்து மகிழ்ந்தோம். பொங்கல் கொண்டாட்டங்கள் என் நினைவில் ஒரு இன்பமான நிகழ்ச்சியாகவே பதிந்திருக்கும்.
  தாஹிரா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 3. ” அவையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். இன்று தமிழ்மொழி விழாவினை நாம் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்நாளில் தமிழின் பெருமையை சிறப்புகளைப் பற்றிப் பேசவே நான் வந்துள்ளேன்………….. என்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழிந்து என் பேச்சுப்போட்டிக்கான ஓத்திகையைப் பார்த்துக்கொண்டேன்.
  பின்பு பள்ளிக்குப் புறப்படத் தயாரானேன். அம்மா சுவையான முறுமுறு தோசையுடன் தேங்காய் சட்னியை ஒரு தட்டில் போட்டு என் அறைக்குக் கொண்டு வந்தான். மடமடவென அந்த தோசையை சாப்பிட்டுவிட்டு என் மிதிவண்டியில் பள்ளிக்குக் கிளம்பினேன்.
  சில்லென்ற குளிர்ந்து காற்றை எதிர்த்து என் மிதிவண்டியை ஓட்டினேன். எப்படியாவது பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கிவிட வேண்டும் என்ற நினைவை சுமந்து கொண்டு பள்ளிக்கு விரைந்தேன்.
  நான் பள்ளிக்கு ஒரு பூங்காவைக் கடந்தே செல்ல வேண்டும். நான் சென்று கொண்டிருக்கையில் ஒரு மரத்தடியில் மிதிவண்டி ஒன்று கிடந்தது. அதன் பின்னால் புத்தகப்பையும் இருந்தது. என் நண்பன் ராகுல் மயங்கிய நிலையில் மிதிவண்டியின் அருகே கிடந்தாள். நான் மிகவும் பதற்றத்துடன் அவனருகே சென்று என் தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரைத் தெளித்து அவனை மயக்கத்திலிருந்து தெளிய வைத்தேன்.
  சுயறினைவிற்கு வந்த ராகுளிடம், ” டேய் ராகுல்! என்னாடா இப்படி மயங்கிக் கிடக்குற? என்ன நடந்தது? விபராமகச் சொல்,” என்று கேட்டேன்.
  ராகுல்,” இன்று பள்ளியில் நடக்கவிருக்கும். பாட்டுப் போட்டியில் நான் கலந்து கொண்டு பாடவிருக்கிறேன். கிளம்பும் அவசரத்தில் நான் காலை உணவு வேண்டாம் என்று என் அம்மாவிடம் சொல்லிவிட்டு என் மிதிண்டியில் வந்து கொண்டிருந்தேன். திடீரென கண்கள் இருட்டியது. மயங்கி விழுந்து விட்டேன்,” என்றான்.
  ” காலை சிற்றுண்டியைத் தவிர்த்தால் நாம் விரைவில் பலவீனமடைந்துவிடுவோம். பள்ளிப்பாடங்களிள் நம்மால் கவனம் செலுத்து முடியாது,” என்று அறிவுறை கூறினேன். என் பள்ளி இடைவேனையில் சாப்பிடுவதற்காக என் அம்மா கொடுத்த ரொட்டிகளை ராகுலுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னேன். சாப்பிட்டதும் தான் அவனுக்குத் தெம்பு வந்தது. பின் இருவரும் சேர்ந்தே பள்ளிக்குப் போனோம்.
  அன்று நடைபெற்ற பேச்சுப்போட்டியில் எனக்கே முதல் பரிசு கிடைத்து. எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதே சமயம் என் நண்பன் பங்குபெறும் பாட்டுப்போட்டியைக் காண விரைந்தேன். நல்லவேலை போட்டி இன்னும் ஆரம்பமாகவில்லை. என் நண்பன் மிகவும் உற்சாகமாக காணப்பட்டான். அவன் மேடைக்கு மூன்றாவது போட்டியாளராக அழைக்கப்பட்டான்.
  ” தமிழுக்கும் அமுதென்று பேர்
  அந்த்த் தமிழின்ப்த் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
  என்ற அவள் பாடத்தொடங்கியதும் அவனது தேன் போன்ற இனிய குரலில் அனைவரும் மூழ்கினர். இறுதியில் அவனுக்கே முதல் பரிசு கிடைத்தது.
