நூலகத் தேடல்

ம் வீட்டருகில் பொது நூலகங்கள் உண்டு. விடுமுறை காலத்தில் அந்த நூலகத்திற்குச் சென்றிருப்பீர்கள். நீங்கள் எந்த நூலகத்திற்குச் சென்றீர்கள்? அந்த நூலகத்தின் சிறப்புகள் என்ன? என்ன நூல்களைப் படித்தீர்கள்? அந்த நூல்களில் நீங்கள் கற்றது என்ன? என்பதைப் பற்றி ஒரு கட்டுரையாக எழுதுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 11 பிப்ரவரி 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
அக்டோபர் 2017, வெற்றியாளர்களின் பட்டியல்

Yashika Radhakrishnan Riverside Secondary School
Sriman Sridhar Sengkang Secondary School (UPTLC)
Athif Bukit Bathok Secondary School (UPTLC)

16 கருத்துரை

 1. இறுதியாண்டு பள்ளி விடுமுறையின்போது நான் ஜூரோங் கிழக்கு நூல்நிலையத்திற்கு என் அம்மாவுடன் சென்றிருந்தேன். என் அம்மா எப்போதும் தமிழ் நூல்களை எடுத்து வாசிக்கச் சொல்வார். ஆனால், எனக்கு தமிழ் நூல்களை வாசிப்பதில் அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. அம்மா சொன்னதற்காகத் தமிழ்பிரிவுப் பகுதியில் சில புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது என் கண்ணில் பட்டது என் தமிழ் ஆசிரியரின் முக வரைபடத்தோடு எழுத்தும் எண்ணமும் என்ற புத்தகம். மகிழ்ச்சியோடு அம்மாவிடம் அந்தப் புத்தகத்தைக் காட்டி என் தமிழாசிரியர் சேகர் எழுதிய புத்தகம் என்றேன். அந்தப் புத்தகத்தை மற்ற ஆங்கில புத்தகங்களோடு இரவல் வாங்கி வந்தேன்.
  தென்கிழக்காசிய நாடுகளில் தமிழர்களின் புலம்பெயர்வு என்ற தலைப்பில் இருந்த முதல் கட்டுரையின் மூலம் பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். சிங்கப்பூர் மலேசியச் சிறுகதைகளைப் பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகளும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஒரு சிறுகதையை எவ்வாறு எழுதலாம் என்பதையும் இக்கட்டுரைகள் மூலம் அறிந்துகொண்டேன். அதுபோல, கவிதைகள் தொடர்பான கட்டுரைகளும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. புதுக்கவிதையின் வடிவங்களும் சில புரிதல்களும், கவிதைகளுடன் உரையாடல் கட்டுரைகள் கவிதைகளைப் புரிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பினை வழங்கியது.
  இந்தப் புத்தகத்தைப் படித்தபிறகு, எனக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது.
  அஐய் ராம்
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி 4E1

 2. ஜூரோங் நூலகம்தான் எனக்குப் பிடித்த நூலகம்.அந்த நூலகத்தில் பலவிதமான புத்தகங்கள் இருக்கும்.அங்கு நிறைய நிகழ்சசிகள் நடைபெறும். அங்கு நிறைய இருக்கைகளும் நாற்காலிகளும் புத்தகங்களை நூலகத்திலேயே படிக்க அமைக்கப்பட்டிருக்கிறது. நான் அந்த நூலகத்தில் ஆங்கில புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள், தமிழ் புத்தகங்கள் மற்றும் இலக்கியப் புத்தகங்கள் படித்தேன்.(e.g.Harry Potter,Sherlock Holmes, ,encyclopedia,mahabaratham, ramayanam, etc.) ‘இளமையில் கல்வி; சிலையில் எழுத்து’ என்ற பழமொழிக்கேர்பவும், ‘நூல் பல கல்’ என்ற பழமொழிக்கேர்பவும் நாம் பல புத்தகங்கள்ளை படித்து நம் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
  ஹரி ரங்கநாதன் மெய்யப்பன்
  ஜூரோங் உயர்நிலைப்பள்ளி

