தமிழ்மொழி விழா 2017

ஏப்ரல் மாதம் முழுக்கத் தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் நம் நாடு முழுக்க நடைபெறுகிறது. எல்லாத் தரப்பினரையும் சென்றடைய எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள். நீங்களும் நிச்சயம் அவற்றுள் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அப்படிக் கலந்து கொண்ட அனுபவத்தைக் கட்டுரையாக எழுதி இங்கே பகிருங்கள்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.
தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 3 மே 2017. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்!
****
மார்ச் 2017 கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்


 

7 கருத்துரை

 1. தமிழ்மொழி விழா
  தமிழ்மொழி விழா!!ஆம் சிங்கையில் தமிழ்மமொழி விழா!!!
  ஏன் இத்தனை ஆச்சரியக்குறிகள் என்றால், அதற்கு இணையான அல்லது மேலான விழா அதுவேதான்!!!!!!!
  ஏன்?எப்படி?எங்குமே தமிழ்மொழிக்கு இப்படி ஒரு விழா,ஒரு மாத காலம் இல்லை.இந்த விழா ஒரு மாத கால உற்சவம்.அதில் தமிழ் அன்னைக்குவ தினம் தினம் ஓர் அலங்காரம்.
  தமிழில் கவிதை,கட்டுரை,இலக்கியம்,நாடகம்,நடனம்,பாடல்,கதை மற்றும் இளையர்களின் வண்ணத்தமிழ் என பற்பல ஆபரணங்களால் அலங்கரித்து சிங்கை முழுது வாழும் தமிழ் பக்தர்களால் ஆராதிக்கப்படும் ஓர் உயரிய உற்சவம்!!
  சிங்கையில் அத்தகைய தமிழ் விழாவில் நானும் தமிழ் அன்னையை கண்டு ஆராதிக்க வாய்ப்பு பெற்றேன்.முதலில்,என் அன்னைக்கு கவிமாலை பயிலரங்கில் கவிதை மாலை சூட்டினேன்.ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் கட்டுரையால் அலங்கரித்தேன்.பிறகு,இளமைத்தமிழ் விக்கிபீடியா போட்டியின் வழி என் காணிக்கையை செலுத்தினேன்.தமிழ் மொழிபெயர்ப்பு பயிலரங்கின் வழி அன்னையின் ஆசி பெற்றேன்.அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்திய தமிழர் பாரம்பரிய உணவு எனும் போட்டியின் வழி,அன்னைக்கு அமுது படைத்தேன்.மேலும்,பழமொழி பேசலாம் என்ற தலைப்பபில் என் தாய் தமிழுக்கு பழமொழியால் அர்ச்சனை செய்தேன்.அதுமட்டுமின்றி, இதோ,இளமைத்தமிழில் கவிதை, காணொளி, புகைப்படம் மற்றும் கட்டுரை என, என் இளமை மாறா கன்னித் தமிழின் பாதங்களில் பல வண்ண சுகந்த மலர்களை சமர்பிக்கிறேன்!!!!!
  வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!

  மித்ரா பாலமுருகன்
  யூனிட்டி உயர்நிலைப் பள்ளி

 2. தமிழ்மொழி விழா 2017
  ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற திரு மகாகவி பாரதியாரின் வைர வரிகளுக்குக்கேற்ப நம் இனிய தமிழ் மொழிக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் விழா எடுக்கும் அனைத்துத் தமிழ் இயக்கங்களுக்கும், தமிழார்வ நண்பர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!
  ‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!’ என்று திரு லீ குவான் இயூ அவர்கள் தமிழ் மொழியை சிங்கப்பூரின் அதிகாரபூர்வ மொழியாக்கினார்கள்.அவருக்கு நாம் என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
  தமிழன்பர்கள் நம் நாட்டின் அதிகாரபூர்வ மொழியை, வாழும் மொழியாக்க, தமிழன்னைக்கு தமிழ்மாதம் முழுவதும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்; மேலும் விழாக்கள் எடுக்கிறார்கள்.
  எனது ஆசிரியை திருமதி கங்கா அவர்களின் ஊக்கத்தால் நான் பல போட்டிகளில் கலந்து கொண்டேன்; பல பரிசுகளையும் பெற்றேன். எனது ஆசிரியைக்கு எனது மனமார்ந்த நன்றி!!!
  அவற்றில் முக்கியமானது திருக்குறள் விழா! அதில் நான் திரு.எஸ்.ஆர். நாதன் அவர்களைப் பற்றிப் பேசினேன்.
  அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
  பெருமை முயற்சி தரும்
  என்ற திருக்குறளுக்கேற்ப, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து பல துயரங்களை அனுபவித்து, பிறகு பல காரியங்களைத் துணிந்து முயன்று செய்து சிங்கப்பூரின் அதிபராக உயர்ந்த அவரது வாழ்க்கை வரலாறைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
  ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்று நம் மாணவ சமுதாயம் அவர் வழி நடந்து வெற்றி வாகை சூடி சிங்கப்பூருக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்பது எனது அவா!!!
  பெயர்: தேஜல்
  பள்ளி: சுவா சு காங் உயர்நிலைப்பள்ளி

