தமிழ்மொழி விழா 2016

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
தமிழ்மொழி விழா 2016 நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நீங்கள் நேரில் கலந்து கொண்ட தமிழ்மொழி விழா பற்றியோ / தொலைக்காட்சியில் கண்டு ரசித்த தமிழ்மொழி விழா பற்றியோ / தமிழ்முரசு போன்ற நாளிதழ்களில் படித்து ரசித்த தமிழ்மொழி விழா பற்றியோ ஒரு கட்டுரை எழுதி அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 மே  2016 பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

11 கருத்துரை

 1. நம் சிங்கப்பூரில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் ோக்கத்தில் ஏப்ரல் மாதம் தமிழ் மொழி மாதமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் தமிழ்மொழி விழா 2016 நாடு முழுவதும் சிறப்பாக நடைப்பெற்றது. பல்வேறு சுவாரசியமான ொற்களம்’ தமிழ் விவாதப் போட்டி. இப்போட்டி 12 முறையாக ஏப்ரல் 9 ஆம் தேதி மீடீயகார்ஃப் அரங்கில் மாலை ஏழு மணிக்கு நடைப்பெற்றது. இப்போட்டியில் ராஃபில்ஸ் கல்வி நிலையமும் பெந்தமீர் உயர்நிலைப்பள்ளியும் இருதிச் சுற்றில் மோதின. தேசிய அளவிலான தமிழ் விவாதப் போட்டி மாணவர்களிடையே தமிழ் பேசும் திறனை அதிகரிக்கவும் தன்னம்பிக்கையுடன் தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும் செய்ய மேற்கொண்ட முயற்சியே இச்சொற்களம்!
  இப்போட்டியை நான் வசந்தம் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர். போட்டியில் இரண்டு சுற்றுகள் நடைப்பெற்றது. அனல் பறக்கும் விவாதம் இரு பள்ளிகளுக்கிடையே நடந்தது. போட்டி விருவிருப்பாக சென்றது. இறுதியில் ராஃபில்ஸ் கல்வி நிலையம் வெற்றி வாகை சூடியது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தகவல் தொடர்பு கல்வி அமைச்சுகளுக்கு துனை அமைச்சரான திரு ஜனில் புதுச்சேரி அவர்கள்வபரிசுகளை வழங்கினார். சிறப்பாக பேசிய ராஃபில்ஸ் கல்வி நிலையத்தை சேர்ந்த ஒரு மாணவருக்கு சிறந்த பேச்சாளர் என்ற விருது வழங்கப்பட்டது.
  அந்நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு எனக்கு தமிழ் மீதான ஆர்வம் அதிகரித்தது. அம்மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக நிறைய உழைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.  
  ஹீபா
  சேய்ன்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

 2. காதிரவன் மெல்ல மெல்ல பூமியை எட்டிப்பார்த்தான்.நான் தொலைக்க்காட்ச்சியில்  தமிழ்மொழி விழா பற்றியோ / தொலைக்காட்சியில் கண்டு ரசித்த தமிழ்மொழி விழா பற்றியோ / தமிழ்முரசு போன்ற நாளிதழ்களில் படித்து ரசித்த தமிழ்மொழி விழா பற்றியோ ஒரு கட்டுரை எழுதி அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.அதை பார்க்க மிகவும் சிறப்பாக இருக்கிறது.அதை பார்த்து நான் அதை பாராட்டினென்.நானும் இன் விழாவில் கலநஂதுகொள்ள ஆசையாக இருக்கிறது.

 3. கதை: தமிழ் மொழி விழா 2016
  தமிழ் மொழி விழா அன்று,நான் சொற்களம் தொலைகாட்சியில் பார்த்தேன்.இந்த விவாட போட்டி வென்றவர்கள் ராஃபிஸ் உயர்நிலை பள்ளி .இந்த விவாட போட்டி பார்ப்பதால், தமிழ் மொழியில் சரலமாகவும் தன்ணம்பிக்கையுடமும் தமிழ்மொழி பேசலாம். மாணவர்கள் கருத்துகலை இச் சொற்கலித்தில் முன்வெய்த்தார்கள்.அந்த மாணவர்கள் நிறைய நல்ல கருத்துகைளை பேசினார்கள்.நான் அந்த சொற்களத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்த்தேன்.நான் மகிழ்ச்சியுடன் அந்த சொற்களத்தை பார்த்தேன். நான் இந்த மாறியான சொற்களத்தை கொள்ள விருப்பம். ராஃப்பிஸ் உயர்நிலைபள்ளி மாணவர்கள் மிகவும் புதிசாலியாக தமிழில் பேசினார்கள். நான் அவர்களிடம் மாறி தமிழில் பேச விருப்பம் இருக்கிறது.இந்த சொற்களம் பார்பதற்கு பிறகு, தமிழ் மிகவும் சுலபமாக பேச முடியலாம்.
  விஷ்ணு
  STHILDAS SECONDARY SCHOOL