 3. புக்கிட் பாத்தோக் நூலகத்தில் நான் ‘ஆரி போட்டர்’ புத்தகத்ததை படித்தேன் அந்த புத்தகம் முழுவதும் சுவாரசியமாக இருந்தது, ஆனால், அந்தப் புத்தகத்தைப் படித்தபின் நான் புதிதாக எதையும் கற்றுக்கொளவில்லை புத்தகம் படிப்பதில் நிறைய விசயங்களைக் கற்றுக்கொளளாம்.
  சக்திவேல் சன்ஞன் அதித்
  ஜூரோங் உயர்நிலைப்பள்ளி

 4. நூலகத் தேடல்
  சிங்கப்பூரில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. சுமார் இருபத்து மூன்று பொது நூலகங்களும், நான்கு வட்டார நூலகங்களும், மற்றும் நிறைய கல்வி நூலகங்களும் இருக்கின்றன. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த நூலகம், ஜூரோங் வெஸ்ட் பொது நூலகம். நான் சிறு வயதிலிருந்து இந்த நூலகத்தில்தான் நூல்களை இரவல் வாங்கிப் படிப்பேன். இப்பழக்கம், இது வரை என்னுள் பதுங்கி இருக்கிரது.இது ஒரு பேரங்காடிக்கு உள்ளே அமைந்துள்ள முதல் நூலகம் ஆகும். இந்த நூலகம் அதிகாரப்பூர்வமாக 22 மார்ச் 1996 அன்று திறக்கப்பட்டது. பழைய ஜுராங் பேரங்காடியின் மேல் தளத்தில் இருக்கும் நூலகம். இப்போது அது அதன் சொந்த கட்டிடத்தைக் கொண்டுள்ளது. இது 3 மாடிகள் கொண்டது. தரை தளத்தில் பெரியவர்கள்ப் படிக்கும் கற்பனை கதைகளுக்கானப் பிரிவாகும். இரண்டாவது மாடியில் இளைஞர்கள் புத்தகங்களும் , மூன்றாவது மாடியில் குறிப்பு புத்தகங்களும் உள்ளன. நான் வழக்கமாக புத்தகங்கள் பார்க்க இரண்டாவது மாடிக்கு செல்வேன். பொதுவாக எனக்கு மர்மம் மற்றும் சாகச புத்தகங்கள் படிக்க விருப்பம். அது ஒரு தமிழ் அல்லது ஆங்கில புத்தகமாக இருந்தாலும் சரி. இக்கட்டுரையை முடிக்க, நான் ஒன்றை கூற வரும்புகிரேன். நாம் எப்பொழுதும் புத்தகங்களைப் படிப்பதை நிறுத்தக்கூடாது. அது நம் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கை வகிக்கும்.
  நிஷாந்தி
  SURESH BABU NISHANTHI, 2A1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 5. நூலகத் தேடல்
  நூலகங்கள், அனைவரும் புத்தகங்கள் இரவல் பெறச் செல்லும் ஓர் இடமாகும்.
  சிங்கப்பூரில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு நூலகம் இருக்கும். நான் வசிக்கும் வட்டாரத்தில் உள்ள
  நூலகத்தின் பெயர் சுவா சூகாங் பொது நூலகம். அங்கு நான் பாலர் பள்ளியில்
  இருக்கும் நேரத்திலிருந்து சென்றுகொண்டிருக்கிறேன்.அங்கு வெவ்வேறு வயதானவர்களுக்குப் பல புத்தகங்கள் உள்ளன. அங்குள்ள தமிழ், சீன, மலாய் மற்றும் ஆங்கில புத்தக தொகுப்புகளை கண்டு நான் வியந்திருக்கின்றேன்.
  அமர்ந்து வசதியான முறையில் படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் இடம் உள்ளன. மாத சஞ்சிகைகள், தினசரி செய்தித்தாள் தொகுப்புகளை பலர் அமர்ந்து படிப்பதற்கு சொகுசான நாற்காலிகள் இருக்கின்றன. அந்த அமைதியான சூழ்நிலை படிப்பதற்கு மிக பொருத்தமானதாக இருக்கும்.
  விடுமுறைகளின்போது நான் இந்திய எழுத்தாசிரியர் படைத்திருந்த சிறுகதைகள் பல படித்திருக்கின்றேன். அது மட்டுமில்லாமல் தெனாலிராமன் கதைகளும் நான் படித்தேன். அந்த நூல்களினன் மூலம் நான் நீதி, நேர்மை பற்றி அறிந்துக்கொண்டேன். ஒரு சில குறும்புச் செயல்கள் செய்த கதாப்பாத்திரங்கள் பற்றியும் சிறுகதைகளில் படித்தேன். இதை போன்ற
  நிறைய சுவாரசியமான புத்தகங்களை நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். வீட்டிற்கு அருகில் அமைந்திருக்கும் நூலகங்களை அனைவரும் பயன்படுத்திக்கொண்டால் அது அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
  வசுமதி
  MANIMARAN VASUMATHI, 2A1
  கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளி
  CLEMENTI TOWN SECONDARY SCHOOL

