தீபாவளி என்றால் …

தீபாவளி என்றால் புத்தாடைகள், பலகாரங்கள், மத்தாப்பு, பட்டாசு, நண்பர்கள்+உறவினர்கள் சந்திப்பு என ஒரே கொண்டாட்டம்தான். உங்கள் தீபாவளி தயாரிப்பு, கொண்டாட்டம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்.

கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.

தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன.

சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 18 நவம்பர் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!

*

5 கருத்துரை

 1. தீபாவளி என்றாலே ஒலியும் ஒளியும்தான்.தீபத்தின் ஒளி தீய சக்திகளை அகற்றிவிடும் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்தது தீபாவளி.இந்த திருநாளை முன்னிட்டு,எல்லோரும் வீட்டை சுத்தம் செய்து பலவிதமான பலகாரங்கள் செய்வார்கள்.மேலும்,புதுப்புது ஆடைகளும் பட்டாசுகளும் வாங்கி மகிழ்வார்கள்.நிறைய தமிழர்கள் எதிர்பார்ப்பது இந்த நாளுக்குத்தான்.

  தீபாவளி அன்று,நாங்கள் எல்லோரும் இறைவனை முதலில் வணங்குவோம்.பிறகு ,தலையில் நல்லெண்ணை வைத்து குளிப்போம்.அதன்பிறகு புதிய ஆடைகள் அணிந்து மகிழ்வோம்.என் அப்பா வேஷ்டி சட்டையிலும்,என் அம்மா புடவையிலும் என் தங்கையும் நானும் பாவடை சட்டையிலும் ஜொலித்து இருப்போம்.

  மதியத்தில், என் அம்மா எழுந்து சமைத்த கரியையும் சாதத்தையும் உணவை காணாத பிள்ளைகள்போல் சாப்பிடுவோம். அம்மாவின் சமையல் என்ன ஒரு சுவை! வயிரில் இடமே இல்லாதபோதும் நாங்கள் பலகாரங்களை சுவைத்தோம்.திபாவளி அன்று இனிப்பும் காரமும் சாப்பிடுவது நிறைய வீடுகளில் ஒரு வழக்கம்.

  மாலை வந்ததும், நான் சில பலகாரங்களை எடுத்துக்கொண்டு என் தோழியின் வீட்டிற்கு செல்வென். சில சமயம் அவளும் என் வீட்டிற்கு வருவாள்.நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மத்தாப்பு கொழுத்தி விளையாடுவோம். சில சமயம், தீபாவளியின்போது இருப்பென். அங்கே இருக்கும்போது வக வகையான பட்டாசுகளும் வானவேடிக்கையும் பார்த்து மகிழ்வேன்.

  இந்த வருடம், நான் தீபாவளிக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். கடந்த மூன்று வருடமாக என் குடும்பத்தினர் யாராவது இறந்துவிட்டதால், எங்களால் தீபாவளியை முழுமையாக கொண்டாட முடியவில்லை. இந்த வருடம்தான் கொடண்டாட முடியும். நிறைய புது ஆடைகளும் பட்டாசுகளும் வாங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த தீபாவளி நன்றாக அமையும் என்று நம்புகிறேன்.

  SRIVARSHINI
  Greenridge Secondary School
  Secondary 3 Express

 2. தீபாவளி என்றாலே கொண்டாட்டம். இந்தியர்களால் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகள் நிறைந்த ஒன்றாக இருக்கும். இந்தநாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசுவெடித்து, அந்த தினத்தை கோலாகலமாககொண்டாடுவார்கள். அதிலும் தீபாவளி அன்று வீட்டிற்குவிருந்தினர் பலர் வருகை தந்து, குடும்பத்தோடுசந்தோசமாக கொண்டாடுவார்கள்.

