தோழியின் அம்மா அழைத்தால் …

இரவு நேரம். வீட்டில் இருக்கிறீர்கள். ஓர் அழைப்பு உங்கள் கைத்தொலைபேசிக்கு வருகிறது. அழைப்பது, உங்கள் பள்ளித் தோழி / தோழரின் அம்மா. இவர் ஏன் இந்நேரத்தில் அழைக்கிறார் என்ற யோசனையோடு அழைப்பை ஏற்கிறீர்கள். தன் மகள்/மகன் வீட்டிற்கு வரவில்லை என்றும், அவர் எங்கு சென்றார் என்று உங்களுக்குத் தெரியுமா என்றும் கேட்கிறார். நீங்களும் பதட்டமடைகிறீர்கள். ஏனென்றால், உங்கள் தோழி/தோழருக்கு ஒரு பிரச்சனை உள்ளதென்று உங்களுக்குத் தெரியும். அன்று வகுப்பு முடிந்து வரும் வழியில் உள்ள ஒரு புளோக்கின் தாழ்வாரத்தில் அவர் தனிமையில் அமர்ந்திருந்ததையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்…

அந்தப் பிரச்சனை என்ன? உங்கள் தோழி/தோழருக்கு என்ன நேர்ந்தது? இறுதியில், அவர் எப்படி பெற்றோரோடு மகிழ்ச்சியாக இணைந்தார் என்பதை ஒரு கதையாக எழுதுங்கள் ..

உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 28 ஜூன் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
*

ஏப்ரல் மாதக் கதைப் போட்டியின் வெற்றியாளர்கள்:

3 கருத்துரை

 1. தோழியின் அம்மா அழைத்தால்…

  ரிங்!ரிங்!ரிங்!”என என் கைத்தொலைபேசி மணி என்னை அழைத்தது. நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. யார் இந்த நேரத்திற்கு நம்மை அழைப்பது என்ற சிந்தனையோடு நான் தொலைப்பேசி அழைப்பை ஏற்றேன். மறுமுனையில் என் வகுப்புத் தோழி மீனாவின் தாயார், ஏன் இந்த நேரத்திற்கு அழைக்கிறார் என்ற சிந்தனையோடு நான் அவருக்கு வணக்கம் கூறினேன்.

  “மீனா இன்னும் வீடு திரும்பவில்லை. நீ எப்பொழுது அவளைப் பார்த்தாய்? உன்னிடம் அவள் எதுவும் கூறினாளா?” என்று அவர் படபடப்பாக கேள்வி கணைகளைத் தொடுத்தார். அவரின் படபடப்பு என்னையும் தோற்றிக்கொண்டது.

  அன்று மதியம் பள்ளியிலிருந்து திரும்பும்போது அவளை ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியின் அடியில் உள்ள தாழ்வாரத்தில் அவள் அமர்ந்திருப்பதை பார்தேன். அவளருகில் சென்று ஏன் வீட்டிற்கு செல்லாமல் இங்கே அமர்ந்திருக்கிறாய் என்று வினவினேன்.

  அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவி போல் வழிந்தது. நான் மத்தியில் ஆண்டு தேர்வில் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றவில்லை. அதனால் வீட்டிற்கு செல்ல பயமாக உள்ளது. என் பெற்றோர் என்னை வன்மையாக கண்டிப்பார்கள் என்று கூறினாள். நான் எவ்வளவு சொல்லியும் அவள் வீட்டிற்குச் செல்ல சம்மதிக்கவில்லை. நான் துணைப்பாட வகுப்பிற்கு செல்ல வேண்டியிருந்ததால் அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். அந்த நிகழ்வு மனத்திரையில் ஒட்டிக்கொண்டிருந்தது. “நித்யஸ்ரீ!” என்று மீனாவின் தாயார் அழைப்பதைக் கேட்டு சுயநினைவுக்கு திரும்பினேன். பின் நடந்தவற்றை அவரிடம் விவரித்தேன். உடனே நான் அவரை அந்த புளோக்கிற்கு வர சொல்லிவிட்டு நான் அங்கு சென்றேன்.

