நமது பாதை, நமது பயணம்!


நாம் வாழ்க்கையில் முன்னேற நமக்கென்று ஒரு குறிக்கோள், அதை அடைவதற்கான பாதை அவசியம். இப்படம் ஒரு பாதையைக் காட்டுகிறது. பாதை என்ற கரும்பொருளில் உங்களுக்குத் தோன்றும் கவிதையை எழுதி, இங்கே பகிருங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 5 செப்டம்பர்  2015. வாழ்த்துகள்!

14 கருத்துரை

 1. வாழ்க்கை என் கையில்
  அந்த பாதையின் வரைபடம் என் மனதில்
  அந்த பாதை நல்லதா கெட்டதா என்ற முடிவு என் இஷ்டம்
  அது கெட்டதாயினால் பெறும் நஷ்டம்
  வாழ்க்கையில் தடைகள் வருவது நிச்சயம்
  அதை தூக்கி வீசி செல்வதே எனது லட்சியம்
  ஜாய்ஸ்
  புக்கிட் வியு உயர்நிலை பள்ளி
  1E3

 2. குறிக்கோளை அடைவதற்கு பாதை வேண்டும்
  சரியான பாயைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
  அப்பாதையில் செல்ல தைரியம்  வேண்டும்
  குறிக்கோளை அடைவதற்கு  உறுதி வேண்டும்
  அப்பாதையில் பிரச்சனைகள் வர வேண்டும்
  அதை நாம் சமாளிக்க வேண்டும்
  குறிக்கோளை அடைந்தவுடன் சந்தோஷபட வேண்டும்
  ஹர்ஷினி பாலா
  பாயா லேபார் மெதோதீஷ்த் பெண்கள் உயர்நிலை பள்ளி

 3. சீ.சிவ ரஞ்சனா
  உன் கையில் இருக்கும் உன் வாழ்க்கைப் பாதை
  அதில் நீ ஒரு நடக்கும் தேவதை
  உன் குறிகோளை அடைய அயராது பாடுப்பட்டு உழை
  உனக்கு ஏற்படலாம் பல தடை
  ஆனால் அவை தைரியமாக உடைத்து நீ பிழை
  உலகில் சிறந்த சாதனையை படை
  உன்னைத் தானாக தேடி வரும் பெருமை
  எட்ட முடியாத தூரத்தில் இருந்தாலும் கொண்டு வா அந்த வெற்றிக் கனியை
  கடவுள் உனக்கு கொடுத்திருக்கிறார் இந்த வரத்தை
  அதனால் உன்னால் படிக்க முடிகிறது இந்த கவிதை
  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 4. நமது பாதை, நமது பயணம்
  ———————————————-
  அச்சம் இருக்குமிடத்தில்…
  முன்னேற்றப் பாதை தடைபடும்!
  விடாமுயற்சி இருக்குமிடத்தில்…
  தோல்விகள் பறந்தோடும்!
  நம்பிக்கை இருக்குமிடத்தில்…
  புதிய சிந்தனைகள் பல தோன்றும்!
  வியர்வைத்துளிகள் சிந்துமிடத்தில்…
  வாழ்வு இனிதாக அமையும்!
  முயற்சியை வில்லாக ஏந்தி…
  தன்னம்பிக்கையை அம்பாகத் தொடுத்து…
  தடைகளை விரட்டிப் பயணம் செய்தால்…
  வெற்றிப்பாதை கண்முன் தெரியும்.


 5. உன் கையில் தான் அமைந்துள்ளது உன் வாழ்க்கைப் பாதை.
  தவறான முறையில் வீனாக்காமல் பாதுகாக்கு அதை
  தினமும் என்னால் முடியும் என சொல்
  வாய்ப்பு வந்தால் எடுத்துக்கொள்
  ஓட்டை கொண்ட வடை போல்
  உனக்கு ஏற்படலாம் பல தடை
  நாம் அனைவரும் கற்றது கைமண்ணலவு
  ஆனால் கள்ளாதது உலகளவு
  துணிந்து நில்! வெற்றி உனக்கு நிச்சயம்
  உழைக்காமல் வரும் வெற்றி அச்சமயம்
  கடவுள் உனக்கு கொடுத்திருக்கிறார் இந்த வரத்தை
  அதனால் உன்னால் படிக்க முடிகிறது இந்த கவிதை
  சுவாத்தி 1E1 புக்கிட் வியு உயர்நிலை பள்ளி

