தொலைக்காட்சிப் போட்டியில் ஜெயித்த கதை

நீங்கள் ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று விடுகிறீர்கள். நிகழ்ச்சி நெறியாளார், பரிசாக உங்களுக்கு இந்த 4 வாய்ப்புகளைத் தருகிறார்.
1. நீங்கள் விரும்பும் 5 நாடுகளை 5 வாரங்கள் சுற்றிப் பார்க்கலாம்
2. நீங்கள் விரும்பும் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி, மடிக்கணினி, எந்த போன்ற மின்னணு சாதனங்களையும் $50000 மதிப்புக்கு வாங்கிக் கொள்ளலாம்.
3. உங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகளுக்கும், குடும்பத்திற்கும் தேவையான, ஆடைகள், காலணிகள், தங்க ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான கட்டில், மேசை, தொலைக்காட்சி போன்ற பொருட்களை $50000 வெள்ளிக்கு வாங்கிக் கொள்ளலாம்
4. அல்லது $25,000 வெள்ளி பணத்தை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வாய்ப்பில் எதை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்? அதன் பிறகு நடந்தது என்ன? என்பதை ஒரு கற்பனைக் கதையாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 10 ஏப்ரல் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
பிப்ரவரி மாத வெற்றியாளர்களின் பட்டியல்

Sri Durga Yuan Ching Secondary School
Nishanthi Clementi Town Secondary School
Vishnu Pongol Secondary School

 

12 கருத்துரை

 1. நான் நான்காவது பரிசை தேர்ந்தெடுப்பேன்.
  நான் எளிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள உழவர்களுக்கு பணஉதவி செய்வேன்.
  நான் கோவில்களிலும் சாலைகளிலும் அமந்திருக்கும் ஊனமுற்றவர்களுக்கும் வயதானவர்களுக்கு உணவு அளிப்பேன். ஆசிரமங்களுக்கு சென்று என்னால் முடிந்த பண உதவிகளை செய்வேன்.
  நான் ஏழை குழந்தைகளுக்கு படிப்பிற்கு தேவையான உதவிகளை செய்வேன்.
  ஜனனிஶ்ரீ

 2. நான் நான்காவது பரிசை தேர்ந்தெடுப்பேன்.
  ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் வெற்றி பெற்றத்தில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
  இந்த பணத்தை நான் நல்ல வழிகளில் செலவளிக்க விரும்புகிறேன்.$25,000 பணத்தில் $10,000 பணத்தை என் குடும்பத்திற்காகவும் என் எதிர்கால படிப்பிற்காகவும் சேமித்துவைக்க விரும்புகிறேன்.
  மீதி பணத்தை வைத்து மற்ற நாடுகளுக்குச் சென்று உலக வெப்பமயமாதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பணஉதவிச் செய்வேன்.உலக வெப்பமயமாதல் மனிதர்களில் கெட்டச்செயல்களால் வந்த விளைவு.இதனால், பல உயிரிணங்கள் இரந்துப்போய்உள்ளன.
  இந்த பிரச்சனைக்கு நாம் முற்றுப்புள்ளிவைக்க நாம் முயர்ச்சிக்க வேண்டும். அதற்கு நான் கருத்தரங்கள் அமைக்க பணஉதவிச்செய்வேன். இந்த கருத்தரங்களில் உலக வெப்பமயமாதலை தடுக்க என்னன்ன செய்யலாம் என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.இப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் மாற்றங்கள் உண்டாகும்.உலக வெப்பமயமாதல் தடுக்க என் பங்கை நான் கண்டிப்பாகச் செய்வேன். இப்படி ஒரு நல்ல செயலுக்காக பணம் செலவளிப்பதில் நான் சந்தோசமடைகிறேன்.
  Ramesh Sreenithi
  Bendemeer Secondary School

 3. நான் 4வது வாய்ப்பை பரிசாக தேர்ந்தெடுப்பேன்.
  இன்னும் சில நாட்களில், என் தந்தை 60 வயதை தொட இருக்கிறார். இப்பரிசில் கால் பகுதியை பெற்றோர்களின் 60ஆம் கல்யாணத்திற்கு பயன்படுத்துவேன். இது என் வாழ்வின் மாபெரும் பாக்கியமாக கருதுவேன்.
  மீதம் உள்ள தொகையில் 10%தை கல்வியில் சிறந்த ஓர் ஏழ்மையான மாணவனுக்கு கல்வி நிதியாக கொடுத்து உதவுவேன்.
  அதில் இருக்கும் மீதத்தை, என் பெற்றோர்களை சிறிதும் சிரமப்படுத்தமல் இருக்க,என்னுடைய மேற்கல்விக்கும் என் இளைய சகோதரினின் கல்வி செலவுக்கும் பயன்படுத்துவேன்.
  யுவராஜ் மோகன்
  உமறுபுலவர் தமிழ்மொழி நிலையம்
  3HT1/3E2

