நடைபாதையின் படங்கள்

நம் பள்ளியைச் சுற்றி, வீட்டைச் சுற்றி பற்பல நடைபாதைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு. அவற்றை, புதிய கோணங்களில் புகைப்படங்களாக எடுங்கள். அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே அனுப்பலாம்)
போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 12 ஆகஸ்ட் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஜூன் மாத, வெற்றியாளர்களின் பட்டியல்
Nithya Neidu – CHIJ Secondary Toa Payoh
Yahika Radhakrishnan – Riverside secondary school
Vaishnavi – Chua Chu Kang secondary school

18 கருத்துரை

  1. துரைக்குமரன்
    பெண்டெமீர் உயர்நிலை பள்ளி

    இந்த புகைப்படத்தில் இருப்பது எனக்கு பிடித்த ஒரு நடைபாதை. இந்த நடைபாதை என் வீட்டிற்கு அருகில் உள்ளது . இந்த நடைபாதையில் மக்கள் ஓடுவார்கள் மற்றும் முதியோர்கள் நடந்து உடற்பயிற்சி செய்வார்கள். இந்த அகிலத்தில் பல நடைபாதைகள் இருக்கையில் நான் எதற்காக இந்த நடைபாதையை எடுத்தேன் என்று நீங்கள் யோசிப்பீர்கள்! இந்த நடைபாதை இரண்டு வழிகளாக பிரிகிறது. இதை படம் எடுக்கும்போது எனக்கு “ஒன்று தோன்றியது. நமது வாழ்விலும் இது போன்ற தருணத்தில் நாம் சரியான வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உணர்த்துகிறது ”. இதனாலே, இந்த நடைபாதை என்னை கவர்ந்தது. பிறகு, இந்த புகைப்படத்தை எடுக்க வைத்தது.

Your email address will not be published.


*