தமிழ்மொழி விழா 2015!


சிங்கப்பூரில் தமிழ் மொழி மீதான ஆர்வத்தையும், பற்றையும் வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும்  தமிழ் மொழி விழா நடத்தப்படுகிறது. அவற்றில் கலந்துகொண்ட அனுபவங்களையோ அல்லது தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அந்த நிகழ்ச்சிகளை பார்த்தபோது உங்கள் மனதிற்குத் தோன்றிய எண்ணங்களையோ  கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள்பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும். தரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்கள் கட்டுரைகளை  நீங்கள் பகிர்ந்து கொள்ள இறுதிநாள் – 31 மே2015. வாழ்த்துகள்!

6 கருத்துரை

 1. தமிழ்மொழி என்னுடைய தாய்மொழி.
  தமிழ்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும்.
  அதில் இருக்கும் ஆத்திச்சூடி,பழமொழி மற்றும் திருக்குறள் வாழ்க்கைக்கு 
  முக்கியமானவை.
  தமிழ்மொழியில் மகாபாரதம்,இராமாயனம் மற்றும் 
  ஐம்பெரும்காப்பியங்கள் வாழ்க்கைப் பாடங்கள் கற்ப்பிக்கின்றன.
  தமிழ்மொழி உலகத்திலேயே பழமையான மொழி.
  சிங்கப்பூரில் தமிழ் மொழி மீதான ஆர்வத்தையும், பற்றையும் வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் மொழி விழா நடத்தப்படுகிறது.
  தமிழ் மொழி மாதம் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன்.
  தமிழில் பேசவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்ப்பட்டது.
  தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்
  ஹர்ஷினி பாலா
  பாயா லேபார் மேதொதிஷ்த் பெண்கள் பள்ளி

 2. S. Siva Ranjana
  ஒவொரு மாணவருக்குள்ளும் ஒவ்வொருவிதமான தமிழ் கலைத் திறன் 
  உள்ளது.அதை வெளிக்கொணர்ந்து ஊக்குவிப்பதே தமிழ் மொழி விழாவின்
  முக்கிய நோக்கம் ஆகும்.அவ்வாறான தமிழ் மொழி விழாவில் நான் 
  கலந்துக்கொண்டேன்.
  எனக்கு மேடையில் பேசவேண்டும்,அனைவரையும் கவர வேண்டும் என்ற ஆசை, ஆர்வம் இருந்தது. நான் பேசும் சொற்களை கேட்க பலர் கூடி நின்று
  ஆர்ப்பரிப்பதே இதற்கு காரணம் ஆகும். ஆனால், மேடையில் பேசவேண்டும்
  என்ற விருப்பம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கு முயற்சி,மனஉருதி,
  கடின உழைப்பு,தளராத உள்ளம் இவைஅனைத்தையும் வரவழைத்துக்
  கொண்டால் தான் பேச்சுக் கலையில் ஈடுபட முடியும் என்பதை நான் 
  தெரிந்துக்கொண்டேன். ன்.இவை எல்லாம் எனக்குள் இணைக்க
  வேண்டுமானால். அதற்கு பலதரப்பட்ட பயிற்சிகளும் முயற்சிகளும் தேவை
  என்பதை நான் புரிந்துக் கொண்டேன். நான் என் பேச்சின் தொடர்பாக
  வேண்டிய செய்திகளை, புத்தகங்களை படித்து, குறிப்புகளை தேர்ந்தெடுத்துக்
  கொண்டேன். என் பேச்சின் தலைப்பை குறித்து பல நூல்களைப் படித்துத்
  தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொண்டேன். நான் இவை இரண்டையும்
  இணைத்து , ஒன்றன் பின் ஒன்றாக,வரிசையாக எழுதினேன்.என் பேச்சு
  சுவைப்பட, வரலாற்று நிகழ்வுகள், நாட்டில் அவ்வப்போது நடக்கும்
  குறிபிடத்தகுந்த நிகழ்வுகள்,இலக்கிய மேற்கோள்கள் போன்றவற்றை என்
  பேச்சின் இடையிடையே
  சேர்த்துக் கொண்டேன்.பின்னர்,
  ‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
  பெருமை முயற்சி தரும்’
  என்று திருவள்ளுவர் கூறியுள்ளதை மனதிற்கொண்டு, தளர்ச்சி
  அடையாமல் பலதரப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக முயற்சி செய்தேன்.
  குரலில் ஏறத்தாழ்வு ,நினைவாற்றல், உணர்வுகளை வெளிப்படுத்தும் 
  முறை,நகைச்சுவை கலக்கும் விதம்,கருத்துகளை வலியுருத்தும் 
  வழிமுறைகள்- இவற்றை கையாளும் முறையில் நான் மும்முரமாக 
  ஈடுப்பட்டேன். மேலும், தலைச்சிறந்த பேச்சாளர்களிம் பேச்சுகளை 
  ஆராய்ந்துக் கேட்டேன்.
  பேசும்போது குறுக்கே இடவேளையோ தடுமாற்றமோ ஏற்படுமானால் அது கேட்போருக்கு சோர்வையும் அலட்சியப் போக்கையும் ஏற்படுத்தும் என்பது 
  எனக்கு தெரியும். அதனால் , நான்
  ‘சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை
  வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து’
  என்று வள்ளுவர் கூறியதற்கேற்ப நான் என் சொல்லாட்சி திறனையும் 
  வலுப்படுத்திக் கொண்டேன்.இவ்வாறு பல விதமான ஆற்றல்களை 
  எனக்குள் செதுக்கி விட்டேன்.
  அன்று, பேச்சுப் போட்டியின் நாள். பலமான கைத்தட்டல் அந்த 
  மண்டபத்தையும் உலுக்கியது. பேச்சுப் போட்டி ஆரம்பித்தது.நான் என் 
  கருத்துகளை வரிசைப்படுத்தி நினைவில் வத்துக் கொண்டேன்.என் 
  முறையின் போது  நான் மேடையில் கம்பீரமாக நின்று பேச்சைத் 
  துவங்கினேன். நான் என் கருத்துகளை எளிமயாக,இனிமையாக ஆனால்
  ஆணித்தரமாக எடுத்துரைத்தேன். மேலும், மெலிதான குரலில் ஆரமபித்து, போகப்போக குரலின் வலிமையை அதிகரித்துக் கொண்டே சென்று என் 
  பேச்சை அழகாக முடித்தேன்.இறுதியில், நான் தான் முதல் பரிசைத் தட்டிச் சென்றேன்! இந்த போட்டியில் நான் முதல் பரிசை பெற்றேன் என்று 
  கூறினால் அது மிகையாகாது.ஆனால், அதன் மூழமாக நான் பலவிதமான பேச்சு ஆற்றல்களைக் கற்றுக்கொண்டேன் என்று கூறுவதே சிறப்பு!
  சீ. சிவ ரஞ்சனா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