 6. வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது என்பர் அறிஞர்கள். அவ்வாறு போற்றப்படும் அறிவுச் சாளரமா ‘ஜூரங் கிழக்கு பொது நூலகத்திற்கு’ நான் எனது பெற்றோருடன் டிசம்பர் மாத விடுமுறையில் சென்று வந்தேன். அங்கு சிறுவர் பகுதி, ஆங்கிலநூல்கள் பகுதி, சிங்கப்பூரின் பன்மொழிப் போற்றுவதனைக் காட்ட நமது தேசிய மொழிகளான மலாய், சீனம் மற்றும் தமிழ் நூல்பகுதியும் உண்டு. எனக்கு தமிழ் நூல் பிரிவுக்குச் செல்வது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அவற்றில் கதைப் புத்தகம் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் அவற்றில் படக்கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அன்று என் அம்மா ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார் அவற்றில் தமிழக காவல் அதிகாரி முதலிய வாசித்தல் பற்றி கல்லூரி மாணவர்களுடன் உரையாற்றிய பகுதியை வாசிக்க முடிந்தது. அதில் வாசிப்பின் அவசியத்தையும் நாட்டில் படிப்பால் உயர்ந்தோர் பற்றி செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது.
  லண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுகள் அரிய நூல்களைப் படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ் பற்றியும், தமிழக முன்னால் முதல்வர் அறிஞர் அண்ணா சென்னை கன்னிமார நூலகத்தில் அனைத்துப் புத்தகத்தினையும் வாசித்தார் போன்ற செய்திகளையும், நூலைப்படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவைச் சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்ன செய்தியும் என்னை ஆச்சியப்பட வைத்தது. இந்தச் செய்தியைப் படித்தவுடன் எனக்கும் புத்தகம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்து வார இறுதி நாட்களிலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் ‘நூலகம்’ செல்ல வேண்டும் என்ற ஆவளைத் தூண்டுள்ளது.
  வரும் காலங்களில் வாரம் ஒரு நூல் வாசிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.. நிச்சயம் .. கடைப்பிப்பேன்.
  ‘தமிழை வாசிப்போம்!! நம் தாய் தமிழை நேசிப்போம்.!!!
  லக்க்ஷிதா அருணகிரி (1E1)
  யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

