நம்மைச் சுற்றிக் கதைகள்

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
தேசம், சமுதாயம், இயற்கை, மொழி ஆகிய நான்கு கருபொருள்களில் ஏதாவது ஒரு கருபொருளில் அமைந்த கதைகளை எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 12  மார்ச்  2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

7 கருத்துரை

 1. இயற்கை
  கடந்த இரண்டு மணி நேரமாக பஞ்சுப் பொதிபோல் மேகங்களுக்கு இடையில் தன்னுடைய மிதவை ஊர்தியில் (க்லைடெர் ) வேந்தன் பறந்து கொண்டு இருந்தான்.2016இல் நடக்கவிருக்கும் உலக மிதவை ஊர்தி சாம்பியன் போட்டிக்காக பல வருடங்களாக கடினமாக பயிற்சி செய்து வருகிறான்.
  இரண்டு மணிநேரமான நிலையில் திடீரென்று இடி புயல் உருவாகுவதை கண்டான் . எவரெஸ்ட் மலையை விட அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்த அவனை ஆபத்து நெருங்கியது. மேகமென்னும் இயற்கை அன்னை இடி புயல் மூலம் , மித ஊர்தியை இழுக்கும் நொடி அவனை நெருங்கியது .இடிபுயலின் வேகத்தை தவறாக கணகிட்ட வேந்தனின் மிதஊர்தியை மேகம் சூறாவழியாக தன்னுள் இழுக்க ஆரம்பித்தது .மழையும் ,கொந்தளிப்பும் வேந்தனின் கண்ணை இருட்டாக்க ,உயிர்காற்று குறைவும்,இடியில் இருந்தும்,கடுங்குளிரில் இருந்தும் தன்னை காத்துக்கொள்ள போராடினான்.
  உயிருக்கு போராடும் இந்த வேளையிலும் பல வருடங்களாக இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற அவனுடைய கனவு ,தன்னம்பிக்கை அளித்தது.மேக அன்னையிடம் மன்றாடினான் ,கதறினான்.பலகாலமாக தன் கால்களுக்கிடையில் விளையாடிய வேந்தனின் கதறல் மேக அன்னையை அசைத்தது .எந்த தாய் தான் தன மகவு கதறுவதை காண பொறுப்பாள்.
  திடீரென்று வந்த கீழ்பாய்வு வேந்தனின் மிதவைஊர்தியை அதி வேகமாக பூமி அன்னையை நோக்கி கீழே இழுத்தது. .அந்த மிதஊர்தியை பச்சை பசேல் என்று இருந்த விவசாய நிலம் கம்பளம் போல் தாங்கிக் கொண்டது .வேந்தனும் உயிர் பிழைத்தான்.
  தன் கனவை நினைவாக்கிய இயற்கை அன்னைக்கு தன் நன்றியை தெரிவித்தான்.

  தருண் திருமேனிநாதன்
  DPS International School

  .