 3. நம்முடைய தாய்மொழி தமிழ். அந்தக் காலத்தில், ‘தமிழ் என்னுடைய மூச்சு’ என்று சொல்வார்கள். அவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் பெருமையுடன் ‘தமிழ் என்னுடைய தாய்மொழி’ என்று கருதுவார்கள். சிலர், ‘தமிழுக்கும் அமுதென்று பேர்; அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாடுவார்கள். ஆனால், இன்றைய காலத்தில், தமிழர்கள் தமிழில் பேசவதில்லை. சிங்கப்பூரில் பல இன மக்கள் இருப்பதால், எல்லாரும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். மேலும், சில குடும்பங்களில், பெற்றோர்கள் தமிழில் பேசுவார்கள். ஆனால், பிள்ளைகள் பெற்றோர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். சிலர், ‘தமிழ் மிகவும் கடினமாக இருக்கிறது’ என்று நினைக்கிறார்கள். தமிழ் தேர்வுகளின் போது, கேள்விகளைப் பார்த்தவுடன், ‘இந்தத் தேர்வு சிரமமாக இருக்கும்’, என்று நினைக்கிறார்கள். ஆனால், முயற்சியுடன் செய்தால், நம்முடைய தாய்மொழி உயிராக இருக்கும்.
  சிங்கப்பூரில், அண்மையில், தமிழ் மொழி விழா நடைப்பெற்றது. அதனால் நிறைய பள்ளிகளும் சமுக நிலையங்களும் போட்டிகள் வைத்தார்கள். பேச்சுப்போட்டி, நாடகம் போட்டி, பாடல் போட்டி’ போன்ற போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் அதில் ஆர்வமாக கலந்துக்கொண்டால், மற்ற மாணவர்களும் பார்த்துப் பங்கெடுப்பார்கள். மேலும், நம்முடைய தமிழ் கலச்சாரத்தையும் கற்றுக்கொள்வோம்.
  தமிழர்கள் நாம் தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டும். நம்முடைய மொழி மிகவும் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருக்கிறது. நாம் பெருமையுடன் தமிழைப் பேச வேண்டும். தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம், தமிழோடு இணைவோம்.
  ‘தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! தமிழ் வாழ்க!’
  வர்ஷா (Varsha)
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி (Chua Chu Kang Secondary School)