 7. நான் இறுதி ஆண்டு விடுமுறையின் போது ஜூரோங் பிராந்திய நூலகத்திற்குச் சென்றான். அந்த நூலகத்தில் நான்கு மாடிகள் இருக்கின்றன. அதில் ஒன்று சிறுவர்களுக்கான பகுதி. அப்பகுதிச் சிறுவர்களுக்கு பொருத்தமான பல நூல்கள் உள்ளன. பொதுவாக எனக்கு மர்மம், கற்பனை கலந்த கதைகள் பிடிக்கும். மேலும் ஆங்கிலப் புத்தகமான Harry potter, women’ murder club, my mystery போன்ற புத்தகங்களை நான் விரும்பி படிப்பேன், இதனால் என் கற்பனைத் திறன் வளர்கிறது. என்னால் கட்டுரைகளைச் சிறப்பாக செய்ய முடிகிறது.
  ஸ்ரீராம் ஜெயக்குமார் (1E1)
  YUAN CHING SECONDARY SCHOOL
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 8. எனக்கு நூலகத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். ஏனெனில் அங்கு நிறைய அறிவுக்களஞ்சியமான புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் இணைய வசதிகள் கொண்ட நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும்.
  அதனால் நான் 2017ல் ஜூன் விடுமுறையில் என் குடியிருப்பிற்கு அருகிலுள்ள ஜூரோங் தேசிய நூலகத்திற்குச் சென்றேன். எனக்கு அறிவியல் கதைகள் மிகவும் பிடிக்கும் மேலும் எனது PSLE தேர்வுக்குச் சில மாதங்களே இருந்ததால் அதில் நான் அறிவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று எண்ணினேன். அதனால் நான் நிறைய அறிவியல் புத்தகங்களை இரவல் பெற்று இரவும் பகலும் படித்து அறிவியல் நுணுங்களைப் பெற்று நான் என்னுடைய PSLE தேர்வில் அறிவியல் பாடத்தில் ‘கிரேட் ஏ’ எடுத்தேன்.
  இதுபோல உயர்நிலைப் பள்ளி விடுமுறை நாட்களிலும் நூலகம் சென்று படித்து வெற்றிபெறுவேன்.
  முருகேசன் கமலேஷ் (1E4)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி
  YUAN CHING SECONDARY SCHOOL

 9. நான் என் பள்ளி விடுமுறையில் தேசிய நூலகம் சென்றேன். அங்கு நான் என் குடும்பத்தினருடன் சென்றேன். அந்த நூலகத்தில் பலவகையான புத்தகங்கள் உள்ளன. என் அம்மா சமையல் புத்தகங்கள் எடுத்தார். என் அப்பா விளையாட்டு வீரர்கள் என்னும் புத்தகத்தை எடுத்தார். என் தங்கை கரடி மாமா என்னும் நூலை எடுத்தாள். நான் ‘வாங்க எழுதலாம்’ என்ற புத்தகத்தை எடுத்தேன். அந்த புத்தகத்தின் வழி நான் கட்டுரை எப்படி எழுதுவது அதில் என்ன விசயங்களைச் சேர்க்க வேண்டும் எப்படி கட்டுரை சுவராசியமாகவும், எவ்வாறு இனிய தொடர்களைப் பயன்படுத்து போன்றவற்றைத் தெரிந்து கொண்டேன்.
  நூலகத்தில் புத்தகம் மட்டுமின்றி கணினியுடன், இணைய வசதிகள் என்னைக் கவர்ந்த விசயங்கள். கணினி வழி பல துணுக்குகளை வாசிக்க முடிந்தது சிலபடக்காட்சிகளை ஒளிவழியாகவும் கண்டு ரசித்தேன்.
  நான் ஒவ்வொரு வாரமும் நூலகத்திற்குச் செல்வேன்.
  கரிஷ்மா (1E1)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 10. நான் விடுமுறையில் என் வீட்டிற்கு அருகிலிருந்த ஜுரோங் நூலகத்துக்குச் சென்றேன். அந்த நூலகம் என் வீட்டிற்கு அருகிலேயே இருப்பதால் எனக்கு மிகவும் வசதியாக இருக்கும். நான் எப்போதும் அந்த நூலகத்துக்கு மாதத்தில் இரண்டு முறையாவது செல்வேன். நூலகம் அமைதியாக இருக்கும் என்பதினால் நான் அங்கே சென்று புத்தகங்கள் படிப்பேன்.
  சில நேரங்களில் நான் என்னுடைய வீட்டு பாடத்தை அங்கே செய்வேன். என்னை பொறுத்தவரைக்கும் நூலகம் என்பது நமக்கு சிங்கப்பூர் கொடுத்த ஒரு சலுகையாகும். அது என்னை போன்ற சிறுவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதினால் எனக்கு அந்த நூலகம் மிகவும் பிடிக்கும். நான் எப்போதும் ஆங்கில புத்தகங்கள்தான் படிப்பேன். முக்கியமாக நான் ஹாரி பாட்டர் படிப்பேன். அது எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். நான் இன்றும் நூலகத்துக்குச் சென்றேன்.
  அபிநயா (1-3)
  ஜுரோங் உயர்நிலைப்பள்ளி