 2. சமுதாயம்
  நான் மாணவனாக இருந்தபோது, வேலு என்ற மாணவன் என்னுடைய வகுப்பில் படித்தான். எப்பொழுதும் அவன் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதில்லை. அவனின் பள்ளி சீறுடைகள் அழுக்காக இருக்கும். கல்வியில் அவனுக்கு கவனம் இல்லை. மேலும், வேலு தன்னை தனிமைப்படுத்தி கொண்டே இருப்பான்.
  ஆசிரியர் பலமுற கேட்டும் பலன் இல்லை. ஒரு நாள், அவருக்கு கோபம் வந்துவிட்டது. வார்தைகள் அவர் வாயிலிருந்து எரிமலை போல் வெடித்தன. வேலு வாயைப் திறக்காமல் சிலையாய் நின்றான். அவனுடையை பிரிச்சனைகளுடைய காரணங்களை அறிந்த நான், இப்போது அவற்றை சொல்லப்போகிறேன்.
  வேலுவின் குடும்ப பிரச்சனைகள் எப்பொழுதும் அவன் மனக்கண் முன் வந்து வந்து சென்றன. அவனது பெற்றோர் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். மேலும், வேலுவுடைய அம்மாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது .மருத்துவ செலவை எப்படி சமாளிக்க போவது என்று வேலுவின் அப்பா தவித்தார். வேலுவுக்கு நிறைய சகோதரர்களும் சகோதரிகளும் இருந்ததால் அவனது அப்பா வேலுவுடைய நலனின் மீது அக்கறை காட்ட முடியவில்லை. வேலுவின் அப்பா மட்டும் வேலை செய்கிறார். அவரது வருவாய் மிகக் குறைவு. அதனால், அவர் நிறைய வேலைகளை செய்து அல்லாடிக்கொண்டிருந்தார்.
  அப்போது தான் வேலுவின் சூழ்நிலையை ஆசிரியர் புரிந்துக்கொண்டார். எப்படி? யார் சொன்னார்?
  ஆசிரியர் வேலுவின் அப்பாவை தொலைபேசி முலமாக தொடர்புக்கொண்டு, பேசினார். அவர் சோகமாக தன் பிரச்சனைகளை உள்ளம் நொந்து கூறினார். தன் கதையை சொல்லும்போது, வேலுவின் அப்பா அழ தொடங்கினார். ஆசிரியரின் மனம் மேலுகுவத்தி போல கரைந்தது.
  ஆசிரியர் வேலுவுக்கு தனியாக பாடம் கற்று கொடுக்க ஆரம்பித்தார். மேலும், வேலு பள்ளி ஆலோசகரரிடம் அனுபப்பட்டான்.
  ஆனால், வேலுவுக்கு இது அவமானமாகப்பட்டது. எல்லாருக்கும் அவனுடைய குடும்ப சூழ்நிலையைப்பற்றி தெரிய வந்தது. இப்போது, நிறைய மாணவர்கள் அவனைக் கேலி செய்ய தொடங்கினர். அதைத் தாங்க முடியாமல் வேலு அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டான்.
  அவன் பிணத்தை கண்ட அவன் அப்பா, அனலில் பட்ட புழுவாய் துடித்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர், மழை போல் பெருக்கெடுத்து ஓடியது. நிலைகுலைந்து நின்ற வேலுவின் அப்பாவை கண்டபின், இந்த சம்பவம் எனது மனத்தில் பசுமரத்தனிபோல் படிந்து இருண்டது.
  தனேஷ் கவி அழகன்
  உயர்நிலை 1G
  கான் எங் செங் உயர்நிலைப்பள்ளி