 6. வாழ்வில் நிறைய பாதைகள் உள்ளன
  அவற்றில் நல்லதும் கெட்டதும் உள்ளன
  நல்வழிகளைப் பின்பற்றினால் வாழ்வில் மன்னேற்றம் உனக்கே
  கெட்டவழிகளைப் பின்பற்றினால் வாழ்வில் நஷ்டமும் உனக்கே
  எது சரியானது அல்லது தவறானது என்று திர்மானிப்பது நம் கையிலே
  இதனால் தடைகள் ஏற்படும் என்று யோசிக்காதே
  அவற்றை எவ்வாறு தாண்டி வருவது என்று சிந்தித்து உன் உறுதியைக்காட்டு
  சாதனைகளையும் சாத்த்து பெருமையைத் தேடு
  முக்கியமாக, நழ்வழிகளைப் பின்பற்றி வாழ்க்கையை வெளிச்சமாக்கு.
  ரோசிணி
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 7. வாழ்கை… ஒரு வழிப்பாதை!
  திரும்ப முடியாதப் பாதை! 
  பாதையில் பல இடர் வரலாம்-துணிந்து பயணிப்பவன் நல்ல இடம் பெறலாம்!
  மேடு பள்ளம் பாதையிலே……அது போல் ஏற்ற இறக்கம் வாழ்கையிலே!
  கால் போன போக்கினிலே……நாம் போகும் வேளையிலே…..
  துன்பம் சேரும் வழியினிலே….
  நம் முன்னோர் சொன்னது அறவழிப் பாதை!
  அதை கைக்கொண்டால் கிடைப்பது வெற்றி மேடை!
  இதுவே நம் குறிக்கோளை அடையும் பயணப்பாதை!
  susmitha 1E2 (10)
  yuan ching secondary school

 8. பட்டாம்பூச்சியின் பாதை
  —————————————–
  பூவுக்குப் பூ பறந்து திரிந்த பட்டாம்பூச்சி
  சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்ததாம்
  அழகிய வானின் கீழ்
  வண்ணப் பூக்களிடையே திரிந்ததாம்
  எளிமையான வாழ்க்கையைக் கொடுத்த
  பாதை ஒன்றில் பயணித்ததாம்
  பூவும் வானும் அழிந்ததாம்
  சுற்றித்திரியும் சுதந்திரம் கலைந்ததாம்
  பூவையும் பழத்தையும் தேடித் திரிந்த மனம்
  பொன்னையும் பொருளையும் தேடத்தொடங்கியதாம்
  அழகிய வானை கிழித்த கட்டிடங்கள்
  அவற்றிலிருந்து புகை புகையாக பொழிந்ததாம்
  கரும்புகை பட்டாம்பூச்சியின் கண்களை மறைத்ததாம்
  அதன் மனதையும் மறைத்ததாம்
  விழித்துக்கொள்வோம் கண்களைத் திறந்து கொள்வோம்
  இதுவா வாழ்க்கைப் பாதை
  விலங்குகளையும் செடி கொடிகளையும்
  கொல்லும் பாவிகளாகிவிட்டோம்
  இந்தப் பக்கம் திரும்பினால்
  இயற்கை பேரிடரில் குடும்பங்களைத் தொலைத்தவனின் கண்ணீர்
  அந்தப் பக்கம் திரும்பினால்
  பசியில் வாடும் பிஞ்சுக் குழந்தைகளின் அழுகை
  இதுவா நமது எதிர்காலம்
  இது பாதையா அல்லது நீண்ட ஒரு புதைகுழியா
  விழித்திடுவோம் இந்த பாதையிலிருந்து திரும்பிடுவோம்
  சிறந்த பாதையில் பட்டாம்பூச்சியாய் பறந்திடுவோம்