  ‘தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’ என்றால் வரிசை. இந்தநாளில் தமிழர்கள் விளக்குகளை வீட்டில் வரிசைவரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும்வீட்டை பரிகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறுசெய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம்,கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவிடவேண்டும் என்பதையும் குறிக்கும். அதனால் தான் இதற்குதீபாவளி என்ற பெயர் வந்த்து.
  அனைவரும் தீபாவளிக்காக ஒரு மாதம் முன்பிலிருந்துஏற்பாடுகளை தொடங்கிவிடுவார்கள். இந்துகள் புதிய ஆடைகள் வாங்கி, வீடுகளை சுத்தம் செய்து, மாலைகளால் அலங்கரிப்பன. வீட்டு வாசலில் கோலங்களையும் போடுவர். அதே நேரத்தில் சந்தைகள், குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள தேக்கா சந்தை, தீபாவளி நேரத்தில் வண்ணவிளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்படும்.
  தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் பாரம்பரிய உடைகளை அணிவர். அன்று இனிப்புகள் செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி திருநாளன்று பட்டாசு, மத்தாப்பு கொளுத்துவதும் மக்களின் வாடிக்கை.

  இப்படி கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் என் தோழி மூழமாகதான் எனக்கு தெரிய வந்தது. என் தோழி எப்போழுதும் தீபாவளிக்கு மறக்காமல் என்னை அவள் வீட்டிற்கு அழைத்துவிடுவாள். நான் காலையிலே அவ்கே போய்விடுவதால் அவளுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பற்றி அறிந்து கொண்டேன்.

  தீபாவளி பண்டிகை முழு நாட்டின் பண்டிகையாகும். இந்த திருவிழா ஆடல் பாடல் இருக்கும் ஒரு நிகழ்ச்சியாக மற்றும் இல்லாமல் மக்கள் மத்தியில் ஒருமித்த உணர்வை உருவாக்குகிறது. இது ஒற்றுமைக்கான சின்னமாகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி இன்றும் மக்களால் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.

  NUR FARHANA
  Greenridge Secondary School
  Secondary 3 Express

 3. தீபாவளி என்றால் புத்தாடைகள், பலகாரங்கள், மத்தாப்பு,பட்டாசு,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பு என ஓரே கொண்டாட்டம் தான்.தீபாவளி என்பது இல்லாம் தமிழர்கள் எதிர்பார்பதாகும்.அது வரும்போது இல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்.அந்த மகிழ்ச்சி நாம் தீபாவளியே எப்படி கொண்டாடுவோம் என்று பொருத்து இருக்கு.

  முதலில் நான் அதிகாலையில் எழுந்து என் உடம்பு முழவதும் எண்னை தெய்த்துவுடுவேன்.அதன் பின் ஒரு அறை மணி நேரம் களிட்டு நான் குளிக்க செல்வேன்.குளித்த பின் நான் என் புதிய ஆடைகளே அணிவேன்.

  அதுத்து நான் என் குடும்பத்துடன் கோயில்லுக்கு செல்வேன், அங்கே நன்றாக கும்டுவிட்டு விடு திரும்புவோம்.வீட்டிற்க்கு வந்தவுடன் என் வீட்டிற்க்கு சில உறவினர்கள் வருவார்கள்.அவர்களுடன் நன்றாக பேசிக் கொண்டு என் நேரத்தே செலவிடுவேன்.என்னுடைய சித்தப்பாவின் மகன்கள்ளுடன் விளையாடுவேன்.அதன் பின் பட்டாசுகளை வேடிப்போம்.

  பிறகு சில நேரத்துக்கு ஓய்வு எடுப்பேன். இரவு ஆரம்பிக்கும்போது நான் என் சித்தப்பா வீட்டிற்க்கு சென்று விளையாடுவேன்.

  இல்லோரும் நன்றாக தீபாவளி கொண்டாடிவர்கள் என்று நம்புகிறேன்.

