தாயின் அன்பு

இந்த ஓவியத்தில், ஒரு தாய் தன்னுடைய குழந்தையைத் தோளில் சுமக்கிறார். நம் வாழ்க்கையில் தாய் எவ்வளவு முக்கியமானவர் என்பது உங்களுக்குத் தெரியும். அந்தத் தாயைப் பற்றி ஒரு கவிதை எழுதி இங்கே பகிருங்கள்.
உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
அவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 மார்ச் 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

10 கருத்துரை

 1. தன்னை மறந்தது தாய் அன்பு
  தரணியில் சிறந்தது தாய் அன்பு
  தேனினும் இனியது தாய் அன்பு
  வானினும் உயர்ந்தது தாய் அன்பு
  கனகமுத்தமிடும் அருமைத் தாய் அன்பு
  காலத்தால் மாறாத தாய் அன்பு
  கனிவிரக்கம் கொண்டது தாய் அன்பு
  பணிவிடை செய்வது தாய் அன்பு
  பூவினும் மென்மை தாய் அன்பு
  அதைப் புரிந்து நடப்பதே நற்பண்பு

  சீ.சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

 2. தாயின் அன்பு
  உயிரை ஈன்றெடுக்கும் சுமைதாங்கி அவள்
  தன் உடலின் உதிரத்தை பாலாக்கி ஊட்டியவளவள்
  அன்பு, அக்கறை, அரவணைப்பு என்ற உணர்வுகளால் நிரம்பப்பட்டவளவள்
  எவருக்கும் ஈடுயிணையில்லாதவள், தாயவள்!
  துன்பங்கள் வரும் வேளையில்
  அவளது மடியே சொர்க்கம்!
  அனைத்து குற்றங்களையும் மன்னித்து மறந்து
  அன்பால் தண்டிக்கும் நீதிமன்றம், தாயின் மனம்
  தோல்விகளை வேரறுக்கும் தைரியம் கொடுத்தவள்!
  வெற்றியின் சுவையை சுவைக்கச் செய்தவள்!
  தன் வாழ்க்கையையே தியாகம் செய்பவள்!
  இவ்வுலகில் வாழும் கடவுள் அவள்! அம்மா!
  C.Nishikanth (4C)
  Teck Whye Secondary School

 3. அன்னை என்ற சொல்லே அன்பு எனும்
  மகாசக்தியின் பிறப்பிடமாம்
  அகிலமே இவளின்றி அணுவும்
  அசையா சொப்பனமாம்
  கருவறையில் உறங்கும் தன் மழலை
  முகம் பார்க்க அரும் தவம்
  புரியும் இவள் இரு விழியும்
  பிள்ளையின் பிஞ்சுப் பொன்விரல் தீண்ட
  உள்ளம் கூத்தாட காத்திருக்கும் இவள் இதயம்!

  Lavinn(4D)
  Teck Whye Secondary School

 4. கடவுளுக்கு ஈடானவள் அன்னை
  முழுதாக தியாகம் செய்வாள் தன்னை
  என்றும் விட்டுக்கொடுக்கமாட்டால் உன்னை
  பிறந்ததும் கொடுப்பாள் தாய்ப்பால்
  வயதான பிறகும் உன்னையே நினைப்பாள்
  எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வாள்
  சிறு காயம் பட்டால் கூட பதறுவாள்
  உன்னை ஒரு நாள் வந்து சேருமே புகழ்ச்சி
  அது உனக்கு வெறும் மகிழ்ச்சி
  ஆனால் “என் பிள்ளை என் பிள்ளை”
  என்று பெருமைப்பட அவளை தவிர
  வேறு யாரும் இல்லை இல்லை
  Azmina Banu
  Serangoon Junior college

 5. கறுப்பு வெள்ளை …
  கறுப்பினத்துக் குழந்தையை
  வெள்ளைக்காரி ஒருத்தி
  கட்டி அணைத்து
  அக்கறுமையான தோளில்
  வெள்ளைப் பூசினாள்.
  பிஞ்சு விரல்களைப் பற்றி
  ஒன்றா உள்ளங்களுக்கிடையே
  பாலம் அமைத்தாள்.
  கறு விழியைச் சூழ்ந்த வெண்படலத்தில்
  தன்னைக் கண்டாள்.
  ஊர் தூற்றிய மலடி அன்று தாயானாள் …
  ராஜேந்திரன் ராஜேஷ்
  விக்டோரியா தொடக்கக்கல்லூரி

 6. தாயின் அன்பு
  உயிரும் மெய்யும் தந்து என்றும்
  என் ஆயுதமாக இருக்கும்
  என் தாயின் அன்பு- அதுவே
  அமைதியான அன்பு
  அதிசயமான அன்பு
  இணையில்லா அன்பு
  ஈடில்லா அன்பு ..ஆம்
  அதுவே என் தாயின் அன்பு
  தரணியில் தடைகற்கள் கடந்து நிற்க
  வழிகாட்டும் அன்பு!!!
  தன்நிகரில்லா அன்பு,
  என் தாயின் அன்பு!
  தட்டிக் கொடுத்து தவற்றை திருத்தும் அன்பு
  என் தாயின் அன்பு!!!
  என் தாகம் தீர்க்கும் தண்ணீர்
  என் தாயின் அன்பு!!!
  என் தாயின் அன்பு-அது
  ஆத்மார்த்தமான அன்பு
  அதற்கு இணை அதுவே
  அதற்கு ஈடு ஏதாகிலும் உண்டோ?
  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலை பள்ளி