 9. Nilopher Banu
  Tanjong Katong Girls’ School
  வெற்றிப்பாதை
  ​​​​​​​​​———————————————-
  குறிக்கோளை அடைவதற்கு நாம்
  கடக்க வேண்டிய பாதை
  கடின தடைகள் நிறைந்து
  முள்ளும் புதருமாய் இருக்கும்
  பனி நிறைந்த பாதை பார்ப்பது சிரமம்
  வழு வழுப்பான பாதையை கடப்பது சிரமம்
  செங்குத்தான மலை பாதையில் ஏறுவது சிரமம்
  இச்சிரமங்களை துணிச்சளுடன் சமாளிப்பதே ஒரு திறமை!
  கூர்மையாக முன்னால் உற்றுப் பார்த்தால்
  பாதையிலிருந்து தவறி விடாமல்
  உறுதியுடன் இருக்கலாம்
  வெற்றிப்பாதையே தெளிவான,சுலபமான பாதை
  அது எவ்வளவு தூரம் என்று கேட்க வேண்டாம்
  வெற்றிப்பாதை அருகிலேயே இருக்கும்!
  குறுக்குப்பாதையில் செல்ல ஆசை வளரும்
  ஆனால் நேர்ப்பாதையே வெற்றிப்பாதை என்று
  ஞாபகம் வைத்துக்கொள்
  உறுதி படைத்த மனத்தோடு
  விட்டுக்கொடுக்காமல் கடினமா உழைப்போடு
  ஒரே எண்ணத்துடன் தடைகளைத் தகர்த்து,
  குறிக்கோளை அடைவதற்கான பாதை
  தடைகள் முள்ளும் புதருமாய் இருந்தாலும்
  அப்பாதையை கண்டிப்பாக தாண்டி
  வெற்றியை அடைவோம்!

 10. பெற்றோர் நமக்குக் காட்டுவது அன்பு பாதை…
  ஆசிரியர் காட்டுவது அறிவுப் பாதை…
  நல்ல நட்பு காட்டுவது உல்லாசப் பாதை…
  உலகம் காட்டுவது அனுபவப் பாதை…
  இதை சீராக கடந்தால்..நமக்கு கிடைப்பது வெற்றி பாதை
  வேதா விக்னேஷ்வரி
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 11. இது  உன்  பாதை
  உனக்கு மட்டுமே சொந்தம்..
  இந்த பாதையில் பல
  இடையுறுகள் வந்தாலும்
  அதை நீ மட்டுமே
  கடக்கவேண்டும்..
  பாதையை கடக்கும் போது
  உனது கால் வலித்தாலும்
  நீ சலிக்காமல்
  நடக்க வேண்டும்..
  மேடு பள்ளங்கள் தாண்டி
  நீ போனாலும்
  கற்கள் குத்தி உன்னை
  காயபடுத்தினாலும்..
  ஒரே குறிக்கோளோடு
  நீ போகும் பாதை
  என்றும் மறையாது..
  இது நமக்கென்று
  ஒரு குறிக்கோள் அடைவதற்கான
  சரியான பாதை என்று
  நினைக்க வேண்டும்….

 12. என் பயணம் மீண்டும் தொடங்கும் என
  பாதை குளிர் மற்றும் மழை நிரப்பப்பட்ட
  ஆனால் சூரிய ஒளி வழி விளக்குகள் போன்ற
  நான் என் கனவுகள் இதுவரை மேலே போய் பார்க்கிறேன்
  நான் எப்போதும் முயற்சி அஞ்சுகின்றனர்
  பாதையில் எடுத்து மற்றும் ரகசியமாக அடைய
  என் பயணம் விமான வாழ்க்கை பாதையை எடுக்கிறது
  இது என் கனவுகள் என்னை கொண்டு
  நான் எடுத்து பாதை
  நான் வழியாக சென்ற பயணம்
  இதுவரை என்னை கொண்டு
  இப்போது நான் என் கனவு வாழும்
  அடுத்த பாதை கனவு
  என் அடுத்த பயணம்
  மீனா
  Bukit View Secondary

 13. நம் முன்னோர்கள் வழிவகுத்த பாதை இது.
  நீண்ட காலமாக ஏங்கிய பாதை இது.
  இதை கொண்டுச் செல்வது நம் பொருப்பு.
  அதை கடைப்பிடிக்க வேண்டியது நம் இதயம் என்னும் உறுப்பு.
  ஒரு பூவின் அரும்பாய் இருந்த நமது சிங்கப்பூர், இப்பொழுது பல அயல்நாடுகள் அன்னார்ந்து பார்க்கும் ஒரு நறுமணம் உள்ள மலராக வளர்ச்சிப்பெற்றிருக்கிறது.
  இப்பாதையை நாம் என்றென்றும் வாயார பாடி மனதார வாழ்த்தவேண்டும்!!!
  சுவேதா
  Pasir Ris Crest Secondary School

 14. மதம் எனும்
  பாதை பலவாயினும்
  பயணம் என்பதோ
  படைத்தவனை அடையவே!
  நமக்குள்ளே மதத்தால்
  வேண்டாமே பேதம்!!!
  மனிதம் வாழ
  அன்பின் வழி
  பயணித்தாலே அதில்
  அடையலாம் அவனை!
  பெயர்: ஜெஸிக்கா மொரால்
  பள்ளி: SJI Senior School (JC)

Your email address will not be published.


*