 3. தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர் 2017
  தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர் என்னும் நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டுக்கு அடுத்த நாளான சனிக்கிழமை மாலை, 15 ஏப்பிரலில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சி அண்ணாமலை முன்னால் மாணவர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யபட்டது.
  இந்த நிகழ்ச்சிக்கு முன் தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் ஒரு போட்டி நடைப்பெற்றது. இதில் நான் நீராகாரம் என்ற உணவைப் பற்றி பேசினான். அந்த போட்டியில் சிறந்து செய்த நால்வர் 15 ஏப்ரல் படைத்ததோடு இந்தியாவிலிருந்து மருத்துவர் கு.சிவராமன் அவர்களும் தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர் என்ற தலைப்பில் பேச வந்தார்.
  இந்த நிகழ்ச்சியின் போது நான் நமது தமிழர் பாரம்பரிய உணவைப் பற்றி பல அறிய புதிய தகவல்களைக் கற்றுக்கொண்டேன். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இந்தப் போட்டியில் படைக்கப்பட்ட தலைசிறந்த நான்கு படைப்புகளின் படைப்பு நடைப்பெற்றது. இந்த மாணவர்களின் படைப்பிலிருந்து நான் பல புதிய தகவல்களைக் கற்றுக்கொண்டேன். ஓரு மாணவி எல்லு நமது இல்ககியங்களில் இடம்பெற்றிருப்பதை கூறியதோடு அதற்கு அருத்தமும் கூறினார். எல்லுக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கும் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை.
  பிறகு, மருத்துவர் கு. சிவராமன் தமிழர் உரையில் நான் இக்காலத்தில் இளையர் சமுதாயித்தில் இடையே பரவும் நோய்களும், நமது பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தையும் தெரிந்துகொண்டேன். அவர் கூறிய, சாக்கிலேட்டிற்கு பதில் கடலைமிட்டாய் சாப்பிடுவது சிறந்தது என்னும் கருத்தை நான் மனப் பூர்வமாக ஓத்துக்கொண்டேன். அவர் கூரிய வாரு நான் யார் பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்றாலும், கடலை மிட்டாயை தான் கொண்டு சென்று எல்லோருக்கும் தருகிறேன். இந்த நிகழ்ச்சியை என் வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன்.
  சுப்பிரமணியன் கார்த்திகேயன்
  பெண்டமியர் உயர்நிலைப் பள்ளி