 3. அன்று வெள்ளிக்கிழமை. மாணவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் சிலருக்கு அது மகிழ்ச்சியான செய்தியாக இருக்காது. அவர்களில் நானும் ஒருவள். அடுத்த இரண்டு நாட்கள் சனிக்கிழமையும்
  ஞாயிற்றுக்கிழமையும் வீட்டில் இருந்து வெட்டியாக என் நண்பர்கள் செலவழித்து கொண்டு இருக்கும்போது நான் என் சித்தி என்னை கொடுமை படுத்தும் கொடுமைகளை துன்பப்பட்டு கொண்டி இருப்பேன்.
  அன்று என் சித்தி வழக்கம்போல் என்னை திட்டிக்கொண்டு இருந்தார், அவர் கூறுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு நான் அமைதியாக இருந்தேன். ‘போய் உன் அறையில் உள்ள குப்பைகளை எல்லாம் சுத்தம் செய்! உன் முகத்தை பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது!’ என்று என் சித்தி என்னிடம் சத்தம் போட்டார். நானும் அமைதியாக என் அறையை நோக்கி சென்றேன். அங்கு சென்றவுடன் நான் ஒரு பெரிய பெட்டியை நோக்கி சென்றேன்.
  அதை திறந்து பார்த்தவுடன் என் அம்மாவின் புகைப்படம் தான் என் கண்களுக்கு தென்பட்டது. என் நினைவுகள் பின்னோக்கி சென்றன…..
  அப்பொழுது எனக்கு வயது பத்து. என் தாயும் தந்தையும் சண்டை போட்டுகொண்டே இருப்பார்கள். என் அம்மாவின் மேல் இருந்த கோபத்தினால் என் தந்தை விவாகரத்து செய்தார்.
  பத்து வயதாகிய என்னை என் அம்மா தனி மரமாக உழைத்து என்னை படிக்க வைத்தார். அவர் கடினமாக உழைப்பது எனக்காக தான் என்று நான் அப்பொழுதே தெரிந்துக்கொண்டேன். அதனால் நான் கடின உழைப்புடன் படித்தேன். ஒரு நாள் நான் என் அம்மாவிடம் ” என் பணிரெண்டாவது பிறந்தநாளின் போது எனக்கு என்ன வாங்கி கொடுப்பிர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது என்று கூறினார்.
  வருடங்கள் கடந்தன. அப்பொழுது எனக்கு வயது பனிரெண்டு. என் பிறந்த நாளிற்கு இன்னும் இரண்டே வாரங்கள் தான் இருக்கின்றன. என் அம்மா எனக்கு என்ன பரிசு கொடுக்க போகிறார் என்றே என் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அன்று நான் என் அம்மாவுடன் கடைக்கு சென்றவுடன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தோம். திடீரென்று எனக்கு கண்கள் இருண்டன. தலை சுற்றியது. நான் சாலையில் மயங்கி விழுந்தேன்.
  என் அம்மா என்னை வேகமாக மருத்தவமனையில் சேர்த்தார். மருத்துவர் என்னை சோதனை செய்த பிறகு என் அம்மாவிடம், என் இதயத்தில் ஓட்டை இருக்கிறது என்றும் அந்த ஓட்டை பெரிதாகி விட்டது என்றும் கூறினார், அதை குணப்படுத்த முடியாது என்றும் கூறினார். புதிய இதயம் இருந்தால் தான் என்னை குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
  அதை கேட்ட என் அம்மா சிலையாய் நின்றுவிட்டார். நாட்கள் ஓடின. எனக்கு இதயம் கிடைத்துவிட்டது என்று மருத்துவர் கூறினார். என் பிறந்தநாள் அன்று நான் குணமாகி என் தாயாரை பார்க்க நான் என் வீட்டிற்கு சென்றேன். வீட்டில் யாருமே இல்லை என் அறைக்கு சென்று நான் ஒரு கடிதத்தை பார்த்தேன். அதில் என் அம்மா தன் இதையத்தை தானம் செய்த ‘மெடிக்கல் செர்டிபிகேட்'(medical certificate) இருந்ததை பார்த்தவுடன் தான் எனக்கு என் அம்மா இதயத்தை கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்தேன்.கீழே ஓர் கடிதத்ததை பார்த்தேன். அதில் என் அம்மா ‘உனக்கு உன் பிறந்தநாள் பரிசு பிடிதிர்கிறதா?’ என்று எழுதி வைத்திருந்தார். ‘ஆம்’ என்று கூறி என் அம்மாவின் ஆத்மாவை சாந்தி அடைய வைத்தேன். சில நாட்கள் கழித்து என் அப்பா என்னை வந்து அழைத்து சென்றார்
  ‘நான் கூறிய வேலையை’ முடித்து விட்டாயா?’ என்று என் சித்தி சத்தம் போட்டார். ‘ஆம்’ என்று கூறிக்கொண்டே நான் என் வேலையை செய்தேன்.
  நண்பர்களே! தாய் தான் நாம் வாழ்க்கையில் கிடைத்த அன்பளிப்பு. அவர்கள் இருக்கும் போது அவர்களின் அருமை தெரிந்துகொள்ளுங்கள்
  ஆயிஷா.
  SECONDARY 2
  ST HILDA’S SECONDARY SCHOOL

 4. என்னமா எப்படி பண்ணுறீங்களேமா !!!
  (இயற்கை )

