தமிழ்மொழி பற்றிய காணொளி

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி
வருடந்தோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்மொழி விழா நடைபெறுவது நீங்கள் அறிந்த தகவல்தான். அதன் நிகழ்ச்சிகளில் நீங்களும் பங்கேற்று இருப்பீர்கள். தமிழ்மொழி விழா பற்றிய உங்கள் கருத்துக்களையோ, அதில் பங்கேற்ற அங்கள் அனுபவங்களையோ, அல்லது தமிழ் மொழி மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பற்றியோ ஒரு காணொளியைப் பதிவு செய்து எங்களோடு பகிர்ந்து இந்தக் காணொளிப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். காணொளி உங்கள் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டதாக இருந்தால்கூடப் போதுமானது.
நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் திறனை வெளிப்படுத்தும் ஒரு காணொளியை (Video), உங்கள் கைத்தொலைபேசியிலோ அல்லது மற்ற தரமான புகைப்படக் கருவிகளைப் (Camera) பயன்படுத்தியோ எடுத்து, அதை ilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அவை இந்த இணையத்தளத்தில் வலையேற்றம் செய்யப்படும்.
நீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
உங்கள் கணொளிகளை (Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதிநாள் – 12 மார்ச் 2016.  பங்கேற்று வெற்றி பெறுங்கள்.  வாழ்த்துகள்!

4 கருத்துரை

 1. மீனா
  புகிட் வியூ உயர்நிலைப்பள்ளி

  தமிழ் திரைப்படப் பாடல்களைப் பற்றி புகிட் வியூ உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்

 2. விஷ்ணுபிரியா & தாரணி
  ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலின் அழகைப் பற்றி விஷ்ணூபிரியா & தாரணி

 3. வார்ஷா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி
  சிங்கப்பூர்த் தமிழ் இணைய மாநாடு

 4. வாரிஜா
  சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி

  சிங்கப்பூர்ப் பொங்கல் விழா

Your email address will not be published.


*