 4. தமிழ் என்பது பண்டை காலத்திலிருந்தே பழக்கத்திலிருக்கும் ஒரு சிறந்த மொழியாகும். உலகம் எவ்வளவு நவீனமடைந்திருந்தாலும் தமிழ்மொழியின் வளர்ச்சியை அது இதுவரை பாதித்ததில்லை. தமிழ்மொழியை வளர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது ஏப்ரல் மாதத்தில் நம் தேசத்தில் நடைபெறும் விழாக்களும், போட்டிகளும் ஆகும். அதற்கு ஓர் உதாரணம், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற “மாகோ தேசிய கதை சொல்லும் போட்டி 2016” ஆகும். 
  இந்த போட்டியில் ஐம்பது பள்ளிகளிலிருந்து சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின்போது மாணவர்கள் தமிழில் சரளமாகப் பேசக்கற்றுக்கொண்டதோடு, தங்கள் கற்பனைத் திறனையும் வளர்த்துக்கொண்டனர். மேலும் பல புதிய வார்த்தைகளையும் கற்றுக்கொண்டு, பல புதிய நண்பர்களையும் பெற்றுக்கொண்டனர்.
  மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் இந்தப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டது பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது. ‘எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்’ என்ற பழழொழிக்கிணங்க  மாணவர்களிடமிருக்கும் பேச்சுத்திறனையும், கற்பனை ஆற்றலையும் வெளிக்கொண்டுவருவதற்கு இதுபோன்ற போட்டிகள் மிகவும் அவசியம். பல அனுபவ பாடங்களைக் கற்றுத்தரும் இத்தகைய போட்டிகளை நாம் அனைவரும்,  ஓவ்வொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்ப்போம். 
  சான்ஃபோ பிமல் தாமஸ், 
  செயிண்ட் ஜோசப் கல்வி நிலையம்

                             

 5. தமிழ் மொழி விழா மாதத்தில் பற்பல நிகழ்ச்சிகள் நமது அற்புதமான தமிழ் மொழியின் சிறப்புகளை தெரிவிக்கும் வகையில் நடைபெற்றன. என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி,” சொற்களம் 2016 “. விவாதப் போட்டிகள் தமிழ் மாணவர்கள் தங்கள் பேச்சு திறனை வளர்த்துக்கொள்ளவும் அவர்களுடைய தமிழ் பற்றை வெளிப்படுத்தவும் ஒரு அற்புத வாய்ப்பாக அமைகின்றன. நான் என் குடும்பத்தோடு தொலைகாட்சியில் கண்டு மகிழ்ந்தேன். இறுதி சுற்றில், ‘பல இன மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ சட்டங்களைவிட புரிந்துணர்வே அவசியமாகும்.’ என்ற தலைப்பில் இரண்டு தரப்பினர்களும் நன்றாக பேசினார்கள். அவர்களுடைய கருத்துகளை சுருக்கமாகவும் அழகாகவும் எடுத்து உரைத்தார்கள். அது மட்டுமில்லாமல், நானும் என் சகோதரர்களும் வாதிக்க ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அத்தலைப்பில் எங்களுடைய பெற்றோர்களை எதிர்த்து விவாதித்து மகிழ்ந்தோம். இந்நிகழ்ச்சியை கண்டு ஒரு தமிழ் மாணவியாக புதிய தமிழ் வார்த்தைகளையும், சுவாரசியமான தகவல்களையும் கற்றுக்கொண்டேன். இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசித்த மாணவர்கள் நிச்சயம் பயன் அடைந்திருப்பார்கள். மேலும், இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை தமிழ் மொழியை தன்னம்பிக்கையுடன் பேசுவதற்கு ஊக்குவிக்கிறது.
  தாஹிரா
  தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