 11. நூலகத் தேடல்
  நூலகம்:
  ‘ஒரு நூலகம் பத்து சிறைச்சாலைகளை மூடவல்லது’ என்றால் அது அறிவின் ஒளியை பாய்ச்சக் கூடியது ஆகும். அறிவு பாய்ச்சும் போது அதர்மங்கள் அழிந்து போகும். ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ – என்கிறது கொன்றை வேந்தன். நூலகம் செல்வது அதைவிட நன்று என்று நாம் மாற்றி யோசிப்போம்.
  என் தாயார் அறிவுத் தேடலில் ஆர்வம் உள்ளவர். இறை தேடும் பறவைகள் அதைத் தேடிச் செல்வது போல், என் தாயார் அறிவைத் தேடி நூலகம் நோக்கிச் செல்வார். நாங்கள் வசிக்கும் ஜூரோங் மேற்குப் பகுதியில் நூலகம் உள்ளது. அங்குச் சென்று நல்ல நூல்களைத் தேர்வு செய்து படிப்பார். அவரைப் பின் பற்றி நானும் சென்று படிக்கத் தொடங்கினேன்.
  நூலகத்தின் சிறப்புகள்
  ஜூரோங் நூலகம் குளிர்சாதன வசதியுடையது. வசதியான சொகுசான இருக்கைகள். நிசப்தமோ நிசப்தம் அங்கேதான். அந்தச் சூழ்நிலையில் படிப்பது அப்படியே மனதிற்குள் பதியும். கணினி மயமாக்கப்பட்ட நூலகம் என்பதால் நூல்களைத் தேர்வு செய்வது எளிது. தாகம் எடுத்தால் குடிப்பதற்கு தண்ணீர் வழங்கும் பெட்டி இருக்கிறது.
  நான் படித்த நூல் – அக்னிச் சிறகுகள்
  நான் தேர்வு செய்த நூல்களில் ஒன்று அக்னிச் சிறகுகள். அது திரு அப்துல் கலாமின் சுயசரிதை ஆகும். அவர் எத்துணை துன்பங்கள் பெற்று படிக்கலானார். அவரது ஆசிரியர் தூண்டிய அறிவியல் ஆர்வத்தால் அறிவியலில் வானியல் துறையைத் தேர்வு செய்து படிக்கலானார். வானியலில் உலகளவில் வரலாறு படைத்தார். பற்பல தோல்விகளைச் சந்தித்தாலும், துவளாது இறுதியில் வெற்றி கண்டார். எனவே, தோல்வியும், வெற்றியும் நிரந்தரமில்லை. தோல்விகளே வெற்றியின் படிக்கட்டுகள் என்பதை இந்நூல் வாயிலாக உணர்ந்தேன்.

  அஃப்ரின் பாத்திமா (1E4)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி

 12. என் வீட்டிற்கு மிக அருகில் உள்ள நூலகம் Jurong West Public Library ஆகும். ஆனால்,அது சிறிய நூலகம் என்பதால்,நான் அங்கே செல்லாமல்,Jurong East Regional Libraryஅக்கு தான் வழக்கமாக செல்வேன்.அங்கே பல வகையான புத்தகங்கள் உண்டு.நான் படிக்க விரும்பும் நூல்களை இங்கிருந்து தான் இரவல் வாங்குவேன். மேலும்,Jcube,Jem,Westgate,Big Box,IMM போன்ற கடை தொகுதிகள் பக்கத்தில் இருப்பதால் நூலகத்துக்கு சென்ற பின், நாம் அங்கே பசியாறிவிட்டு செல்லலாம். எனக்கு பிடித்த புத்தக தொடரான Goddess Girls தான் நான் அங்கே அதிகமாக இரவல் வாங்கும் புத்தகங்கள் ஆகும். காற்றுள்ளபோத்தே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப நான் நூலகத்திற்கு செல்லும்போது தமிழ் நூல்களையும் படிப்பேன்; நகைச்சுவை கதைகள்,நீதி கதைகள் போன்ற நூல்களிலிருந்து நான் கற்பது ஏராளம்.புத்தகம் படிப்பது நல்லது என்பதால்,தேசிய நூலக வாரியம் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதுண்டு.அவற்றில் பங்கெடுத்துக் கொண்டு நாமும் நன்மை அடையலாம் என்ற கருத்தை கூறியவாறு விடைபெற்றுக்கொள்கிறேன்.நன்றி
  Srinidhi
  Jurong Secondary School