  Gokul
  Greenridge Secondary School
  Secondary 3EX
  P

 4. தீபாவளி. தீபத்திருநாள் என்பதும் இவ்விழாவிற்கு மற்றொரு பெயர். தீபாவளி என்பது நமக்கெல்லாம் விளக்குகள் மட்டும் ஏற்றி வைக்கும் நாளள்ள; நம் பந்தங்களுடன் சேர்ந்து, உறவுகளை புதுப்பித்து, பலகாரங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து, பிரச்சினைகளை மறந்து மத்தாப்பை ஏற்றி கொண்டாடும் நாள். தீபாவளியன்று காலையில் எண்ணை குளியல் குளித்து, கோயில் சென்று வந்து, பிறகு மதியம் சிறப்பு தீபாவளி பிரியாணியை சாப்பிட்டு, சந்தோஷமாக படம் பார்க்கும் அனுபவத்திற்காக ஆண்டு முழுவதும் நாம் காத்தருக்கிறோம் தீபாவளிக்காக. அவ்வளவு சிறப்பு வாய்ந்தது இந்த தீபாவளித் திருநாள்.

  எனக்கு இவ்வருட தீபாவளி மிகவும் விமர்சையாக நடந்தேரியது. இவ்வருடம் நான் என் வீட்டின் தீபாவளி கொண்டாட்டத்திற்கான தயாரிப்பில் பெரும் பங்கு வகித்தேன். என்னிடம் தீபாவளி தயாரிப்பிற்கு தேவையான பொருள்களை வாங்கி வரும் பொறுப்பு தரப்பட்டது. அப்பணியை மேற்கொள்ளும்பொழுது ஏற்பட்டது ஒரு கேளிக்கையான சம்பவம்.

  நான் தீபாவளி பலகாரங்கள் செய்ய தேவைப்படும் உணவுப் பொருள்களை வாங்க குட்டி இந்தியாவிற்கு சென்றிறுந்தேன். அதே நேரத்தில் எனக்கு தேவையான பட்டாசை என் அப்பா வாங்கி வரச் சோன்னார். நான் முதலில் பட்டாசை வாங்க கேம்பல் லேன் சென்றபோது என் நண்பனைப் பார்த்தேன். அவனும் பட்டாசு வாங்க தான் வந்திருந்தான். நாங்களிருவரும் எங்களுக்கு பிடித்த மத்தாப்பை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றோம். வீட்டை சென்றடைந்ததும் என் ஆம்மாவிடம் நான் வாங்கிய பட்டாசை காட்டி மகிழ்ந்தேன். அப்போது அவர்கள் கேட்ட கேள்வி என்னை ஒரு நொடி சிலையாக மாற்றி நிற்க வைத்தது. ‘ எங்கடா பலகரம் செய்ய தேவையான பொருள்கள்? வாங்கவில்லையா?’ என்று அவர் என்னை கேட்டார். என் கையிலிருந்த பைகளை தரையிலே என் அம்மாவின் முன் போட்டு விட்டு புலியைக் கண்ட மானைப் போல் மறுபடியும் குட்டி இந்தியாவிற்கு ஓடி பலகாரத்திற்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு வந்தேன். இந்த அனுபவம் என்னால் மறக்கமுடியாத ஒரு அனுபவம்.

  தீபவாளி தினத்தை நான் என் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எனது அண்டைவீட்டார் என்று அனைவருடனும் சந்தோஷமாக கொண்டாடினேன். அன்று நான் நிறைய நாள் கழித்து முறுக்கு, கேசரி, அதிரசம் என்று பல பலகாரங்களை சாப்பிட்டேன். நல்ல வேளை, நான் அன்று பலகாரத்திற்கு தேவையான பொருள்களை உடனடியாக வாங்கி வந்தேன். அதை செய்யாதிருந்தால, இவ்வளவு ருசியான பலகாரங்களை என்னால் புசித்திருக்க முடியமா.

  தீபாவளி தினத்தை நாம் அனைவரும் சந்தோஷமாக நமது குடும்பத்துடன் கொண்டாட வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகைகள் மிகவும் குறைவான எண்ணிக்கையிளே இருக்கின்றன. இன்றைய வேகமான உலகத்தில் நாம் அனைவரும் ஒருவரையொவர் பார்த்து, மகழ்ச்சியாக பேசி வாழாமல் தினமும் கணினி திரையைப் பார்த்துக்கொண்டே மன உளைச்சலுடன் வாழ்கிறோம். ஆகயால், நாம் தீபாவளி போன்ற விழா தினங்களை நாம் நம் குடும்பத்தாருடன் சேர்ந்து மகழ்ச்சியாக கொண்டாடி அனுபவிக்க வேண்டும்.