  என்ன பொழப்பு டா இது? வந்தாலும் கத்தறாங்க! போனாலும் கத்தறாங்க !
  இந்த சிடிசன்ஸ்ம் (citizens) நெடிசன்ஸ்ம் (netizens) ஆன்லைன்லையும் (online) ஆப்லைன்லையும் (offline) தாறுமாறா போட்டு தாக்கறாங்க பா ! என்னம்மா இப்படி பண்ணுறீங்களே மா!!
  நான் இயற்கை பேசுகிறேன் . எனக்கு மழை, புயல், வெப்பம், குளிர், பனி என்று பல செல்ல பெயர்கள் உண்டு. நான் நானாக இருந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நீங்கள் எல்லோரும் உங்கள் வசதிக்காக என்னை சீரழித்து, என் ஒழுங்கு முறையையே மாற்றி, இப்போது என்னை குற்றவாளி கூண்டில் நிறுத்தி விட்டீர்கள்.
  விலை நிலங்களை அடுக்கு மாடிகளாகவும், குளம் குட்டைகளை தொழிற்சாலைகளாகவும் மாற்றி விட்டீர்கள். பிறகு நான் எங்கே ஒளிந்து கொள்ள முடியும்? உங்கள் மாட மாளிகைகளிலும் தார் போட்ட தொழிற் சாலைகளிலும் தஞ்சம் புகுந்தேன். உடனே, நான் சீற்றம் அடைந்து விட்டேன் என்று பழி போட்டீர்களே பாருங்கள்- அடேயப்பா, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆஸ்கார் பரிசை கொடுத்து மரியாதை செய்ய வேண்டும்.
  நான் மாசு அடைந்து விட்டேன்.அதனால் தான் என் பெருமூச்சு உங்களுக்கு புயல்காற்றாகவும் , என் வியர்வை உங்களுக்கு சுனாமியாகவும் , என் நாக்கு வறட்சி வெப்பமாகவும் தோன்றுகிறது.
  இனி வரும் காலமாவது என்னை நிம்மதியாக விட்டு விடுங்கள். நானும் உங்களை மன்னித்து உங்களுக்கு பிடித்த மாதிரி என்னை மாற்றிக் கொள்கிறேன்.
  இப்படிக்கு
  உங்கள் இயற்கை

  அம்பரீஷ் கார்த்திகேயன்
  ஆங்கிலோ சீன உயர்நிலை பள்ளி  (பார்கர் ரோடு) / உமறு புலவர் தமிழ் பள்ளி
  உயர்தமிழ், 3HT 1

 5. சமுதாயம்
  ரவி ஓர் ஏழைச் சிறுவன். அவன் ஆறாம் வகுப்பில் படிக்கிறான். அவன் பள்ளி கட்டணம் கட்டவில்லை. அவனுடைய ஆசிரியர் அவனிடம் பல முறை பள்ளி கட்டணத்தைக் கேடக்ச் சொன்னார் ஆனால் அவன் கேட்கவில்லை. அவன் கல்வியைக் கவனிப்பதில்லை.
  அவன் தன்னை வகுப்பில் தனிமைப்படுத்தினான். அவன் பள்ளிக்கு அழுக்காக இருக்கும் சீருடைகளை அணிந்து வந்தான். அவன் இவ்வாறு செய்து வந்ததால் அவனுடைய ஆசிரியர் கோபம் அடைந்தார். ஆசிரியர் அவனுடைய அப்பாவை அழைத்துப் பேசினார். அவனுடைய அப்பா ஆசிரியரிடம் அவனுடைய அம்மா மருத்துவமனையில் இருப்பதாகவும் அவரின் மருத்துவச் செலவைத் தான் மட்டும் வேலை செய்து கட்டுவதாகக் கூறினார். அதிலிருந்து அவனுடைய ஆசிரியர் அவன் கவலையுடன் பள்ளிக்கு வருகிறான் என்று அறிந்தார்.
  அன்றிலிருந்து அவனுடைய ஆசிரியர் அவனை தனியாக அழைத்து பாடம் சொல்லிக் கொடுத்தார். அவன் பள்ளி ஆலோசகரிடமும் அனுப்ப்பட்டான். பிறகு ரவி பள்ளியில் சிறப்பாகச் செய்தான்.
  Maghbu Nasrin Banu
  Sec 1 Gan Eng Seng School

