நகைச்சுவைக் கதை

நகைச்சுவை என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். அன்றாட வாழ்க்கையிலும் நிறைய நகைச்சுவைச் சம்பவங்களைப் பார்த்திருப்போம் அல்லது புத்தகங்களில் படித்து சிரித்திருப்போம். அப்படி, நீங்கள் பார்த்த ,கேட்ட அல்லது  படித்த நகைச்சுவைச் சம்பவங்களில் உங்களுக்குப் பிடித்ததை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்துகொள்ள இறுதி நாள் – 3 மே  2015. வாழ்த்துகள்!

7 கருத்துரை

 1. நான் ஒரு நாள் பேஸ்புக்கில் கதைகள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இதை படித்தேன்.
  ஒர் ஊரில் ஒரு உழைப்பாளி இருந்தார். ஆனால், அவர் மிகவும் சுயநலமானவர். தான் சாம்பாரிப்பதை தான் மட்டுமே பயண்படுத்த வேண்டும் என்ற ஒரு மனப் போக்கோடு வாழ்ந்து வந்தார்
  இவர் ஒரு நாள் தன் மணைவியோடு பேசிக்கோண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய ஆசையை கூறினார்.
  “நான் இறந்தப் பின்னர், என்னுடைய சவப்பெட்டிக்குள் நான் உழைத்த பணத்தை எல்லாம் வைத்துவிடு!” என்று கூறினார். இதற்கு தன் மணைவி சம்மதித்தார்.
  சில வருடங்களுக்குப் பின் அவர் இறந்து விட்டார். அவர்கள் அவருடைய சவப்பெட்டியை தேவாலயத்தில் வைத்துக்கொண்டிருக்கும் போது, அவரின் மணைவி அவரின் ஆசையைப் பற்றி அங்கிருந்த ஆசாரியிடம் விவரித்தார்.
  இதைக் கேட்ட ஆசாரி “அவ்வளவு பணத்தையும் உள்ளே வைத்தீர்களா?” என்று வியப்போடு கேட்டார்.
  அதற்கு அந்த மணைவி சாதாரனமாக பதில் அழித்தார். “ம்ம்ம்… இல்லை. அவருடைய பணத்தை அணைத்தையும் ஒரு காசோலையில் எழுதி அவரின் சவப்பெட்டியில் வைத்து விட்டேன் என்றார்.
  இதைப் படித்தப் பின், நான் வாய் விட்டு சிரித்து மகிழ்ந்தேன்.
  க.ஹர்ஷிதா
  உயர்நிலை 2
  ஸைண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப் பள்ளி

 2. ‘ஐயோ! திருப்பி விழுந்துவிட்டதே!’
  ஒரு நாள், நானும் என் தோழனும் ஹேரி ஒரு வகுப்பறைக்குச் சென்றோம். நான் என் தண்ணீர் பானத்தை கையில் பிடித்துக்கொண்டேன்.
  ‘ஷஹீரா, வா, உள்ளே போகலாம்,’ என்று ஹேரி சொன்னான். அப்போது, நான் என் தண்ணீர் பானத்தைக் கீழே விழுந்நு விட்டது. ‘இது என்னுடைய ஐந்தாவது முறை விழுந்தது,’ என்று நான் சொன்னேன். நான் என் தண்ணீர் பானத்தை மேசையின்மீது வைத்தேன்.
  ஹேரி மேசையின் மேல் உட்கார்ந்து, என் தண்ணீர் பானத்தை விழுந்துவிட்டது. ‘ஐயோ! திருப்பி விழுந்துவிட்டதே!’
  நூர் ஷஹீரா
  செயின்ட் ஹில்டாஸ் உயிர்நிலைப் பள்ளி

 3. நாம் தமிழைப் பேசுவோம்.
  நாம் தமிழை நேசிப்போம்.
  நாம் தமிழ் புத்தகத்தைப் படிப்போம்.
  நாம் தமிழைத் தினமும் கொண்டாடுவோம்.
  தமிழ் எங்கள் பேச்சு.
  தமிழ் எங்கள் மூச்சு !
   
  கிலுர்  
  செயின்ட் ஹில்டாஸ் உயிர்நிலைப் பள்ளி

 4. இரவு இரண்டு மணி, சில்லுனு பெய்யும் மழை, கதவு திறக்கும் சத்தம், வெளிய ஒருவர் “ஐயா! என்னோட வண்டி பிரேக் டொவ்ன்( break down ) ஆகிவிட்டது. கொஞ்சம் வந்து தள்ள முடியும்மா ?” அவர் கொஞ்சம் போதையில் இருபதாக தெரியவந்தது . சத்தம் கேட்டு அங்கு வந்த மனைவி என்ன ஆச்சு என்று கேட்க , விவரித்ததும் “பாவம் என்னங்க … இந்த இரவுல என்னப் பண்ணுவார் ? போய் உதவிப் பண்ணுங்க!” என்று மனைவி சொல்ல ,போனா போதும்னு உதவிப்பன்ன குடையை எடுத்து கிளம்பினர். பூங்காவில் குடிகாரர் அவர் பக்கத்துல உள்ள விளையாட்டு காடி ஒன்றில் அமர்ந்து “இப்போ தள்ளுங்க!” என்று சொன்னார் .
  நீதி : இரவோ பகலோ குடி குடியை கெடுக்கும் !
  சப்ரின் பாராஹ்
  பாயா லேபர் மேதொடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

