நம்மைச் சுற்றிக் கிடக்கும் கவிதைகள்

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
தேசம், சமுதாயம், இயற்கை, மொழி ஆகிய நான்கு கருபொருள்களில் ஏதாவது ஒரு கருபொருளில் அமைந்த கவிதையை எழுதி, இங்கே பகிருங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 12 மார்ச்  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

16 கருத்துரை

 1. தமிழ் மொழி

  செம்மொழி நீ முதல் மொழி,
  கடல் தாண்டிய மூத்த அமுத மொழி,
  சோழ நாட்டில் கன்னித் தமிழாக,
  பாண்டிய நாட்டில் பைந்தமிழாக,
  சேர நாட்டில் செந்தமிழாக,
  முச்சங்கம் கண்ட அழகுமொழி
  பழமையும் புதுமையும் சேர்ந்த
  பொன்மொழி
  தமிழே நீ தென்மொழி !
  ஏன் நாவில் இனிக்கும் தேன்மொழி,
  நீ என்றும் எனது உயிர்மொழி.
  தருண் திருமேனிநாதன்
  DPS International School

 2. இயற்கை
  பூக்களின் அழகே தனி அழகு
  அதனின் வாசனையோ சிறப்பழகு
  காற்றின் தூய்மையோ நம்மை பாதிக்கும்
  ஆனால் அதை நாம் சத்தம் இல்லாமல் சுவாசிக்கிறோம்
  இயற்கையே ஒரு தனி சிறப்பு
  அதனின் காந்தமோ ஒரு புது பிறப்பு

  ஜனனி
  சுவா சூ காங் உயர்நிலை பள்ளி

 3. மொழி
  நம் இனிய தமிழ் மொழியை
  மற்ற மொழிகளோடு ஒப்பிட்டுப் பேசமுடியுமா?
  இந்தப் புனிதமான மொழியில்
  நம் அனைத்து உறவுகளுக்கு பெயர் உண்டு
  அதைப்போல் வேறு மொழிகளில்
  நம் உறவுகளைக் கூப்பிட வாய்ப்புண்டா?
  ஆனால் சிலர் அற்புதமான
  இம்மொழியை வெறுப்பதும் உண்டு
  தமிழராகப் பிறந்ததையே கேவலமாகக் கருதி
  தமிழைத் தவிர்த்து மற்ற மொழிகளை நாடுகின்றார்.
  இதனால் தமிழ் என்னவென்றே வரும் மற்ற
  தலைமுறைகளுக்கு தெரியாமல் போக வாய்ப்புண்டு!
  அதனால் தமிழை நேசிப்போம்!
  எங்கு சென்றாலும், எப்போது வெளியே சென்றாலும்
  தமிழில் நம் இன சினேகிதர்களுடன் பேசிப்பழக வேண்டும்.
  முடிந்தால் தமிழை மற்ற இன நண்பர்களுக்கு
  இலவசமாகக் கற்பிக்கலாம் நம் வீடுகளில்!
  சுவாத்தி
  புகிட் வியூ உயர்நிலைப்பள்ளி

 4. இயற்கை
  அடிவானில் முத்தமிட்டு
  அவளை வரவேற்கும் கதிரவன்!
  அந்தி வானம் சிவக்கையில்
  இவள் ஒளிர்கிறாள்!
  இரவெனும் கவிதையின்
  நாயகி இவள்!
  நட்சத்திர பிருந்தாவனத்தில்
  எழில்மிகு அரசி அவள்!
  வெண்ணிலவே!
  நீ தூரத்தில் நின்று
  தொடுவானில் புன்னகைக்கிறாய்!
  இரவென்றும் இசையுலகத்தில்
  மெளனமென்னும் இசையமைக்கிறாள்!
  மெளனம் எப்போதும் அழகு
  அன்பான நெஞ்சங்களிடையே!
  ரோஹித்
  புக்கிட் பத்தொக் உயர்நிலைப் பள்ளி

 5.                                   தமிழ் மொழி         
  என் மொழி முதலில் தோன்றிய மொழி
  ஆதியில் பலராலும் பேசப்பட்ட  முதல் மொழி
  என் தாய் எனக்கு கற்றத் தந்த முதல் மொழி
  நான் பிறந்ததிலிருந்து என் நாவில் விளையாடும் முதல் மொழி.
  என் உயிருக்கும் மேலாக நேசித்த முதல் மொழி
  சிங்கைத் தமிழர்களின் முதல் மொழி
  தேனாக இனிக்கும் மூன்றெழுத்து மந்திர மொழி
  என்னுடைய தமிழ் மொழி சிங்கையின் ஆட்சி மொழி.
  தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேசி-அதன்
  இனிமையை நாற்றிசையும் பரப்பி
  சிங்கத் தமிழின் என்று சொல்வோம்
  தமிழ்மொழியால் தலை நிமிரந்து வாழ்வோம் .
  ஹரி பிரகாஷ்
  சிராங்கூன் கார்டன் உயர்நிலைப்பள்ளி