 4. சிங்கப்பூரில் தமிழ் மொழி மீதான ஆர்வத்தையும், பற்றையும் வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ் மொழி விழா, இந்த ஆண்டு ஏப்ரல் 3 ,2015ந்தில் தொடங்கியது. ஒரு மாதகாலக் கொண்டாட்டத்தின்போது பல்வேறு அமைப்புகள், நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், நடவடிக்கைகளையும் நடத்தின. தமிழ் மொழி விழா கொண்டாட்டங்கள் ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி வரை நீடித்தது.
  தமிழ்மொழி விழாவின்போது வருடந்தோறும் அரங்கேற்றி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வரிசையில் ” படிப்போம் படைப்போம்” என்ற நிகழ்ச்சி கடந்த ஆண்டுதான் முதன்முதலாகச் சிங்கை மண்ணில் அறிமுகம் கண்டது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் படைப்புகளின் தொகுப்பான புத்தக வெளியீடு இவ்வாண்டு நடைப்பெற்றது. தமிழில் பேசுவதற்கே தடுமாறிக் தவிக்கும் இன்றைய இளையர்களைப் படிக்கவும் கேட்கவும் ஏன் சிந்திக்கவும் வைத்துப் படைப்பாளிகளாக ஆக்குவதற்கு ஆசிரியர்கள் எடுத்த பிரம்ம்ப் பிரயத்தனம் கைம்மேல் பலனைத் தந்துள்ளது.
  நானும் இந்தப் போட்டியில் கலந்துக்கொண்டேன். நான் ”உறவுகளை இணைக்கும் பாலம்” என்ற தலைப்பில் எழுதிய கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. எனக்கு அதனால் மிகவும் பெருமையாக இருக்கிறது.
  27 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பு”கடல் தேடும் நதிகள்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றிப் பிற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் கிடைத்த ஒப்பற்ற பரிசுஉ எனக் கூறினால் அது மிகையாகாது. இது பொன்ற தொடர்ந்து நடைபெறும் பல நிகழ்ச்சிகள், மாணவர்களின் உள்ளங்களில் தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வத்தை வேரூன்ற வழிவகுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
  C.Nishikanth (2C)
  Teck Whye Secondary School

 5. தமிழ்மொழி விழா 2015
  நான் முதன் முதலில் 2015ஆம் ஆண்டு, ஒரு தமிழ் மொழிவிழாவில் கலந்துக்கொண்டேன். அந்தஇனிமையான நினைவுகள் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.பொதுவாக எனக்கு கூச்சம் அதிகம். அதனால் போட்டிகளில் கலந்து கொண்டதில்லை. ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் நடக்கும் திருக்குறள் போட்டிக்கான அறிவிப்பை எனது அம்மா எனக்குக் காண்பித்தார். எனது அம்மா என்னை ஊக்கப்படுத்தினார்கள். எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் முயற்சி செய்யலாம் என ஒத்துக்கொண்டேன். எனது அம்மா எனது பெயரை பதிவு செய்தார். இருபது திருக்குறள்களை மனப்பாடம் செய்ய வேண்டும். போட்டிக்கு இன்னும் பதினைந்து நாள்கள் இருந்தன. தினமும் இரண்டு திருக்குறளைள்களை மனப்பாடம் செய்தேன். அதைப் பிழை இல்லாமல் திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்தேன்.
  பத்து நாட்கள் முடிந்த போது, நான் இருபது திருக்குறள்களையும் தெளிவாக மனப்பாடம் செய்திருந்தேன். எனக்கு மனப்பாடம் செய்வது எப்போதும் கைவந்த கலை. பிறகு மனப்பாடம் செய்த இருபது திருக்குறள்களையும் திரும்பத் திரும்ப எழுதிப்பார்த்தேன். போட்டி நாளும் வந்தது. ஓர் அழகிய கற்கள் பதித்த ஆடையை அணிந்துக் கொண்டு, மயில் போல போட்டியிடத்திற்குச் சென்றேன். கொஞ்சம் படபடப்பாக இருந்த்து. ஓர் அறேயில் வினாத்தாளைக் கொடுத்தார்கள். விடுப்பட்ட வார்த்தைகளை நிரப்பி இருபது திருக்குறள்களையும் பூர்த்திச் செய்து விழாப் பொறுப்பாளரிடம் கொடுத்தேன். போட்டியின் முடிவுகள் நேரம் அறிவிக்கும் நேரம் வந்தது. முதலில் இரண்டு ஆறுதல் பரிசுகளையும் பிறகு மூன்றாம், இரண்டாம் பரிசுகளையும் அறிவித்தார்கள். எந்தப் பரிசும் எனக்குக் கிடைக்கவில்லை என்று என மனம் சோர்வடைந்த்து. இறுதியாக முதல் பரிசு என்று எனது பெயரை அழைத்தார்கள். எனது மனம் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. ஓடோடிச் சென்று மேடையிலேறி அமைச்சர் திரு. டெஸ்மண்டு லீ கையால் பரிசுக்கோப்பையைப் பெற்றேன். எனது அம்மா அவருடைய தோழிக்கு நன்றியைத் தெரிவித்தார். “முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!” என்ற பழமொழியை உணரவைத்த அந்தத் தமிழ்மொழி விழாவுக்கு நான் என்றும் மனதார கடமைப்பட்டவளாக இருப்பேன்.
  வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! வெல்க சிங்கை!!!
  தேஜல்
  சுவா சுகாங் உயர்நிலைப்பள்ளி

