
திரைப்படங்கள் என்றால், குறை சொல்லக்கூடியவையாக மட்டுமே இருப்பதில்லை. ஒரு முழுப்படம், அதில் இடம் பெறும் காட்சி, அதில் கேட்ட ஒரு வசனம், அப்படத்தில் வந்த ஏதாவது ஒரு கதாபாத்திரம் உங்களைப் பாதித்து, உங்களை நல்லவிதமாக மாற்றி இருக்கும். அந்த அனுபவத்தை, ஒரு கட்டுரையாக எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 25 அக்டோபர் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
***
ஆகஸ்ட் மாத, வெற்றியாளர்களின் பட்டியல்
படம் : நண்பன்
இந்த படம் என் மனதை கவர்ந்த படத்தில் ஒன்றாகும். நட்பை பற்றியும் கல்வியில் வரும் சில மனஉலைச்சலையும் பற்றி இப்படம் விளக்குகிறது.
அதிகமான மதிப்பெண்கள் வாங்கினால்,பெரிய வேலைக்குச் சென்று சம்பாதித்தால் மட்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்பது கிடையாது. பிடித்த வேலைக்குச் சென்று திறமையாக செய்து திகழ்பவன்தான் வாழ்வில் முன்னேறுவான். இவ்வாறு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பும் தொழிலும் செய்ய ஊக்கம் தர வேண்டும் என்பதுக்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு.
இந்தப் படத்தில் விஐய் ‘எல்லாம் நலம்’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். அது எனக்கு மிகவும் பிடித்த வசனமாகும்.
Sanjana
Woodlands secondary school
நான் பார்த்து ரசித்த படம்
இந்த வாரம் நானும் என் குடும்பமும் தீபாவளியைக் கொண்டாடினோம். நாங்கள் தீபாவளிக்கு என்ன செய்தோம் தெரியுமா? நாங்கள் தீபாவளியன்று காலையில் எழுந்து நல்லெண்ணெயைத் தலையில் தடவிக்கொண்ட பிறகு குளித்தோம். நாங்கள் பிறகு புதிய தீபாவளி ஆடைகளை அணிந்துகொண்டு சாமியைக் கும்பிட்டோம். என் அம்மா பல வகையான பலகாரங்களைச் செய்திருந்தார். நானும் என் தம்பியும் சாமியைக் கும்பிட்டபின் பலகாரங்களைச் சாப்பிட்டோம். ஒவ்வொரு ஆண்டும் நானும் என் குடுப்பமும் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்ப்போம். இந்த முறையும் நான் என் குடும்பத்துடன் சேர்ந்து வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் பாகுபலி1, பாகுபலி 2 என்ற திரைப்படங்களைப் பார்த்தோம். குறிப்பாக, நானும் என் தம்பியும் இந்தப் படங்களை உற்சாகம் குறையாமல் மிகவும் ஆவலுடன் பார்த்தோம். காரணம் அந்தப் படங்களில் வரும் ஒவ்வொரு காட்சியும் மிகவும் அற்புதமாகவும் பிரமாண்டமாகவும் இருந்தன. அந்தப் படங்களில் கண்ணக் கவரும் இயற்கைக் காட்சிகளும் இருந்தன. அந்தப் படத்தில் உள்ள கட்டடங்கள் பெரிது பெரிதாக இருந்தன. அவற்றில் நடித்த அனைத்து நடிகர்களும் மிக அழகாக நடித்திருந்தனர். அந்த இரண்டு படங்களில் வரும் கதைகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருந்தன. இவற்றில் வேடிக்கை என்னவென்றால் மகனைப் பற்றிய கதையை முதல் பாகமாகவும் அப்பாவைப் பற்றிய கதையை இரண்டாவது பாகமாகவும் படம் பிடித்திருந்தனர். இந்தப் படங்கள் உலக அளவில் பேசப்பட்ட படம் என்றும் அதிக வசுல் பெற்ற படம் என்றும் என் அப்பா கூறினார்.
சம்ப்ரிதி இராமநாதன்
உயர்தமிழ் இரண்டு
ஃபேர் ஃபீல்டு மெத்தடிஸ்ட் உயர்நிலைப்பள்ளி (UPTLC)
படம் : நண்பன்
இந்த படம் என் மனதை கவர்ந்த படத்தில் ஒன்றாகும். நட்பை பற்றியும் கல்வியில் வரும் சில மனஉலைச்சலையும் பற்றி இப்படம் விளக்குகிறது.
அதிகமான மதிப்பெண்கள் வாங்கினால்,பெரிய வேலைக்குச் சென்று சம்பாதித்தால் மட்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்பது கிடையாது. பிடித்த வேலைக்குச் சென்று திறமையாக செய்து திகழ்பவன்தான் வாழ்வில் முன்னேறுவான். இவ்வாறு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பிடித்த படிப்பும் தொழிலும் செய்ய ஊக்கம் தர வேண்டும் என்பதுக்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு.
இந்தப் படத்தில் விஐய் ‘எல்லாம் நலம்’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். அது எனக்கு மிகவும் பிடித்த வசனமாகும்.