 4. பரிசாக நான் விரும்பும் 5 நாடுகளை 5 வாரங்களில் சுற்றிப் பார்ப்பதை தேர்ந்தெடுப்பேன். ஏனென்றால் நாம் மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். எனக்கு சிறிய வயதில் இருந்தே நிறைய நாடுகளை சுற்றிப் பார்க்க ஆசை உண்டு. இந்த கனவை நான் இந்த வாய்ப்பு மூலமாக நிறைவேற்ற விரும்புகிறேன். நான் மற்ற நாடுகளுக்கு சென்று வேறு மொழிகளையும் கலாச்சாரங்களையும் கற்றுக்கொள்வேன். மேலும், நான் அந்த நாடுகளிலுள்ள கவரும் இடங்களை சுற்றி பார்ப்பேன். அந்த இடங்களில் இருக்கும் மக்களின் பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொள்வேன். இறுதியாக நான் என் நண்பர்களுக்கும் ஒவ்வொரு நாட்டிலிருந்து நினைவுப்பொருள்களை வாங்குவேன்.
  ஹரினி
  உயர்நிலை -1
  தெக் வாய் உயர்நிலைப் பள்ளி

 5. நான் 5 நாடுகளை 5 வாரங்களில் நான் 5 நாடுகளை 5 வாரங்களில் சுற்றிப் பார்க்கலாம் என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பேன். ஆனால், அந்த வாய்ப்பு எனக்கோ அல்லது என் குடும்பத்தினர்களுக்கோ இல்லை. நான் அந்த வாய்ப்பை என் நண்பன் ரகுவிற்குக் கொடுப்பேன். ஏனென்றால் அவன் ஒரு புற்றுநோயாளி. அவன் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தான் உயிர் வாழ்வான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், அவனுடைய பெற்றோர்கள் தங்களுடைய மகன் இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்டான் என்று வருத்தப்படுகிறார்கள். சிறு வயதிலிருந்து உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது ரகுவின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அந்த ஆசையை நான், அவனுக்காக இந்த வாய்ப்பு மூலம் நிறைவேற்ற போகிறேன். என் ஆசை இந்த இரண்டு மாதங்களிலாவது அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான். அவன் எனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளான். இப்போது, அவனுக்கு உதவி செய்வதும் அவனை மகிழ்விப்பதும் என்னுடைய கடமையாகும்.
  அஜய்
  உயர்நிலை -1
  தெக் வாய் உயர்நிலைப் பள்ளி

 6. நான் இந்த நான்கு வாய்ப்புகளில் நான்காம் வாய்ப்பை தேர்ந்தெடுப்பேன். நான் அந்த $25000 பணத்தை எனக்கு பிடித்த 3 நாடுகளுக்கு செல்ல பயன்படுத்துவேன். நான் அந்த மூன்று நாடுகளுக்கும் சென்று வந்ததும் நான் மீதி இருக்கும் பணத்தை வைத்து என் குடும்பத்தினருக்கும் எனக்கும் தேவையான பொருள்களை வாங்குவேன். நான் மீதி இருக்கும் பணத்தை வைத்து அனாதை இல்லங்களுக்கு தானம் செய்வேன். இதனால் அங்கிருக்கும் சிறுவர்கள் அவர்களுக்கு விளையாட்டு பொருள்கள் வாங்கி கொள்ளலாம். நான் செய்த முடிவினால் நானும் என் குடும்பத்தினரும் மற்றும் அந்த ஆசிரமத்தில் இருக்கும் சிறுவர்களும் மகிழச்சியாக இருப்போம் என்று எண்ணுகிறேன்.
  ரஷிகுமார்
  உயர்நிலை -1
  தெக் வாய் உயர்நிலைப் பள்ளி