  அன்று இருவரும் சேர்ந்தே வீட்டிற்குத் திரும்பினோம். தக்க சமயத்தில் நான் உதவியதால் தான் அவனால் போட்டியில் பங்குகொள்ள முடிந்தது என்று கூறி எனக்கு நன்றி தெரிவித்தான். எங்களின் நட்பு அன்று முதல் பலாமனது. அன்று நடந்த இந்த சம்பவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும்.
  C.Nishikanth
  Teck Whye Secondary School

 4. “மீண்டும் பள்ளிக்குப் போகலாம் …நம்மை நாம் அங்கே தேடலாம்,” என்னும் பாடல் வரி நாம் யாவரும் அறிந்ததொன்றாகும். ஒவ்வொரு முறையும் நாம் பள்ளிக்குப் போகும்பொழுது, அங்கு நடைபெற்ற பற்பல நிகழ்வுகள் நம் நினைவலைகளைச் சீண்டுவதுண்டு. ‘பள்ளி’ என்று கூறும்போது, கதைகளைக்குப் பஞ்சமே இல்லை என்றே கூறலாம். அது போலவே, எனக்கும் ஒரு கதையுள்ளது. சென்ற ஆண்டு எங்கள் பள்ளியின் நூற்றைம்பதாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அதற்காக நானும் என் நண்பர்கள் நால்வரும் ஒரு நாடகத்தை எங்கள் சக மாணவர்கள் அனைவருக்கும் முன் அரங்கேற்ற வேண்டியிருந்தது.நாங்கள் படைத்த நாடகம், எங்கள் பள்ளியின் வரலாற்றைப் பறைசாற்றும் நோக்குடன் தயாரிக்கப்பட்டது. நாங்கள் அதைச் சிறப்பாக படைக்க வேண்டுமென்று எண்ணியதால், அந்நாடகத்திற்கான ஒத்திகைகளுக்கு அதிக நேரத்தை அர்ப்பணித்தோம். முதல் முறையாக நாங்கள் எங்கள் சக மாணவர்களுக்கு முன் பள்ளி மண்டபத்தில் அந்நாடகத்தைப் படைக்க வேண்டியிருந்ததால், எங்கள் ஐவரின் மனதிலும் அச்சம் குடியிருந்தது. எனினும், அது எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்பதை எண்ணி அவ்வுணர்வுகளை எல்லாம் துடைத்தொழித்தோம். நாங்கள் அரங்கேற்ற வேண்டிய நாளும்வந்தது. நாங்கள் ஐவரும் ஒப்பனையை முடித்துவிட்டு, மேடையில் நாடகத்தையும் அரங்கேற்றினோம். நாடகத்தின் இறுதி அங்கமாக எங்களது பள்ளி கீதத்தைப் பாடினோம். அப்பொழுது எதிர்ப்பார்க்காத விதமாக, பள்ளி மண்டபத்தில் கூடியிருந்த அனைத்து மாணவர்களும் எழுந்து எங்களுடன் இணைந்து அக்கீதத்தை உரக்க பாடினர். அக்காட்சியைக் கண்ட நாங்கள் ஐவரும் ஆச்சரியத்திற்குள்ளானோம். எனினும், எங்கள் சக மாணவர்கள் பள்ளியின் மீதுக் கொண்டிருந்த பற்றையும், அனைவருக்குமிடையே இருந்த ஐக்கியத்தையும் எண்ணி பூரித்தோம்!
  பெயர்: ராஜேந்திரன் ராஜேஷ்
  பள்ளி: செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப் பள்ளி

 5. சீ. சிவ ரஞ்சனா
  என் பள்ளி மாணவர்களின் கைத்தட்டல் சத்தம் பள்ளி மண்டபத்தை 
  உலுக்கியது. அன்று தீபாவளி . நானும் என் சக தமிழ் நண்பர்களும்
  தீபாவளி எப்படி உருவாகியது என்பதை ஒரு நாடகம் மூலமாக 
  எங்களின் பள்ளி மாணவர்களுக்கு உணர வைக்கவிருந்தோம்.
  நான் அதில் நரகாசுரனின் பாத்திரத்தை நடித்தேன். சிறு துள்ளி
  பதட்டமும் இல்லாமல் என் நடிப்பை அழகாக செய்து முடித்தேன்.
