துணிந்து நில், தொடர்ந்து செல்!


இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் கவிதையை எழுதுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கவிதைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதிநாள் – 2 ஆகஸ்ட் 2015. வாழ்த்துகள்!

20 கருத்துரை

 1. துன்பம் வந்த போதிலும்,
  துணிந்து செல்லும் பறவையே
  தடைகள் வந்த போதிலும்,
  தாண்டிச் செல்லும் பறவையே
  கஷ்டம் வந்த போதுமே,
  கைவிடாமல் செல்லுமே
  தன்னைப் பற்றி தெரிந்துமே,
  தன்னம்பிக்கையாய் ஏறுமே
  ஹரேஷ்
  1E1
  யுவான் சிங்க் உயர்நிலை

 2. துணிந்து நில் தொடர்ந்து செல்
  புதிய தலைமுறையின்….. வாத்துக் கூட்டம் கூட முட்டாளாய் இருப்பதில்லை!
  வீழ்ந்தே கிடந்தாள் அவமானம்!
  வீழ்ந்தவன் எழுந்தால் சன்மானம்!
  தடைகளைத் தகர்த்தெறி….!
  நேர்வழி நடந்திடு……!
  புதுச் சிந்தனை மலரட்டும்!
  நம் வாழ்வு வளம் பெறட்டும்!
  Kalimuthu Susmitha (1E2)
  yuan ching secondary school

 3. துணிந்து நில் தொடர்ந்து செல்
  கோழிக் குஞ்சுகள் போலநீ
  குறிக்கோள் கொண்டு வாழவே
  நாளை நமது என்றேநீ
  நடந்து செல்வாய் நண்பனே
  தடைகள் வந்த போதிலும்
  தகர்த்து எறிவாய் தோழனே
  துன்பம் வந்தபோதிலும்
  துணிந்து செல்வாய் தோழனே
  தோல்வி அடையும் போதிலும்
  தொடர்ந்து செல்வாய் தோழனே
  தடைகளை முரித்து குறைகளை
  உடைத்து செல் தோழனே
  இன்று உன் கஷ்ட காலம்
  நாளை உன் இஷ்ட காலம்
  என்று நீயும் முடிவெடு
  எதிர்த்து நில்லு துணிவோடு
  அகினிஷ் (வழக்கநிலை ஒன்று)
  யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி.

 4. பறவையே பறவையே
  எனக்கு வழிகாட்டும் பறவையே
  வழிகாட்டிய நண்பனுக்கு நன்றி சொல்ல என் வாய் ஏங்குகிறது
  எனக்கு வழிகாட்டிய நண்பனுக்கு நன்றி
  எனக்கு தலைவனாக இருந்ததற்கு நன்றி
  நன்றி! நன்றி! நன்றி!
  ஜாய்ஸ் [வழக்கநிலை ஒன்று]
  புக்கிட் வியு உயர்நிலைப் பள்ளி[1E3]

 5. உன்னால் முடியும்
  உன்னால் முடியும்
  எழுந்து நில்
  தைரியமாக செல்
  உன் பாதையின் முட்கள்
  வாழ்கையின் படிகற்கள்
  தைரியமாக இரு
  இது வாழ்கையின் கரு
  ஜனனி
  சுவ சூ காங் உயர்நிலை பள்ளி

 6. வெற்றி பெற்ற மனிதனுக்குப் பின்னால் பல தோல்விகளே உள்ளன. விடாமுயற்சி பிற்காலத்தில் விஷ்வரூப வெற்றியே தரும். அதனால் விடாமல் முயன்று வெற்றியைப் பெறு. உன் குறிக்கோள் வெற்றிப் பெற தனி மனிதனாக நின்று போராடு. உன் வாழ்க்கையை அர்ப்பணி. வெற்றி கையெட்டும் தொலைவில் தான் உள்ளது. கனவு கண்டால் மட்டும் போடாது முயற்சியும் போட வேண்டும்.
  Tharani Selvakumar
  Chua Chu Kang Secondary

 7. இப்பறவையிடமிருந்து கற்றுக்கொள் விடாமுயற்சி,
  பிறகு நீ பெறுவாய் வளர்ச்சி,
  விடாமல் நீ உழை,
  நீ வாழ்வில் செய்யாதே பிழை,
  அனைத்து தடைகளையும் தாண்டிச் செல்,
  வழியில் வரும் வெற்றி களை தட்டி செல்,
  உன் நண்பர்கள் வளரவும் உதவு,
  அதன் பின் நீயோ திறக்க போவது வெற்றி கதவு,
  அதனால் நீ இன்று உன் எண்ணத்தை மாற்று,
  பிற காலத்தில் உன் ஜன்னலில் வீசும் சந்தோஷ காற்று.