 7. தான் விரும்பும் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி, மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களையும் $50000 மதிப்புக்கு வாங்குவதை தேர்ந்தெடுப்பேன். நான் $50000 மதிப்புக்கு மின்னணு சாதனங்களை வாங்கிய பிறகு நான் ஒரு கடையை திறப்பேன். அந்த கடையில் நான் வாங்கிய பொருட்களை குறைவாக விற்பேன். நான் குறைவாக கைக்கடிகாரம், கைத்தொலைபேசி, மடிக்கணினியை விற்றப்பின் எனக்கு நிறைய பணம் கிடைக்கும். அந்த பணத்தின் பாதியை நான் முதியோர் இல்லத்திற்கு அனுப்புவேன். அவர்களுடைய சந்தோஷமும் மகிழ்ச்சியும் விலை உயர்ந்தது. அந்த மீதி பணத்தை நான் என் பெற்றோர்களிடம் பெருமையோடு கொடுப்பேன். ‘அம்மா! அப்பா! இந்த பணம் நானே சம்பாதித்தது,’ என் உழைப்பால் என்னால் முதியோர்களுக்கு உதவ முடிந்தது என்று கூறுவேன். அவர்கள் என்னை பெருமையுடன் கட்டி அணைத்தார்கள்.
  தரிஷ்
  உயர்நிலை -1
  தெக் வாய் உயர்நிலைப் பள்ளி

 8. நான் விரும்பும் 5 நாடுகளை 5 வாரங்களில் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். எனக்கு நிறைய நாடுகளுக்கு சென்று சுற்றிப் பார்க்க ஆசை. இந்த ஆசையை இதன் மூலம் நிறைவேற்ற விரும்புகிறேன். அந்த ஐந்து நாடுகள் நான் சுற்றிப் பார்க்க விரும்புவது அமேரிக்கா, தோக்கியோ, பேரிஸ், லண்டன் மற்றும் துபாய்.
  நான் இந்த நாடுகளுக்கு சென்று அவற்றின் பண்பாடு, உணவு வகைகள், விழாக்கள் போன்றவற்றை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் அங்கே செல்வதால் அந்த அனுபவம் என் இதயத்தில் ஓர் ‘நீங்கா’ இடத்தைப் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த அனுபவம் தமிழ் மற்றும் ஆங்கில் உரையாடல் தேர்விற்கு பயன்படும். மேலும் கட்டுரைகளை எழுத துணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு நான் இந்த பயணத்தில் கலந்து கொண்டால் நிறைய மொழிகளை கற்றுக்கொள்வேன். அவற்றை நான் பேச முயற்சி செய்வேன். ஆகையால் என் பெற்றோர்கள் என் புதிய திறமையை கண்டு என்னைப் பாராட்டுவார்கள். அதனால், இந்த திறமையை வளர்த்து கொள்ளவும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன்.
  பிரியங்கா
  உயர்நிலை -1
  தெக் வாய் உயர்நிலைப் பள்ளி

 9. நான் கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில் நான் முதலாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். இதற்குக் காரணம் எனக்கு வெளி நாடுகளுக்கு பயணம் செய்ய ஆசை உண்டு. எனக்கு ஒவ்வொரு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள கலாச்சாரத்தைப் பற்றியும் அந்த நாட்டின் வரலாற்றைப் பற்றியும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. நான் அந்த ஐந்து நாடுகளுக்கும் சென்று வந்த பின் எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்ததுபோல் இருக்கும். நான் அந்த நாட்டைப் பற்றி நிறைய சுவாராசியமான விஷயங்களை நான் தெரிந்துகொள்வேன். அதோடு மட்டுமில்லாமல் நான் தெரிந்துகொண்ட தகவல்களை என்னுடைய குடும்பத்தாருடனும் என்னுடைய நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்வேன். இந்த வாய்ப்பின் மூலம் என்னால் என்னுடைய கனவை நிறைவேற்ற முடிந்தது. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
  ராகவி
  உயர்நிலை -1
  தெக் வாய் உயர்நிலைப் பள்ளி