 7. தன் குழந்தையை பற்றியே இருவத்தி நான்கு மணி நேரமும் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு தாயின் அன்பு ஈடுஇணையற்றதாகும்
  அதை பெறும்போது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் புணீதம் அடைகிறது.
  தன் பிள்ளைகளை எக்காரணத்துக்கும் மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காமல் இருப்பதே தாய்மையாகும்
  ஒரு பெண் கெட்ட மகளாக இருக்கலாம், கெட்ட சகோதிரியாக இருக்கலாம் ஆனால் என்றுமே ஒரு கெட்ட தாய்யாக மாட்டாள்
  நம்மை தன் வயிற்றில் பத்து மாதத்திற்கு தன் க௸தத்தை கூட பொருட்படுத்தாமல் சுமந்த அவருக்கு என்ன செய்தாலும் சமம்மாகாது
  அதனால் நம் அன்னையை எப்போதுமே நம்முடைய நற்குணத்தின் மூலமும் சிறப்பாக தேர்ச்சி பெறுவதின் மூலமும் பெறுமையாகவும் ஆணந்தத்துடனும் வைத்துக்கொள்ளவேண்டும்
  சுவாத்தி
  Bukit View secondary school

 8. உன் அன்பால் பிறந்தவள்.
  உன் முகம்பார்த்து வளர்ந்தவள்.
  உன் மடியில் தவழ்ந்தவள்.
  உன் இமைகளில் வளர்ந்தவள்.
  உன் உறவில் கலந்தவள்.
  உன் உயிரில் இருப்பவள்.
  உன் உறவிற்கு அர்த்தம் நான்.
  என் அன்பிற்கு இலக்கணம் நீ.
  நான் உறங்கும் வரை நீ விழித்திருப்பாய்.
  நான் எழுந்திருக்கும் போது நீ விழித்திருப்பாய்.
  தாய் என்பவள் உறவுக்கு மட்டும் அல்ல.
  அதற்கும் மேல் என்று நிருபித்துவிட்டாய்.
  பாசமும் அன்பும் இதற்கு ஆதாரம்.

  சுஹைனா மின்ஹாஜ்,
  யுவான் சிங் உயர்நிலை பள்ளி

 9. அம்மா,
  நீ என் முன்னே இருந்தால்
  எனக்கு மகிழ்ச்சி வருகிறது
  நீ என் முன்னே இல்லாவிட்டால்
  எனக்கு துன்பம் வருகிறது
  நீ என் முன்னே இருந்தால்
  வேம்பும் எனக்கு இனிக்கிறது
  நீ என் முன் இல்லாவிட்டால்
  தேனும் எனக்கு கசக்கிறது
  உன்னை பார்க்கும் போது
  வாழ பிடிக்கிறது எனக்கு
  உன்னை பார்க்காத போது
  வாழவே பிடிக்கவில்லை எனக்கு
  அம்மா உன் அன்பு தான் இதுக்கு காரணம்!
  அதற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை!
  கருவறையின் இருட்டில் இருந்த என்னை
  வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவள் என் தாய்!
  நான் பிறக்கும் போது என்னோடு
  மறுஜென்மம் எடுத்து பிறந்தவள் என் தாய்!
  நான் கேட்காமலே கடவுள் தந்த வரம் என் தாய்!
  நான் கேட்டால் உயிரைக் கூட தருவாள் என் தாய்!
  என் தாயின் மறுஉருவம் நான்!
  என் மூலம் அவள் சிரிப்பாள்
  என் வழியாக அவள் அழுவாள்
  என்னோடு சேர்ந்து சாதிப்பாள், அப்படி
  என்னுள் கலந்தவள் என் தாய்!
  அவள் சாதிக்கப் பிறந்தவள்!
  நிவேதிதா
  ஜூராங் உயர்நிலைப் பள்ளி

 10. மூன்று எழுத்து கவிதை சொல்ல சொன்னால்
  நான் அம்மா என்பேன்!
  யோசித்து வாழ
  ஆயிரம் உறவுகள் இருக்கலாம்
  ஆனால், நேசித்து வாழ
  ஒரு உயிர் போதும்
  உன்னை போலவே, அம்மா!
  அன்று என் தொப்புள் கொடியை அறுத்தது
  நம் உறவை பிரிக்க அல்ல
  நம் பாசத்தின் தொடக்கத்திற்கு
  வெட்டப்பட்ட ரிப்பன்!
  ஆண்டவரால் எல்லா இடத்திலும் இருக்கமுடியவில்லை
  அதனால் அவர் அம்மாவைப் படைத்தார்!
  நான் பார்த்த முதல் தெய்வம்
  நீதானே அம்மா!
  என் தேவையை பூர்த்தி செய்ய
  உன் ஆசைகளை விட்டு கொடுத்தவள் அம்மா!
  தவறு செய்தால் தண்டிக்காமல்
  கண்டித்து மன்னிப்பவள் அம்மா!
  என் சிரிப்பில்
  உன் கவலையை மறந்தவள்
  நீதானே அம்மா!
  Antozesslyn

Your email address will not be published.


*