 6. சமுதாயம் (கதை)
  “அருண்! எங்கே பர்க்கிறாய்? பாடதில் கவனம் செலுத்து” என்று ஆசிரியர் அருணிடம் கடினமாகக் கூறினார். எங்கேயோ மெய் மறந்திருந்த அருண் திடுகிட்டு சுயநினைவுக்கு வந்தான். “அருண் நீ படிப்பில் கவனம் செலுத்துவதில்லை, உன் பள்ளி கட்டணம் இன்னும் கட்டவில்லை. இப்படியே இருந்தால் நான் உன் தந்தையிடம் பேச வேண்டிய நிலைமை ஏற்படும்” என்று ஆசிரியர் அருணிடம் கூறினார்.
  வகுப்புக்கு முன்னால் தனது ஆசிரியர் தன்னைத் திட்டியதை எண்ணி அருண் அழ ஆரம்பித்தான். அவன் வகுப்பு மாணவர்கள் அவனைக் கண்டு சிரித்தனர். பள்ளி இடைவேளையின்போது அருண் யாரிடமும் பேசாமல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டான்.
  அடுத்த நாள் அருண் பள்ளிக்குத தாமதமாக வந்துவிட்டான். கட்டொழுங்கு ஆசிரியர் பள்ளி வாசலில் சினத்துடன் நின்றுகொண்டிருந்தார். அருணின் தோற்றத்தைக் கண்டு மேலும் கோபமடைந்தார். அருணின் சீருடை அழுக்காகவும் கசங்கியும் காணப்பட்டது. மற்றும் அவனுடைய தலைமுடி நீளமாகவும் அலங்கோலமாகவும் இருந்தது. அருண் இப்படிப்பட்ட மாணவனே இல்லை என்று அந்த ஆசிரியருக்குத் தெரியும். பள்ளி முடிந்தபின் தன்னை வந்து பார்க்கும்படி கட்டளையிட்டார்.
  அதன் பிறகு வகுப்பரைக்குச் சென்ற அருணுக்கு மேலும் பிரச்சனைகள் காத்திருந்தன. வீட்டுப் பாடங்கள் சரிவர செய்யவில்லை, ஆசிரியரின் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை, நண்பர்கள் பேச்சில் நாட்டமும் இல்லை. பள்ளி முடிந்தபின் கட்டொழுங்கு ஆசிரியரை காணச் சென்றான். அங்கே அவரும் அவனுடைய வகுப்பு ஆசிரியரும் அருணுடைய திடீர் மாற்றங்ளுக்கு விளக்கம் கேட்டார்கள். கண் களங்கி நின்ற அருண் கொஞ்சம் கொஞ்சமாக தனது கஷ்டங்களை கொட்ட ஆரம்பித்தான்.
  தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமணையில் இருப்பதாகவும் தன் தந்தை வேலையிழந்து பணத்துக்கு மிகவும் சிரமப்படுவதாகவும் கூறினான். மேலும் தன் 5 வயது தங்கையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் அருணுக்கு இருப்பதால் அவன் பள்ளிப் படிப்பு மேலும் தொடருமா என்ற கவலை அருணின் சோகத்திற்கான காரணங்கள் என தெரியவந்தது. இதை கேட்ட ஆசிரியர்கள் இருவரும் வருத்தப்பட்டு அவனுக்கு உதவி செய்ய எண்ணினார்கள். கூடிய விரைவில் இச்செய்தி பள்ளி முழுவதும் பரவ ஆரம்பித்தது. அருணுக்கு உதவிசெய்ய ஒரு நிதி திரட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் பள்ளி மாணவர்கள் அருணின் நிலைமையை எண்ணி வருத்தப்பட்டு அவனுக்கு ஆறுதல் கூறுவதோடு பணவுதவியும் செய்தனர். மற்றும் அவனுக்கு பாடங்களிலும் உதவியாக இருந்தனர்.
  பள்ளியில் கிடைத்த பண உதவியும் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த ஆதரவிலும் அருண் அவன் கஷ்டத்திலிருந்து மீண்டு வந்தான். அவன் தந்தைக்கும் வேலை கிடைத்தது. மற்றும் அவனின் அம்மாவும் குணமாகி வீடு திரும்பினார். ஆசிரியர்களுக்கும் நன்பர்களுக்கும் அருண் எப்பொழுதும் நன்றிக் கடன் பட்டிருந்தான்.
  Vishnu Sec 1
  Gan Eng Seng School