 8. சிவ ரஞ்சனா
  காலை வேளையில் வெப்ப நிலை குளிர்
  குஞ்சுகள் சாப்பாட்டுக்காக தேடிப் புறப்பட்டன திடீர்
  காலை நேரத்தில் சூரியனின் உதயம்
  தனக்கு பசியாறவேண்டுமே என்று நினைத்த குஞ்சுகளின் இதயம்
  தேடிச் செல்லும் வழியில் தோன்றும் தடைகள் ஏராளமானவை
  அவைப் பாடுப்பட்டு தாண்டி வருவது குஞ்சுகளின் கடமை
  உன் வாழ்க்கையில் ஏற்படும் தடுப்பு
  அதை நீ மீண்டு வந்தால் நீ செய்யும் ஒரு படைப்பு
  நீ தன்னம்பிக்கையுடன் செயல்படும்போது காணலாம் தோல்வி
  ஆனால் உன்னை ஆதரவுடன் காப்பாள் உன் தோழி
  இருந்தாலும் உனக்கு உதவிக்கிட்டும் என வெறுமனே இருந்திடாதே
  நீயும் தனியாக முயற்சி செய்
  உன் வாழ்க்கை பாதயில் தோன்றும் முட்களை உடைத்தெரி
  அதிலிருந்து கிடைக்கும் ருசியான கனியைப் பறி
  அதைக் கொண்டு உன் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்துவதே சரி
  சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 9. பறவையே பறவையே
  அழகிய பறவையே
  என்னை உயரத்துக்கு செல்ல வைத்த பறவையே
  நீ இல்லாமல் நான் இல்லை
  எனக்கு தலைவனாக இருந்ததற்கு மிக்க நன்றி
  நன்றி நன்றி நன்றி!!!
  Muhammad Naim
  Bukit View Secondary School

 10. பறவையே பறவையே
  எனக்கு மிகவும் பிடிக்கும் பறவையே
  என்னை நன்றாக கவனித்த பறவையே
  இதனால்தான் நான் பறந்தேன்
  என் அன்புள்ள பறவையே
  இதனால்தான் இந்த கவிதையை எழுதுகிறேன்
  நன்றி நன்றி பறவையே!
  மித்ரன்
  புகிட் வியூ உயர்நிலைப்பள்ளி

 11. பறவைகள் மெல்ல மெல்ல பறக்கிரதே
  உயரம் செல்ல செல்ல துடிக்கிரதே
  என்னை உயரத்துக்கு செல்ல வைத்த பறவையே
  என்னக்கு தலைவனாக இருந்தற்கு
  மிக்க நன்றி
  நன்றி,நன்றி,நன்றி!
  மனிஷ்
  1e2

 12. ஒரு பழைய போர்வீரனை போல் உண்மையானவன் நீ.
  நீ என்னை நம்பல்லாம், நான் உன்னை நம்புவதுப் போல்.
  ஒரு அமைப்புக்கு அல்லது காரியத்திற்கு ஆதரவாளரான
  நீ, என்னை கைவிடுவதில்லை.
  நமது ஆன்மா மரணம் அடையும் வரை
  நமது நட்பின் இழை அறுவதில்லை.
  நீ எப்போதுமே என் நண்பனாக இருப்பாய்.
  ப்ரித்தா
  1E2
  புக்கிட் வியூ உயர்நிலை பள்ளி

 13. என்னை பெற்ற தந்தை தாய்க்கு
  நான் ஊன்றுகோலாய் நான்
  இருப்பேன்
  முகுந்தன்
  புகிட் வியூ உயர்நிலைப்பள்ளி

 14. குளிர் நிறைந்த கடினமான நாளில்
  ஓர் முன்னோர்கள் வழி காட்டியதுபோல்
  ஒரு சகோதரராக ஒரு சகோதரியாக்க
  உங்கள் அறிவின் வழியாக நீங்கள் வெளிச்சமூட்டினீர்கள்
  ஒரு காலத்தில் நாம் பகிர்ந்து கொண்ட அச்சங்களை
  எதிர் கொள்ள நமக்கு தைரியமில்லை
  இப்போது வழிகாட்டிவிட்டாய்
  ஒவ்வொரு நாளும் உனக்கு நன்றி சொல்கிறேன்
  எதாவது ஒரு நாள் நீ தோற்றாலும்
  அப்போதும் நான் உனக்கு நன்றி சொல்வேன்
  மீனா
  1E2
  புக்கிட் வியூ உயர்நிலை பள்ளி

 15. கவிதை
  தலைவா! தலைவா!
  நீ எங்குச் சென்றாய்?
  உனக்காக நானும்… எனக்காக நீயும்…
  தனித்தன்மை இழக்காத நம் நட்பு ஆழமானது
  இப்போது நீ எங்கு சென்றாய்?
  நான் உன்னை எங்குச் சென்று தேடுவேன்?
  காலையும் பகலுமாக உன்னை கன்டுப் பிடிக்க முயற்ச்சி செய்தும்
  உன்னை என்னால் கண்டுப் பிடிக்க முடியவில்லையே
  நீ எங்குச் சென்றாய்?
  சாருலதா
  புகிட் வியூவ் செகண்டரி ஸ்கூல்