 6. தமிழன் என்று சொல்லடா!
  தலை நிமிர்ந்து நில்லடா! என்று மார் தட்டிக் கொள்ளும் நமக்கெல்லாம் பெரிய கொடையாக விளங்குகிறது சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் மொழி மாத நிகழ்ச்சிகள். ஒவ்வொரு ஆண்டும் நானும் என் பெற்றோரும் இவ்விழாவினை ஆர்வத்தோடு எதிர்பார்ப்போம்.
  இம் முறை வார இறுதி நிகழ்ச்சிகள் ஏதேனும் ஒன்றில் நாங்கள் பங்கு பெற எண்ணிய போது, எங்களுக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது, விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் ‘நீயா நானா’புகழ் திரு.கோபிநாத் அவர்கள் பங்கேற்ற ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற உரையாற்றும் நிகழ்ச்சியாகும்.தலைப்பைப் பார்த்தவுடன் மாணவர்களாகிய நமக்கும் தன்முனைப்பு பயன் தரும் என்று நானும் என் தம்பியும் உமறுப்புலவர் நிலையத்தற்க்கு எங்கள் பெற்றோருடன் சென்றோம்.
  சென்ற மாதம் 24ஆம் தேதி, நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை “வளர்தமிழ் இயக்கத்தின்”ஆதரவில்” ஜமால் முஹம்மது “கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் வழி நடத்தியது.அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழியை எடுத்து செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பள்ளி மாணவ மாணவியருக்கும் “கவிதை மாலை” என்ற புதிய போட்டி இடம் பெற்றது.
  எதிர்மறையான சிந்ததனைகளுக்கு எப்போதும் இடமளிக்கக் கூடாது என்றும் தமிழ்மொழியில் பண்பாட்டு பின்னணிகளை இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு ஊட்டவேண்டும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.”தன்னம்பிக்கை என்பது நம்மிடமே இருக்கிறது.அதை நாம் சரியாக வெளிக்கொணர வேண்டும்,கடந்த காலகசப்பான நினைவுகளை முற்றிலூம் களைய வேண்டும்”-இவ்வாறு திரு.கோபிநாத் அவர்கள் பிரகாசமான வாழ்விற்கு வழிவகை கூறினார்.
  இறுதியாக,தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொண்டது,எனக்கு மனநிறைவாக இருந்தது!
  kalimuthu susmitha 2E2
  yuan ching secondary school

 7. ’தமிழ்க்கும் அமுதென்று பேர்
  அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
  எங்கள் உயிருக்கு நேர்.’
  என்ற பாரதிதாசனின் கவிதைக்கு ஏற்ப உயிரினும் மேலான நம் தமிழ்மொழியை வளர்ப்பதற்க்காகவே கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழ்மொழி விழா ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறியது. அதில் நான் பார்த்து ரசித்த தமிழ்மொழி விழாவினை பற்றி இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
  சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் முதல் முறையாக வடிவமைத்து அரங்கேற்றிய யுத்தம். மேல் உயர்நிலை மாணவர்களுக்கான தமிழ்ச் சொல்வள விளையாட்டுப் போட்டி அது. மாணவர்களின் அயராத உழைப்பில் உருவான ‘யுத்தம்’ உட்லண்ட்ஸ் வட்டர நூலக அரங்கத்தில் நடைப்பெற்றது. அதை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தின் இயக்குநர், திரு அன்பரசு இராஜேந்திரன், தமிழின் புழக்கத்தை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வண்ணம் கடந்தகால சிங்கப்பூரையும் எதிர்கால சிங்கப்பூரையும் ஒப்பிட்டு சுவாரசியமான பல அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார்.
  இந்நிகழ்ச்சி இக்கால இளையர்களுக்கு தமிழ்மொழியின் மீது ஆர்வத்தையும் தமிழ்மொழியின் அவசியத்தையும் வலியுறுத்துவதாகவும், மேலும், இருமொழி அறிவையும் மொழிபெயர்ப்பு ஆற்றலையும் பெருக்குவதாகவும் இருந்தது.இப்போட்டியில் பத்து பள்ளிகள் பங்கேற்றனர். அதில் ராஃபிள்ஸ் கள்வி நிலையம் வெற்றி வாகை சூடியது.
  இந்நிகழ்ச்சிக்கு சென்றதன் மூலம் அதிகமான சொற்களுக்கு அகராதி இல்லாமலேயே அர்த்தம் தெரிந்துக்கொண்டேன். அங்கிருந்து வெளிவரும் போது ”நானும் மரத்தமிழண்டா!” என்று மார்தட்டிக்கொண்டேன்.
  அரவிந்தன்
  Unity Secondary School