 4. ஏப்பரல் மாதம் முழுவதும் எத்தனை எத்தனை தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள், போட்டிகள். நான் பல நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் கலந்துக்கொண்டேன். ஏப்பரல் 15ஆம் தேதி அன்று, தமிழ் விக்கிபீடியா போட்டியின் முடிவுகளைத் தெரிந்துக்கொள்வதற்காகச் சென்றிருந்தேன். இப்போட்டி, மாணவர்கள் மத்தியில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
  அந்த போட்டியில் நான் என் பள்ளியான சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியின் வரலாறைப் பற்றி எழுதினேன். என்னைப் போல வெவ்வேறு பள்ளிகளிலிருந்து பல மாணவர்கள் வெவ்வேறு தலைப்புகளைப் பற்றி கட்டுரைகளை எழுதி விக்கிபீடியா வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்கள்.அப்போட்டியில் நான் வெற்றி பெறவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தாலும் என் பள்ளியிலிருந்து என் நெருங்கிய தோழி வெற்றி பெற்றது எனக்குப் பெருமை அளித்தது.
  அந்த போட்டியில் நான் கலந்துக்கொண்டதால் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.நான் என் மொழி வளத்தை வளர்த்துக்கொண்டேன். அதோடு, நான் என் கட்டுரையில் பிழையின்றி எழுதுவதற்கும் ஒரு வகையில் இப்போட்டி எனக்கு கை கொடுத்தது.
  நான் என் தட்டச்சு ஆற்றலை மேம்படுத்திக்கொண்டேன். மேலும், நான் தட்டச்சு பலகையைப் பார்க்காமல் தமிழில் தட்டச்சு செய்யவும் இந்த போட்டி எனக்கு உதவியது.இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க நன்றி!!!
  வைஷ்ணவி
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 5. உலகத்தில் ஏழு அதிசயங்கள் உள்ளன.எனக்கு உலகத்தில் உள்ள முதல் அதிசயமே என் தமிழ் மொழி தான்.தமிழ் மொழி ஓர் அதிசயம் என்பதால் தமிழ் அன்னையை புகழ தமிழ் மொழி விழா கொண்டாடப்படுகிறது.சிங்கப்பூர் நாடும் தமிழ் மொழி விழாவை கொண்டாட பல நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்தியுள்ளது.அவற்றில் கலந்துகொண்ட என் அனுபவத்தை பற்றி நான் பகிர்ந்துகொள்ள போகிறேன்.
  முதலில்,இளமைத்தமிழ் மற்றும் வளர்தமிழ் சேர்ந்து நடத்தும் தமிழ் விக்கிப்பீடியா போட்டியில் கலந்துகொள்ளுமாறு என் தமிழ் ஆசிரியர் திருமதி கங்கா கூறினார்.”சரி,முயற்சி செய்துதான் பார்த்து விடுவோம்” என்ற துணிவும் “நான் வெல்லவும் வாய்ப்புகள் நிறைய உண்டு” என்ற நம்பிக்கையும் எனக்கு வந்தது.பிறகு,எனக்கு கொடுக்கப்பட்ட செனோடப் என்ற இடத்தைப்பற்றி தமிழில் நிறைய ஆராய்ச்சி செய்து,அதைப்பற்றி ஒரு விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கினேன்.அதற்கு,நான் அந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த சிலரிடம்,செனோடப் பற்றி எனக்கு தெரியாத பல தகவல்களை கேட்டு,என் கட்டுரையில் சேர்த்து கொண்டேன்.ஆனால் நான் அதில் வெற்றி பெறவில்லை.
  மனம் தளர்ந்த எனக்கு,வேறு ஏதாவது ஒரு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியம் வந்தது.இளமைத்தமிழ் பக்கத்தில் எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டு,என் பதில்களை அனுப்பியிருக்கிறேன்.அதை பார்த்து,என் நண்பர்கள் எல்லோரும் என்னை வாழ்த்தி நான்தான் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக சொன்னார்கள்.அவர்கள் சொன்ன வாக்கு பலிக்கும் என்று நான் நம்புகிறேன்.இந்த அனுபவங்களில்மூலம் நான் பல வாழ்க்கை திறன்களை பெற்றுக்கொண்டேன். நம்பிக்கையே வாழ்க்கை என்ற தாரக மந்திரத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.அதுமட்டுமல்லாமல்,நான் தமிழில் என் மொழியை மேம்படுத்தவும் கற்றுக்கொண்டேன்.தமிழின்மேல் எனக்கு இருக்கும் பற்றும் அதிகரித்தது.தமிழ் மொழியே நீ வாழியவே!
  ரெத்தினம் ரெபேக்கா
  சூவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 6. “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.” என்ற பாரதிதாசரின் கவிதைக்கு ஏற்ப இந்த வருட தமிழ் மொழி மாதம் முழுவதும் சீரும் சிறப்புமாக நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அவை அனைத்தும் மாணவர்களிடம் தமிழ் மொழியின் ஆர்வத்தை அதிகரிக்கவும் மாணவர்களின் தமிழ் திறனை வள்ர்ப்பதற்கும் ஏற்ப்பாட்டு செய்யப்பட்டன.
  ‘கல் தோன்றி மண் தோண்றா காலத்தே முன் தோண்றிய மூத்த மொழி தமிழ் மொழி என்பதே தமிழின் சிறப்பாகும்.’ இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோண்றிய நமது தாய்மொழியை இன்றும் வாழவைப்பதற்கு இந்நிகழ்ச்சிகள் உதவுகின்றன. இந்நிகழ்ச்சிகளால் எனக்கு தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூண்டுகளாக இருந்தது.
  ஒருசில நிகழ்ச்சிகளை நேரில் கண்டு, உண்ர்வில் கலந்து மனதில் தங்கும் வண்ணம் அமைந்தது. எப்போதும் பேச்சில் நாட்டம் கொண்ட எனக்கு விவாதப் போட்டிகளே மிகவும் ஈர்த்த நிகழ்ச்சிகளாகும். சொற்சிலம்பம் போன்ற விவாதப் போட்டி சுவாரஸ்யமாகவும் அறிவூட்டும் வகையிலும் அமைந்தது. இரு பள்ளிகளுக்கும் அனல் பறக்கும் விவாதம் மும்முரமாக நடைப்பெற்றது. மாணவர்கள் தமிழில் சரலமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசினார்கள். தங்களின் கருத்துகளை சுவாரஸ்யமான வகையில் விவாதித்தார்கள். அவை என்னை மிகவும் கவர்ந்தன. மாணவர்கள் இரவும் பகலும் உழைத்தனர் என்பது அவர்களின் அற்புதமான பேச்சிலிருந்தே அறியலாம். இரு பள்ளிகளுமே சிறப்பாக பேசினர். அந்த விருவிருப்பான போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் தாயை கண்ட சேயைப் போல் மகிழ்ந்தனர். மற்றொரு பள்ளியும் மனம் தளராமல் அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்வோம் அன்று உறுதியளித்தனர். அவர்களின் தன்னம்பிக்கை அரங்கத்திலிருந்த அனைவரையும் கவர்ந்தது.
  ஆக மொத்தத்தில், தமிழ்மொழியையும் பாரம்பரியத்தையும் வளர்க்கவில்லை என்றால் அது மண்ணோடு மண்ணாக புதைந்து விடும். அதனால், இதற்கான முதற்படி தமிழ்மொழி விழாக்களை நடத்துவதே ஆகும். தமிழில் பேசுவோம் , தமிழையே நேசிப்போம்.