  Muthaiah Keerthivasan
  Bendemeer Secondary School

 5. இந்து ரமேஷ்
  சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி
  Sec 1 HT

  தீபாவளி என்றால் புத்தாடைகள், பலகாரங்கள், மத்தாப்பு, பட்டாசு, நண்பர்கள்+உறவினர்கள் சந்திப்பு என ஒரே கொண்டாட்டம்தான். உங்கள் தீபாவளி தயாரிப்பு, கொண்டாட்டம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்.

  தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பலகாரங்கள், மத்தாப்புகள், புத்தாடைகள் தான். நானும் அப்படித்தான். தீபாவளி நெருங்கினாலே என் வீட்டீல் ஒரே பரபரப்பும் குதூகலமும் தான்.ஆனால், நாம் அனைவரும் கொண்டாடும் இந்த தீப திருநாள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தீபாவளி கொண்டாடப்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று நரகாசுரன் என்ற கொடூர அசுரனின் அழிவு நாளைப் பற்றியது.

  நரகாசுரன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்ததை அறிந்த மகாவிஷ்ணு அவனுக்கு முக்தி தந்து மக்களிடையிலும் தேவர்களிடையிலும் அமைதியைப் பரப்ப எண்ணினார். ஆனால், மகாவிஷ்ணு அசுரர்களை வதைக்க சென்றபோது அவரது ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன் என்பதாலும் தன் தாயைத் தவிர வேறு யார் கையாலும் கொல்லப்பட முடியாத வரம் நரகாசுரனிடம் இருந்ததாலும் மகாவிஷ்ணு நரகாசுரனை வதைக்க திட்டம் ஒன்றைத் தீட்டினார். மகாவிஷ்ணு நரகாசுரனுடன் போரிட்டபோது நரகாசுரன் அவர் மீது தொடுத்த அம்பினால் மயக்கமடைவது போல நடித்தார்.இதைக் கண்டு கோபமடைந்த பூமாதேவியின் அவதாரமான சத்திய பாமா நரகாசுரனைப் போருக்கு அழைத்து நரகாசுரனைக் கொன்றார். சத்தியபாமா பூமாதேவியின் அவதாரம் என்று அவரைப் போருக்கு அழைப்பதற்கு முன் அறியாத நரகாசுரன் இறக்கும் தருவாயில் தன் தாயின் கைகளால் மரணிக்கப் போவதையும் தான் செய்த அனைத்து தவறுகளையும் உணர்ந்து நரகாசுரன் தன் தாயிடம் அவன் மறைந்த அந்த நாளில் தனது பிடியிலிருந்து விடுப்பட்டு தேவர்களும் மக்களும் அந்நாளை ஒளிமயமாக பலகாரங்கள் உண்டு மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டான். பூமாதேவியும் வரத்தை வழங்கிட நரகாசுரன் மரணித்தான்.தீயவனான நரகாசுரன் இறந்த அந்நாளை மக்கள் தீபாவளி என்றழைத்து கோலாகலமாக கொண்டாடினார்கள்.

  தீபாவளியின் பொருள் தீப ஓளி என்பதாகும். இருளும் தீய சக்தியும் விளகி ஒளி வெளிச்சம் பெருகியதால் இத்திருநாளில் வீட்டைத் தீபங்களால் அலங்கரிப்பார்கள். தீப ஒளி இருளையும் தீய சக்தியை நீக்கி நம் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் என்பது ஐதீகம்.என் வீட்டிலோ ஒரு வாரத்துக்கு முன்பிலிருந்தே கொண்டாட்டம் ஆரம்பிக்கும். நானும் என் பெற்றோரும் லிட்டில் இந்தியாவிற்குச் சென்று தீபாவளி ஒளியூட்டும் விழாவில் பங்கெடுப்பதோடு தீபாவளிக்குத் தேவைப்படும் பொருட்களையும் வாங்குவோம். வீட்டைச் சுத்தம் செய்ய நான் என் தாயாருக்கு உதவுவேன்.தீபாவளியன்று நான் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து வயதில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற பிறகு கடவுளை வணங்குவேன். என் தாயார் கடவுளுக்குப் படையல் செய்தப்பிறகு நாங்கள் காலை சிற்றுண்டியாக இட்லியும் இதர பலகாரங்களையும் உண்போம். பின்னர், நானும் எனது குடும்பத்தாரும் இணைந்து எங்களது அண்டைவீட்டாருக்கு நாங்கள் செய்த பலகாரங்களில் சிலவற்றைக் கொடுக்க சென்றோம். ஒவ்வொரு வருடமும் பண்டிகைகள் வரும்போது நாங்களும் எங்கள் அண்டைவீட்டாரும் இணைந்தே கொண்டாடுவோம்.