 13. நம் மனித வாழ்க்கையில் நடைப்பெற்ற அல்லது நடைபெற இயலாத நிகழ்வுகளை நூல்களிலிருந்து நம்மால் பெற முடிகிறது. கற்பனை திறனையும் நம் அறிவு சார்ந்த திறனையும் வளர உதவி செய்யக் கூடியவை நம் படிக்கும் நூல்களே. ‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும்’ என்று கூறினார் விவேகானந்தர். இவ்வரிகளுக்கு ஏற்ப, சிங்கப்பூரில் பல பொது நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு என் வீட்டருகில் உள்ள ஜூரோங் பொது நூலகத்தில் நான் சிறிது நாள்கள் கழித்த என் அனுபவத்தைப் பற்றி இக்கட்டுரையின் மூலம் மேலும் விளக்க இருக்கிறேன்.
  ‘இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது. அதுதான் புத்தக வாசிப்பு’ என்றார் எமர்சன். அப்படிப்பட்ட சிறந்த நாவல்கள் அல்லது வாழ்க்கையை மையமாக கொண்ட புத்தகங்களை படிக்க நான் விருப்பப்படுவேன். அதில் நான் குறிப்பாக கூறவிரும்புவது ‘யோகாவை’ பற்றி தொரிந்துகொள்ளும் புத்தகமாகும். யோகா என்று கூறும்போது பலவிதமான கருத்துகள் அனைவருடைய மனதில் உருவாக்கும். நானும் இப்புத்தகத்தை படிப்பதற்கு முன்பு யோகாவை பற்றி பல தவறான கருத்துகளையும் செய்திகளையும் பின்பற்றினேன்.
  ஆனால், இப்புத்தகத்தின் மூலம் யோகாவின் உண்மையான பலன்கள். அதை எதனால் எதற்காக செய்கின்றனர், யாரால் உருவாக்கப்பட்டது என்று அனைத்தையும் தெரிந்துகொண்டேன். 500 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபித்துள்ளனர்.
  இந்நூலின் மூலம், நான் என் வாழ்க்கையிலும் யோகா கலையை என்னால் முடிந்த அளவிற்குக் கடைப்பிடிக்கின்றேன். சிறிது கடினமான யோகாசானம் வகைகளை முதலில் செய்து பிறகு கடினமான யோகாசனம் வகைகளை செய்யமுயற்சிக்கிறேன். முழுமையாக, இந்த நூலின் மூலம் என் வாழ்க்கையை பயனுள்ளதாய் மாற்ற கற்றுக்கொண்டேன்.
  JANAKESWARRI
  JURONG SECONDARY SCHOOL