 5. வெளியூருக்கு சென்றிருந்த பரமார்த்த குருவும் ஐந்து முட்டாள் சீடர்களும்
  சாப்பிட அமர்ந்தனர்.அப்போது தான் உப்பு இல்லை என்ற உண்மை தெரிந்து 
  உடனே பரமார்த்தகுரு தன் சீடர்களில் ஒருவரான மடையனை அழைத்து
  கடைக்கு போய் சாப்பாட்டுக்கான உப்பை சீக்கிரம் வாங்கி வருமாறு 
  சொன்னார்.
  அந்த வட்டார்த்தின் அருகாமையில் கடை ஏதும் இல்லை.ஆற்றைக் கடந்து சற்றுத் தொலைவு சென்று தான் உப்பு வாங்கிவர வேண்டும்.மடையன் சிறு
  துணிப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு உப்பு வாங்கப் புறப்பட்டான்.
  பரமார்த்த குரு அவனை தடுத்து உப்பு சுத்தமானதாக பார்த்து வாங்க 
  வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தினார். அழுக்கான உப்பை வாங்கி 
  வந்தால் சாப்பாடு கிடையாது,பட்டினி தான் கிடக்க வேண்டும் என்று 
  தீர்மானித்தார்.மடையன் ஆற்றுக் கடந்து உப்புக் கடை இருக்குமிடத்தை 
  சென்றடைந்தான்.”கடைக்காரரே,பத்து காசுக்கு உப்பு வேண்டும்” என்று 
  என்று மடையன் கடைக்காரனைக் கேட்டான்.கடைக்காரன் மடையன் 
  கொண்டு சென்றிருந்த பை நிறைய உப்பைக் கொடுத்தான்.
  ”கடைக்காரரே, உப்பு சுத்தமானது தானா?சுத்தமான உப்பாகப் பார்த்து என் 
  குரு வாங்கி வரச் சொன்னார்” என்றான் மடையன்.”உப்பிலே சுத்தம்,
  அசுத்தம் என்று கிடையாது, உப்பு உப்புதான்! எடுத்துக்கொண்டு போப்பா 
  என்றான் கடைக்காரன்.”குரு தெரியாமலா சொல்லியிருப்பார்? உப்பிலே 
  சுத்தமானது இருக்கத்தான் வேண்டும்” என்று மடையன் பிடிவாதமாக 
  வற்புறுத்திக் கேட்டான்.
  என்னையா மடையனாக இருக்கிறீர்! உப்பு ஒரே மாதிரியாக்த்தான் 
  இருக்கும். இது சுத்தமான உப்புத்தான் என்று கடைக்காரன் எரிச்ச்லுடன் 
  சொன்னான்.மடையனுக்கு சந்தேகம் தீரவில்லை.தயங்கியவாறு 
  சுத்தமான உப்பாக இல்லாவிட்டால் என் குரு கோபித்துக் கொள்வார்.
  அதற்காகத் தான் சுத்தமான உப்பு கேட்டேன் என்றான்.
  மடையனுடய அறியாமையை கடைக்காரன் புரிந்து கொண்டான்.அவன் 
  உப்பைப் பற்றி என்ன சொன்னாலும் விளங்கிக் கொள்ள மாட்டான் என்றதும்
  அவனிடம் ஒருவேடிக்கை அவனுக்கு சரியான புத்தி புகட்ட
  வேண்டும்மென்று நினைத்தான்.அதன்படி உப்பு முழுவதும் சுத்தமாக 
  இருக்காது.அதை நீரிலிட்டுக் குழுவினால் தான் முழுச்சுத்தமாகும்.
  சோறு சமைக்கும் போது அரிசியை நீரிலிட்டுக் கழுவுகிறோம் அல்லவா! 
  அந்த மாதிரி உப்பையும் கழுவிச் சுத்தப்ப்டுத்திக் கொள் என்று கடைக்காரன்
  யோசனை சொன்னான்.
  மடையனுக்கு அந்த யோசனை திருப்தியாகி விட்டது.மிக்க மகிழ்ச்சியுடன் 
  புறப்பட்டான்.நீரில் இறங்கி ஆற்றைக் கடக்கும் போது மடையனுக்கு ஒரு யோசனை தோன்றியது.”வீட்டுக்குப் போய் உப்பை கழுவி நேரத்தை 
  வீணாக்குவதைவிட ஆற்று நீரிலேயே உப்பை நன்றாக அலசி 
  சுத்தப்ப்டுத்திக் கொண்டு எடுத்துச் செல்லலாமே,” என்று யோசித்தான்.
  இவ்வாறு எண்ணிய மடையன் பையோடு உப்பை ஆற்று நீரில் நன்றாக 