 6. தலைப்பு – மன்னிப்பாயா?
  ஆணிவேர் ஆட்டம் காண
  அணு அணுவாய் நீ சிதைக்கப்படுகிறாய்
  பிடுங்கி எறியப்பட்ட ஆலமரமாக இருந்தும்
  உனது விழுதுகள் என்றுமே
  நிழல் தர மறுப்பதில்லை.
  ஆட்டுக்குட்டி கூட
  ‘அம்மா’ என்று
  அழைக்க அறிந்திருக்கிறது
  அழைக்கத் தவறினோம் நாங்கள்.
  முதியோர் இல்லத்திற்கு
  உன்னை வழியனுப்பிவிட்டு
  இழைத்த பாவத்திற்கு
  பரிகாரம் தேடுகிறோம்
  தமிழே! மன்னிப்பாயா?

  அஷ்வினி செல்வராஜ்
  ராபிள்ஸ் கல்வி கழகம் – NETP @ UPTLC

 7. நட்பு
  நட்பு என்பது ஒரு மலரல்ல
  ஒரு நாளில் உதிர்ந்து போவதற்கு
  அது வானத்திலிருக்கும் நட்சத்திரங்கள் போல
  வானம் இருக்கும் வரை இருக்கும்.

  ஷமீர் ஹுசைன்
  உமர் புலவர்/பிங் யீ உயர்நிலைப் பள்ளி

 8. இயற்கை
  குருவிகளின் கீச்சிடும் ஓசை 
  மரங்கள் அசையும் நடனம்
  வண்ணத்துப் பூச்சிகளின் அழகிய ஓவியம்
  இயற்கையின் அதிசயம்
  திருவிழாக் கோலத்தில் பூங்கா
  பிரத்திக்‌ஷா நாகராஜன்
  செய்ன்ட் ஆண்டனீஸ் கெனோசியன் உயர்நிலை பள்ளி (NETP )

   

 9. இயற்கை(நகைச்சுவை)
  தோண்டத் தோண்டப் போகுதுப் பார் ஆழம்,
  அதைத் தோண்ட பயன்படும் கருவி ரொம்ப நீளம்.
  தோண்டத் தோண்டப் போகுது பார் பள்ளம்,
  அதைத் தோண்டுகின்ற ஆள் ரொம்பக் குள்ளம்.

  ஷமீர் ஹுசைன்
  உமர் புலவர்/பிங் யீ உயர்நிலைப் பள்ளி

 10. தலைப்பு: இயற்கை
  கடலே! கடலே!!
  நுரைப்பொங்க நீ வாராயோ!
  சில்லென்ற காற்றோடு
  சிங்காரமாய் நீ வாராயோ!!
  சூரிய ஒளியினுடே
  தக தகவென நீ வாராயோ!!!
  நீ நீளமாகிறாய் இருப்பதாலே
  உலகமே ரம்மியமாய் காட்சி தருகின்றதே!
  உன்னாலேயே கடல்வாழ் உயிரினங்கள்
  மகிழ்ச்சியாய் உலா வருகின்றதே!!
  உன்னைப் போற்றுவோம்! ரசிப்போம்!!
  என்றென்றும் காத்திடுவோம்!!!
                                                                                                                                   
  அபிராமி
  உயர்தமிழ் மூன்றாம் வகுப்பு மாணவி  

  யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

 11. தேசம்
  இன மத வேறுபாடுகளை மறந்திடு
  பல மொழிகளின் ஒலியை கேட்டு அசந்திடு
  பச்சை பசேல் என்ற நாட்டை ரசித்திடு
  பற்பல பாரம்பரிய உணவை ருசித்திடு
  பெரியோரின் பாசத்தை கண்டு மனம் நெகிழ்ந்திடு
  மற்றவர்களின் நலன் கருதி நடந்திடு
  அண்டைவீட்டாரை குடும்பத்தாராக எண்ணிடு
  நாட்டை காக்க இராணுவத்தில் பங்கெடு
  சிங்கை, “நமது நாடு” என்று சொந்தம் கொண்டாடிடு
  ஒரு நல்ல குடிமகனாக திகழ்ந்திடவே…
  தாஹிரா 
  தஞ்சொங் காதொங் பெண்கள் பள்ளி