 7. சமுதாயம்
  நம் சமுதாயத்தில் பல விதமான மனிதர்கள். சிலர் தாராள மனசுடையவர்கள், சிலர் சுயநலக்காரர்கள்… யார் எப்படிப்பட்டவர் என்று ஒரு தாத்தாவின் பார்வையிலிருந்து…
  ஓர் அழகான இரவு நேரத்தில் தாத்தாவும் பேரனும் சாலையில் நடந்துக் கொண்டிருந்தார்கள். அச்சிறுவன் அங்கும் இங்கும், மேலும் கீழும்,பார்த்துக் கொண்டே வந்தான். மேலே பார்க்கும்போது, அவன் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும், சந்திரனையும் பார்த்தான். பிறகு, கீழுள்ள செடிக்கொடிகளைப் பார்த்தான். சிறிது நேரம் அவன் இவற்றையெல்லாம் உத்து பார்த்துக் கொண்டே நடந்தான். தாத்தாவும் இதனை கவனித்தார். சில நிமிட சிந்தனைக்கு பிறகு பேரன் தாத்தாவிடம் வினாவ தொடங்கினான்
  . முதலில், “தாத்தா, அதோ பாருங்கள்!மேலுள்ள நட்சத்திரங்களும், கீழுள்ள செடிகளும் நம்முடன் சேர்ந்தே நடக்கின்றன.” என்றான் பேரன் உற்சாகத்தோடு. தாத்தாவும் சிரித்தக்கொண்டே பார்த்தார்.
  பின்னர், தாத்தா “கண்ணா, இப்போது நான் கூறும்படி செய்து எனக்கு பதிலளி.” என்றார்.
  ” முதலில், மேலே வானத்தை பார். அங்குள்ள நட்சத்திரங்களும் நிலாவும் எந்த பக்கம் நகர்கின்றன? முன்னாடியா?பின்னாடியா?”
  அதற்கு பேரன், ” இல்லை, தாத்தா அவை நான் எங்கு சென்றாலும் என்னோடே நகர்கின்றன.” என்று பதிலளித்தான். அதுமட்டுமல்ல, அவன் முன்பும் பின்பும் நடந்துக்கூட காட்டினான்.
  “சரி, இப்போது நீ கீழுள்ள செடிகளை பார். அவை எந்த பக்கம் நடக்கின்றன?”
  ” ம்ம்ம், செடிகள் பின்னாடி நகர்கின்றன. ஏன் தாத்தா இதை கேட்கிறீர்கள்?” என்றான் பேரன். அதற்கு, தாத்தா “இருப்பா, நான் கூறுகிறேன்.” என்றார்.
  பேரனும் தாத்தா என்ன சொல்ல போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருந்தான்.
  தாத்தா ” தம்பி, மேலுள்ள நட்சத்திரங்களும் சந்திரனும் உனது வாழ்க்கையில் உள்ள உயர்வான மனிதர்கள் போல. அவர்கள் உனது சந்தோஷத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்து துணை நிற்பார்கள். ஆனால், கீழுள்ள செடிக்கொடிகள் உனது வாழ்க்கையில் உள்ள எதிரிகள் அல்லது உனது வெற்றியை விரும்பாதோர்கள் போல. அவர்கள் உன்னுடன் வருவது போலத் தெரியும் ஆனால், உண்மையில் அவர்கள் உன்னை விட்டு தூரமாகச் சென்று, உனக்கு துரோகம் தான் செய்வார்கள்.” என்று கூறினார்.
  பேரனும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். “எனவே, நீ யார் உண்மையான ஆதரவாளர்கள், யார் பொம்மலாட்டக்காரர்கள் என்று அறிந்து நீ புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.” என்றார்.
  “ஓ!!” என்று பேரன் வாயை பிளந்தான்.
  “அப்போது தான் நீயும் நாளடைவில் வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைவாய்!” என கூறினார் தாத்தா.
  பேரன் தாத்தா கூறியவற்றையெல்லாம் கேட்ட பின்னர், ” சரி தாத்தா, நானும் அந்த நிலாவை போலவும் நட்சத்திரங்களை போலவும் உயர்வான நிலையை அடைவேன். ” என்று உறுதியாக பதிலளித்தான்.
  தாத்தாவும் புன்னகை பூத்த முகத்தடன், பேரனின் கையை அழுத்திப் பிடித்தவாறே நடக்க ஆரம்பித்தார்.

  வர்ஷினி சரவணன்.
  உயர்நிலை மூன்று
  உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் (NETP)

Your email address will not be published.


*