Sanjana
Woodlands secondary school
தீபாவளியன்று நான் குடும்பத்துடன் கண்டுகளித்த படம்
சூரியன் தன் கதிர்களால் என்னைத் தட்டி எழுப்பியது. என் தாயார் என்னுடைய தீபாவளி ஆடையையும் தம்பியுடைய தீபாவளி ஆடையையும் சாமியிடம் வைத்துப் பூஜை செய்துகொண்டிருந்தார். அன்று தீபாவளி. மிகவும் மகிழ்ச்சியான ஒருநாள். காலையில் என் குடும்பத்தினர்கள் வந்தார்கள். அனைவரையும் நானும் என் தம்பியும் பல பலகாரங்களை வழங்கி உபசரித்தோம். அன்று என் தந்தை யாருக்கும் தெரியாமல் தீபாவளிக்கு வந்த புத்தம் புதிய படம் ‘மெர்சல்’ என்ற படத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார். நானும் என் தம்பியும் எங்கள் உறவினர்களோடு குதுகலமாகத் தீபாவளியைக் கொண்டாடினோம். பட்டாசு, பலகாரங்கள், உறவினர்கள் என இந்த ஆண்டு அட்டகாசமான தீபாவளியைக் கண்டேன். மாலையில் என் தந்தை எங்கள் அனைவரையும் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகவும் உடனே கிளம்பும்படிக் கூறினார். எனவே, நானும் எங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் கோவிலுக்குத் தயாரானோம். ஆனால், என் தந்தை எங்களை ‘மெர்சல்’ திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சியளித்தார். அப்போதுதான் அவர் எனக்குப் பிடித்த இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு டிக்கெட் வாங்கியுள்ளார் என்பது தெரியும். நாங்கள் அனைவரும் திரைப்படம் பார்த்தோம். திரைப்படத்தில் எனக்குப் பிடித்தவை கதை, வசனம், சண்டைக் காட்சிகள்தான். இதில் அடித்தட்டு மக்கள் முதல் அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் வரை அனைவருக்கும் சமமான மருத்துவம், கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கதை அமைக்கப்பட்டிருந்தது. மேலும், அவ்வப்பபோது பஞ்ச் வசனங்களும் இடம்பெற்றிருந்தது. சண்டைக் காட்சிகள் அனைத்தும் விஜய் நடித்த மற்ற படங்களைக் காட்டிலும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தன. இப்படம் பார்த்து வந்த நானும் என் உறவினர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தோம். உண்மையில் நான் என் வாழ்க்கையில் இதுவரை கொண்டாடிய தீபாவளியிலேயே மிகவும் அற்புதமான, அட்டகாசமான தீபாவளியாகும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!.
வெங்கடேஷ் பிரபு பிரித்திகா
உயர்தமிழ் இரண்டு
ஃபேர் ஃபீல்டு மெத்தடிஸ்ட் உயர்நிலைப்பள்ளி (UPTLC)
படம் : BEFORE I FALL எனும் ஆங்கில திரைப்படம்.
என்னை அதிகம் பாதித்த திரைப்படம் இது.
முதலில் இதன் கதைசுருக்கத்தை கூறிவிடுகிறேன்.திரைப்படம் அன்பர்கள் தினத்தன்று நடைபெறும் நிகழ்வுகளை சொல்வதாக தொடங்குகிறது.படத்தின் கதாநாயகி தன் நண்பர்களுடன் ஒரு கார்விபத்தில் சிக்கிக்கொள்கிறாள்.சரியாக கார் மோதும் சமயத்தில் அவள் நினைவுகள் கரும்திரையாக மாறுகிறது.அடுத்த காட்சியில் அவள் காலையில் எழுவதுபோல் இருக்கும்.
கதாநாயகி அடுத்த நாள் என்று நினைத்தால்,விபத்து நடந்த அன்றைய தினமே மீண்டும் தொடங்கும்.முந்திய நாள் நிகழ்வுகளே மீண்டும் நடந்து விபத்தில் சென்று முடிகிறது.
ஒரு கால வலையில் சிக்கிக் கொண்ட கதாநாயகி மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகி,அதிலிருந்து மீள வழி தெரியாமல் ஒவ்வொரு நாளும் அவளது நடவடிக்கைகளை மாற்றி செய்து பார்க்கிறாள்.
அப்போதும் தனது இயல்பு நிலைக்கு மாற முடியாமல் , விரக்தியில் எல்லா தீய செயல்களையும் செய்கிறாள்.அப்போதும் தீர்வு கிடைக்காமல் போகவே,நல்ல விஷயங்களை செய்கிறாள்.
ஆனால் ஆபத்திலிருந்து எப்படி தப்புவது என்று தெரிந்து கொண்டு அவளது தோழி ஒருத்தியை உயிரை விபத்திலிருந்து காப்பாற்றி, அக்கால வலையை உடைத்து வெளிவருகிறாள்.
என்னை பல வழிகளில் யோசிக்க வைத்த திரைப்படம் இது.ஒரு விஷயத்தை பல மாற்று வழிகளில் எப்படி சிந்திப்பது என்பதை இப்படம் எனக்கு சொல்லியது.எனது கண்ணோட்டத்தையும் மாற்றியதோடு, மாற்று சிந்தனையையும் கொண்டு வந்தது.ஒரு நாளில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளே பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.அவ்வகையில் என் மனதை விட்டு அகலாத திரைப்படம் இப்படம்.
SWETHA SENTHILKUMAR
CEDAR GIRLS SECONDARY SCHOOL