  மீனா அங்கேயே அமர்ந்திருந்தாள். அவளை கண்ட அவளின் தாயார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார். மீனா தன் தாயாரை கண்டவுடன் அவரை கட்டி அனணத்து அழ ஆரம்பித்தாள். “அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். நான் இனி கைத்தொலைபேசியில் மூழ்கி என் படிப்பை கெடுத்துகொள்ள மாட்டேன். நான் கடினமாக உழைத்து ஆண்டிறுதி தேர்வில் தேர்ச்சி அடைவேன். இது சத்தியம்,” என்று வாக்கு கொடுத்தாள். அவள் தாயாரும் அவளும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.

  மீனாவும், அவள் தாயாரும் அவர்களுக்கு தக்க சமயத்தில் உதவியதற்கு எனக்கு நன்றி கூறினார்கள். எனக்கு, என் தோழி அவள் செய்த தவற்றை உணர்ந்து, கல்வியின் அவசியத்தை உணர்ந்ததால் மட்டற்ற மகிழ்ச்சி. பிறருக்கு உதவும்போது கிடைக்கும் மனநிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை என்றும் உணர்ந்தேன்.

  M S NITHYASRI
  RIVERSIDE SECONDARY SCHOOL

 2. தோழியின் அம்மா அழைத்தால்

  இரவு மணி 9 இருக்கும், இன்று தான் என் பள்ளியில் தேர்வுகளுக்கான மதிப்பெண்களைப் பெற்றேன். நான் என் பெற்றோரும் ஒரு உணவகத்தில் சாப்பிட சென்றோம். வீட்டுக்கு வந்த உடனே வீட்டு தொலைப்பேசி ஒலித்துக்கொண்டேயிருந்தது. என் தோழி. ராணியின் அம்மா அழைத்திருந்தார். அவருடைய குரல் மிகவும் பதற்றமாக இருந்தது.

  நானும் ராணியும் ஒரே வகுப்பில் தான் படிக்கிறோம். ராணி இணைப்பாட நடவடிக்கையில் அவன் இசைக்குழுவின் தலைவி என்பதால் தினமும் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டாள். அவளுக்கு படிக்க நேரமே கிடையாது. நடந்த தேர்வுகளில் அவள் மிகவும் மோசமாக செய்நிருந்தாள். ராணியின் அம்மா நான் அவளை பார்த்தேனா என்று கேட்டார். இன்று நம் பள்ளி மணி முடிந்தது. ஆனால் இப்போது 7 மணி ஆகியும் அவள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையாம். நான் பள்ளி விட்டு வீட்டிற்கு வந்துக்கொண்டிருக்கும் போது அவளை நான் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் கீழ் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவளிடம் நான் பேச சென்றேன். அவள் 5 பாடங்களில் மிக குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் என்று கூறினாள். தன்னுடைய பெற்றோரிடம் மதிப்பெண்களைக் கொடுக்க மிகவும் கவலைப்பட்டாள். தன் பெற்றோர் அவளை படிக்க வைப்பதற்காக மிகவும் கடுமையாக வேலை செய்தாலும் தன்னால் அவர்களுக்கு வேண்டிய மதிப்பெண்களைப் பெறமுடியவில்லை. ஆனால் சற்று நேரம் கழித்து கண்டிப்பாக வீட்டுக்கு செல்வதாக என்னிடம் கூறினால். நடந்த அனைத்தையும் நான் அவள் அம்மாவிடம் கூறினேன்.

  நான் அவரிடம் கவலைப்படவேண்டாம்’ என்று கூறினேன். கண்டிப்பாக இனிமேலிருந்து அவளுக்கு படிக்க உதவுவேன் என்று கூறினேன். மேலும் ராணி எங்கே இருப்பாள் என்று எனக்கு தெரியும் என்பதால், நானே அவளை வீட்டுக்கு அழைத்து வருவேன் என்று அவள் அம்மாவிடம் வாக்களித்தேன். உடனே அந்த அடுக்குமாடி கட்டடத்திற்கு சென்று ராணியை தன் வீட்டுக்கு கொண்டு சேர்த்தேன். எவ்வளவு மோசமாக செய்திருந்தாலும் உன் அம்மா நிச்சயம் புரிந்துகொள்வார் என்று ராணியிடம் கூறினேன். ராணி தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டாள். நானும் அவள் படிப்பில் உதவுவேன் என்று தன் அம்மாவுக்கு கூறினேன். வரும் தேர்வில் நன்றாக செய்வாதாக ராணி தன் அம்மாவுக்கு வாக்களித்தாள்.

