பலவகை ஏணிப்படிகள்!

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
நம்முடைய வாழ்க்கையில் ஏணிப்படிகளாக இருந்து நம்மை உயர்த்தி விடுபவர்கள் பலர். நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரையும் குறிப்பிடலாம். நம்முடைய உழைப்பும் கவனமும் கூட ஏணிப்படியாக இருந்து நம்மை உயர்த்திவிடும். ஆக, ஏணிப்படிகள் என்ற கருபொருளில் ஒரு கட்டுரை எழுதுங்கள். அதை இங்கே பகிருங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 ஜூலை  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

3 கருத்துரை

 1. நாம் அறிந்தோ அறியாமலோ நமது வாழ்வில் நிறைய பேர் ஏணிப்படிகளாக திகழ்கின்றார்கள்.சிறு வயதிலே, கையை பிடித்து நடக்க கற்றுக்கொடுக்கும் நம் தந்தை ஒரு ஏணிப்படியாக இருக்கிறார்.
  அவர் தோழ்களில் நம்மை தூக்கி உலகத்தை சுற்றினார்.படிப்பும் உழைப்பும் நமது ஆசைகள் என்ற வானத்தை அடைவதற்கு இன்றியமையாதது என்று கூறி, நம்மை ஏணிப்படிகளின் மீது ஏற்றி விடுகிறார்.
  பள்ளி பருவத்தின்போது படிப்பில் முன்னேறுவதற்கு ஆசிரியர்கள் ஏணிப்படியாக நம்மை சுமந்து அடுத்த படியை அடைவதற்கு உதவுகின்றனர். மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது தான் அவர்களின் பணி ஆனால் அதை தாண்டி நம் நலனில் அக்கறை காட்டி ஏணிப்படிகளில் ஏறிக்கொண்டே செல்ல ஊக்குவிக்கின்றனர் . ஏணியில் ஏறும் போது சுமையை தாங்காமல் சில படிகள் உடைந்துவிடுகின்றன. நம் கவலைகளை பகிர்ந்துகொள்ள இருக்கும் அன்பான தோழர்கள் அவ்விடத்தை மீண்டும் நிறப்புகின்றனர். அது மட்டுமில்லாமல் நம் பகைவர்களால் ஏற்படும் போட்டித்தன்மையும் ஒரு விதத்தில் நம்மை ஏணிப்படியில் வேகமாக என்ற செய்கிறது என்றே கூற வேண்டும்.
  ஏணிப்படிகள் இருந்தால் மட்டும் போதாது அதில் ஏறுவதற்கு மன உறுதியும் நம்மிடம் இருக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து படிகளில் ஏறும் போது உலகம் முன்னேற்றம் அடைகிறது.
  தாஹிரா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 2. என்னுடைய வாழ்க்கையில் ஏணிப்படிகளாக பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக அன்றும், இன்றும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும் என் பெற்றோரைக் கூறலாம். ஒவ்வொருக்கும் அவரவர் பெற்றோரே இரு கண்களாய்த் திகழ்வர். எனக்கும் அப்படித் தான்.
  காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை என்னைக் கண்ணின் இமை காப்பது போல் என் பெற்றோர் என்னை வழிநடத்துகின்றனர். இரண்டாண்டுகளுக்கு முன்னர் தொடக்கநிலை இறுதித் தேர்வு எழுதும் பொழுது எனக்கு என் தாய், தந்தை இருவரும் நல்ல ஊக்கம் கொடுத்தனர். கணிதத்தில் குறைவாக மதிப்பெண் எடுத்த போது எனக்குத் தேவையான பயிற்சிமிக்க ஒரு ஆசிரியரை நியமித்து அதிக பயிற்சி வழங்கினர். மேலும் என் தாயாரும் நான் படிக்கும் போது உடனிருந்து எனக்கு புரியும்படி பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார். இவ்வாறு என் பெற்றோர், என்னை ஊக்கப்படுத்தியதால் இன்று கணிதப் பாடம் எனக்கு மிகுவும் விருப்பமான பாடமாக மாறிவிட்டது. இதே போன்று உயர்நிலைப் பள்ளியில் என் தமிழாசிரியர் கொடுத்த ஊக்கம் காரணமாக ‘கம்பராயணப் பாடல்கள் ஒப்பிவிக்கும் போட்டியில்’ கலந்துகொண்டு முதல் பரிசை பெற்றேன். அடிப்படையில் கூச்ச சுபாவம் கொண்ட நான் என் தமிழாசிரியர் எனக்கு அளித்த ஊக்கம் காரணமாகவே அந்தப் போட்டியில் கலந்து கொண்டேன்.
  இன்று எந்த போட்டியிலும் மிக தைரியமாக எதிர்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. என் பெற்றரையும் என் ஆசிரியர்களையும் முன் மாதிரியாகக் கொண்டு நானும் பிறருக்கு தூண்டு கோலாக இருந்து என்னால் இயன்ற வரையில் அவர்களது இலக்கை அடைய ஏணிப்படிகளாக உதவுவேன்.
  susmitha 2E2 yuan ching secondary school

 3. சிங்கப்பூருக்கு ஏணிப்படியாக திகழ்ந்த திரு லீ குவான் யூ அவர்களுக்கு,
  நான் எது சொல்வதற்கும் முன், நன்றி! நன்றி! நன்றி!. அன்று நீங்கள் மட்டும் இல்லையென்றால், இன்று நானும் என் குடும்பமும் மட்டும் இன்றி, சிங்கப்பூரில் வசிக்கும் அனைவருக்கும் இவ்வாறு வசதியாக தங்க, படிக்க, சாப்பிட, எதுவும் இருந்திருக்காது. நீங்கள் ஒருவர்மட்டும் சிங்கப்புரில் இல்லை என்றால், இந்த நாடு இவ்வளவு வசதியும் வளமும் அடைந்திருக்காது!
  நீங்கள் அன்று நட்ட விதை, இன்று விருட்சமாக வளர்ந்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நீங்கள் நட்ட மரமேஇன்று நம் சிங்கைக்கு ‘பசுமையான நகரம்’ என்ற பெயரை தேடி தந்துள்ளது. மேலும், சிங்கப்பூரை வளர்ச்சி அடைய வைத்ததே, இன்றுவரை பல நாடுகளிலிருந்து சிங்கைக்கு வேலை தேடி வருவதற்கு முக்கிய காரணம் ஆகும்.
  அது மட்டுமில்லாமல், பல இன மக்களையும் ஒன்று கூடி சிங்கையில் ஒரு குறையும் இல்லாமல் வாழ வைத்தீர். அதனால்தான் இன்று, நாம் அனைவரும் இன வேறுபாடு இல்லாமலும் எந்த இன கலவரம் இல்லாமலும் சமாதானமாக, உலகத்திற்கேஎடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
  நீங்கள் உருவாக்கிய இந்த சுத்தமான, பசுமையான நாடு என்றும் முன்னேறிக்கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! இவ்வுலகில் சிங்கப்பூர் என்னும் பெயர் இருக்கும்வரை, நமது நாட்டின் ஏணிப்படியான திரு லீ குவான் யூ எப்போதும் நம்முடன் இருப்பார்.
  ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முன்னேற பிறந்ததில் இருந்து ஏணிப்படிகளாய், அம்மா, அப்பா, ஆசிரியர்கள், சகோதர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என பலர் தேவைப்படுகின்றன. ஆனால், திரு லீ குவான் யூ தனி மனிதராய் பற்பல படிகளை கடந்து வானலாவிய ஏணிப்படியாய் திகழ்பவர்!!!
  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலை பள்ளி

Your email address will not be published.


*