 8. நான் ஜனவரி மாதத்தில், தெக் கீ சமூக மன்றத்தில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டேன். அங்கு நிறைய பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்களுடன் தம் குழந்தைகளையும் அழைத்து வந்தனர். அந்த இடம் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களான நாமே தமிழ்மொழி விழாக்களுக்கு செல்லவில்லை என்றால், யார் செல்வார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு தான் நான் அங்கு சென்றேன்.அங்கு அனைவரும் வந்தவுடன் சிறப்பு விருந்தினர் விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். பின் , பெண்கள் பானையில் பொங்கல் வைக்க தொடங்கினர். பொங்கல் பொங்கியவுடன் அனைவரும் குலவை போட்டோம். சிறிது நேரத்தில், நாங்கள் பொங்கலை வயிறார உண்டொம். பிறகு, ஒரு பாட்டுப் போட்டி நிகழ்ந்தது. அதில் கொடுக்கப்படும் எழுத்தில் தொடங்கும் ஒரு பாட்டைப் பாட வேண்டும். அதில் பாடி நானும் என் தங்கையும் பரிசுகளைத் தட்டிச்சென்றோம். பிறகு, நாங்கள் பல்லாங்குழி மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடினோம். சிறிது நேரம் விளையாடிய பின், நாங்கள் வீடு திரும்பினோம்.
  ஆக மொத்தத்தில், தமிழ்மொழியையும் பாரம்பரியத்தையும் வளர்க்கவில்லை என்றால் அது மண்ணோடு மண்ணாக புதைந்து விடும். அதனால், இதற்கான முதற்படி தமிழ்மொழி விழாக்களுக்கு செல்வதே ஆகும். தமிழையே நேசிப்போம்.
  Joshita Krishna 1E6
  Tanjong Katong Girls’ School

 9. தமிழ் மொழி விழா ஒவ்வொறு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் நடைப்பெறும். இவ்விழாவின் முக்கிய நோக்கம் தமிழ் மாணவர்களிடையே தமிழ் மொழியை வளர்ப்பது ஆகும் .தமிழ் மொழி ஒரு பழமையான மொழி ஆகும். எதிர்க்காலத்தில் தமிழ் மொழி ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளால் முந்திதப் பட்டு மறைந்து விடாமல் கவனித்துக் கொள்ளவது இளையர்கள் மற்றும் மாணவர்களின் கடமையாகும். ஆனால் நமக்கோ அதில் நாட்டம் குறைந்துக் கொண்டே வருகிறது. நாம் தமிழ் மொழிக்கு மதிப்புக் கொடுத்து தமிழ் மாதத்தில் நடைப்பெறும் பல போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம், சொற்களம் போன்ற சுவரஸ்யமான, அறிவூட்டும் போட்டியை வசதியாக வீட்டில் இருந்தபடியே கண்டுக் களிக்கலாம். அதனால் என்னால் பல புதிய சொற்களைக் கற்று என் மொழிவளத்தை மேம்படுத்த முடிந்தது. என் பள்ளியிலும் பல நடவடிக்கைகள் நடைப்பெற்றனர். வகுப்பில் ஒரு பேச்சுப்போட்டி இடம்பெற்றது. மற்றொரு நாள் நாங்கள் தமிழ் கலாச்சாரத்தையொட்டி ஒரு மகமுடியை அழகாக அலங்கரித்தோம். இது மட்டுமில்லை இன்னும் நிறைய நடவடிக்கைகள் இருந்தன. போட்டிகளிலும் களந்துக்கொண்டோம். இந்த தமிழ் மொழி மாத விழாவில் என்னால் தினமும் கற்கும் பாடங்கள் தவிர புதிய விஷயங்களை கற்று கொள்ள முடிந்தது. இது எனக்கு ஒரு மறக்க முடியாத ஆனுபவம். இது என் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் படித்து விட்டடு.
  ௧ரிஷினி  (2/1)
  Tanjong Katong Girls பள்ளி