  சீனப் புத்தாண்டின்போது நான் அவர்கள் வீட்டுக்குச் சென்று கொண்டாட்டங்களில் பங்கெடுத்து அவர்களது கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்வேன்.சீனப் புத்தாண்டின்போது நான் அவர்கள் வீட்டுக்குச் சென்று கொண்டாட்டங்களில் பங்கெடுத்து அவர்களது கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்வேன். அது மட்டுமின்றி, எனது அண்டைவீட்டார் எனக்கு ஆரஞ்சுகளும் ‘hongbao’ என்று அழைக்கப்படும் சிவப்பு பண உறையைத் தருவார். அதே போல், தீபாவளியின்போது நாங்களும் எங்கள் அண்டைவீட்டாரை எங்கள் வீட்டிற்கு அழைத்து பலகாரங்களையும் அளிப்போம். இவ்வருடமும் நாங்கள் அவ்வாறே செய்ய என் அண்டைவீட்டார் ஒரு சேலையை அணிந்து எங்கள் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார். அவர் சேலை அணிந்த விதம் மிகவும் அழகாக இருந்ததாக என் அம்மா மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார். நாங்கள் வீட்டிற்குச் சென்றவுடன் என் அம்மா மதிய உணவிற்கு ஏற்பாடு செய்ய எனது உறவிணர்கள் ஒவ்வொன்றாக வர தொடங்கினார்கள். நான் அவர்களை வரவேற்பேன். அனைவரும் ஒன்றாக என் அம்மா சமைத்த பலவகை உணவுகளை மகிழ்ச்சியோடு உண்போம். எப்போதும் வேலை வேலை என்றே இருக்கும் என் உறவிணர்கள் தீபாவளி போன்ற பண்டிகைகளில் ஒற்றுமையுடன் நேரத்தைச் செலவழிப்பது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாகும். என் பெரியப்பா பிள்ளைகளோடு விளையாடுவேன். மாலை நான்கைந்து மணியளவிற்கு எனது அண்டைவீட்டாரும் நண்பர்களும் எனது வீட்டிற்கு வருவார்கள். நாங்கள் அனைவரும் உரையாடி மகிழ்வோம்.

  பிறகு அனைவரும் இணைந்து மத்தாப்பு கொளுத்தி நேரத்தைச் உவகையுடன் களித்தோம். சிரித்து மகிழ்ந்தவுடன் என் தாயார் என் வீட்டைச் சுற்றி ஒளியூட்டும் தீபங்களைக் கொண்டு அலங்கரித்திருந்த எழில்மிக்க காட்சியை நாங்கள் அனைவரும் கண்டு ரசித்தபடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.இருள் சூழ்ந்த அந்த இரவு வேளையில் நாங்கள் விருந்துணவை ருசித்து உண்டோம். குறிப்பாக எனது சீன நண்பர்கள் உணவை மற்றவர்களை விட அதிகமாக சுவைத்து உண்டார்கள். அனைவரும் உண்டு முடிந்தவுடன் மேலும் சில பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் கொளுத்தி முடித்தவுடன் அனைவரும் விடைபெற்றுக்கொண்டனர்.அன்றைய தீப ஒளி பண்டிகை மிகவும் உவகையான மகிழ்ச்சியளிக்கும் நாளாக அமைந்தது!

Your email address will not be published.


*