 10. நான் என் குடும்பத்தினர்களுக்கு தேவையான ஆடை, காலணி, தங்கம் ஆகிய பொருட்களை 5000 வெள்ளிக்குள் வாங்க விரும்புகிறேன். எனக்கு என் குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு நல்லது கெட்டது எல்லாவற்றையும் பார்த்து செய்வார்கள். இதனால் நான் அவர்களுக்கு நிறைய புது பொருட்கள் வாங்கி தர விரும்புகிறேன்.
  ஆனால், 50000 வெள்ளியை வைத்து எவ்வளவு துணி, செருப்பு, தங்கம் வாங்குவது என யோசித்து பார்த்தேன். உலகில் அனைவரும் இவற்றை வாங்கும் நிலையில் இல்லை. நான் ஏதோ அதிர்ஷ்டவசமாக போட்டியில் வெற்றி பெற்றேன். ஆனால், என்னைவிட மிகவும் கஸ்டத்தில் இருக்கும் குடும்பங்கள் பல உள்ளன.
  அதனால், என் அம்மாவிடம் சென்று அந்த பணத்தை கொடுத்தேன். அவர் என் படிப்புக்காக அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டார். மீதி இருக்கும் பணத்தில் ஆடைகள் வாங்கி ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்தேன். சில துணிகளை என் பாட்டியிடம் கொடுத்து இந்தியாவில் இருக்கும் சில பிச்சைக்காரர்களிடம் கொடுக்கச் சொன்னேன். பல பேருக்கு உதவியது மனதிற்கு திருப்தியாக இருக்கிறது.
  வைஷ்ணவி
  உயர்நிலை -1
  தெக் வாய் உயர்நிலைப் பள்ளி

 11. இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். நான் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வென்றது மட்டுமல்லாமல், பரிசாக நான்கு வாய்ப்புகளைத் தந்தார்கள். உடனே என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இருபது நிமிடம் கழித்துத்தான் என்னுடைய முடிவைச் சொன்னேன்.
  அப்பொழுதுதான் புதிதாக வீடு வாங்கிய அப்பாவிற்கு உதவ முடியும் என்று தோன்றியது. அதை எவ்வாறு செய்வது. அப்பாவிடம் ஆலோசனைக் கேட்டகலாம், பின்னர் அதன்படி செய்யலாம் என்று திட்டமிட்டேன். வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் கூறினேன். அப்பாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி, அதனைப் பார்த்தபிறகு என் மகிழ்ச்சி இரண்டு மடங்கு ஆகியது. நான் என் குடும்பத்துடன் சென்று வீட்டிற்கு தேவையான அனைத்து பொருள்களை பார்த்து பார்த்து வாங்கினோம். அன்று நான் அடைந்த மன நிறைவுக்கு ஈடு இணையில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
  நெயோமி
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

 12. நான் பரிசு பெற்றவுடன் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி மடிக்கணினி போன்ற மின்னனு சாதனங்களைப் பெற விரும்பி இரண்டாம் வாய்ப்பையேத் தேர்ந்தெடுத்தேன் ஏனென்றால் இவ்வுலகமே மின்னணு சாதனைப்படைக்க உலகமாக இருக்கிறது. அப்படி இருக்க நான் மட்டும் ஏன் பின்தங்கியே இருக்க வேண்டும். அதனால் நான் மின்னணு பொருட்களைத் தேர்ந்தெடுத்தேன். என் பள்ளியில் இவ்வாண்டு மடிக்கணினி வாங்க சொன்னார்கள். அந்த மடிக்கணினி என்னுடைய உழைப்பில் வாங்கியது என்று நினைக்கும் போது பெருமிதம் கொள்கிறேன்.
  என் பெற்றோருக்கும் நான் பெற்ற பரிசில் என் அம்மாவிற்கு ஆப்பிள் கைக்கடிகாரம் வாங்கினேன். என் அம்மா மகிழ்ச்சியுடன் என்னை அணைத்துக்கொண்டார். அத்துடன் என் அப்பாவிற்கும் ரோலாக்‌ஸ் கைக்கடிகாரம் வாங்கி பரிசளித்தேன். கடைசியாக என் வீட்டில் பத்தாண்டுக்கு முன் வாங்கிய தொலைக்காட்சி பழுதாகும் நிலையில் இருந்தது. அதனால் புதிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் கூறிய மந்திரம் போல் நான் மட்டுமின்றி என் வயதிற்கு ஏற்றாற்போல் என் குடும்பத்தை மகிழ்ச்சியடைய வைத்துள்ளேன். இதே போன்று பிற்காலத்திலும் இவ்வுலகயே மகிழ வைக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
  தரண்
  பொங்கோல் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*