 6. ‘தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்ற இந்த நான்கு வார்த்தைகளை கேட்டாலே அந்த ஒரு மாதம் நடைப்பெற்ற அத்தனை நடவடிக்கைகளும் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. எங்கு சென்றாலும் ‘தமிழ் மொழி விழா’ ‘தமிழ் மொழி விழா’ என இந்த மூன்று வார்த்தைகளை கேட்காமலோ, பார்க்காமலோ நான் வீடு திரும்பியது கிடையாது.
  பள்ளிக்கு சென்றால், தினமும் ஆசிரியர் தமிழ் மொழி விழாவையொட்டி அந்த மாதம் நடக்கவிருக்கும் அனைத்து போட்டிகளைப்பற்றியும் நடவடிக்கைகளைப்பற்றியும் தான் பேசுவார். என் ஆசிரியர் என்னென்ன போட்டிகள் இருக்கிறது என ஒரு தாளில் அச்சிட்டு காட்டினார். நான் வியந்து போனேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. வருடம் முழுவதும் ஒவ்வொன்றாக நடக்க வேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரே மாதத்தில் நடக்கப்போவதுப்போல் எனக்கு தோன்றியது.
  வீட்டிற்கு சென்றால், தொலைக்காட்சியில் இந்த விழாவையொட்டி நிறைய புதுபுதுப் தமிழ் படங்கள் ஒளிபரப்பப்பட்டது. மேலும் செய்திகளில் இந்த விழாவைப் பற்றி பரபரப்பாக, நடைப்பெற்றுகொண்டிருந்த விஷயங்களைப் பற்றி பேசினார்கள்.
  இதை அனைத்தையும் கேட்கும் போது இப்படிப்பட்ட விழாவில் நானும் பங்கேற்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால், நான் என் ஆசிரியர் கூறியப் போட்டிகளில் பங்கேற்றேன். சில போட்டிகளில் வெற்றிப்பெற்றேன்.
  போட்டிகளில் பங்கேற்ற நான் தமிழ் மொழிக்கு இப்படி தமிழ் நாட்டில்விட இங்கு சிங்கப்பூரில் தான் அதிக மதிப்பும் முக்கியத்துவமும் அளிக்கிறார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அப்போதுதான் நான் மற்றொன்றையும் உணர்ந்தேன். தமிழ் மொழி விழாவையொட்டி எந்த நிகழ்ச்சி நடந்தாலும், ‘ தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்’ என்ற இந்த நான்கு வார்த்தைகளை அங்கு காணலாம். இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்தேன். உலகில் முதல் முதலில் தோன்றிய இப்பழமையான மொழி வரவிருக்கும் காலங்களில் அழிந்துப்போகாமல் இருப்பதற்கும் இதை பாதுகாப்பதற்கும் தான் வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படிப்பட்ட விழா கொண்டாடப்படுகிறது என்பதை நான் உணர்ந்தேன்.
  இன்னொரு விஷயத்தையும் நான் உணர்ந்தேன். அது என்னவென்றால், தமிழ் மொழியைப் பற்றி கவலைப்படாமல் இருந்த என்னை இவ்விழா எவ்வளவு மாற்றியுள்ளது என்பதே ஆகும். தமிழ் மொழியையொட்டி போட்டிகள் நடந்தால், அதில் பங்கேற்காமல் ஒதுங்கி நிற்கும் என்னை, இந்த விழா தமிழை நேசிப்பதற்கும் தமிழில் பேசுவதற்கும் அதிகம் ஊக்குவித்துள்ளது என்பதே உண்மை.
  ஆனால் ஒரு தமிழனே இன்று தமிழில் பேசுவதற்கு யோசிக்கிறான் என்பது மிகையாகாது!! தமிழ் மொழி, தமிழனாலே அழிந்துப்போக வேண்டுமா? இல்லை என்றால், இன்றிலிருந்து அனைவருமே தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம் !
  முருகன் சினேகா
  தஞ்சோங் காதோங் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

Your email address will not be published.


*