 16. ஒரு இரவு பகலானபோது
  எந்த நம்பிக்கை வெளிச்சமும் கிடைக்கவில்லை
  அன்று நீ என் பாதயை கடந்தபோது
  ஒரு தலைமை எங்களுக்கு கிடைத்த்து
  இப்போது நான் என் நன்றியை கூறுகிறேன்
  நீ எங்களுக்கு செய்த எல்லாவற்றுகும்
  முதலிருந்து இறுதிவறை
  மாலையிலிறுந்து பகவறை
  நீ எனக்கு செய்தவற்றை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.
  நன்றி
  நந்திதா
  Bukit view secondary school

 17. துணிந்து நில் தொடர்ந்து செல்
  துணிந்து நில்
  துயரம் ஒளியும்
  தொடர்ந்து செல்
  தடைகள் மறையும்
  யானைக்கு தும்பிக்கை
  உனக்கு நம்பிக்கை
  சிகரம் தொடுவாய்
  அதிசயம் செய்வாய்
  நிமிர்ந்து நில்
  பெரிய மலையை தாண்டுவதுக்கூட
  ஒரு சிறு பள்ளத்தை தாண்டுவது போல் இருக்கும்
  வெற்றி நிச்சயம்
  நீ தொட்ட காரியம்
  Rifayah Jumana
  Tanjong Katong Girls School

 18. தலைவா! தலைவா! எங்கள் தலைவா!
  நீங்கள் இல்லாமல் நாங்கள் உயிறோடு இருப்பதை பற்றி கற்பனையே
  செய்ய இயலாது ஐயா! நீங்கள்தான் எங்கள் தெய்வம் எங்கள் உதாரணம்.
  உங்களின் வழிக்காட்டு எங்களுக்கு மிகவும் முக்கியம் மற்றும் அவசியம்!
  உங்கள் உதவிக் கரனால்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம்!
  எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் நீங்களே எங்களுக்கு தலைவராக
  இருக்கவேண்டும் என நாங்கள் வேண்டுமென இறைவனிடம்
  வேண்டிக்கொல்வோம்.- சுவாத்தி புகிட் வியூ உயர்நிலைப்பள்ளி 1E1 (11)

 19. ஆயிரம் கரங்கள் உண்டு!
  இளைஞனே! இளைஞனே! வா! வா!
  எதற்கும் அஞ்சாத இளைஞனே வா!
  நம் நாட்டைப் பிற்காலத்தில்
  கட்டிக்காக்கும் இளைஞனே வா!
  எக்காலத்திலும்
  ஏழையின் கண்ணீரைத் துடைக்க வா!
  தீமைகள் நடந்தால் தடுக்க வா!
  தீய விஷயங்களை அழிக்க வா!
  பொய்யைத் தீயில் பொசுக்க வா!
  பிறருக்கு எடுத்துக்காட்டாக வா!
  உன் பெற்றோர்க்குப்
  பெருமையைக் கொண்டு வா!
  உன்னைச் சுற்றியுள்ளோர்க்கு
  உவகையைக் கொண்டு வா!
  சாதனைகள் படைக்க வா!
  சரித்திரம் புகழ வா!
  ஆயிரம் கரங்கள் உன்னை
  ஆராதிக்க இருக்கின்றன!
  ஆதலால் துணிந்து வா!
  அனைத்திலும் நீயே
  சகலகலா வல்லவனாக வா! வா!
  அஸ்வின்
  உயர்நிலை 4
  பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி
  தமிழ் மொழி நிலையம்

 20. கண்ணாடி பிம்பம்
  நட்பு-
  அது அன்பால் விளைவது!
  உண்மை உள்ளங்களில் உறவாகி மலர்வது!
  புனித நதியில் நீராடிப்
  பூத்துக் குலுங்கும் மலர் அது!
  நன்மை எதிர்பார்க்காது
  நெருங்கிப் பொழியும் மழை அது!
  பள்ளிப் பருவம்தனில்
  பரவித் தழுவும் தென்றல் அது!
  நட்பு-
  தன்னைத் தவிர உலகத்தில்
  நல்லது இல்லை எனச்சொல்லும்!
  கண்ணாடி பிம்பம் போன்று
  கையை காலை அது ஆட்டும்!
  சிரித்தால் சிரிக்கும்
  அழுதால் அழும்!
  ஆறுதல் மொழிகளால்
  அணைத்து அடைகாக்கும்!
  துன்பம் தலைகாட்டும்போதெல்லாம்
  அன்புக் கரங்களால் தாலாட்டும்!
  நட்பு-
  பெரும் வெள்ளத்தாலும்
  அடித்துச் செல்ல முடியாத ‘கல்லணை’!
  பெற்றோர் வாங்கித் தராத
  பெரிய தலையணை!
  பெயர்: ஆயிஷா
  உயர்நிலை 4
  பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி

Your email address will not be published.


*