  அலசினான்.ஆற்று நீரில்”உப்பு முழுவதும் கரைந்து பை காலியாகி விட்டது.மடையன் அதை உணர வில்லை.உப்பு சுத்தமாகி விட்டதைக் கண்டு குரு 
  மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணியவாறு குரு இருக்கும் இடத்தை
  அடைந்தான்.”சுத்தமான உப்பு வாங்கி விட்டாயா?”என்று பரமார்த்தகுரு 
  கேட்டார்.
  மடையன் பையைக் கொடுத்தான். ஆதை வாங்கிப் பார்த்த குரு ”பை 
  காலியாக இருக்கிறதே, உப்பு ஏன் வாங்கவில்லை?”என்று கோபத்துடன் 
  கேட்டார்.மன்னிக்க வேண்டும் குருவே ,உப்பு வாங்கினேன். கடைக்காரன் யோசனைப்படி உப்பைச் சுத்தப் படுத்துவத்ற்காக ஆற்று நீரில் நன்றாக 
  அலசி எடுத்தேன் என்றான் மடையன் பரிதாபமாக.
  மடையனுடைய செயலைப் மிகவும் முட்டாளான பரமார்த்த குரு 
  பாராட்டினார். ஆனால் சுத்தப்படுத்தப்பட்ட உப்பு என்ன ஆயிற்று என்று 
  அவருக்கு விளங்காமல் யோசனையில் ஆழ்ந்தார்!
  சீ.சிவ ரஞ்சனா – உயர்நிலை 1
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 6. ஓர் ஊரில் ஓர் ஏமாற்றுக்காரன் இருந்தான். அவன் அனைவரையும் ஏமாற்றிப் பிழைத்து வந்தான்.
  ஒரு நாள் ஒரு போட்டிக்கு அனைவரையும் அழைத்தான். இரண்டு லட்டுக்களை முன்வைத்து, ”இந்த இரண்டு லட்டுக்களில் , ஒன்று இனிப்பு லட்டு இன்னொன்று கார லட்டு. இதில் ஏதாவது ஒரு லட்டை சாப்பிடவேண்டும். யார் இனிப்பு லட்டை சாப்பிடுகிறார்களோ அவர்கள் எனக்கு ஐம்பது வெள்ளி கொடுக்கவேண்டும். கார லட்டை சாப்பிடுகிறவர்களுக்கு நான் ஐநூறு வெள்ளி பரிசு கொடுப்பேன்” என்று அறிவித்தான். ஆனால் உண்மையில் அவன் எப்போதுமே இரண்டு லட்டுக்களையும் இனிப்பு உள்ளவையாக மட்டுமே வைப்பான்.
  இதை அறியாதவர்கள் அவனிடம் தோற்று பணத்தை இழந்தார்கள். இதை கேள்விப்பட்ட ஒரு புத்திசாலி இளைஞன், அவனுக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணினான். ஒரு லட்டை எடுத்து டபக்கென்று சாப்பிட்டு விழுங்கி விட்டு, ”மீதமிருப்பது இன்னும் ஒரு லட்டு. அதை சுவைத்துப் பார்த்தால், நான் சாப்பிட்டது காரமா இனிப்பா என்று உனக்கு தெரியும்.” என்று கூறினான். ஏமாற்றுக்காரனின் முகத்தில் ஈயாடவில்லை.
  எத்தனுக்கு எத்தன் இவ்வுலகில் உண்டு!!!
  தேஜல்
  சுவா சுகாங் உயர்நிலைபள்ளி

 7. மூன்று மது அருந்திய ஆடவர்கள் ஒரு வாடகை உந்து வண்டியில் ஏறினார்கள்.
  வண்டி ஓட்டுனருக்கு அவர்கள் மது அருந்தியிருக்கிறார்கள் என்று தெரிந்த்து. அந்த ஓட்டுனர் வண்டியை ஓட்டுவதற்கு ஆயத்தமாக்கி மீண்டும் வண்டியை நிறுத்தி விட்டார். அவர் ”நீங்கள் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டோம்”என்றார்.
  அந்த ஆடவர்களில் ஒருவன் ஓட்டுனருக்கு பணம் கொடுத்தான். மற்றோருவன் நன்றி கூறினான். மற்றோருவன் அந்த ஓட்டுனரை அறைந்தான். அறைந்ததற்க்கு காரணத்தை கேட்டபொது அவன் ”என்ன நீ இவ்வுளவு வேகமாகவா வண்டி ஓட்டுவது எங்களை கொள்ளுவதற்கு கூட தயங்க மாட்டாய் போல”என்றான்.
  வேதா விக்னேஷ்வரி
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*