 14. விடுமுறை நாட்களில் என் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஜூரோங் நூலகத்திற்கு என் நண்பர்களுடன் சென்றேன். அந்த நூலகத்தில் கணிணி வசதிகள் இலவசமாக இருந்தன. எங்களது சந்தேகங்களை அங்குள்ள நூல்களில் இருந்து படித்துத் தெரிந்துகொண்டோம். அதுமட்டுமல்லாமல், நூலகத்திற்குள் ஒரு உணவகமும் இருக்கிறது. நிறைய நேரம் படித்து களைப்பானவர்கள் அங்கேச் சென்று உணவு அல்லது பழச்சாறு அருந்தலாம். அந்த நூலகத்தில் ஒரு விளையாட்டு மைதானம் இருக்கிறது. படிக்கும் நேரங்களில் சிறு சிறு ஓய்வு எடுக்கும்போது அங்கேச் செல்லலாம். அது மன உளைச்சலைக் குறைக்கும்.
  நான் அங்கே பூக்களைப் பற்றிய அறிவியல் புத்தகம் ஒன்றைப் படித்தேன். மறு படிக்கப்போகும் அறிவியல் பாடத்திற்கு உதவியாக இருக்கும் என்றுதான் நான் அந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன். மேலும் சில கதைப்புத்தகங்களையும் படித்தேன்.
  கதைப்புத்தகத்தின் மூலம் நான் என் கற்பனைத் திறனை வளர்த்துக்கொண்டேன். அதிலிருந்து புதிய செற்பொருள்களையும் அறிந்துகொண்டேன். என் பள்ளிப்பாடங்களில் பயன்படுத்த அவை மிகவும் உதவியாக இருந்தன. அறிவியல் புத்தகத்திலிருந்து நான் பூக்களைப் பற்றிய பல உண்மைகளை அறிந்துகொண்டேன். அது என்னை ஆச்சரியப்படுத்தியது. பூக்கள் எப்படி ஒரு விதையிலிருந்து உருவாகிறது என்பனபோன்ற பல புதியசெய்திகளைக் கற்றுக்கொண்டேன். நான் அன்று படித்தப் புத்தகம் அறிவியல் பாடத்தைச் சுலபமாக்கிவிட்டது.
  சுஷ்மிதா
  ஜுரோங் உயர்நிலைப்பள்ளி

 15. நான் எனது விடுமுறை காலத்தில் என் வீட்டுக்கு அருகிலுள்ள ஜூரோங் மேற்குப் பொது நூலகத்திற்குச் சென்றேன்.நான் நுழைந்த உடன் அந்த நூலகத்தின் சூழல் எனக்கு புத்துணர்ச்சி தந்தது.
  அந்த நூலகத்தில் இருந்த அதிகமான நூல் பகுதிகள், அதிநவீன இணைய வசதிகள், இருக்கைகள் , அமைதியான சூழல், இளைஞர்கள் பகுதி, குழந்தைகள் பகுதி, ஆராய்ச்சி நூல்கள், அறிவியல் பகுதி போன்ற சிறப்புகள் என்னை வியப்பில் ஆழ்த்தின.
  நான் அங்கு ‘எழுத்தும் எண்ணமும்’ என்ற புத்தகத்தை எடுத்து படித்தேன். அந்த நூலிலிருந்த கட்டுரைகளும் சிறுகதைகளும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தன. இந்த நூலிலிருந்து நான் நிறைய கட்டுரை உத்திகளைக் கற்றுக்கொண்டேன்.அதோடு நிறைய கருத்துக்களையும் கற்றுக்கொண்டேன். நான் இந்த புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட அனைத்தும் எனக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நன்றி.
  Murugesan Sakthitharan , (2E4),
  Yuan Ching Secondary school

 16. நான் எனது விடுமுறை காலத்தில் என் வீட்டுக்கு அருகிலுள்ள ஜூரோங் மேற்குப் பொது நூலகத்திற்குச் சென்றேன்.நான் நுழைந்த உடன் அந்த நூலகத்தின் சூழல் எனக்கு புத்துணர்ச்சி தந்தது.
  அந்த நூலகத்தில் இருந்த அதிகமான நூல் பகுதிகள், அதிநவீன இணைய வசதிகள், இருக்கைகள் , அமைதியான சூழல், இளைஞர்கள் பகுதி, குழந்தைகள் பகுதி, ஆராய்ச்சி நூல்கள், அறிவியல் பகுதி போன்ற சிறப்புகள் என்னை வியப்பில் ஆழ்த்தின.
  நான் அங்கு ‘எழுத்தும் எண்ணமும்’ என்ற புத்தகத்தை எடுத்து படித்தேன். அந்த நூலிலிருந்த கட்டுரைகளும் சிறுகதைகளும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தன. இந்த நூலிலிருந்து நான் நிறைய கட்டுரை உத்திகளைக் கற்றுக்கொண்டேன்.அதோடு நிறைய கருத்துக்களையும் கற்றுக்கொண்டேன். நான் இந்த புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட அனைத்தும் எனக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நன்றி.
  Murugesan Sakthitharan , (2E4),
  Yuan Ching Secondary school

Your email address will not be published.


*