  சேவா மாணிக்கம்
  கான் எங் செங் பள்ளி

 7. வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன் . குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி - ஈஸ்ட் கோஸ்ட்.
  May 3, 2017 at 12:31 pm

  தமிழ்மொழி விழா 2017-ன் ஓர் அங்கமாக ” தமிழ் உணவுக்கும் அமுதென்று பேர் ” நிகழ்ச்சி, கடந்த 15 ஏப்ரல் அன்று, உமறுப்புலவர் நிலையத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  தமிழர் பாரம்பரிய உணவும், ஆரோக்கியமும் என்ற தலைப்பில் மாணவர்கள் எள்ளு , மஞ்சள் , சிறு தானிய ங்கள் மற்றும் இடியாப்பம் பற்றி இறுதிச்சுற்றில் தங்கள் படைப்பினை முன்வைத்தனர் . இதில் பங்கு கொண்டு, சிறப்பு உரையாற்றிய சித்த மருத்துவர் திரு. சிவராமன் அவர்களின், ஒரு செய்தி எனது மனதில் ஆழப்பதிந்து, துயரத்தையும் ஏற்படுத்தியது .
  புற்று நோய் கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் அறிந்த ஒரு செய்திதான் அது.
  “இந்த ஒரு தலைமுறை தான், தன் அடுத்த தலைமுறையின் மரணத்தை அருகிலிருந்து தங்கள் கண்களால் பார்க்கப்போகும் துரதிஷ்டமான தலைமுறை ” எனக் கூறி, இந்தியாவில் புற்று நோய் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் என்றும், குழந்தைகள் புற்று நோய் பாதிப்பில் தமிழகம் முதலிடம் என்று கூறினார், இதற்கு காரணம் துரித உணவு என்றும் அடுப்படியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் செலவழித்தால், ஐந்து ,பத்து வருடங்கள் ஆயுள் நீடிக்கும் என்று கூறியது எனது மனதில் பதிந்தது .
  புற்று நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காய தயிர் பச்சிடிக்கும் , நாவல் பழத்திற்கும் உண்டு என்று விளக்கினார்.
  உலகில் மிகச் சிறந்த காலை உணவு, இட்லி தான் என்று சான்றுடன் எடுத்துரைத்தார். “உணவு தாளிப்பு ” என்பது நமது பாரம்பரிய உணவு முறையில் மட்டும் தான் உள்ளது என்றும் கூறினார், தாளிப்பது மணத்திற்காக மட்டும் அல்ல, மருத்துவ குணத்திற்காகவே!! . இது ஐந்தாயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. ஆகவேதான் தமிழ் உணவுக்கு அமுதென்று பேர் என்று கூறி முடித்தார்.
  இறுதியாக தமிழ் உணவே அமுது என்ற எண்ணத்துடன், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.
  வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன்
  குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி – ஈஸ்ட் கோஸ்ட்.

Your email address will not be published.


*