 10. இவ்வாண்டு 2016ல் தமிழ்மொழி மாதத்திற்காக நடைபெற்ற போட்டிகளில் பழமொழி நானூறு பேசலாம் என்ற போட்டியில் நான் கலந்துகொண்டேன்.அது எனக்கு புதுவிதமான அனுபவத்தையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியது.சிறுவயது முதலே நான் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல முறை பரிசுகளைப் பெற்றுள்ளேன். அப்பரிசுகளை விழாவிற்கு தலைமை ஏற்கும் சிறப்பு விருந்தினரின் கையால் பெற்றுள்ளேன்.ஆனால், இந்தப் போட்டியின் ஏற்ப்பாட்டாளர்கள் புதுவிதமான சிந்தனையாளர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், பரிசளிக்க அவர்கள் எந்த ஒரு சிறப்பு விருந்தினரையும் ஏற்பாடு செய்திருக்கவில்லை.நான் யார் பரிசு தருவார்கள் என ஆவலோடு காத்திருந்தேன். அப்பொழுது, விழா ஏற்பாட்டாளர்கள் எங்களுடன் தோள்கொடுத்து எங்களைப் போட்டியில் கலந்துகொள்ள ஊக்கமளித்து வழி நடத்தும் எங்கள் பெற்றோர்களே இன்றைய சிறப்பு விருந்தினர்கள் என்று கூறினார்கள். அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில்,” அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” அல்லவா? அவர்களின் கையால் பரிசு பெறுவது எனக்கு ஓர் இனிமையான அனுபவத்தைத் தந்தது. போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு, என் பெற்றோர் கையால் பரிசு பெற்றுக்கொண்டு அங்கிருந்து உல்லாச வானில் பறப்பது போன்ற உணர்வுடன் வீடு திரும்பினேன்.
  மித்ரா பாலமுருகன் 1E1
  Unity Secondary School

 11. இவ்வாண்டு 2016ல் தமிழ்மொழி மாதத்திற்காக நடைபெற்ற போட்டிகளில் பழமொழி நானூறு பேசலாம் என்ற போட்டியில் நான் கலந்துகொண்டேன்.அது எனக்கு புதுவிதமான அனுபவத்தையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியது.சிறுவயது முதலே நான் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல முறை பரிசுகளைப் பெற்றுள்ளேன். அப்பரிசுகளை விழாவிற்கு தலைமை ஏற்கும் சிறப்பு விருந்தினரின் கையால் பெற்றுள்ளேன்.ஆனால், இந்தப் போட்டியின் ஏற்ப்பாட்டாளர்கள் புதுவிதமான சிந்தனையாளர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், பரிசளிக்க அவர்கள் எந்த ஒரு சிறப்பு விருந்தினரையும் ஏற்பாடு செய்திருக்கவில்லை.நான் யார் பரிசு தருவார்கள் என ஆவலோடு காத்திருந்தேன். அப்பொழுது, விழா ஏற்பாட்டாளர்கள் எங்களுடன் தோள்கொடுத்து எங்களைப் போட்டியில் கலந்துகொள்ள ஊக்கமளித்து வழி நடத்தும் எங்கள் பெற்றோர்களே இன்றைய சிறப்பு விருந்தினர்கள் என்று கூறினார்கள். அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில்,” அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” அல்லவா? அவர்களின் கையால் பரிசு பெறுவது எனக்கு ஓர் இனிமையான அனுபவத்தைத் தந்தது. போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு, என் பெற்றோர் கையால் பரிசு பெற்றுக்கொண்டு அங்கிருந்து உல்லாச வானில் பறப்பது போன்ற உணர்வுடன் வீடு திரும்பினேன்.
  மித்ரா பாலமுருகன்
  1ஈ1
  யூனிட்டி உயர்நிலை பள்ளி

Your email address will not be published.


*