  என் சக தமிழ் நண்பர்களும் அவரவர்களின் பாத்திரத்தை சிறப்பாக
  செய்தனர்.நாடகம் முடிந்த பின் எங்களுக்கு பலமான கைத்தட்டலும்
  ஆரவாரமும் கிடைத்தது. எனக்கு அது ஒரு நல்ல அனுபவமாக
  அமைந்தது.
  அது மட்டுமில்லாமல், அதற்கு பின்னர் சில ஆர்வமூட்டும்
  நிகழ்ச்சிகள் நடந்தன.பல பெற்றொர் தொண்டூளியர்கள் என் பள்ளிக்கு
  வந்து எல்லாருடைய கைகளில் மருதாணியை அழகாக வரைந்தனர்.
  மேலும், அன்று எனக்கு கோலம் போடும் அனுபவமும் கிடைத்தது.
  முறுக்கு சுட கற்றுக்கொண்டேன், தோரணம் கட்ட தெரிந்துக்கொண்டேன்,
  பூ முடைத்தல் இவ்வாறு நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டேன்.
  என் வாழ்க்கையிலே சிறப்பான தீபாவளி விழா என்று கூறலாம்.அந்த
  தீபாவளி விழா என் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிரது. 
  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 6. சண்டை சச்சரவு
  ஒரு இனிய காலை நேரத்தில் நானும் என் பெற்றோரும்
  கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். காற்று நன்றாக
  வீசிக்கொண்டிருந்தது. சூரியன் தன் பணியை செய்ய
  புறப்பட்டுக் கொண்டிருந்தான். பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்து
  கொண்டிருந்தன. ஆண்களும் பெண்களும் உடற்பயிற்சி செய்து
  கொண்டிருந்தார்கள். குழந்தைகள் மணற்பரப்பில் தங்கள் மன
  எண்ணங்களை கோட்டைகளாக கட்டிக்கொண்டிருந்தார்கள்.
  சிலர் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்தனர்.
  அப்பொழுது அங்கே சில வாலிபர்கள் தங்கள் மிதிவண்டியை
  வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தனர். சிலர் மிகவும் ஆபத்தான முறையில்
  மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருந்தனர். அதனால் அங்கு
  இருந்தவர்களுக்கு இடைங்சலாகவும் அச்சமாகவும் இருந்தது.
  அப்பொழுது ஒரு வயதானவர் அந்த வாலிபர்களிடம் “தம்பிகளா, இங்கு
  குழந்தைகளும் வயதானவர்களும் இருப்பதால் கவனத்துடன் வண்டி
  ஓட்டுங்கள்” என்று கூறினார்.
  அதைக் கேட்ட ஒரு வாலிபன் அந்த பெரியவரைப் பார்த்து “ உங்கள் வேலையைப் பாருங்கள், எங்களுக்கு எப்படி வண்டி ஓட்டுவது என்பது தெரியும்” என்று கூறினான். மற்ற வாலிபர்களும் அந்த பெரியவரை சுற்றி நின்று சண்டை போடத் துவங்கினர். பெரியவருக்கு ஆதரவாக பேச சிலர் அங்கு வன்தனர். அந்த இடம் சண்டையும் சச்சரவுமாக காட்சி அளித்தது.
  அப்போது அந்தப் பெரியவர் எல்லோரிடத்திலும் சண்டை போடாமலிருக்க வேண்டினார்.
  அவர் அந்த வாலிபர்களிடம் “தம்பிகளா, நானும் உங்கள் வயதில் இப்படித்தான் இருந்தேன். இளம் ரத்தம் இப்படித்தான் இருக்கும். ஆனால் இதையே நீங்கள் ஏன் நன்றான வழியில் பயன்படுத்தக் கூடாது. உங்களுக்கோ நன்றாக மிதிவண்டி ஓட்டத்தெரியும். இங்கு இருக்கும் குழந்தைகளுக்கு ஏன் நீங்கள் கற்றுத்தரக்ககூடாது? என்று கூறினார்.
  இதைக் கேட்ட வாலிபர்களும் இது நல்ல யோசனை, நாங்கள் கற்றுத்தருகிறோம் என்று கூறினர். குழந்தைகளும் ஆவலுடன் கற்றுக்கொன்டனர்.
  இதைப் பார்த்த அங்குள்ள பெற்றோற்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
  எல்லோரும் சமாதானம் அடைந்து பெரியவருக்கு நன்றி கூறினர்.
  மத்திய நேரம் நெருங்கியது.

Your email address will not be published.


*