 12. மானிடா….
  கருவாய் – இருந்தாய்
  வளர போராடினாய்!
  குழந்தையாய் – இருந்தாய்
  தவள போராடினாய்!!
  சிறுவனாய் – இருந்தாய்
  நடக்க போராடினாய்!!
  இளைங்கனாய் – இருந்தாய்
  பள்ளிக்கு போராடினாய் !!!
  கல்வியை – கற்றாய்
  கல்லூரிக்கு போராடினாய்!!!
  பட்டங்கள்-பெற்றாய்
  பணிக்கு போராடினாய்!!!
  பதவிகள் – பெற்றாய்
  காதலுக்கு போராடினாய்!!!
  காதலியை – பெற்றாய்
  கல்யாணத்துக்கு – போராடினாய்
  குழந்தையை பெற்றாய்!!!!

 13. இயற்கை (மழை)
  தாவரங்களுக்கு புத்துயிர் தரும்
  வானுலக வாசிகள் …
  ஏழைகளின் வீட்டில் ஏ.சி போல் பணி யாற்றும்
  குளிர்ச்சி தேவதைகள்…
  சிலநேரம், புயலாய் வந்து மக்களின் விதியை
  மாற்றி எழுதும்
  மற்றொரு தெய்வம்கூட …
  வர்ஷினி சரவணன்
  பெய்ச்சாய் உயர்நிலை பள்ளி

 14. “இயற்கை – மழை”
  மழையே,
  ௐயாமல் அழுகின்றாய், ஏன்?
  ஓரலவாவது ஆறுதல் வழங்க எவருமில்லையே …
  ஏனோ ஒருநாள் வாய்விட்டுச் சிரித்தாய், ஏன்?
  என்றோ ஒருநாள் அதில் நீ திளைப்பதற்கே …
  அன்றோ எதற்கோ தூரலிட்டாய், ஏன்?
  அளவில்லா வெட்கம் நிரம்பியது; சற்று வழிந்துவிட்டதே …
  பின் சீற்றம் கொண்டாய், ஏன்?
  உன் நெஞ்சக்கனலை அணைப்பதற்கே …
  நேற்று விட்டு விட்டு வந்தாய், ஏன்?
  உன்னைப் பிரிய மனமில்லாது திண்டாடினேன் …
  இவ்வனைத்து உணர்வுகளிருந்தும் என்னிடம் வாய்விட்டுப் பேசவில்லை, ஏன்?
  பேசாமலே என்னைப் புரிந்துகொண்டாய்; அதுவே போதுமென்பேன் …!
  ராஜேந்திரன் ராஜேஷ்
  விக்டோரியா தொடக்கக்கல்லூரி

 15. என் பள்ளிக்கு அருகில் உள்ள ஏரி
  பலர் உன்னை கடந்தாலும்
  ஆண்டுகள் பல கழிந்தாலும்
  உன் நிலையை நீ மாற்றாதிருக்கிறாய் !!
  நிலையில்லா மனிதர்களின் நாக்கு பிறழ்வதைப் போல் – நீ
  என்றுமே மாறாதிருக்கிறாய் !!
  சுட்டெரிக்கும் நண்பகல் வெயிலிலும் – நீ
  மஞ்சள் மலராய் மலர்கிறாய்!!
  தன்னை வஞ்சிக்கும் மக்களையும் மன்னித்து, எனக்கு நேசிக்க கற்றுத் தருகிறாய்!!
  காலையில், மாலையில், நண்பகலில் என
  எப்போது உனைப் பார்த்தாலும் சலிப்பே தராமல்
  என்றும் புதிதாய் மிளிர்கிறாய்!!
  பளிங்கு போன்ற உன் தோற்றத்தின் மூலம்
  கள்ளம் கபடற்ற மனது கொள்ள அறிவுறுத்துகிறாய்!!
  உன்னில் நான் கற்றேன் – பல பாடம்!!
  நல்ல வண்ணம் பின்பற்றுவேன் – பல நாளும்!!
  Yuan Ching Secondary School 
  Kalimuthu Susmitha
  2E2

 16. இயற்கையின் முறண்பாடு
  வீரன் பயந்தால்தான் வீரத்தை காட்ட முடியும்,
  எதிரி இருந்தால்தான் மித்திரனை காண முடியும்,
  மானிடன் அழுதால்தான் மகிழ்ச்சியை உணர முடியும்,
  அசுரன் மிரட்டினால்தான் தேவரின் அருமை புரியும்,
  மனிதன் இறந்தால்தான் வாழ்வின் மகத்துவம் அறிய முடியும்.
  Raghul Vijay
  Tampines Junior College
  15A05

Your email address will not be published.


*