
ஜூன் மாத விடுமுறைப் பலரும் பலவிதமாக செலவிட்டிருப்பீர்கள். பல பயனுள்ள செயல்களை செய்திருப்பீர்கள். ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வது, புதிய இடத்திற்கு சென்று பார்ப்பது, உறவினர்களை நண்பர்களை சந்திப்பது, நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என்று அந்தப் பட்டியல் பெரியதாக இருக்கும். அப்படி நீங்கள் செய்த பயனுள்ள செயல்களுள் இரண்டைப் பற்றி ஒரு கட்டுரையாக எழுதி நீங்கள் இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 15 ஜூலை 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
மே மாத, வெற்றியாளர்களின் பட்டியல்
Parkavi – Jurong Secondary School
Dhejal – Chua Chu Kang Secondary School
Hemanth – Yuan Ching Secondary School