  சரண்யா
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 3. இரவு நேரம் மணி ஒன்பது . நானும் என் பெற்றோரும் குடும்பத்துடனும் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் . வழக்கமாக இரவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்.
  “தம்பி, இன்று பள்ளியில் என்ன நடந்தது ?”என்று என் அப்பா வழக்கம்போல் உரையாடலை ஆரம்பித்தார் .
  நான் “அப்பா, என்று ஆரம்பிக்கும்போது எனது கைத்தொலைபேசி ஒலித்தது . அழைப்பது என் நண்பன் ரவியின் அம்மா. பார்த்ததும் என் மனதில் இனம் புரியாத பயம் கலந்த குழப்பம் . ஏனெனில் நான் பள்ளி முடிந்து திரும்பும்போது ரவி பள்ளியின் அருகில் உள்ள புளோக்கின் தாழ்வாரத்தில் அமர்ந்து இருந்தான் . நான் அருகில் சென்று , “வீட்டிற்கு போகவில்லையா ரவி?”என்று வினவ , அவன் அதற்கு சற்று நேரம் கழித்து வருகிறேன் . நீ முதலில் செல் என்று கூறிவிட்டான்.
  வழக்கமாக இருவரும் சேர்ந்தே வருவோம் , அன்று எனக்கு என் அம்மாவுடன் கோயிலுக்கு செல்ல வேண்டி இருந்ததால் நான் வீட்டிற்கு முன்பே வந்துவிட்டேன். என் மனதிற்குள் எண்ண அலைகள் ஓட கைத்தொலைபேசியை எடுத்து பேசினேன் . மறுமுனையில் ரவியின் அம்மா பதற்றத்தோடு , தன் மகன் வீடு திரும்பவில்லை என்றும் ரவியை நீ பார்த்தாயா என்றும் வினவ செய்வதறியாது அதிர்ச்சிக்கு ஆளானேன் .
  நான் என் அப்பாவிடம் விவரத்தை கூற அவர் காரணத்தை வினவினார். நான் அப்போது நடந்த தேர்வில் அவன் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்றும் , தன் பெற்றோர்கள் நம்பிக்கையை தான் காப்பாற்றவில்லை என்று சொல்லி புலம்பியதை கூறினேன்.
  அதற்கு என் அப்பா இதுமாதிரி சூழ்நிலையில் நீ அவனை தனியாக விட்டது தவறு என்று அறிவுரை கூறினார் . மேலும் ரவியின் அம்மாவிடம் தைரியமாக இருக்க சொல்லிவிட்டு நானும் என் அப்பாவும் அந்த புளோக்கின் தாழ்வாரத்திற்கு சென்றோம் .
  அவன் இருட்டில் அங்கேயே அமர்ந்து இருந்தான்.முகம் சோர்வுடன் கண்கள் சிவந்து காணப்பட்டான்.நாங்கள் அருகில் சென்றதும் அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுதேவிட்டான்.என் அப்பா அவனிடம் ஒரு தேர்வில் தேர்ச்சி அடையா விட்டால் என்ன இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கிறது ,இதற்கு எல்லாம் இப்படி வருத்தப்படலாமா , அடுத்த தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் உன் அம்மா மிகவும் பதற்றத்துடன் உள்ளார் . உன் அம்மாவுடன் முதலில் பேசு என்று அறிவுரை கூறினார் .
  அப்போது அவன் தனக்கு தாயாருடன் கைத்தொலைபேசியில் பேச அவரும் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். ரவி நடந்ததை கூற என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நீங்கள் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அதைக் கேட்காமல் தேர்வு நேரத்தில் கவனமாக படிக்கவில்லை.நான் உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற முடியவில்லை.இனிமேல் கவனமாக இருப்பேன் என்று கூறி அழுதுவிட்டான்.
  அதற்கு அவன் தாயார் கவலைப்படாதே ரவி. எனக்கு உன்மேல் முழு நம்பிக்கை இருக்கிறது.எப்போது உன் தவறை நீ உணர்ந்தாயோ இனி எனக்கு கவலை இல்லை.நீ எதிர்காலத்தில் நன்றாக வருவாய் என்று கூறி எங்களிடம் நன்றி கூறி தகர்த்தனர்.
  ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதற்கு ஏற்ப முயற்சி செய்தால் அனைவரும் வெற்றி பெறலாம் என்பதில் ஐயமில்லை.

  Vishnu-2B
  Punggol secondary school

Your email address will not be published.


*